நீங்கள் ஒரு ஸ்டாண்டர்ட் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான் வாங்கிய நிமிடத்திலிருந்து, உங்கள் உடல்நலம் தொடர்பாக நீங்கள் செய்யும் செலவுகள் அனைத்துமே அந்த இன்சூரன்ஸில் அடங்கிவிடும் என்கிற பொதுவான கருத்து நிலவுகிறது. ஆனால், ஒரு ஸ்டாண்டர்ட் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான் குறிப்பிட்ட சில தேவைகளை உள்ளடக்காது ரென்பது தான் உண்மை.
அப்படி என்றால் அந்த செலவுகளை எப்படி ஈடு செய்வது?
இந்தத் தேவைகளை பூர்த்தி செய்வது தான் இன்சூரன்ஸ் ரைடரின் வேலை ஆகும்
நீங்கள் ஏற்கனவே ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை வைத்திருந்தால், ஆட்-ஆன்கள் அல்லது ரைடர்கள் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. அவற்றைப் பற்றி இன்னும் விவரமாக அறிந்து கொள்ள வேண்டிய நேரம் இது.
ரைடர் அல்லது ஆட்ஆன் என்பது ஒரு ஸ்டாண்டர்ட் ஹெல்த் இன்சூரன்ஸால் ஈடு செய்ய முடியாத செலவுகள் அனைத்தையும் ஈடு செய்யும் பொருட்டு, நாம் ஏற்கனவே உள்ள பாலிசியுடன் கூடுதல் பிரீமியத் தொகையை செலுத்தி பெறக்கூடிய கூடுதல் சலுகைகள் அல்லது கவரேஜைக் குறிக்கிறது.
தற்போது நீங்கள் வைத்துள்ள ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி தொகையிலோ அல்லது அதற்கும் மேலாகவோ ஹெல்த் இன்சூரன்ஸ் ஆட்-ஆன்கள் அல்லது ரைடர்கள் பெற்று, அதன் மூலம் அதிக பயன் அடையலாம் அல்லது குறிப்பிட்ட காரணத்திற்காக நீங்கள் இன்சூர் செய்த தொகையை பெறலாம்.
இந்தியக் காப்பீடு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி முகமை (ஐஆர்டிஏ/IRDA) இன் விதிமுறைகளின் படி, ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியோடு கிடைக்கும் அனைத்து ஆட்-ஆன்கள் அல்லது ரைடர்களுக்கான பிரீமியத்தின் கூட்டுத் தொகையானது அசல் பிரீமியத் தொகையிலிருந்து 30%-ஐ விட அதிகமாக இருக்கக்கூடாது.
உதாரணத்திற்கு, இன்சூரன்ஸ் தொகைக்கான ஃபேமிலி ஃப்லோட்டர் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி ஒன்றை ரூ. 5000 வருடாந்திர பிரீமியத்திற்கு வாங்கி இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி உடன் 5 ஆட்-ஆன்களையும் வாங்க முடிவு எடுத்திருந்தால், இந்தியக் காப்பீடு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி முகமை (ஐஆர்டிஏ/IRDA) குறிப்பிட்டுள்ள விதிமுறைகளின்படி அந்த ஆட்-ஆன்களுக்கு நீங்கள் செலுத்த வேண்டிய கூடுதல் பிரீமியத் தொகையானது ரூ. 1500 (5000 x 30%) ஐ விட அதிகமாக இருக்கக்கூடாது.
இந்தியாவில் இருக்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளுடன் கிடைக்கும் பல்வேறு வகையான ஆட்-ஆன்கள் (add-ons) கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹெல்த் இன்சூரன்ஸ் ஆட்-ஆன் |
இதில் என்னென்ன அடங்கும்? |
அறை வாடகைக்கான தள்ளுபடி |
இந்த ஹெல்த் இன்சூரன்ஸ் ரைடர் மூலம், உங்கள் பாலிசியின் படி, மருத்துவமனை அறை வாடகைக்கு என்று வழங்கப்படும் தொகையின் வரம்பை அதிகரிக்கலாம் அல்லது அறை வாடகைக்கு வரம்பு ஏதும் இல்லாமல் செய்துவிடலாம். |
மெட்டர்னிட்டி கவர் (பேறு காலத்திற்கான இழப்பீடு) |
பேறுகாலம் மற்றும் பிரசவம் தொடர்பான அனைத்து செலவுகளையும் இந்த ரைடர் ஈடு செய்யும். |
ஹாஸ்பிடல் கேஷ் கவர் |
இது இன்சூர் செய்யப்பட்ட நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு தங்கி சிகிச்சை எடுத்துக்கொள்ளும் நாட்களுக்கு இன்சூரர்களல் வழங்கப்படும் தினசரி ஊக்கத்தொகை ஆகும். |
கிரிட்டிக்கல் இல்னஸ் கவர் |
புற்றுநோய், இருதய நோய் போன்ற தீவிர நோய் சிகிச்சைகளுக்கான செலவுகளை இந்த ஆட்-ஆன் ஈடு செய்யும். |
பர்சனல் ஆக்சிடன்ட் கவர் |
ஒருவர் விபத்தில் இறந்தாலோ, உடலில் பாதிப்பு ஏற்பட்டாலோ மற்றும் இது போன்ற அனைத்து வித காயங்களுக்கும் இந்த ஆட்-ஆன் இழப்பீடு வழங்கும். |
ஸோன் அப்கிரேடு |
இன்சூர் செய்யப்பட்ட நபர் எந்த மண்டலத்தில் (ஸோனில்) சிகிச்சை பெறுகிறார் என்பதைப் பொறுத்து கூடுதல் உதவித் தொகையை பெற இந்த ஆட்-ஆன் (Add-On) வழிவகுக்கும். |
ஆயுஷ் ட்ரீட்மெண்ட் கவர் |
மாற்று சிகிச்சை முறைகளுக்கான (ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி) செலவுகளை இந்த ஆட்-ஆன் ( add-on) ஈடு செய்யும். |
ஸ்டாண்டர்ட் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியில் மருத்துவமனை அறை வாடகைக்கு என்று ஒரு வரம்பு இருக்கும். அது போன்ற ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி உடன் சேர்த்து அறை வாடகை தள்ளுபடி வழங்கக்கூடிய ஆட்-ஆன் (add-on)- ஐ சேர்த்து வாங்கும் போது அந்த வரம்பின் அளவை அதிகரிக்கலாம் அல்லது அந்த வரம்பே இல்லாமல் செய்யலாம்.
அறை வாடகைக்கு என்று ஒரு வரம்பு இல்லாவிடில், இன்சூர் செய்யப்பட்ட தொகை வரை அறை வாடகை இருக்கலாம். அறை வாடகை அதிகமாக இருக்கும் பெருநகர மருத்துவமனையில் நீங்கள் அனுமதிக்கப்பட்டால், இது ஒரு முக்கியமான ஹெல்த் இன்சூரன்ஸ் ரைடர் ஆகும்.
உதாரணத்திற்கு, உங்கள் ஸ்டாண்டர்ட் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியின் படி, ஒரு இரவு தங்கி சிகிச்சை எடுப்பதற்கான அறை வாடகையின் வரம்பானது ரூ.1500 ஆக இருக்கட்டும். இந்தத் தொகையானது நீங்கள் சிகிச்சை பெற விரும்பும் மருத்துவமனையின் அறை வாடகைத் தொகையை விட குறைவாக இருக்கிறது என்று தெரியவருகிறது. அறை வாடகை தள்ளுபடி ஆட்-ஆன் (add-on)-ஐ நீங்கள் பெற்றிருந்தால், ஒரு இரவுக்கான அறை வாடகையின் வரம்பானது ரூ.4000 ஆக உயர்ந்திருக்கும்.
பேறுகாலம் மற்றும் பிரசவத்தின் போது உங்களின் அனைத்து செலவுகளையும் மெட்டர்னிட்டி கவர் மூலம் நீங்கள் பெறலாம். சில இன்சூரன்ஸ் நிறுவனங்கள், பாலிசி காலம் முடியும் வரையோ அல்லது குழந்தை பிறந்ததிலிருந்து 3 மாதங்கள் வரையோ குழந்தையின் செலவுகளுக்கான தொகையையும் மெட்டர்னிட்டி கவர் மூலம் வழங்குகிறது.
இந்த ஹெல்த் இன்சூரன்ஸ் ரைடரின் மூலம், இன்சூரர்களிடமிருந்து நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாட்களுக்கான தினசரி உதவித்தொகை பெற்றிடலாம். இந்த உதவித்தொகையை பெறுவதற்கு இன்சூர் செய்யப்பட்ட நபர் 24 மணிநேரம் அல்லது 1 நாளுக்கு மேல் மருத்துவமனையில் இருந்திருக்க வேண்டும்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது ஏற்பட்ட இழப்பினை ஈடுசெய்வதற்காக இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. போக்குவரத்து, உணவு போன்ற தேவையான செலவுகளுக்காக இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த ஆட்-ஆன் (add-on) இன் படி, இன்சூர் செய்யப்பட்ட நபர் கடுமையான அல்லது தீவிர நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிய வந்தால், அதற்கான சிகிச்சைக்கு ஆகும் மொத்த செலவுகளை கணக்கிடாமல் மொத்தமாக ஒரு தொகையை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வழங்கும்.
நீங்கள் 5 லட்சம் ரூபாய் வரை உறுதியளிக்கப்பட்ட தொகையை வழங்கும் ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியைப் பெற்றுள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அத்துடன் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கிரிட்டிக்கல் இல்னஸ் கவர் ஆட்-ஆனைப் பெறவும் நீங்கள் முடிவு செய்கிறீர்கள்.
உங்களுக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு, நீங்கள் அதற்கான கிளைமை இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் சமர்ப்பித்தால், சிகிச்சைக்கான செலவு ரூ 9.5 லட்சமாக இருந்தாலும், 15 லட்சம் ரூபாயை நிறுவனம் உடனடியாக அளித்துவிடும்
இன்சூர் செய்யப்பட்ட நபருக்கு விபத்தால் காயங்கள் ஏற்பட்டால், சிகிச்சைக்கான மருத்துவ செலவினை இந்த ஆட்-ஆன் வழங்கும். உடலில் ஏற்பட்ட தற்காலிகமான பாதிப்பு, நிரந்தமான பாதிப்பு, மரணம் போன்ற அனைத்திற்குமான இழப்பீடுகள் இதில் அடங்கும்.
விபத்தில் மரணம் ஏற்பட்டால், இன்சூர் செய்யப்பட்ட நபரின் குடும்பத்தினருக்கு இந்த ஆட்-ஆனின் படி மொத்தத் தொகையும் வழங்கப்படும்.
ஸோன் அப்கிரேடு மூலம் பல்வேறு நகரங்களில் இருக்கும் மருத்துவமனையில் நீங்கள் எடுத்துக் கொள்ளும் சிகிச்சைகளுக்கு அதிக கவரேஜ் பெறலாம். அந்தந்த நகரத்தின் மருத்துவச் செலவுகளின்படி ஸோன்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் மருத்துவ செலவுகள் அதிகமாக இருந்தால், அத்தகைய பிரிவில் அந்த இடமானது சேர்க்கப்படும்.
சற்று அதிகமான பிரீமியத்தை செலுத்துவதன் மூலம் வெவ்வேறு பகுதிகளில் அல்லது ஸோன்களில் மேற்கொண்ட சிகிச்சைக்கான செலவில் உள்ள வேறுபாட்டையும் இந்த ஆட்-ஆன் மூலம் பெற்றிடலாம். பின்னர், உங்கள் மொத்த பிரீமியத்தில் 10%-20% வரை சேமிக்கலாம்.
இந்தியாவில் இருக்கும் வெவ்வேறு ஸோன்கள் (மண்டலங்கள்):
தற்போது டிஜிட்டில், நாங்கள் இரண்டு விதமான ஸோன்களைக் கொண்டுள்ளோம்: ஸோன் A (கிரேட்டர் ஹைதராபாத், டெல்லி என்சிஆர், கிரேட்டர் மும்பை) மற்றும் ஸோன் B (பிற அனைத்து இடங்கள்). நீங்கள் ஸோன் B-யைச் சார்ந்தவராக இருந்தால், நீங்கள் செலுத்த வேண்டிய பிரீமியத்தில் உங்களுக்கு கூடுதல் தள்ளுபடி கிடைக்கும். அது மட்டும் இல்லை, ஸோன் சார்ந்த கோ–பேமெண்ட் கிடையாது.
நீங்கள் ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி உள்ளிட்ட மாற்று சிகிச்சை முறைகள் மூலம் சிகிச்சை பெறுவதற்கான மருத்துவமனை செலவுகள் அனைத்தும் இதில் அடங்கும்.
மூத்த குடிமக்கள் அல்லது 60 வயதுக்கு மேற்பட்ட தனிநபர்கள் இதன் மூலம் பயன் அடையலாம்.
பொறுப்பு துறப்பு: வெவ்வேறு இன்சூரன்ஸ் வழங்குநர்களைப் பொறுத்து அவர்கள் வழங்கும் ஆட்-ஆன்களும் வேறுபடும். அவர்கள் வழங்கும் ஆட்-ஆன்களின் முழு விவரங்கள் பற்றி அறிய உங்கள் இன்சூரரிடம் கேட்டறியவும்.