ஓவல்யூஷன் கால்குலேட்டர்
அடுத்த மாதவிடாய் சுழற்சிகளில் உங்களின் ஓவல்யூஷன் நாட்கள்
உங்கள் மாதவிடாய் சுழற்சி நாட்களில் | ஓவல்யூஷன் தேதி |
---|---|
{{nextPeriod.nextSixPeriod}} | {{nextPeriod.dueDates}} |
ஆன்லைன் ஓவல்யூஷன் தேதி கால்குலேட்டர்: எப்படி பயன்படுத்துவது & அதன் முக்கியத்துவம்
ஒவ்வொரு பெண்ணுக்கும் வெவ்வேறு மாதவிடாய் சுழற்சி உள்ளது. எனவே, நீங்கள் கருத்தரிக்கும் வாய்ப்புகளை அதிகரிக்க விரும்பினால், உங்கள் உடலை பற்றி நன்கு தெரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். இந்த நோக்கத்திற்காக, நீங்கள் ஓவல்யூஷன் தேதியை அறிய ஆன்லைன் கால்குலேட்டரின் உதவியைப் பெறலாம். உங்களுக்கு ஓவல்யூஷன் உருவாகி இருக்கும் நாட்களைக் கணக்கிட இது பெரிதும் உதவுகிறது. மேலும், நீங்கள் கர்ப்பமாகிவிட்டீர்களா என்பதைச் சரிபார்க்க சரியான தேதி எது என்பதைப் பற்றிய நுண்ணறிவை வழங்குகிறது.
ஓவல்யூஷன் தேதி ஆன்லைன் கால்குலேட்டரை நீங்கள் எப்படிப் பயன்படுத்துவது மற்றும் உங்களுக்கு ஓவல்யூஷன் ஆகியிருப்பதை எப்படி தெரிந்து கொள்வது என்பது பற்றி மேலும் அறியலாம் வாங்க!
ஓவல்யூஷன் தேதி கால்குலேட்டர் என்றால் என்ன?
ஓவல்யூஷன் தேதி கால்குலேட்டர், ஒரு பெண்ணுக்கு ஓவல்யூஷன் தேதியை வழங்குகிறது மற்றும் குழந்தை பிறப்பை தள்ளி வைத்தல் மற்றும் கர்ப்பத்திற்கான உத்தரவாதத்தை இது அளிக்காது. எனவே, உங்கள் கர்ப்பம் குறித்து உங்கள் மருத்துவரை அணுகி, உங்களுக்கு ஏற்ற கருத்தடை முறையைத் தீர்மானிப்பது நல்லது.
உங்களுக்கு ஏன் ஆன்லைன் ஓவல்யூஷன் தேதி கால்குலேட்டர் தேவை?
கர்ப்பமாக இருப்பதற்கான சிறந்த வாய்ப்புள்ள நாட்கள் இவை தான். உங்கள் துணைவரின் விந்தணுக்கள் உங்கள் கரு முட்டையை அடைவதை உறுதி செய்வததற்கு இது உதவும். மேலும், உங்கள் ஓவல்யூஷன், அதாவது, ஒரு கருமுட்டை உருவாகும் போது மட்டுமே இது சாத்தியமாகும்.
உங்கள் கருவுறுதல் நாளின் மதிப்பீட்டை வழங்குவதற்கு ஓவல்யூஷன் தேதி ஆன்லைன் கால்குலேட்டர் உதவுகிறது. இருப்பினும், இந்தக் கால்குலேட்டர் கர்ப்பம் அல்லது குழந்தை பிறப்பதை தள்ளிப் போடுவதற்கு உத்தரவாதம் அளிக்காது என்பதை நினைவில் கொள்வது சிறந்தது.
ஒவ்வொரு பெண்ணின் ஓவல்யூஷன் நாட்கள் வேறுபட்டது மற்றும் மாதங்களுக்கு இடையில் மாறுபடும். இது பொதுவாக உங்கள் மாதவிடாய் சுழற்சியின் 6 நாட்களை உள்ளடக்கியது ஆகும். அப்போது நீங்கள் கர்ப்பம் தரிக்க அதிக வாய்ப்பு உண்டு.
இந்த கால்குலேட்டரைத் தவிர, அடிவயிற்றின் வெப்பநிலை கண்காணிப்பு, கருவுறுதல் அட்டவணை மற்றும் ஓவல்யூஷன் சோதனைக் கருவிகள் ஆகியவை உங்களுக்கு கருவுறுவதற்கான நாட்களை சரியாக கணிக்க உதவும்.
ஓவல்யூஷன் தேதிகள் எவ்வாறு கணக்கிடப்படுகின்றன?
ஓவல்யூஷன் தேதி கால்குலேட்டர், உங்களுக்கு அடுத்த மாதவிடாய் ஏற்படும் நாளிலிருந்து 14 நாட்களுக்கு முன் கணக்கிடுவதன் மூலம் உங்கள் ஓவல்யூஷன் தேதியைக் கணக்கிட உதவுகிறது. இந்த நோக்கத்திற்காக, இது உங்களின் மாதவிடாய் சுழற்சியைப் பற்றியும் கேட்கிறது.
உதாரணத்திற்கு, 28 நாட்களில் மாதவிடாய் சுழற்சி இருந்தால், இந்தக் கால்குலேட்டர் உங்கள் அடுத்த மாதவிடாயை கடைசி மாதவிடாயின் முதல் நாளுக்குப் பிறகு 28-வது நாளில் தொடங்கும் என்று மதிப்பிடும்.
நீங்கள் தகவலை அளித்த பிறகு, ஓவல்யூஷன் சுழற்சி கால்குலேட்டர் நீங்கள் கருவுறுவதற்கு ஏற்ற நாட்களை காண்பிக்கும். இதில் உங்கள் ஓவல்யூஷன் தேதி மற்றும் அதற்கு முந்தைய ஐந்து நாட்கள் ஆகியவையும் அடங்கும். இருப்பினும், அந்த காலகட்டத்தின் கடைசி மூன்று நாட்களில் நீங்கள் பெரும்பாலும் கர்ப்பமாவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
ஓவல்யூஷன் தேதி கால்குலேட்டரை எவ்வாறு பயன்படுத்துவது?
ஓவல்யூஷன் தேதி கால்குலேட்டரைப் பயன்படுத்தி நீங்கள் கருவுறுவதற்கு ஏற்ற நாட்களை கண்டறிய இரண்டு எளிய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்:
படி 1: அந்த மாதத்தில் மாதவிடாய் தொடங்கிய முதல் நாளையோ அல்லது அதற்கு முந்தைய நாளையோ உள்ளிடவும்.
படி 2: உங்கள் சுழற்சியின் நீளத்தைக் குறிப்பிடும் கீழ்தோன்றும் பட்டியலில் இருந்து சரியான ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். அதன் பிறகு, கால்குலேட்டர் உங்களுக்கு தேதிகளை வழங்கும்.
ஓவல்யூஷன் நாளின் அறிகுறிகள் என்னென்ன?
கருவுற்ற கால கால்குலேட்டரைப் பயன்படுத்தாமல் ஓவல்யூஷன் தேதியை எவ்வாறு கண்டறிவது என்று யோசிக்கிறீர்கள் என்றால், கவனம் செலுத்த வேண்டிய சில அறிகுறிகள்:
- பசி அல்லது மனநிலையில் மாற்றம்.
- அடிவயிற்றில் லேசான பிடிப்புகள்.
- உடல் வெப்பநிலை அதிகரிப்பு.
- மார்பகம் மென்மையாக இருத்தல்.
- உடலுறவில் ஈடுபட அதிக வேட்கை.
- வயிறு சற்றே பெரிதாவது போன்று உணர்தல்.
- வாசனை உணர்வு அதிகரித்தல்.
- லேசான ரத்தக்கசிவு.
- கர்ப்பப்பை வாய் மென்மையாக திறத்தல்.
ஒரு பெண்ணின் மாதாந்திர சுழற்சியின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். ஓவல்யூஷன் தேதி நாள் கால்குலேட்டர் இந்த நேரத்தைக் கணிக்க உதவுகிறது மற்றும் இது உங்கள் ஓவல்யூஷன் தேதியை உங்களுக்கு வழங்குகிறது. எனவே, சரியான முடிவுக்கான சரியான மாதவிடாய் தேதி மற்றும் மாதவிடாய் சுழற்சியின் மதிப்பீட்டை வழங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.