ஏ.பி.ஒய் கால்குலேட்டர்
வயது (ஆண்டுகளில்)
விரும்பிய மாதாந்திர ஓய்வூதியம்
விரும்பியப் பங்களிப்பு
அடல் பென்ஷன் யோஜனா கால்குலேட்டர்
இத்திட்டம் 2015-இல் தொடங்கப்பட்டது. அடல் பென்ஷன் யோஜனா என்பது அரசாங்க ஓய்வூதியத் திட்டமாகும். இது ஒரு அமைப்புசாரா துறையில் பணிபுரியும் தனிநபர்களுக்கு அவர்களின் ஓய்வுக்குப் பிறகு நிதிப் பாதுகாப்பை வழங்குகிறது. இந்தத் திட்டம் தகுதியான விண்ணப்பதாரர்களை மாதாந்திர பங்களிப்புகளைச் செய்ய ஊக்குவிக்கிறது மற்றும் 60 வயதை எட்டிய பிறகு திரட்டப்பட்ட கார்பஸைப் பெறுகிறது.
அடல் பென்ஷன் யோஜனா கால்குலேட்டர் என்பது டிஜிட்டல் கால்குலேட்டர் ஆகும். இது மாதாந்திர கட்டணம் மற்றும் எதிர்பார்க்கப்படும் வருமானத்தை முன்கூட்டியே கணக்கிட உதவுகிறது.
எனவே, அடல் பென்ஷன் யோஜனா கால்குலேட்டரை நீங்கள் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைப் பார்ப்போம்.
பிரதான் மந்திரி அடல் பென்ஷன் யோஜனா கால்குலேட்டர்: ஏ.பி.ஒய் ஐ எவ்வாறு கணக்கிடுவது?
முதலில், அடல் பென்ஷன் யோஜனா கால்குலேட்டரைப் பயன்படுத்த, நீங்கள் எவ்வளவு செலுத்த வேண்டும் என்பதைத் தீர்மானிக்கவும். உங்கள் மாதாந்திர பங்களிப்பு என்பது உங்கள் முதலீட்டின் தொடக்க வயது மற்றும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஓய்வூதிய ஆப்ஷனைப் பொறுத்தது.
உதாரணமாக, நீங்கள் 18 வயதில் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யத் தொடங்கினால், 60 வயதில் உங்கள் ஓய்வூதியத்தைப் பெறுவதற்கு 42 ஆண்டுகளுக்கு நீங்கள் நிதி பங்களிப்பு செய்ய வேண்டும். 18 வயதில் ₹1,000 ஓய்வூதிய ஆப்ஷனைத் தேர்வு செய்தால், உங்கள் பங்களிப்பு ₹42-க்கு சமமாக இருக்கும்.
இருப்பினும், மேனுவல் பிழைகளைத் தவிர்க்க, நீங்கள் ஆன்லைனில் அடல் பென்ஷன் யோஜனா கால்குலேட்டரைப் பயன்படுத்தலாம். மதிப்பீட்டைப் பெற அடல் பென்ஷன் யோஜனா கால்குலேட்டரைப் பயன்படுத்த பின்வரும் படிகள் இங்கே உள்ளன:
- என்.பி.எஸ் இன் இந்த அதிகாரப்பூர்வ லிங்க்கைப் பார்வையிடவும் - https://npstrust.org.in/apy-calculator.
- இப்போது, உங்கள் வயது, ஓய்வூதியம், எதிர்பார்க்கப்படும் வருமானம் மற்றும் வருடாந்திர விகிதம் ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
- தேர்ந்தெடுத்த பிறகு, உங்கள் ஓய்வூதிய ஆப்ஷனின் அடிப்படையில் உங்கள் மாதாந்திர, அரையாண்டு மற்றும் காலாண்டு பங்களிப்பைப் பெறுவீர்கள். மேலும், வருடங்களில் மொத்த கார்பஸ் மற்றும் முதலீடு பற்றிய மதிப்பிடப்பட்ட யோசனையைப் பெறுவீர்கள்.
இந்தத் திட்டத்தில் பொருந்தக்கூடிய பிற கட்டணங்களை இந்த கால்குலேட்டர் கருத்தில் கொள்ளாது என்பதை நினைவில் கொள்ளவும். மேலும் தெளிவு பெற, நீங்கள் விண்ணப்பிக்கும் வங்கியில் அதை மதிப்பாய்வு செய்யவும்.
அடல் பென்ஷன் யோஜனா கணக்கீடு விளக்கப்படம்
உங்கள் வயது மற்றும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஓய்வூதியத்தின் அடிப்படையில் மாதாந்திர பங்களிப்பை கீழே உள்ள அட்டவணை விளக்குகிறது. எனவே, 18 வயதில் முதலீடு செய்யத் தொடங்கினால் பிரீமியம் குறைவாக இருக்கும்.
வழக்கமான பங்களிப்பிற்குப் பிறகு, விண்ணப்பதாரர் 60 வயதை எட்டிய பிறகு மாதாந்திர ஓய்வூதியத்தைப் பெறுவது உறுதி. பயனாளி உயிரிழந்துவிட்டால், அவரது வாழ்க்கைத் துணைக்கு ஓய்வூதியப் பலன்கள் கிடைக்கும். இருப்பினும், இருவரும் மறைந்துவிட்டால், நியமிக்கப்பட்ட நாமினி இந்த ஓய்வூதியத் தொகையைப் பெறுவார்.
மாதாந்திர ஓய்வூதியம் ₹1,000 க்கான அடல் பென்ஷன் யோஜனா கால்குலேட்டர் விளக்கப்படம்
வயது (பங்களிப்பின் ஆண்டுகள்) |
மாதாந்திர கட்டணம் |
எதிர்பார்த்த வருமானம் |
18 (42 ஆண்டுகளில்) |
₹42 |
₹1.7 லட்சம் |
20 (40 ஆண்டுகளில்) |
₹50 |
₹1.7 லட்சம் |
22 (38 ஆண்டுகளில்) |
₹59 |
₹1.7 லட்சம் |
24 (36 ஆண்டுகளில்) |
₹70 |
₹1.7 லட்சம் |
26 (34 ஆண்டுகளில்) |
₹82 |
₹1.7 லட்சம் |
28 (32 ஆண்டுகளில்) |
₹97 |
₹1.7 லட்சம் |
30 (30 ஆண்டுகளில்) |
₹116 |
₹1.7 லட்சம் |
32 (28 ஆண்டுகளில்) |
₹138 |
₹1.7 லட்சம் |
34 (26 ஆண்டுகளில்) |
₹165 |
₹1.7 லட்சம் |
36 (24 ஆண்டுகளில்) |
₹198 |
₹1.7 லட்சம் |
38 (22 ஆண்டுகளில்) |
₹240 |
₹1.7 லட்சம் |
40 (20 ஆண்டுகளில்) |
₹291 |
₹1.7 லட்சம் |
மாதாந்திர ஓய்வூதியம் ₹2,000 க்கான அடல் பென்ஷன் யோஜனா கால்குலேட்டர் விளக்கப்படம்
வயது (பங்களிப்பின் ஆண்டுகளில்) |
மாதாந்திர கட்டணம் |
எதிர்பார்த்த வருமானம் |
18 (42 ஆண்டுகளில்) |
₹84 |
₹3.4 லட்சம் |
20 (40 ஆண்டுகளில்) |
₹100 |
₹3.4 லட்சம் |
22 (38 ஆண்டுகளில்) |
₹117 |
₹3.4 லட்சம் |
24 (36 ஆண்டுகளில்) |
₹139 |
₹3.4 லட்சம் |
26 (34 ஆண்டுகளில்) |
₹164 |
₹3.4 லட்சம் |
28 (32 ஆண்டுகளில்) |
₹194 |
₹3.4 லட்சம் |
30 (30 ஆண்டுகளில்) |
₹231 |
₹3.4 லட்சம் |
32 (28 ஆண்டுகளில்) |
₹276 |
₹3.4 லட்சம் |
34 (26 ஆண்டுகளில்) |
₹330 |
₹3.4 லட்சம் |
36 (24 ஆண்டுகளில்) |
₹396 |
₹3.4 லட்சம் |
38 (22 ஆண்டுகளில்) |
₹480 |
₹3.4 லட்சம் |
40 (20 ஆண்டுகளில்) |
₹582 |
₹3.4 லட்சம் |
₹3,000 மாதாந்திர ஓய்வூதியம் ₹3,000 க்கான அடல் பென்ஷன் யோஜனா கால்குலேட்டர் விளக்கப்படம்
வயது (பங்களிப்பு ஆண்டுகளில்) |
மாதாந்திர கட்டணம் |
எதிர்பார்த்த வருமானம் |
18 (42 ஆண்டுகளில்) |
₹126 |
₹5.1 லட்சம் |
20 (40 ஆண்டுகளில்) |
₹150 |
₹5.1 லட்சம் |
22 (38 ஆண்டுகளில்) |
₹177 |
₹5.1 லட்சம் |
24 (36 ஆண்டுகளில்) |
₹208 |
₹5.1 லட்சம் |
26 (34 ஆண்டுகளில்) |
₹246 |
₹5.1 லட்சம் |
28 (32 ஆண்டுகளில்) |
₹292 |
₹5.1 லட்சம் |
30 (30 ஆண்டுகளில்) |
₹347 |
₹5.1 லட்சம் |
32 (28 ஆண்டுகளில்) |
₹414 |
₹5.1 லட்சம் |
34 (26 ஆண்டுகளில்) |
₹495 |
₹5.1 லட்சம் |
36 (24 ஆண்டுகளில்) |
₹594 |
₹5.1 லட்சம் |
38 (22 ஆண்டுகளில்) |
₹720 |
₹5.1 லட்சம் |
40 (20 ஆண்டுகளில்) |
₹873 |
₹5.1 லட்சம் |
மாதாந்திர ஓய்வூதியம் ₹4,000 க்கான அடல் பென்ஷன் யோஜனா கால்குலேட்டர் விளக்கப்படம்
வயது (பங்களிப்பு ஆண்டுகளில்) |
மாதாந்திர கட்டணம் |
எதிர்பார்த்த வருமானம் |
18 (42 ஆண்டுகளில்) |
₹168 |
₹6.8 லட்சம் |
20 (40 ஆண்டுகளில்) |
₹198 |
₹6.8 லட்சம் |
22 (38 ஆண்டுகளில்) |
₹234 |
₹6.8 லட்சம் |
24 (36 ஆண்டுகளில்) |
₹277 |
₹6.8 லட்சம் |
26 (34 ஆண்டுகளில்) |
₹327 |
₹6.8 லட்சம் |
28 (32 ஆண்டுகளில்) |
₹388 |
₹6.8 லட்சம் |
30 (30 ஆண்டுகளில்) |
₹462 |
₹6.8 லட்சம் |
32 (28 ஆண்டுகளில்) |
₹551 |
₹6.8 லட்சம் |
34 (26 ஆண்டுகளில்) |
₹659 |
₹6.8 லட்சம் |
36 (24 ஆண்டுகளில்) |
₹792 |
₹6.8 லட்சம் |
38 (22 ஆண்டுகளில்) |
₹957 |
₹6.8 லட்சம் |
40 (20 ஆண்டுகளில்) |
₹1,164 |
₹6.8 லட்சம் |
மாதாந்திர ஓய்வூதியம் ₹5,000-க்கான அடல் பென்ஷன் யோஜனா கால்குலேட்டர் விளக்கப்படம்
வயது (பங்களிப்பு ஆண்டுகளில்) |
மாதாந்திர கட்டணம் |
எதிர்பார்த்த வருமானம் |
18 (42 ஆண்டுகளில்) |
₹210 |
₹8.5 லட்சம் |
20 (40 ஆண்டுகளில்) |
₹248 |
₹8.5 லட்சம் |
22 (38 ஆண்டுகளில்) |
₹292 |
₹8.5 லட்சம் |
24 (36 ஆண்டுகளில்) |
₹346 |
₹8.5 லட்சம் |
26 (34 ஆண்டுகளில்) |
₹409 |
₹8.5 லட்சம் |
28 (32 ஆண்டுகளில்) |
₹485 |
₹8.5 லட்சம் |
30 (30 ஆண்டுகளில்) |
₹577 |
₹8.5 லட்சம் |
32 (28 ஆண்டுகளில்) |
₹689 |
₹8.5 லட்சம் |
34 (26 ஆண்டுகளில்) |
₹824 |
₹8.5 லட்சம் |
36 (24 ஆண்டுகளில்) |
₹990 |
₹8.5 லட்சம் |
38 (22 ஆண்டுகளில்) |
₹1,196 |
₹8.5 லட்சம் |
40 (20 ஆண்டுகளில்) |
₹1,454 |
₹8.5 லட்சம் |
அடல் பென்ஷன் யோஜனாவில் பொருந்தும் வட்டி விகிதம்
தாமதமான மாதாந்திர கொடுப்பனவுகளுக்கு சில கட்டணங்கள் மற்றும் வட்டி விகிதங்கள் உள்ளன. ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் அரசாங்க அனுமதியின் மூலம் அந்தக் கட்டணங்களை விதிக்கிறது.
மேலும் அறிய அட்டவணையைப் பாருங்கள்:
பொது நபர் |
சார்ஜ் ஹெட் |
சேவைக் கட்டணம் |
மத்திய பதிவு-வைப்பு முகமை |
கணக்கு திறப்பு கட்டணம் |
₹15/கணக்கு |
- |
கணக்கு பராமரிப்புக் கட்டணம் |
ஆண்டுக்கு ₹40/கணக்கு |
ஓய்வூதிய நிதி மேலாளர்கள் |
முதலீட்டுக் கட்டணம் (ஆண்டுக்கு) |
ஏ.யூ.எம் இன் 0.0102% |
கவனித்துக் கொள்பவர் |
முதலீட்டு பராமரிப்புக் கட்டணம் (ஆண்டுதோறும்) |
0.0075% (electronics) 0.05% (physical segment of AUM) |
Point of Presence |
Subscriber Charges |
₹120 - ₹150 |
- |
Recurring Charges |
₹100 per annum/subscriber |
பொருந்தக்கூடிய அபராதக் கட்டணங்கள்
நிலுவைத் தேதிக்கு முன் மாதாந்திர பிரீமியத்தைச் செலுத்தத் தவறினால், மாதாந்திர அபராதக் கட்டணங்களின் பட்டியல் இங்கே:
- ₹100 வரையிலான மாதாந்திர கொடுப்பனவுகளுக்கு பி.எஃப்.ஆர்.டி.ஏ ₹1 வசூலிக்கிறது.
- இது ₹101 முதல் ₹150 வரையிலான மாதாந்திர பங்களிப்புகளுக்கு ₹2 விதிக்கிறது.
- ₹500 முதல் ₹1,000 வரையிலான பிரீமியங்களுக்கு ₹5 வசூலிக்கப்படுகிறது.
- ₹1,000-க்கு மேல் மாதாந்திர பிரீமியங்களுக்கு ₹10 வசூலிக்கப்படுகிறது.
அடல் பென்ஷன் யோஜனா பிரீமியம் கால்குலேட்டரைப் பயன்படுத்துவதன் 3 நன்மைகள்
ஆன்லைன் அடல் பென்ஷன் யோஜனா கால்குலேட்டரைப் பயன்படுத்துவது பின்வரும் வழிகளில் உங்களுக்கு எவ்வாறு உதவும் என்பதைப் பாருங்கள்:
முன்கூட்டியே சேமிப்பு
அடல் பென்ஷன் யோஜனா கால்குலேட்டரைப் பயன்படுத்துவதன் மூலம், இலக்கு நிர்ணயிக்கப்பட்ட கார்பஸைப் பெறுவதற்கு நீங்கள் எவ்வளவு சேமிக்க வேண்டும் என்பது பற்றிய நியாயமான யோசனையை உங்களுக்கு முன்கூட்டியே வழங்குகிறது.
நேரத்தை மிச்சப்படுத்துகிறது
முற்றிலும் ஆன்லைனில் இருப்பதால், கால்குலேட்டர் அதிக நேரத்தையும் ஆற்றலையும் முதலீடு செய்யாமல் கிட்டத்தட்ட துல்லியமான முடிவுகளை உங்களுக்கு அளிக்கிறது.
இலவச பயன்பாடு
பல வலைத்தளங்கள் ஆன்லைன் அடல் பென்ஷன் யோஜனா ரிட்டர்ன் கால்குலேட்டர் வசதியை கொண்டிருக்கின்றன, இதை பயன்படுத்துவதற்கு எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை. பெரும்பாலும் இந்த கால்குலேட்டர்கள் பயன்படுத்த கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை. எனவே, உங்கள் தேவைக்கேற்ப இந்தக் கால்குலேட்டரை நீங்கள் அணுகி பயன்படுத்திக் கொள்ளலாம்.