Work
in spare time
Earn
side income
FREE
training by Digit
ஆன்லைனில் இன்சூரன்ஸை எப்படி விற்கலாம்?
இந்த நேரத்தில், நிறைய பேர் கூடுதல் வருமானம் ஈட்ட மாற்று தொழில் வாய்ப்புகள் மற்றும் பகுதி நேர வேலைகளைத் தேடுகிறார்கள். அவ்வாறு செய்வதற்கான சிறந்த வழிகளில் ஒன்று, இன்சூரன்ஸை ஆன்லைனில் விற்பனை செய்வதாகும்.
இந்தியாவில், இன்சூரன்ஸை விற்க இரண்டு முக்கிய வழிகள் உள்ளன:
1. இன்சூரன்ஸ் ஆலோசகர்
இன்சூரன்ஸ் ஆலோசகர் என்பது ஒரு குறிப்பிட்ட இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பதிவுசெய்து, வாடிக்கையாளர்களுக்கு இன்சூரன்ஸ் பாலிசிக்களை விற்கும் பணியாகும். உரிமைகோரல்களைச் செய்வதற்கும், மேலும் பலவற்றைச் செய்வதற்கும் உதவுவதற்காக அவர்களுடன் இணைந்திருப்பவர் ஆவர். ஐ.ஆர்.டி.ஏ.ஐ (IRDAI) வகுத்துள்ள வழிகாட்டுதல்களின்படி, உங்கள் உரிமத்தைப் பெறுவதற்கும் ஆலோசகராவதற்கும் நீங்கள் பயிற்சித் திட்டத்தில் கலந்துகொண்டு தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.
2. ஒரு பாயிண்ட் ஆஃப் சேல் பர்சன் (POSP)
பி.ஓ.எஸ்.பி (POSP) என்பது ஐ.ஆர்.டி.ஏ.ஐ (IRDAI) ஆல் 2015 இல் உருவாக்கப்பட்ட இன்சூரன்ஸ் ஆலோசகர்களுக்கான புதிய வகை உரிமம் ஆகும். நீங்கள் இன்னும் பரிந்துரைக்கப்பட்ட பயிற்சித் திட்டத்திற்கு உட்பட்டு ஆன்லைன் தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டியிருக்கும். அதை முடித்து உரிமம் பெறும்போது, நீங்கள் பல இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பாலிசிக்களை, லைஃப் இன்சூரன்ஸ் மற்றும் ஜெனரல் இன்சூரன்ஸ் வகைகளில் (மோட்டார் இன்சூரன்ஸ், ஹெல்த் இன்சூரன்ஸ், டிராவல் இன்சூரன்ஸ் மற்றும் பல உட்பட) விற்க முடியும்.
இதன்மூலம், வாடிக்கையாளர்களுக்குப் பல நிறுவனங்களில் இருந்து பலவிதமான ஆப்ஷன்களையும், பல்வேறு இன்சூரன்ஸ் திட்டங்களையும் நீங்கள் வழங்கலாம். நீங்கள் பல நிறுவனங்களின் பாலிசிக்களை விற்க ஒரு இன்சூரன்ஸ் இடைத்தரகர் அல்லது தரகருடன் பணிபுரியலாம் அல்லது ஒரே நிறுவனத்தில் வேலை செய்யலாம். எனவே, பாரம்பரிய இன்சூரன்ஸ் ஆலோசகரை விட அதிகமான ஆப்ஷன்கள் இங்கே உங்களுக்கு உள்ளன.
காப்பீட்டு POSP ஆக எப்படி?
நாம் பார்த்தது போல், பி.ஓ.எஸ்.பி (POSP) (அல்லது பாயிண்ட் ஆஃப் சேல்ஸ் பர்சன்) என்பது லைஃப் இன்சூரன்ஸ், மோட்டார் இன்சூரன்ஸ், ஹெல்த் இன்சூரன்ஸ் மற்றும் பல வகைகளில் பல நிறுவனங்களின் இன்சூரன்ஸ் தயாரிப்புகளை விற்க சான்றளிக்கப்பட்டவர் ஆவார்.
பி.ஓ.எஸ்.பி (POSP) ஆவற்கு, ஐ.ஆர்.டி.ஏ.ஐ (IRDAI) வழங்கிய குறைந்தபட்ச கல்வித் தகுதிகளை நீங்கள் பூர்த்தி செய்து, கட்டாயப் பயிற்சி வகுப்பில் தேர்ச்சி பெற வேண்டும்.
- பி.ஓ.எஸ்.பி (POSP) ஆவதற்குத் தேவையான தகுதிகள்: இன்சூரன்ஸ் ஏஜென்டாவதற்கு சில அடிப்படைத் தேவைகள் உள்ளன. நீங்கள் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும் மற்றும் 10 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். நீங்கள் செல்லுபடியாகும் ஆதார் அட்டை மற்றும் பான் கார்டு மற்றும் உங்கள் பெயரில் ஒரு வங்கிக் கணக்கையும் வைத்திருக்க வேண்டும்
- பி.ஓ.எஸ்.பி (POSP) ஆகுவதற்கான நடைமுறை: பி.ஓ.எஸ்.பி (POSP) ஆகித் தொடங்க, நீங்கள் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் பதிவுசெய்ய வேண்டும் அல்லது ஒரு இன்சூரன்ஸ் இடைத்தரகரிடமாவது பதிவு செய்ய வேண்டும். பின்னர் ஐ.ஆர்.டி.ஏ.ஐ (IRDAI) வழங்கும் 15 மணி நேர கட்டாயப் பயிற்சியை முடிக்க வேண்டும். நீங்கள் பயிற்சியை முடித்து, பரிந்துரைக்கப்பட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றவுடன், இன்சூரன்ஸ் பாலிசிக்களை விற்பனை செய்வதற்கான (பி.ஓ.எஸ்.பி (POSP) வழிகாட்டுதல்களின்படி) உரிமத்தைப் பெறுவீர்கள்.
எனவே, இந்த அடிப்படை நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் எவரும் பி.ஓ.எஸ்.பி (POSP) ஆக பதிவு செய்யலாம். நீங்கள் ஆன்லைனில் இன்சூரன்ஸ் பாலிசிக்களை விற்கலாம் மற்றும் வழங்கலாம் என்பதால், இந்த வேலைக்குத் தேவையானது ஸ்மார்ட்போன் அல்லது லேப்டாப் மற்றும் நல்ல இணைய இணைப்பு மட்டுமே.
கூகுள் லிஸ்ட்டிங், வலைத்தள உருவாக்கம் போன்ற ஆன்லைன் தளங்களை அமைத்தல், கூகுள், பேஸ்புக் பக்கங்கள், விளம்பரங்கள், மின்னஞ்சல், எஸ்.எம்.எஸ் (SMS), வாட்ஸ்அப் போன்ற பிற ஆன்லைன் தளங்கள் மூலம் வாடிக்கையாளர்களை ஈர்க்க நீங்கள் சில முயற்சிகளை செய்யலாம் மற்றும் பலவற்றையும் செய்ய முடியும். எல்லாவற்றையும் பற்றிய சிறிய விவரங்கள் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.