கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்துவது எப்படி?
கிரெடிட் ஸ்கோர் என்பது வங்கிகள், கடன் வழங்குநர்கள் மற்றும் நிதி நிறுவனங்களால் ஒரு நபரின் கடன் அல்லது கடனைத் திருப்பிச் செலுத்தும் திறனைத் தீர்மானிக்கப் பயன்படுத்தப்படும் மதிப்பெண்ணாகும். உங்கள் கடந்த கால பொறுப்பான கிரெடிட் நடத்தையை இது நிறுவனங்களுக்குக் காட்டுவதால், ஒரு நல்ல கிரெடிட் ஸ்கோரை வைத்திருப்பது மிகவும் முக்கியமானது.
லோன்கள் மற்றும் பிற வகையான கடன்களுக்கான உங்கள் கோரிக்கைகளை அங்கீகரிப்பதில் கிரெடிட் ஸ்கோரானது சாத்தியமான கடன் வழங்குநர்களுக்கு அதிக நம்பிக்கையை அளிக்கலாம். குறைந்த வட்டி விகிதங்கள், சிறந்த திருப்பிச் செலுத்தும் விதிமுறைகள் மற்றும் விரைவான கடன் ஒப்புதல் செயல்முறை போன்ற பிற நன்மைகளையும் இது வழங்குகிறது.
பொதுவாக, கிரெடிட் ஸ்கோர்கள் பின்வருமாறு:
300-579 - மோசமானது
580-669 - சுமாரானது
670-739 - நல்லது
740-799 - மிகவும் நல்லது
800-850 - சிறப்பானது
பொதுவாக 700-750க்கு மேலான கிரெடிட் ஸ்கோர் நல்லதாகக் கருதப்பட்டாலும், உங்கள் கிரெடிட் ஸ்கோரை அதிகமாக பராமரிக்கவும், குறைவதைத் தவிர்க்கவும், அதை மேம்படுத்தவும் பல வழிகள் உள்ளன.
உங்கள் கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்த சில வழிகள் இதோ
1. சரியான நேரத்தில் ரீபேமெண்ட் செய்யுங்கள்
உங்கள் கிரெடிட் ஸ்கோரைக் கணக்கிடுவதற்கு கிரெடிட் பியூரோக்கள் (சிபில் போன்றவை) பயன்படுத்தும் முக்கிய காரணிகளில் ஒன்று, நிலுவையில் உள்ள கடனை சரியான நேரத்தில் ரீபேமெண்ட் செய்வதாகும். அதாவது, இ.எம்.ஐ-கள், கிரெடிட் கார்டு பாக்கிகள் மற்றும் கடன்களை சரியான நேரத்தில் செலுத்துதல், அபராதங்கள் பெறுவதைத் தவிர்ப்பதற்கும், உங்கள் கிரெடிட் ஸ்கோரைக் குறைப்பதற்கும் உதவும்.
நீங்கள் சரியான நேரத்தில் செலுத்த மறந்துவிட்டால், நினைவூட்டல்களை அமைக்க முயற்சிக்கவும். இதன் மூலம் நீங்கள் இந்த கட்டணங்களைத் தவறவிட மாட்டீர்கள் மற்றும் தாமதமாகச் செலுத்த மாட்டீர்கள்.
2. உங்கள் கிரெடிட் வரம்புக்குள் செலவழியுங்கள்
உங்கள் கிரெடிட் ஸ்கோரில் தாக்கத்தை ஏற்படுத்தும் மற்றொரு காரணி உங்கள் கிரெடிட் பயன்பாட்டு விகிதம் (CUR- சி.யூ.அர்) ஆகும். 30% க்கு மேல் உள்ள சி.யூ.அர், ஒரு மோசமான அறிகுறி என்றும் உங்கள் மதிப்பெண்ணைக் குறைக்கும் என்றும் கடன் வழங்குநர்கள் பெரும்பாலும் கருதுகின்றனர். எனவே, உங்கள் கடன் வரம்பு எல்லைக்குள் இருக்க முயற்சி செய்யுங்கள்.
அதாவது, உங்கள் கிரெடிட் கார்டை அதன் வரம்பு வரை பயன்படுத்துவதைத் தவிர்க்க முயற்சிக்க வேண்டும், அதாவது மாதத்திற்கு உங்கள் பயன்பாட்டை கிரெடிட் வரம்பில் 30% மட்டுமே வைத்து கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, உங்கள் கிரெடிட் வரம்பு மாதத்திற்கு ₹1,00,000 ஆக இருந்தால், உங்கள் கிரெடிட் கார்டில் இருந்து ₹30,000க்கு மேல் பயன்படுத்த வேண்டாம். ஒதுக்கப்பட்ட வரம்பு உங்கள் தேவைகளுக்குப் போதுமானதாக இல்லை என்றால், உங்கள் கிரெடிட் வரம்பை உயர்த்துமாறு உங்கள் கார்டு வழங்குநரிடம் கேட்கவும் அல்லது இரண்டாவது கார்டைத் தேர்வு செய்யவும்.
3. பழைய கிரெடிட் கார்டுகளை ரத்து செய்வதைத் தவிர்க்கவும்
பழைய கிரெடிட் கார்டுகள் மற்றும் கணக்குகள் சாத்தியமான கடனளிப்பவர்களுக்கு நீங்கள் சரியான நேரத்தில் உங்கள் பில்களை செலுத்துகிறீர்கள் என்பதைக் காட்டுகின்றன, இது கிரெடிட் பியூரோக்களால் நேர்மறையானதாகக் கருதப்படுகிறது. எனவே, உங்களிடம் பழைய கிரெடிட் கார்டுகள் இருந்தால், உங்கள் கிரெடிட் வரலாற்றை மேம்படுத்தவும், நல்ல கிரெடிட் ஸ்கோரைப் பராமரிக்கவும், முடிந்தவரை அவற்றை நன்றாக பராமரிக்க முயற்சிக்கவும்.
4. உங்கள் கிரெடிட் அறிக்கையை அடிக்கடி சரிபார்க்கவும்
உங்கள் கிரெடிட் ஸ்கோர் அதிகமாக இருப்பதை உறுதிசெய்ய, உங்கள் கிரெடிட் அறிக்கை குறிப்பதை தவறாமல் மதிப்பாய்வு செய்யவும். இந்த வழியில் உங்கள் மதிப்பெண்ணை (நிர்வாகத் தவறுகள், மோசடியான பரிவர்த்தனைகள் போன்றவை) பாதிக்கும் ஏதேனும் பிழைகள் உள்ளதா என்பதைச் சரிபார்த்து, அவற்றை விரைவில் சரிசெய்துகொள்ளலாம்.
இந்தியாவில் உள்ள அனைத்து உரிமம் பெற்ற கிரெடிட் தகவல் நிறுவனங்களும் உங்கள் கிரெடிட் ஸ்கோரை ஆன்லைனில் சரிபார்க்கவும், ஒவ்வொரு ஆண்டும் ஒரு இலவச கிரெடிட் ஸ்கோர் அறிக்கையை வழங்கவும் இந்திய ரிசர்வ் வங்கி கட்டாயமாக்கியுள்ளது. உங்கள் கிரெடிட் ஸ்கோரை இதை விட அதிகமாக அடிக்கடி சரிபார்க்க விரும்பினால், பெரும்பாலான கிரெடிட் பியூரோக்கள், கட்டணத்திற்கு மாதாந்திர அப்டேட்களை வழங்குகின்றன.
5. சரியான கிரெடிட் கலவையை பராமரியுங்கள்
உங்கள் கிரெடிட் ஸ்கோர் சரியாக இருப்பதை உறுதிசெய்ய, பாதுகாப்பற்ற கடன்கள் மற்றும் பாதுகாப்பான கடன்களின் கலவையைத் தேர்ந்தெடுப்பது நல்லது. பாதுகாப்பற்ற கடன்களில் கிரெடிட் கார்டுகள் மற்றும் தனிநபர் கடன்கள் போன்றவை அடங்கும், மேலும் இந்த வகையான கடன்களில் அதிகமாக வைத்திருப்பது, கடன் வழங்கும் நிறுவனங்களால் எதிர்மறையான கோணத்தில் பார்க்கப்படலாம். அதே நேரம், வாகனக் கடன்கள் அல்லது வீட்டுக் கடன்கள் போன்ற பாதுகாப்பான கடன்கள், கடன் வழங்குநர்கள் மற்றும் கிரெடிட் பியூரோக்களால் விரும்பப்படுகின்றன.
பாதுகாப்பற்ற மற்றும் பாதுகாப்பான கடன்களின் நல்ல கலவையையும், நீண்ட மற்றும் குறுகிய கால தவனைகள் கொண்டவையையும் தேர்வுசெய்ய முயற்சிக்கவும். எவ்வாறாயினும், பெரும்பாலும் அதிக எண்ணிக்கையிலான பாதுகாப்பான கடன்களைக் கொண்டவர்களை கடன் வழங்கும் நிறுவனங்கள் விரும்புகின்றன என்பதைக் கவனத்தில் கொள்வது நல்லது.
6. ஒரே நேரத்தில் பல கடன்கள் அல்லது கிரெடிட் கார்டுகளுக்கு விண்ணப்பிப்பதைத் தவிர்க்கவும்
நீங்கள் ஒரு குறுகிய காலத்திற்குள் அதிகமான கடன்கள் அல்லது கிரெடிட் கார்டுகளுக்கு விண்ணப்பிக்கிறீர்கள் (அல்லது நீங்கள் எப்போதும் உங்கள் கிரெடிட் வரம்பை நெருங்குகிறீர்கள்) என்று வைத்துக்கொள்வோம். அப்படியானால், "கிரெடிட் ஹங்கிரி பிஹேவியர்" என்றழைக்கப்படும் அல்லது கிரெடிட்டை பெரிதும் நம்பியிருக்கும் ஒருவரின் நடத்தையை நீங்கள் வெளிப்படுத்தலாம்.
கிரெடிட் பியூரோக்கள் அத்தகைய பயன்பாடுகளைக் கண்காணிக்கும், மேலும் இது ஒரு நபரின் கிரெடிட் மதிப்பை குறைப்பதாக அவர்கள் கருதுவார்கள். அதாவது உங்கள் கிரெடிட் ஸ்கோர் குறைய வாய்ப்புள்ளது.
இதைத் தவிர்க்க, மிகவும் தேவைப்படும்போது மட்டுமே கடனைப் பெற முயற்சிக்கவும், மேலும் உங்கள் கிரெடிட் கார்டு வரம்புகளை நீங்கள் நெருங்காமல் இருப்பதை உறுதிப்படுத்தவும். மேலும், ஒரு கடனை பெறுவதற்கு முன் மற்றொரு கடனைத் திருப்பிச் செலுத்த முயற்சிக்கவும். கூடுதல் கிரெடிட் கார்டைப் பற்றி நீங்கள் கேட்க விரும்பினால், "சாஃப்ட் என்கொய்ரிகள்" மூலம் ஆன்லைனில் அதைச் செய்ய முயற்சிக்கவும். கிரெடிட் கார்டு நிறுவனங்களை நேரடியாகத் தொடர்புகொள்வது போன்ற ஹார்ட் என்கொய்ரிகள் உங்கள் கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும்.
7. உங்கள் கடன்களுக்கு நீண்ட கால தவணைகளைத் தேர்வு செய்யவும்
கடன் வாங்கும் போது, நீண்ட கால தவணைகளை தேர்வு செய்ய முயற்சிக்கவும். அதன் மூலம், கடனைத் திருப்பிச் செலுத்த உங்களுக்கு அதிக நேரம் கிடைக்கும், மேலும் இ.எம்.ஐ-கள் குறைவாக இருக்கும், இதனால் உங்கள் எல்லாப் பேமெண்ட்டுகளையும் சரியான நேரத்தில் எளிதாக செய்ய முடியும். இதனால், நீங்கள் பணம் செலுத்துவதை தவறவிடுவது அல்லது இ.எம்.ஐ-களை செலுத்தத் தவறுவது போன்றவை நிகழாமல் இருக்கும். எனவே, அதன் மூலம் நீங்கள் உங்கள் கிரெடிட் ஸ்கோர் குறைவதைத் தவிர்ப்பீர்கள்.
8. கூட்டு கணக்குகள் மற்றும் விண்ணப்பங்களில் கவனமாக இருங்கள்
ஜாயின்ட் அக்கவுண்ட் எனப்படும் கூட்டு கணக்கு வைத்திருப்பவராகவோ அல்லது வேறு யாரோ வாங்கிய கடனுக்காக கூட்டு விண்ணப்பதாரராகவோ மாறுவதைத் தவிர்க்க முயற்சிக்கவும். இதுபோன்ற சூழ்நிலைகளில், நீங்கள் தவறு செய்யாவிட்டாலும், நீங்கள் பாதிக்கப்படலாம். மற்ற தரப்பினரிடமிருந்து பணம் செலுத்துவதில் ஏதேனும் தவறியிருந்தால், உங்கள் கிரெடிட் ஸ்கோரும் குறையும்.
நீங்கள் கூட்டுக் கணக்கு அல்லது கடனை வைத்திருக்க வேண்டியிருந்தால், அனைத்து கடன்களும் சரியான நேரத்தில் செலுத்தப்படுவதை உறுதி செய்வதன் மூலம் உங்கள் ஸ்கோர் குறைவதைத் தவிர்க்கலாம்.
9. உங்களால் முடிந்தால், உங்கள் கிரெடிட் வரம்பை அதிகரிக்கவும்
உங்கள் வங்கி அல்லது கிரெடிட் கார்டு நிறுவனம் உங்கள் கிரெடிட் கார்டு வரம்பை அதிகரிக்க முன்வந்தால், அதை நிராகரிக்க வேண்டாம். இந்த அதிகரிப்பு உங்கள் ஸ்கோரில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
இருப்பினும், அதிக கிரெடிட் வரம்பு இருந்தால், நீங்கள் அதிக பணம் செலவழிக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. உண்மையில், உங்கள் பயன்பாட்டை குறைவாக வைத்திருப்பது உங்கள் மதிப்பெண்ணில் மேலும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
10. நிராகரிக்கப்பட்ட உடனேயே மீண்டும் கிரெடிட் பெற விண்ணப்பிப்பதைத் தவிர்க்கவும்
நீங்கள் கடன் அல்லது கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பித்து, அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், சிறிது காலத்திற்கு கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், உங்கள் விண்ணப்பத்தின் தகவல் (மற்றும் அதன் நிராகரிப்பு) உங்கள் கிரெடிட் அறிக்கையில் பதிவு செய்யப்படும் மற்றும் இது உங்கள் ஸ்கோரைக் குறைக்கலாம்.
நீங்கள் வேறொரு வங்கி அல்லது கடன் வழங்கும் நிறுவனத்தை அணுகினால், அவர்கள் இந்த குறைந்த ஸ்கோர் மற்றும் நிராகரிப்பைக் கண்டு, இரண்டாவது முறையாக உங்களை நிராகரித்து, உங்கள் ஸ்கோரை மேலும் குறைக்கலாம். அதற்கு பதிலாக, மீண்டும் விண்ணப்பிக்கும் முன் உங்கள் கிரெடிட் ஸ்கோர் மேம்படும் வரை காத்திருக்க முயற்சிக்க வேண்டும்.