வாழ்க்கை, நமக்குத் தெரிந்தபடி, கணிக்க முடியாதது. எந்த தருணம் கடைசியாக இருக்கும் என்று நமக்கு தெரியாது, மருத்துவ அவசரநிலைகளும் அதற்கு சமமாக எதிர்பாராதவை. எனவே, ‘எதிர்பாராததை எதிர்பார்க்க’ நாம் தயாராக இருக்க வேண்டும், அதைச் சமாளிக்க தயாராக இருக்க வேண்டும்.
மருத்துவ அவசரத்தை தொடரும் முதல் ஒரு மணிநேரம் 'கோல்டன் ஹவர்' என்று அழைக்கப்படுகிறது. இந்த 60 நிமிடங்களில் முறையான மருத்துவ கவனிப்பு ஒரு உயிரைக் காப்பாற்றும். இத்தகைய நெருக்கடியான சூழ்நிலைகளில், ஏர் ஆம்புலன்ஸ் ஒரு உயிர் காக்கும் வசதியாகும். இது முக்கியமான நோயாளிகளை சரியான நேரத்தில் மற்றும் நம்பகத்தன்மையுடன் அவர்கள் மிகவும் தேவையான மருத்துவ உதவியைப் பெறக்கூடிய இடத்திற்கு மாற்றுகிறது.
ஏர் ஆம்புலன்ஸ்கள் மருத்துவரீதியாக பொருத்தப்பட்ட விமானங்கள், அவை ஈசிஜி இயந்திரங்கள், வென்டிலேட்டர்கள், தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் நிபுணர்களை கொண்டது. இது நோயாளி சிகிச்சையை சிறந்த நேரத்திற்குள் பெறுவதை உறுதி செய்கிறது.
இருப்பினும், அதிநவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் பயிற்சி பெற்ற மருத்துவ பணியாளர்கள், விமான பராமரிப்புக்கான விலையை சேர்த்து, ஏர் ஆம்புலன்ஸ் கட்டணத்தை மிகவும் விலை உயர்ந்ததாக ஆக்குகிறது. நெருக்கடியான காலகட்டங்களில் இது அவசியமானதாக இருந்தாலும், நோயாளியின் ஏற்கனவே போராடும் குடும்பத்திற்கு அதன் செலவு நிதி நெருக்கடியாக மாறும்.
அதிர்ஷ்டவசமாக ஏர் ஆம்புலன்ஸை இன்சூரன்ஸ் கவர் செய்கிறது.
ஒரு ஏர் ஆம்புலன்ஸ் கவர் தேவைப்படும் நேரங்களில் ஏர் ஆம்புலன்ஸைப் பெறுவதற்கு ஏற்படும் செலவுகளுக்கு நிதிக் கவரேஜை வழங்குகிறது.
பல இன்சூரர்கள் தங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்களில் ஏர் ஆம்புலன்ஸ் கவரேஜை வழங்குகிறார்கள். இன்னும் சிலர் இதை ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியுடன் தனியாக வாங்கக்கூடிய கூடுதல் அம்சமாக வழங்குகிறார்கள். இருப்பினும், உங்கள் கவரேஜ் மற்றும் அதன் அம்சங்கள் பல்வேறு இன்சூரன்ஸ் வழங்குநர்களிடையே வேறுபடலாம்.
இன்சூர்ன்ஸ் இருப்பதால், வசதியின் விலையைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை, முதன்மை நோக்கத்தில், அதாவது நோயாளிக்குத் தேவையான மருத்துவ உதவியைப் பெறுவதில் சிறப்பாக கவனம் செலுத்த முடியும்.
ஏர் ஆம்புலன்ஸ் பல பலன்களைக் கொண்டுள்ளது:
1. தொலைதூரப் பயணத்திற்கான நேரத்தைக் குறைக்கிறது
ஆபத்தான நோய் அல்லது விபத்து ஏற்பட்டால், நோயாளி உடனடி மருத்துவ உதவியைப் பெற வேண்டும், ஆனால் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கும் போது, ஏர் ஆம்புலன்ஸ் உயிர் காக்கும் மாற்றாகும்.
2. ஆபத்துமிக்க நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க சிறந்தது.
ஒரு ஏர் ஆம்புலன்ஸ் அனைத்து மருத்துவ வசதிகள் மற்றும் நோயாளிக்கு இடைக்கால பராமரிப்பு வழங்க உயர் பயிற்சி பெற்ற நிபுணர்களை கொண்டுள்ளது. அதன் அழுத்தம், ஈரப்பதம், வெப்பநிலை மற்றும் பிற காரணிகளும் நோயாளிக்கு ஏற்றவாறு உகந்ததாக இருக்கும். அதிக மருத்துவ வசதிகள் இருப்பதால், இந்த ஆம்புலன்ஸ்கள் நோயாளிகளை அவர்களின் இடத்திற்குச் சிறந்த நிலையில் கொண்டு செல்வதற்கு மிகவும் பொருத்தமானவை.
3. பாதுகாப்பானது மற்றும் வசதியானது
தரைவழி ஆம்புலன்ஸ்கள், பல நேரங்களில், ஆபத்தான நோயாளிகளுக்கு அசௌகரியமாக இருக்கும், மேலும் இது நோயாளியின் ஆரோக்கியத்தை மேலும் மோசமாக்கும். ஏர் ஆம்புலன்ஸ்கள், பயண நேரத்தை கணிசமாகக் குறைப்பதோடு, நோயாளிக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான போக்குவரத்தையும் வழங்குகிறது. போக்குவரத்து அல்லது ஏதேனும் தடைகள் நோயாளியின் உயிருக்கு அச்சுறுத்தலாக மாறாமல் இருப்பதை அவர்கள் உறுதி செய்கிறார்கள்.
பின்வரும் நிபந்தனைகளுடன் அவசர மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ஏர் ஆம்புலன்ஸ் செலவுகளை பெரும்பாலான இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஈடுகட்டுகின்றன:
ஹாஸ்பிடலைஷேஷன் கவரின் கீழ் கிளைமை ஏற்றுக்கொண்டிருந்தால் மட்டுமே, இன்சூரர் மேற்கூறிய செலவினங்களைச் செலுத்துகிறார் .
நோயாளிக்கான விமான போக்குவரத்து சம்பவத்தின் ஆரம்ப புள்ளியில் இருந்து இருக்க வேண்டும்.
பாலிசி அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள இன்சூரன்ஸ் தொகை கிடைக்கும் அளவிற்குள் மொத்த கிளைம் இருக்க வேண்டும்.
ஏர் ஆம்புலன்ஸின் தேவை ஒரு மருத்துவ பயிற்சியாளரால் பரிந்துரைக்கப்பட வேண்டும் அல்லது மருத்துவ ரீதியாக அவசியமாக இருக்க வேண்டும்.
பெரும்பாலான இன்சூரர்களிடம் ஏர் ஆம்புலன்ஸ் கவரில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள விலக்குகள் உள்ளன:
சிகிச்சைக்குப் பிறகு நோயாளியின் வீட்டிற்குத் திரும்பும் போக்குவரத்துக்கான செலவுகள்.
ரோடு ஆம்புலன்ஸ் மூலம் போக்குவரத்து சாத்தியமான சந்தர்ப்பங்களில், ஒரு மருத்துவ பயிற்சியாளர் பரிந்துரைக்கும் வரை ஏர் ஆம்புலன்ஸ் செலவுகள் ஈடுசெய்யப்படாது.
மருத்துவரின் ஆலோசனையின்றி நோயாளியை மாற்றுதல்.
இரண்டு வசதிகளும் ஒரே அளவிலான சேவைகளைக் கொண்டிருந்தாலும் நோயாளியை ஒரு சுகாதார நிலையத்திலிருந்து மற்றொன்றுக்கு மாற்றுதல்.
சாகச விளையாட்டுகளால் ஏற்பட்ட அவசரநிலைகள் ஏர் ஆம்புலன்ஸ் கிளைமின் கீழ் கவர் செய்யப்படவில்லை.
எதிர்காலத்தை யாராலும் கணிக்க முடியாது. சுகாதார அவசரநிலை எந்த நாளிலும் ஏற்படலாம், எனவே, அனைவரும் ஏர் ஆம்புலன்ஸ் கவரை வைத்திருக்க பரிந்துரைக்கப்படுகிறது. மனஅதிர்ச்சி நோயாளிகள், இதய நோயாளிகள், வயதான நோயாளிகள் போன்ற கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் ஹெல்த் இன்சூரன்ஸில் இந்தக் கவரேஜை சேர்க்க வேண்டும்.
டிஜிட்டில், கிளைம் செயல்முறை முற்றிலும் தொந்தரவு இல்லாதது மற்றும் எளிமையானது.
எங்கள் ஹெல்ப்லைன் எண்ணை 1800-258-4242 ஐ அழைக்கவும் அல்லது எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்-healthclaims@godigit.com. மூத்த குடிமக்களுக்கு seniors@godigit.comஎன்ற முகவரியில் மின்னஞ்சல் செய்யவும். தேசிய விடுமுறை நாட்களில் கூட 24/7 கிடைக்கும்.