தனிநபர் லோன் இ.எம்.ஐ கால்குலேட்டர்
கடன்தொகை
காலம் (ஆண்டுகள்)
வட்டி விகிதம்
தனிநபர் லோன் கால்குலேட்டர் பற்றிய அனைத்தும் விளக்கப்பட்டுள்ளன
கடன் திருப்பிச் செலுத்துப்படுவதை கிரெடிட் கருவி முறையாக நிர்வகிப்பதால், கடன் வாங்குபவரின் கிரெடிட் ஹிஸ்டரியை அதிகரிக்கிறது. இ.எம்.ஐ-க்களை முன்கூட்டியே அறிந்திருப்பது தனிநபர் லோனை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆன்லைன் தனிநபர் லோன் இ.எம்.ஐ கால்குலேட்டர் இந்த நோக்கத்திற்காக ஒரு எளிய கருவியாக மாறிவிடும்.
தனிநபர் லோன் கால்குலேட்டர் தொடர்பான அனைத்து முக்கிய அம்சங்களையும் கண்டறிய தொடர்ந்து ஆராய்வோம். அதற்கு முன் நீங்கள் தனிநபர் லோன் இ.எம்.ஐ (EMI) பற்றி ஓரளவு அறிந்திருப்பது தேவையாகிறது.
தனிநபர் லோன் இ.எம்.ஐ கால்குலேட்டர் என்றால் என்ன?
தனிநபர் லோன் என்பது பாதுகாப்பற்ற கிரெடிட் கருவி ஆகும். ஒரு தனிநபர் வீட்டை புதுப்பித்தல், திருமணம், பயணம், மருத்துவ சிகிச்சைகள் மற்றும் பிற உடனடி நிதி தேவைகள் போன்ற பல நோக்கங்களுக்காக இதைப் பயன்படுத்தலாம்.
இப்போது, தனிநபர் லோன் இ.எம்.ஐ என்றால் என்ன?
தனிநபர் லோனுக்கான சமமான மாதாந்திர தவணைகள் அல்லது இ.எம்.ஐ என்பது ஒருவர் தனிநபர் லோனைப் பெற்ற பிறகு மாதந்தோறும் செலுத்த வேண்டிய தொகையைக் குறிக்கிறது. இந்த இ.எம்.ஐ தொகையானது லோன் வட்டி மற்றும் அசல் தொகை ஆகிய இரண்டையும் செலுத்துவதற்குப் பயன்படுத்தப்படும். தனிநபர் லோன் இ.எம்.ஐ காலம் முழுவதும் ஒரே மாதிரியாக இருக்கும்.
தனிநபர் லோனைப் பாதிக்கும் காரணிகள் என்னென்ன?
தனிநபர் லோன் இ.எம்.ஐ-களை பாதிக்கும் மூன்று காரணிகள் பின்வருமாறு:
P என்பது முதன்மை கடன் தொகையை குறிக்கிறது: அவர் செலுத்த வேண்டிய இ.எம்.ஐ-கள் தனிநபர் லோன் தொகைக்கு நேரடியாக விகிதாசாரமாக இருக்கும். லோன் தொகை அதிகமாக இருந்தால், மாதாந்திர தவணைகள் அதிகமாக இருக்கும்.
R என்பது மாதாந்திர வட்டி விகிதத்தைக் குறிக்கிறது: பொருந்தக்கூடிய வட்டி விகிதம் கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் அசல் தொகைக்கு வட்டி விதிக்கும் சதவீதமாக வரையறுக்கப்படுகிறது. அதிக வட்டி விகிதம் இ.எம்.ஐ-களை அதிகரிப்பதற்கும் அதற்கு நேர்மாறாகவும் பொறுப்பாகும்.
N என்பது லோன் காலத்தைக் குறிக்கிறது: இது தனிநபர் லோனுக்கான திருப்பிச் செலுத்தும் காலத்தைக் குறிக்கிறது. லோன் காலம் இ.எம்.ஐகளுடன் நேர்மாறாக தொடர்புடையது. நீண்ட கால இ.எம்.ஐ-களை குறைக்கும் அதே வேளையில் குறுகிய காலம் அவற்றை உயர்த்தும்.
தனிநபர் லோன் இ.எம்.ஐ கால்குலேட்டர், தனிநபர் லோன் கணக்கீட்டு சூத்திரம் மற்றும் தனிநபர் கடனுக்கான இ.எம்.ஐ ஐ எவ்வாறு கணக்கிடுவது என்பதைப் பற்றி தெரிந்துகொள்ள ஸ்க்ரோல் செய்யவும்!
ஆன்லைன் தனிநபர் லோன் இ.எம்.ஐ கால்குலேட்டர் என்றால் என்ன?
தனிநபர் லோனுக்கான லோன் கால்குலேட்டர் என்பது ஒரு தனிநபர் லோனைத் திருப்பிச் செலுத்துவதற்கு செலுத்த வேண்டிய இ.எம்.ஐ-களை கணக்கிடுவதற்கான ஆன்லைன் கருவியாகும்.
கட்டணமில்லா தனிநபர் லோன் கால்குலேட்டர், லோன் தொகை, காலம் மற்றும் வட்டி விகிதத்திற்கான மதிப்புகளை லோன் பெற விரும்புவர் உள்ளீடு செய்ய அனுமதிக்கிறது. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் லோன் காலம், இ.எம்.ஐ மற்றும் மீதமுள்ள லோன் தொகை வரை செலுத்த வேண்டிய வட்டியைக் கணக்கிடுவதற்கு கருவி இந்த மதிப்புகளைப் பயன்படுத்துகிறது.
இருப்பினும், இந்த ஆன்லைன் கருவியின் செயல்பாட்டைப் புரிந்து கொள்ள, முதலில் தனிநபர் லோன் இ.எம்.ஐ பற்றிய அடிப்படை யோசனையை ஒருவர் கொண்டிருக்க வேண்டும்.
தனிநபர் லோன் இ.எம்.ஐ (EMI)-ஐ கணக்கிடுவதற்கான சூத்திரம் என்ன?
தனிநபர் லோன் இ.எம்.ஐ கால்குலேட்டர் சூத்திரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது -
இ.எம்.ஐ = [P x R x (1+R) ^N] / [(1+R) ^ N-1]
தனிநபர் லோனின் சமமான மாதாந்திர தவணைகளை உருவாக்கும் 3 கூறுகள் மேலே உள்ள தனிநபர் லோன் கணக்கீட்டு சூத்திரத்தில் P, R மற்றும் N என குறிப்பிடப்பட்டுள்ளன.
இவை பின்வருவனவற்றை குறிக்கின்றன -
P = முதன்மைத் தொகை
R = வட்டி விகிதம்
N = லோன் காலம்
மேலே உள்ள சூத்திரத்தை நன்கு புரிந்துகொள்ள பின்வரும் அட்டவணை உங்களுக்கு உதவும். இந்த எடுத்துக்காட்டில், லோன் வாங்கிய தொகை அல்லது அசல் தொகை ₹10,00,000 என்று கருதுங்கள். ஆண்டுதோறும் வசூலிக்கப்படும் வட்டி விகிதம் 10.5%. இந்த சூத்திரத்தில், வட்டி விகிதம் மாதாந்திர அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இது R = வருடாந்திர வட்டி விகிதம்/12/100 என்பதைக் குறிக்கிறது. எனவே, இங்கு ஆண்டுக்கு 10.5% வட்டி விகிதம் இருப்பதால், R = 10.5/12/100=0.00875.
கணக்கிடப்பட்ட இ.எம்.ஐ ₹13,493 ஆக இருக்கும். எனவே, முழு லோன் தொகையையும் திருப்பிச் செலுத்த 120 மாதங்களுக்கு ₹13,493 செலுத்த வேண்டும். செலுத்த வேண்டிய மொத்தத் தொகை ₹13,493 * 120 = ₹16,19,220. இதில் வாங்கிய லோனுக்கான வட்டி ₹6,19,220 அடங்கும்
பாராமீட்டர் |
மதிப்பு |
அசல் தொகை |
₹10,00,000 |
ஆண்டு வட்டி விகிதம் |
10.5% |
லோன் காலம் |
10 ஆண்டுகள் அல்லது 120 மாதங்கள் |
இ.எம்.ஐ |
₹13,493 |
தனிநபர் லோன் இ.எம்.ஐ கால்குலேட்டரின் நன்மைகள்
தனிநபர் லோன் இ.எம்.ஐ கால்குலேட்டரைப் பயன்படுத்துவதன் பல நன்மைகள் கீழே விளக்கப்பட்டுள்ளன:
மாதாந்திர பட்ஜெட்டில் இ.எம்.ஐ களை எளிதாகப் பொருத்துதல்
தனிநபர் லோன் கால்குலேட்டர் மூலம் மாதாந்திர தவணைகளை கணக்கிடும் போது, கடன் வாங்குபவர் தாங்கள் செலுத்த வேண்டிய சரியான தொகையை அறிந்து கொள்கிறார். லோன் காலம் முழுவதும் அவர்களின் அனைத்து மாதாந்திர செலவுகளையும் எளிதாக இ.எம்.ஐ களில் பொருத்துவதற்கு இது அவர்களுக்கு உதவுகிறது.
மாதாந்திர தவணைகளை பாதிக்கும் காரணிகளை மாற்றுவதன் மூலம் தகவலறிந்த முடிவுகளை எடுங்கள்
தனிநபர் லோன் இ.எம்.ஐ கால்குலேட்டர் மூலம், பல்வேறு வட்டி விகிதங்கள் மற்றும் கால அவகாசங்களுடன் பல்வேறு அசல் லோன் தொகைகளை ஒருவர் பரிசோதிக்கலாம். இதையொட்டி, கடன் வாங்குபவர் தனது நிதி மற்றும் வாழ்க்கை முறைக்கு இடையூறு ஏற்படாமல், அவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய லோன் தொகையைத் தீர்மானிப்பதை எளிதாக்குகிறது.
ஹெல்த்தியான லோன் மதிப்பீட்டை உறுதி செய்தல்
தனிநபர் லோனைப் பெறுவதற்கு முன், மாதாந்திர தவணைகளைக் கணக்கிடுவதன் மூலம் தனிநபர்கள் தங்கள் நிதிகளை நிர்வகிக்கலாம். இது அவர்கள் சரியான நேரத்தில் லோனை திருப்பிச் செலுத்துவதற்கு மேலும் உதவும். அவர்கள் தங்கள் இ.எம்.ஐ பேமென்ட்களைத் தவறவிட மாட்டார்கள். இது, மோசமான லோன் மதிப்பீட்டைத் தவிர்க்கும்.
துல்லியமான முடிவுகள் மற்றும் நேரத்தைச் சேமிக்க உதவும்
தனிநபர் லோன் இ.எம்.ஐ கால்குலேட்டர் அனைத்து சிக்கலான கணக்கீடுகளையும் நொடிகளில் செய்கிறது. இது நிறைய நேரத்தை மிச்சப்படுத்த உதவுகிறது. இ.எம்.ஐயின் மேனுவல் கணக்கீட்டின் போது பிழைகள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இந்த கருவி மூலம், அத்தகைய பிழைகளுக்கான வாய்ப்புகள் பூஜ்ஜியமாகும், இதன் மூலம் துல்லியமான முடிவுகள் உறுதி செய்யப்படுகிறது.
பயன்படுத்த மற்றும் அணுக எளிதானது
தனிநபர் லோன் இ.எம்.ஐ கால்குலேட்டர் பல போர்ட்டல்களில் ஆன்லைனில் எளிதாகக் கிடைக்கிறது மற்றும் அதைப் பயன்படுத்துவது மிகவும் எளிது. செலுத்த வேண்டிய மாதாந்திர தவணைகளின் மதிப்பைப் பெற, பயனர்கள் முதன்மை லோன் தொகை, லோன் காலம் மற்றும் வட்டி விகிதம் ஆகியவற்றை உள்ளிட வேண்டும். எந்த நேரத்திலும் எந்த இடத்திலிருந்தும் அவர்கள் மாதாந்திர தவணைகளை எளிதாகக் கணக்கிட முடியும் என்பதை இது குறிக்கிறது.
தனிநபர் லோன் இ.எம்.ஐ கால்குலேட்டரைப் பயன்படுத்தி உங்களுக்குத் தேவையான தொகையை இறுதி செய்தவுடன், அத்தகைய நிதிகளைப் பெறுவதற்கான விரிவான தேவைகளை அறிந்துகொள்ள வேண்டிய நேரம் இது.
தனிநபர் லோனுக்கு தேவையான ஆவணங்கள்
தனிநபர் லோனைப் பெற தேவையான ஆவணங்களைத் தேடுகிறீர்களா?
இதோ உங்களுக்கான பதில்!
தனிநபர் லோனைத் தேடுபவர்கள் தனிநபர் லோனுக்குத் தேவையான பல்வேறு ஆவணங்கள் என்னென்ன என தெரிந்து வைத்திருக்க வேண்டும். இந்த கிரெடிட் கருவிக்கு விண்ணப்பிக்கும் போது தேவைப்படும் தனிநபர் லோன் ஆவணங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
- கே.ஒய்.சி ஆவணங்கள்
- கடந்த சில மாதங்களில் சம்பளம் வாங்கியதற்கு சான்று
- பணியாளர் ஐ.டி (ID) கார்டு
- கடந்த சில மாதங்களாக ஒரு தனிநபரின் சம்பளக் கணக்கின் வங்கி ஸ்டேட்மென்ட்டுகள்
லோன் வாங்குபவர்கள் மேலே உள்ள பட்டியலில் குறிக்கும் ஆவணங்கள் மட்டுமின்றி லோன் செயலாக்கத்தின் போது கூடுதல் ஆவணங்கள் தேவைப்படலாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே, அவர்கள் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு, தேவைப்படும் தனிநபர் லோன் ஆவணங்களின் முழுமையான பட்டியலைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தனிநபர் லோனுக்கான வரி நன்மைகள் என்ன?
தனிநபர் லோனில் ஏதேனும் வரிச் சலுகை உள்ளதா என்று யோசிக்கிறீர்களா?
தனிநபர் லோனுக்கு வரி விதிக்கப்படாவிட்டாலும், தனிநபர்கள் இந்த கிரெடிட் கருவியை குறிப்பிட்ட இறுதி பயன்பாட்டிற்கு வைத்தால் இந்தியாவில் தனிநபர் லோனில் வரி பலன்களைப் பெறலாம். வருமான வரிச் சட்டம், 1961-இன் படி, லோன் தொகை சில குறிப்பிட்ட பயன்பாடுகளுக்குப் பயன்படுத்தப்பட்டால், ஒருவர் வரி விலக்குகள் மற்றும் விலக்குகளைப் பெறலாம்.
ஒரு தனிநபர், வணிக விரிவாக்கம் தொடர்பான செலவினங்களைச் சந்திக்கத் தொகையைப் பயன்படுத்தினால், தனிநபர் லோன் வட்டித் திருப்பிச் செலுத்துவதில் வரி விலக்குகளைப் பெறலாம். இருப்பினும், வணிக வருவாயை அதிகரிக்க முதலீடு செய்யப்பட வேண்டும்.
வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 24(b) தனிநபர் லோனுக்கான தொகையை வீட்டை மேம்படுத்த அல்லது புதுப்பித்தலுக்குப் பயன்படுத்தினால், அதன் மீதான வரி தள்ளுபடியை அனுமதிக்கிறது. இதற்காக, ₹30000 வரை லோனைத் திருப்பிச் செலுத்தும் வட்டியை மொத்த வரிக்குட்பட்ட வருமானத்தில் இருந்து விலக்கிக் கொள்ளலாம். தனிநபர் ஒருவர் குடியிருப்பதற்கான வீடு வாங்குவதற்குத் தொகையைப் பயன்படுத்தினால், செலுத்தப்பட்ட வட்டிக்கு ₹2 லட்சம் வரை பிடித்தம் செய்ய அனுமதிக்கப்படும்.
வீட்டைப் புதுப்பிப்பதற்கான தொகையைப் பயன்படுத்தி இந்த லோன் கருவியில் தனிநபர் வரிச் சேமிப்பை அனுபவிக்க முடியும் என்பதை இது குறிக்கிறது.
தங்கம், குடியிருப்பு அல்லாத வீடுகள், பங்குகள் மற்றும் நகைகள் போன்ற பிற சொத்துக்களை வாங்குவதற்குத் தொகையைப் பயன்படுத்துவதற்கான பலன்கள் உள்ளன. அத்தகைய முதலீடுகளுக்கு, லோனுக்கான விலக்கு வரியிலிருந்து ஒருவர் பயனடையலாம். இதற்கு செலுத்தப்படும் வட்டி சொத்து கையகப்படுத்தும் செலவாகக் கருதப்படுகிறது.
இது மொத்த மூலதன ஆதாயங்களைக் குறைக்கிறது மற்றும் தனிநபர் லோனுக்கான வரிச் சலுகைகளை வழங்குகிறது.
பல காரணிகள் உங்கள் திருப்பிச் செலுத்தும் தொகையை எவ்வாறு பாதிக்கலாம் என்பது இப்போது தெளிவாகத் தெரிந்ததால், திறமையான நிதி நிர்வாகத்திற்காக தனிநபர் லோன் இ.எம்.ஐ கால்குலேட்டரைப் பயன்படுத்துவதற்கு பாதுகாப்பானது. இது தவிர, லோன் வாங்குபவர்கள் பல லோன் வழங்கும் நிறுவனங்களை ஆராய்ந்து, சிறந்த சலுகையைத் தேர்வுசெய்ய தனிநபர் லோன் விகிதங்களை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.