சப்போர்ட்
closeஎங்கள் வாட்ஸ்அப் எண்ணை அழைப்புகளுக்கு பயன்படுத்த முடியாது. இது வெறும் அரட்டை எண்.
ஹெல்த் இன்சூரன்ஸ் என்பது உங்கள் அவசரத் தேவைகளுக்கு பொருளாதார ரீதியாக உதவுவதற்கு மிகவும் அவசியமாகும். ஆனால், சந்தையில் உங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் படியாக ஏகப்பட்ட பாலிசிக்கள் உள்ளன. சரி தானே? அதற்காகத் தான், ஹெல்த் இன்சூரன்ஸ் ஒப்பீடு தேவைப்படுகிறது. இது உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தி, உங்களுக்கு எது முக்கியமானது என்பதை ஆய்வு செய்து தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பினைத் தருகிறது. இப்போது ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிக்கள் ஆன்லைனிலேயே கிடைக்கின்றன, வாங்குவதும் மிக மிக எளிதாகி விட்டது.
நீங்கள் உங்களுக்கான ஹெல்த் இன்சூரன்ஸை தேர்வு செய்வதற்கு முன்னர், ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்களை ஒப்பிட்டுப் பார்ப்பது மிக முக்கியமாகும். கீழ்க்கண்டவற்றை பெறுவதற்கு நீங்கள் பிளான்களை ஒப்பிட வேண்டும்:
கீழ்க்கண்ட காரணிகளை அடிப்படையாக கொண்டு தான் நீங்கள் ஒப்பீடு செய்து பார்க்க வேண்டும்.
இன்சூரன்ஸ் நிறுவனம் : இந்தியக் காப்பீடு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி முகமையினால் (ஐஆர்டிஏ/IRDA), நிறுவனமும், அதன் தயாரிப்பும் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா என சரிபார்க்கவும். நிறுவனத்தை பற்றிய ஆன்லைன் மதிப்புரைகளை வாசிக்கவும் அல்லது அவர்களின் சோஷியல் மீடியா ஹேண்டில்களில் நிறுவனத்தை பற்றிய பொது மக்களின் மதிப்புரைகளை சரிபார்க்கவும். உங்களின் கேள்விகளுக்கு உடனடியாக பதிலளிக்கும் விதமான வாடிக்கையாளர் சேவை மையம் இருக்கிறதா என சரிபார்க்கவும். கிளைம் செட்டில்மென்ட் விகிதத்தை சரிபார்க்கவும்.
ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்களின் வகைகள் : ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியில் உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை தெளிவாக முடிவு செய்யவும். இண்டிவிஜுவல் பாலிசி, ஃபேமிலி ஃப்ளோட்டர் மற்றும் சீனியர் சிட்டிஸன் பாலிசி போன்றவை உள்ளன. ஒவ்வொரு வகையிலும், அவற்றுக்கென தனிப்பட்ட வரம்புகளும், நன்மைகளும் உள்ளன. உங்கள் தேவைகளை மனதில் வைத்துக் கொண்டு அதற்கேற்ற பிளான் வகையை தேர்வு செய்யவும். பின்னர் அதனை சந்தையில் உள்ள மற்ற பாலிசிக்களோடு ஒப்பிட்டுப் பார்க்கவும்.
நெட்வொர்க் மருத்துவமனைகளின் பட்டியல்: நீங்கள் கேஷ்லெஸ் சிகிச்சையை பெறுவதன் பொருட்டு தான், ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானை வாங்குவீர்கள். நெட்வொர்க் மருத்துவமனையில் இதனை எளிதாக மேற்கொள்ளலாம். இன்சூரன்ஸ் நிறுவனமானது, கேஷ்லெஸ் சிகிச்சையை வழங்குவதற்கு மருத்துவமனைகளுடன் இணைந்து செயல்படும். உங்கள் ஊரில் நெட்வொர்க் மருத்துவமனை இருக்கிறதா என சரிபார்க்கவும்.
இன்சூர் செய்யப்படும் தொகை : வெவ்வேறு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஒரு வருடத்திற்கு வெவ்வேறு விதமான இன்சூரன்ஸ் தொகையை வழங்குகின்றன. எனவே, இது முக்கியமான விஷயமாக கருதப்படுகிறது. வழங்கப்படும் இன்சூரன்ஸ் தொகையையும், நீங்கள் அதற்கு செலுத்த வேண்டிய பிரீமியத்தினையும் நீங்கள் சரிபார்க்க வேண்டும். ஒரு இன்சூரருக்கும் மற்ற இன்சூரருக்கும் இடையில் இது வேறுபடக் கூடும்.
இன்சூரன்ஸ் தொகையை மீண்டும் நிரப்புதல் : சில சமயங்களில், நீங்கள் ஒரே வருடத்தில், ஒன்றுக்கு மேற்பட்ட உடல்நலக் கேட்டினையும், மற்றும் மருத்துவமனையில் அனுமதி பெற்று சிகிச்சை செய்து கொள்ள வேண்டிய நிலைமையையும் சந்திக்கலாம். இரண்டு முறை சிகிச்சை எடுத்துக் கொள்வதினால் இன்சூர் செய்த தொகை தீர்ந்து போய் விடும். இப்போது என்ன செய்வது? நீங்கள் இன்சூரன்ஸ் தொகையை திரும்பவும் நிரப்பிக் கொள்வதற்கு அந்த இன்சூரன்ஸ் நிறுவனம் அனுமதிக்கிறதா என்பதை கண்டறிய வேண்டும்.
வாழ்நாள் முழுவதற்குமான பாதுகாப்பு : ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான் அதிகபட்சமாக 65 வயது வரையில் உங்களுக்கு பாதுகாப்பளிக்கிறது. இந்தியக் காப்பீடு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி முகமையானது (ஐஆர்டிஏ), ஹெல்த் இன்சூரர்கள் வாழ்நாள் முழுவதற்குமான பாதுகாப்பளிப்பதை கட்டாயமாக்கியுள்ளது. உங்கள் பிளான் இந்த அம்சத்தை கொண்டுள்ளதா என நீங்கள் சரிபார்க்க வேண்டும். ஏனென்றால், நீங்கள் வயதாகும் போது தான் உங்களுக்கு ஹெல்த் பிளான் முக்கியமாக தேவைப்படும்.
காத்திருப்பு காலம் (வெயிட்டிங் பீரியட்) : உங்கள் ஹெல்த் பிளான் நீங்கள் வாங்கிய தேதியிலிருந்தே உங்களுக்கு காப்புறுதி வழங்குகிறது என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால், அது உண்மையில்லை. ஒவ்வொரு ஹெல்த் பிளானிற்கும் காத்திருப்பு காலமுள்ளது. இந்த காலகட்டத்தில் ஏற்படும் எந்தவொரு உடல்நலக் கேட்டிற்கும் காப்புறுதி வழங்கப்படாது. பொதுவான உடல்நலக் கேடு, ஏற்கனவே இருக்கும் நோய்கள், மெட்டர்னிட்டி (பேறுகாலம்), மற்றும் பிற நோய்களையும் இந்த காத்திருப்பு காலம் குறிக்கிறது.
பிரீமியம் : மருத்துவ தேவை ஏற்படும் அவசர காலங்களில் உங்களுக்கு உதவும் பொருட்டு நீங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் வாங்குவதற்கு திட்டமிடுகிறீர்கள். இன்சூர் செய்யப்படும் தொகையையும், வழங்கப்படும் மற்ற பெனிஃபிட்களையும் பொறுத்து ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் வேறுபடும். எனவே கவனமாக ஆய்வு செய்து பார்த்து, பெயரளவிலான கவரேஜுக்கு நீங்கள் பெரிய தொகையை செலுத்தவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். அதிகமான பிரீமியம் செலுத்தி நீங்கள் துன்பப்பட கூடாது.
சப்-லிமிட்கள் : வெவ்வேறு ஹெல்த் பிளான்களின் கீழ் வழங்கப்படும் காப்புறுதியானது, சப்-லிமிட்களின் அடிப்படையில் வேறுபடலாம். சப்-லிமிட் கவரேஜ் என்பது குறிப்பிட்ட நோய்களுக்கான சிகிச்சை, மருத்துவமனை அறை வாடகை, ஆம்புலன்ஸ் கட்டணங்கள், மற்றும் இவை போன்றவற்றுக்கு முன்னமேயே தீர்மானிக்கப்பட்ட வரம்பு விதிகளை குறிக்கிறது. நீங்கள் பெறக் கூடிய நல்லதொரு பெனிஃபிட்-ஐ நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.
டே-கேர் நடைமுறைகளுக்கான கவர் : நீங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானை தேர்வு செய்வதற்கு முன்னர், அந்த பாலிசியில் டே-கேர் நடைமுறைகளுக்கான காப்புறுதி வழங்கப்பட்டிருக்கிறதா என நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த சிகிச்சைகளுக்கு 24 மணி நேரம் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியமாக இருக்காது.
கிரிட்டிக்கல் இல்னஸ் பெனிஃபிட் உள்ளதா என சரிபார்க்கவும் : : புற்றுநோய், பக்கவாதம், மாரடைப்பு, சிறுநீரக செயலிழப்பு மற்றும் பிற நோய்களும் கிரிட்டிக்கல் இல்னஸ் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றுக்கு உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸில் காப்புறுதி வழங்கப்பட்டிருக்கிறதா என்பதை பார்க்கவும். இன்சூரர்கள் கிரிட்டிக்கல் இல்னஸ் கவரை உங்கள் இன்சூரன்ஸோடு இணைக்கப்பட்ட பெனிஃபிட்டாகவோ அல்லது தனித்த ஆட்-ஆன் (add-on/மதிப்புக் கூட்டல்) கவராகவோ வழங்குகின்றனர்.
கிடைக்கப்பெறும் ஆட்-ஆன்கள் : ஹெல்த் இன்சூரன்ஸ் கவருடன் எந்த ஆட்-ஆன்கள் வழங்கப்பெறுகின்றன என்பதை கண்டறியவும். நியூபார்ன் பேபி கேருடன் கூடிய மெட்டர்னிட்டி மற்றும் இன்ஃபெர்டிலிட்டி கவர், ஆயுஷ், ஸோன் அப்கிரேட் மற்றும் கிரிட்டிக்கல் இல்னஸ் கவர் போன்றவை இன்சூரர்களால் வழங்கப்படும் பெனிஃபிட்களுள் சிலவாகும்.
0% கோ-பேமெண்ட்கள் : கோ-பேமெண்ட்-டினை பற்றி தெரிந்து கொள்ள உங்கள் பாலிசியை சரிபார்க்கவும். 0% கோ-பேமெண்ட் பிளானை தேர்வு செய்யவும், அப்போது தான் நீங்கள் கிளைம் செய்யும் சமயத்தில் பணமேதும் செலுத்த வேண்டியிருக்காது.
இலவச ஹெல்த் செக்-அப்கள் : உங்கள் இன்சூரரிடம் அவர்கள் இலவச ஹெல்த் செக்-அப் வசதியை வழங்குகிறார்களா என கேட்டுப் பார்க்கவும். இன்சூரர்கள் பொதுவாகவே, கிளைம்-செய்யாத ஆண்டில் இலவச செக்-அப்கள் அல்லது ஹெல்த் பிளான்களுடன் இலவச வருடாந்திர ஹெல்த் செக்-அப்பினை வழங்குவார்கள்.
சைக்யாட்ரிக் இல்னஸ் (மனநோய்) அல்லது பேரியாட்ரிக் சர்ஜரி (எடை குறைப்பு அறுவை சிகிச்சை) செலவுகள் : மனநோய் போன்ற நோய்களுக்கு அல்லது எடை குறைப்பு அறுவை சிகிச்சைக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான் காப்புறுதி வழங்குகிறதா என சரிபார்க்கவும். பருமனான அல்லது மனநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த பிரத்யேக நடைமுறைகள் தேவைப்படும்.
ஸோன் அப்கிரேட் ஆட்-ஆன் : ஒரு ஸோனிலுள்ள சிகிச்சை செலவுகளின் அடிப்படையிலேயே, ஹெல்த் இன்சூரன்ஸின் பிரீமியம் தொகை தீர்மானிக்கப்படுகிறது. நீங்கள் ஸோன் பி-யில் பாலிசி வாங்கியிருந்து, ஸோன் ஏ-வில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கும் பட்சத்தில், கிளைம் செய்யும் வேளையில் நீங்கள் உங்களுடைய சொந்த பணத்தை சிறிது செலுத்த வேண்டியிருக்கும். எனவே, இன்சூரர் ஸோன் அப்கிரேட் ஆட்-ஆனை வழங்குகிறாரா என்பதை சரிபார்க்கவும்.
டெய்லி ஹாஸ்பிட்டல் கேஷ் : மருத்துவமனையில் அனுமதி பெற்று சிகிச்சை பெறும் போது, மருத்துவமனையில் பில்லையும் தாண்டி உங்களுக்கு வேறு செலவுகள் இருக்கும். டெய்லி ஹாஸ்பிட்டல் கேஷ் என்பது நொறுக்குத் தீனி, டீ, காபி போன்றவைக்கு தினசரி ஆகும் செலவுகளை சமாளிப்பதற்கு உதவுகிறது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 1-ஆம் நாளுக்கு பிறகு, 30 நாட்கள் வரையிலும் இந்த பெனிஃபிட் உங்களுக்குக் கிடைக்கும். இந்த பெனிஃபிட் உங்கள் இன்சூரரிடம் உள்ளதா என சரிபார்க்கவும்.
உடலுறுப்பு தானத்திற்கான செலவுகள் : உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படும் பட்சத்தில், உடலுறுப்பு தானம் செய்பவர் தேவைப்படும் போது, அவர் மருத்துவமனையில் தங்கி எடுத்துக் கொள்ளும் சிகிச்சைக்கான செலவுகளுக்கு காப்புறுதி வழங்கப்படுமா என்பதை சரிபார்க்கவும்.
வருமான வரிச்சலுகை : நீங்கள் செலுத்திய பிரீமியத்திற்கு வருமான வரி விலக்கு சான்றிதழை இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்குகிறதா என்பதை சரிபார்க்கவும். ஹெல்த் இன்சூரன்ஸ் வரிச்சலுகைகளை பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும்.
முக்கியமானது:
ஆன்லைனில் ஒப்பிடுவது |
ஆஃப்லைனில் ஒப்பிடுவது |
படி 1: ஒப்பீட்டினை வழங்கக் கூடிய வெப் அக்ரிகேட்டர்கள் அல்லது நிறுவனங்களை கண்டறியவும். அல்லது நீங்கள் வெவ்வேறு இன்சூரன்ஸ் நிறுவனங்களின் ஆன்லைன் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டரை பயன்படுத்தி, சுயமாகவே நீங்கள் ஒரு ஒப்பீட்டு விளக்கப்படத்தை தயார் செய்யலாம். |
படி 1: உங்களுக்கு ஹெல்த் இன்சூரன்ஸை வழங்கக் கூடிய ஏஜெண்டினை கண்டறியவும். அந்த நபரை நேரில் சந்தித்து, உங்கள் தேவைகளை பற்றி விரிவாக எடுத்துரைக்கவும். |
படி 2: அந்த வலைப்பக்கம் உங்கள் ஊர் (ஸோன்), பிறந்த தேதி, நீங்கள் காப்புறுதி பெற விரும்பும் நபர்களின் எண்ணிக்கை, தொடர்பு கொள்வதற்கான தகவல்கள், மற்றும் இன்சூர் செய்யப்படும் தொகை போன்ற அவசியமான தகவல்களை கேட்கும். உங்கள் தகவல்களை அந்த வலைப்பக்கத்தில் பதிந்தவுடன், தோராய மதிப்பீடு (quote) உங்களுக்குக் கிடைக்கப்பெறும். அதற்கேற்றவாறு இன்சூரன்ஸ் நிறுவனத்தினையும், பிளானையும் நீங்கள் தேர்வு செய்யலாம். |
படி 2: உங்கள் வயது, ஏற்கனவே இருக்கும் நோய்கள், கிரிட்டிக்கல் இல்னஸ், மெடிக்கல் ஹிஸ்டரி, ஃபேமிலி ஹிஸ்டரி, இன்சூரன்ஸ் தொகை போன்ற அனைத்து விவரங்களையும் ஏஜெண்டிடம் அளிக்கவும். நீங்கள் வழங்கிய தகவல் சரியானது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். |
படி 3: ஏற்கனவே இருக்கும் நோய்கள், பொதுவான அறிகுறிகள், மருந்துகள் அல்லது இணை மருந்துகள் போன்றவற்றை பற்றி இன்சூரன்ஸ் நிறுவனம் கேட்கும். அப்படி ஏதேனும் இருப்பின், பிரீமியம் தொகை பாதிக்கப்படும். |
படி 3: வெவ்வேறு இன்சூரர்களிடமிருந்து தோராய மதிப்பீடுகளை (quotes) பெற்று, ஏஜெண்ட் உங்களிடம் வழங்குவார். அதனை முழுமையாக வாசித்து பார்த்து, அதற்கேற்றவாறு இன்சூரன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்யவும். |
படி 4: மேற்கொண்டு உங்கள் பெயர், வயது, பாலினம் மற்றும் எடை போன்ற உங்கள் தனிப்பட்ட விவரங்களை நீங்கள் வழங்க வேண்டியிருக்கும். இந்த நடைமுறையை பூர்த்தி செய்வதற்கு சில தனிப்பட்ட தகவல்களையும் இது கேட்கும். |
- |
ஆன்லைன் |
ஆஃப்லைன்/ஏஜெண்ட் |
|
நேரத்தை மிச்சப்படுத்தும் |
ஆன்லைனில் ஹெல்த் இன்சூரன்ஸை ஒப்பிடுவது நிறைய நேரத்தை மிச்சப்படுத்தும். |
உங்கள் ஏஜெண்டை ஒப்பீடு செய்வதற்கு கேட்பதற்கு அதிக நேரமெடுக்கும். |
சிக்கனமானது |
இடைத்தரகர்கள் யாருமில்லாததால் ஆன்லைன் ஒப்பீடு சிக்கனமானது. மேலும் நிர்வாக செலவுகளும் குறையும். |
ஒப்பீடு செய்வதற்கு ஏஜெண்டிற்கு கமிஷன் கொடுக்க வேண்டியிருக்கும். இன்சூரரிடமிருந்து தோராய மதிப்பீட்டினை பெறுவதற்கும் நிர்வாக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். |
நடுநிலையான முடிவு |
இடைத்தரகர் இல்லாததால், ஆன்லைனில் ஒப்பிடும் போது நீங்கள் ஒரு சார்பான அல்லது பிறர் தாக்கத்தின் காரணமாக முடிவெடுப்பதற்கு வாய்ப்பே இல்லை. |
ஆஃப்லைனில் ஒப்பிடும் போது, ஒரு சார்பாக முடிவெடுக்கும் வாய்ப்புகள் அதிகம். ஏஜெண்ட் தனக்கு அதிக கமிஷன் கிடைக்கும் ஹெல்த் பிளானை பரிந்துரைப்பதற்கு முயற்சி செய்யலாம். |
காப்புறுதி பற்றிய விழிப்புணர்வு |
ஆன்லைனில் ஒப்பிடும் போது, பிளானை பற்றிய அனைத்து தகவல்களையும் நீங்கள் வலைதளத்தில் பார்க்கலாம். மேலும் வாடிக்கையாளர் சேவையிடம் தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம். |
மேலும், ஹெல்த் பிளானை ஆஃப்லைனில் அல்லது ஏஜெண்ட் மூலமாக ஒப்பிடும் போது, சம்பந்தப்பட்ட சில தகவல்களை ஏஜெண்ட் பகிர்ந்து கொள்வதற்கு தவறி விடக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. |
சௌகரியம் |
ஹெல்த் பிளான்களின் தோராய மதிப்பீடுகளை ஆன்லைனில் ஒப்பிட்டுப் பார்ப்பது மிகவும் சௌகரியமானது. |
தோராய மதிப்பீட்டினை ஒப்பீடு செய்வதற்கு ஏஜெண்டினை கேட்டுக் கொள்வது மிக சிரமமானது. |
உணவிலிருந்து கேப்கள் வரை மற்றும் மளிகை பொருட்களிலிருந்து பாலிசிக்கள் வரை எல்லாமே ஆன்லைனில் கிடைக்கின்றன. ஆன்லைனில் ஷாப்பிங் செய்வது ஒப்பிட்டுப் பார்ப்பதை வசதியாக்கி விட்டது. ஒரே இயங்குதளத்தில் உங்கள் விரல்நுனியிலேயே, பல விருப்பத் தேர்வுகளை நீங்கள் ஆய்வு செய்து பார்க்கலாம். ஹெல்த் இன்சூரன்ஸ் என்று வரும் போது, நீங்கள் அதனை ஆன்லைனில் கீழ்க்கண்டவாறு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்:
இது உடல்நலக் கேட்டின் சரியான காரணத்தை நீங்கள் அறியாத போது ஒரு பொது மருத்துவரிடம் சென்று ஆலோசிப்பது போன்றது. ஹெல்த் இன்சூரன்ஸை ஒப்பிடுவது அவசியமானது. நீங்கள் ஒப்பீடு செய்வதைத் தவிர்த்து விடும் பட்சத்தில் நீங்கள்: