Work
in spare time
Earn
side income
FREE
training by Digit
இந்தியாவில் பேசிவ் வருமானம் ஈட்டுவது எப்படி
நீங்கள் 9 மணி முதல் 5 மணி வரை வேலை பார்ப்பவராக இருந்தாலும், தொழிலை நடத்தி வந்தாலும், நீங்கள் ஒரு ஃப்ரீலான்சராக இருந்தாலும், அதிக முயற்சி இல்லாமல் வழக்கமான முறையில் கூடுதல் வருமானம் சம்பாதிப்பதற்கான சிறந்த வழி பேசிவ் வருமானம் தான்.
பேசிவ் வருமானம் என்றால் என்ன?
பேசிவ் வருமானம் என்பது நீங்கள் முனைப்புடன் ஈடுபடாத ஒரு ரெண்டல் புராப்பர்ட்டி அல்லது வேறு ஏதேனும் என்டர்பிரைஸ் மூலமாக உங்களுக்குக் கிடைக்கக்கூடிய வருமானம் ஆகும். குறிப்பாக, நீங்கள் அதிக அளவு "முனைப்புடன்" வேலை செய்யாமல் கிடைக்கக்கூடிய பணம் ஆகும். அடிப்படையில் நீங்கள் தூங்கும் பொழுது பணம் சம்பாதிப்பது தான் இதன் முக்கிய குறிக்கோள் ஆகும்
இதனை செய்வதற்கு நீங்கள் உங்கள் நேரத்தையும், முன்னோக்கி செல்ல சிறிதளவு பணத்தையும் முதலீடு செய்ய வேண்டி இருக்கும். இதன் மூலமாக அதிக முயற்சிகள் எதுவும் எடுக்காமலே கூடுதல் வருமானம் பெறத் தொடங்கலாம்.
பேசிவ் வருமானம் ஈட்டுவதற்கான சிறந்த வழிகள் சில இதோ உங்களுக்காக
1. ரெண்டல் புராப்பர்ட்டிகளில் முதலீடு செய்தல்
ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது பேசிவ் வருமானம் ஈட்டுவதற்கான சிறந்த வழிகளில் ஒன்றாகும். குறைந்தபட்ச முதலீடு செய்வதன் மூலமாக வீடுகள், அலுவலகங்கள், அப்பார்ட்மெண்ட் கட்டிடங்கள் மற்றும் பிற வகையான ரியல் எஸ்டேட்டுகள் போன்றவற்றை வாடகைக்கு விடலாம். இதன் பிறகு ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு வாடகை மூலமாக வருமானம் கிடைக்கும். வாடகைக்கு இருப்போர் சந்திக்கும் அன்றாட பிரச்சினைகள் மற்றும் வாடகையைப் பெறுவதற்கு நீங்கள் ஒரு புராப்பர்ட்டி மேனேஜரையும் வேலைக்கு அமர்த்தலாம்.
- இதற்கு எவ்வளவு முதலீடு தேவைப்படும்? - ரெண்டல் புராப்பர்ட்டி வைத்திருக்க நீங்கள் ஆரம்பத்தில் சிறிதளவு வேலை மற்றும் பொருளாதார முதலீடு செய்ய வேண்டி இருக்கும்.
- நீங்கள் எவ்வளவு பணம் சம்பாதிக்கலாம்? - நீங்கள் வைத்திருக்கும் புராப்பர்டிகளின் எண்ணிக்கை, உங்கள் புராப்பர்டியில் குடியிருப்போரின் வகைகள் மற்றும் வசூலிக்கப்படும் வாடகை பணம் போன்றவற்றைப் பொறுத்து ரெண்டல் புராப்பர்ட்டிகள் மூலமாக ஒரு குறிப்பிட்டத் தொகையை நீங்கள் சம்பாதிக்கலாம்.
- மனதில் வைத்துக் கொள்ள வேண்டியது என்ன? - ஒரு புராப்பர்ட்டியை வைத்திருப்பதில் ஒரு சில பொருளாதார சிக்கல்கள் உள்ளன. குடியிருப்போரைக் கண்டுபிடிப்பதில் சிக்கல் அல்லது அதிகரித்த அடைமானம் போன்றவை இதில் அடங்கும். எனவே முதலீடு செய்வதற்கு முன்பாக, உங்கள் புராப்பர்டிக்கு மார்கெட்டில் நல்ல மதிப்பு இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொண்ட பின்னர் முதலீடு செய்யவும்.
2. உங்கள் வீட்டை வாடகைக்கு விடுதல்
உங்களால் தனியாக ஒரு சொத்து வாங்கி அதனை வாடகைக்கு விடுவதற்கான முதலீடு செய்ய இயலவில்லை என்றால், நீங்கள் ஏற்கனவே வைத்திருக்கும் புராப்பர்ட்டிகளை ஏர்.பிஎன்பி (Airbnb) போன்ற ரெண்டல் நிறுவனங்களுடன் இணைந்து உங்கள் வீட்டை வாடகைக்கு விடலாம். உங்கள் வீட்டில் கூடுதலான அறைகள் இருந்தாலோ அல்லது ஒரு சில வருடங்கள் வெளியூருக்கு செல்ல வேண்டி இருந்தாலோ இந்த பணம் சம்பாதிப்பு முறை சிறப்பானதாக வேலை செய்யும். நீங்கள் வைத்திருக்கும் காரை வாடகைக்கு விடுவதன் மூலமாகவும் கூடுதல் பணம் சம்பாதிக்கலாம்.
- இதற்கு எவ்வளவு முதலீடு தேவைப்படும்? - இதனை செய்வதற்குக் குறைந்தபட்ச முதலீடு மற்றும் குறைந்த அளவிலான வேலை போதுமானது.
- நீங்கள் எவ்வளவு பணம் சம்பாதிக்கலாம்? - உங்கள் வருமானமானது நீங்கள் வைத்திருக்கும் புராப்பர்டியின் அளவு மற்றும் நீங்கள் கூட்டு சேர்ந்திருக்கும் ரெண்டல் நிறுவனம் போன்றவற்றைப் பொறுத்து அமையும்.
- மனதில் வைத்துக் கொள்ள வேண்டியது என்ன? - இதில் குறைந்தபட்ச பொருளாதார சிக்கல்கள் இருந்தாலும், முன் பின் தெரியாத நபர்களுக்கு வீட்டை வாடகைக்கு விடும் பொழுது கவனமாக இருப்பது நல்லது.
3. பங்குகளில் முதலீடு செய்தல்
பங்குகளில் முதலீடு செய்வதன் மூலமாக நீங்கள் நிறுவனங்களின் பங்குகளை வாங்குகிறீர்கள். அந்த பங்குகளின் மதிப்புகள் உயரும் பொழுது, வழக்கமான இடைவெளியில் அந்த நிறுவனத்திடம் இருந்து நீங்கள் டிவிடெண்டுகள் மூலமாக பணத்தை பெறுவீர்கள். டிவிடெண்டுகள் என்பது ஒவ்வொரு பங்கிற்கும் வழங்கப்படுவதால், நீங்கள் அதிகமான பங்குகளை வாங்கும் பொழுது அதிகளவிலான பணம் சம்பாதிப்பீர்கள்.
பங்குகளில் முதலீடு செய்வதில் எந்த ஒரு உத்தரவாதமும் இல்லை என்பதால் பலர் இதனைத் தவிர்த்து விடுகின்றனர். ஆனால், புத்திசாலித்தனமாக முதலீடு செய்வதன் மூலமாக அபாயங்களைக் குறைக்கலாம். மேலும் காலப்போக்கில், இது பேசிவ் வருமானம் ஈட்டுவதற்கான சிறந்த வழியாக அமையும்.
- இதற்கு எவ்வளவு முதலீடு தேவைப்படும்? - நீங்கள் ஸ்டாக் மார்க்கெட்டில் முதலீடு செய்ய முடிவு செய்தால், சரியான பங்குகளை வாங்குவதற்காக ஒரு சில தேடல்களை நீங்கள் செய்ய வேண்டி இருக்கும். இதைத்தவிர பங்குகளை வாங்குவதற்கு நீங்கள் முன் முதலீடு செய்ய வேண்டியிருக்கும்.
- நீங்கள் எவ்வளவு பணம் சம்பாதிக்கலாம்? - லாபம் தரக்கூடியப் பங்குகளை வாங்கும் பொழுது, உங்களுக்கு அதிக டிவிடெண்டுகள் கிடைக்கும். இதன் மூலமாக நீண்ட காலத்திற்கு செல்வ வளத்தோடு வாழலாம்.
- மனதில் வைத்துக் கொள்ள வேண்டியது என்ன? - ஸ்டாக் மார்க்கெட்களில் முதலீடு செய்வது ஒரு சில அபாயங்களுடன் வருகிறது. நிறுவனங்கள் சரியாக செயல்படாத பொழுது அல்லது நிச்சயமற்ற தன்மை போன்றவற்றின் காரணமாக பங்குகளின் மதிப்பானது குறையலாம். இந்த அபாயத்தை குறைக்க நீங்கள் எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்டுகளில் (ETFs) முதலீடு செய்யலாம் அல்லது பொருளாதார ரீதியாக நிலையாக உள்ள நிறுவனங்களின் அதிக டிவிடெண்ட் பங்குகளை வாங்கலாம்.
4. டிஜிட்டல் புராடக்டுகளை விற்பனை செய்தல்
டிஜிட்டல் புராடக்டுகள் என்பது டவுன்லோட் செய்யக்கூடிய அல்லது ஸ்ட்ரீம் செய்யக்கூடிய மீடியாக்களை குறிக்கும். இதில் டெம்ப்ளேட்டுகள், பிளக்-இன்கள், பிடிஎஃப்-கள் பிரிண்டபில்ஸ், இ-புக்ஸ், ஆடியோ அல்லது வீடியோ கோர்ஸ்கள் அல்லது யு.எக்ஸ் கிட்டுகள் போன்றவை அடங்கும். இந்த புராடக்டுகள் ரெசிபி கலெக்ஷன்கள் முதல் டிசைன் டெம்ப்ளேட்டுகள் மற்றும் வயர்ஃபிரேம்கள் வரை பலவிதமான உள்ளடக்கங்களைக் கொண்டிருக்கும். இந்த புராடக்டை உருவாக்கிய பிறகு யுடெமி, ஸ்கில்ஷேர், அல்லது கோர்செரா போன்ற தளங்களில் விற்பனை செய்வதன் மூலமாக நீங்கள் பேசிவ் வருமானத்தை ஈட்டலாம்.
- இதற்கு எவ்வளவு முதலீடு தேவைப்படும்? - ஒரு புராடக்டை உருவாக்கி அதனை பிறருக்கு விற்பனை செய்வதற்கு, ஆரம்ப காலத்தில் நீங்கள் அதற்காக சிறிதளவு வேலை செய்ய வேண்டி இருக்கும்.
- நீங்கள் எவ்வளவு பணம் சம்பாதிக்கலாம்? - டிஜிட்டல் புராடக்டுகள் அதிக லாபத்தை ஈட்டக் கூடியவை. ஏனெனில், அவற்றை நீங்கள் ஒரு முறை மட்டுமே உருவாக்குவீர்கள். ஆனால், அதனை எத்தனை முறை வேண்டுமானாலும் ஆன்லைனில் விற்பனை செய்து கொள்ளலாம்.
- மனதில் வைத்துக் கொள்ள வேண்டியது என்ன? - இன்டர்நெட்டில் ஏகப்பட்ட புராடக்டுகள் கிடைப்பதால் உங்கள் புராடக்ட் தனித்துவமாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள் அல்லது ஒரு குறிப்பிட்ட மார்க்கெட்டை நோக்கமாகக் கொண்டு புராடக்ட்டை உருவாக்குவது நல்ல பணம் சம்பாதிக்க உங்களுக்கு உதவும். அதோடு உங்கள் புராடக்டுகளை எப்படி மார்க்கெட் செய்வது என்பது பற்றியும் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.
5. அஃபிலியேட் மார்கெட்டிங் ஸ்கீம்கள்
தங்களது புராடக்டுகளை பிரபலமாக்குவதற்கான வழிகளைத் தேடிக் கொண்டிருக்கும் பிராண்டுகளுக்கு உதவுவதற்கான ஒரு முறையே அஃபிலியேட் மார்கெட்டிங் ஆகும். ஒரு குறிப்பிட்ட பிராண்ட் அல்லது அமேசான் போன்ற நிறுவனத்திற்கு அஃபிலியேட் ஆவதன் மூலமாக உங்களது ஃபாலோவர்கள் அல்லது வாசகர்களை அந்த புராடக்டுகளுக்கு அறிமுகப்படுத்தி, அதனை புரமோட் செய்வீர்கள். இதில் உங்கள் தளம் அல்லது சோஷியல் மீடியா அகௌண்டில் அந்த புராடக்டுகளுக்கான லிங்க்குகளைக் கொடுக்க வேண்டும்.
அவர்களது புராடக்டுகளை ஆன்லைனில் மார்க்கெட்டிங் செய்ததற்கான கமிஷன்களை பெறுவதன் மூலமாக நீங்கள் பேசிவ் வருமானத்தை பெறலாம். உங்கள் மூலமாக கிடைக்கும் ஒவ்வொரு விற்பனைக்குமான லாபம் உங்களுக்கு கொடுக்கப்படும். நீங்கள் கொடுத்துள்ள குறிப்பிட்ட லிங்க்கைப் பயன்படுத்தி புராடக்டுகளை வாங்கும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் நீங்கள் அதிக வருமானத்தை பெறுவீர்கள்.
- இதற்கு எவ்வளவு முதலீடு தேவைப்படும்? - இதற்கு குறைந்தபட்ச முதலீடு தேவைப்பட்டாலும், ஒரு வெப்சைட், பிலாக்கை பின்பற்றும் பெரிய அளவிலான சோஷியல் மீடியா ஃபாலோவிங் அல்லது மின்னஞ்சல் பட்டியலை உருவாக்குவது போன்ற வேலைகளை செய்ய ஆரம்ப காலத்தில் குறிப்பிட்ட நேரத்தை நீங்கள் செலவிட வேண்டி இருக்கும்.
- நீங்கள் எவ்வளவு பணம் சம்பாதிக்கலாம்? - அஃபிலியேட் மார்கெட்டிங் என்பது வளர்ந்து வரும் ஒரு துறையாகும் மேலும் இதில் அதிக வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளது.
- மனதில் வைத்துக் கொள்ள வேண்டியது என்ன? - அஃபிலியேட் புரோக்ராமில் இணைவதற்கான செலவு அல்லது அபாயம் மிகக் குறைந்த அளவிலே உள்ளது. மேலும் புதிய புராடக்டுகளை உங்கள் பார்வையாளர்களுக்கு புரமோட் செய்வதன் மூலமாக நீங்கள் எளிதாக பணம் சம்பாதிக்கலாம்.
6. பிஓஎஸ்பி (POSP) இன்சூரன்ஸ் ஏஜெண்ட் ஆகலாம்
பி.ஓ.எஸ்.பி, அல்லது பாயிண்ட் ஆப் சேல்ஸ் பர்சன் என்பது ஒரு இன்சூரன்ஸ் ஏஜெண்ட் ஆகும். இவர்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பணிபுரிவதன் மூலமாக இன்சூரன்ஸ் பாலிசிகளை வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப விற்பனை செய்வார்கள். ஆரம்பத்தில் நீங்கள் விழிப்புடன் செயல்பட வேண்டி இருந்தாலும், வாடிக்கையாளர்கள் அவர்களது பாலிசிகளை புதுப்பிக்கும் பொழுது அதிலிருந்து நீங்கள் பேசிவ் வருமானத்தை பெறுவீர்கள்.
பி.ஓ.எஸ்.பி ஏஜெண்ட் ஆவதற்கான படிகள், தேவைகள் மற்றும் ஒழுங்குமுறை பற்றிய மேலும் தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
- இதற்கு எவ்வளவு முதலீடு தேவைப்படும்? - ஆரம்பத்தில் நீங்கள் கடுமையாக வேலை செய்து உங்களுக்கான வாடிக்கையாளர் தளத்தை உருவாக்கி விட்டால், அவ்வப்போது வாடிக்கையாளர்கள் அவர்களின் பாலிசிகளை புதுப்பிப்பதன் மூலமாகவே உங்களுக்கு பேசிவ் வருமானம் கிடைத்துவிடும்.
- நீங்கள் எவ்வளவு பணம் சம்பாதிக்கலாம்? - கமிஷன் பொருத்து உங்களுக்கான வருமானம் கிடைக்கும். நீங்கள் அதிக பாலிசிகளை விற்பனை செய்தால், மிக விரைவாக அதிக வருமானம் ஈட்ட ஆரம்பித்து விடுவீர்கள்.
- பி.ஓ.எஸ்.பி ஆவதால் ஏற்படும் அபாயங்கள் மிகக்குறைவு. விற்பனை செய்வதற்கான முனைப்புடன் இருக்கும் எவரும் பி.ஓ.எஸ்.பி ஏஜெண்ட் ஆகலாம். ஆனால், உங்களிடம் ஒரு ஸ்மார்ட்போன் மற்றும் சிறந்த இன்டர்நெட் இணைப்பு இருப்பது அவசியம்.
- மனதில் வைத்துக் கொள்ள வேண்டியது என்ன? - எனினும், எந்த ஒரு நிறுவனத்தில் சேரும் முன்பு, அந்த நிறுவனம் பற்றிய புரிதலும், ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன்பாக, அதனை முழுவதுமாக படித்து புரிந்து கொண்ட பின்னரே கையெழுத்திடுவது முக்கியமாகும்.
பேசிவ் வருமானம் ஈட்ட நினைக்கும் பிகினர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள்
கூடுதல் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கும் பலர் பகுதி நேர வேலைகள், ஃப்ரீலேன்ஸ் வேலைகள் அல்லது புராஜக்ட்டுகள் மூலமாக பணம் சம்பாதிக்க முயற்சி செய்கின்றனர். எனினும், இது போன்ற வேலைகளில் நீங்கள் வழக்கமான முறையில் முயற்சிகளை எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். எனவே, அதிக நேரம் செலவழிப்பதற்கு பதிலாக பேசிவ் வருமானம் மூலம் எப்படி பணம் சம்பாதிப்பது என்பதை தெரிந்து கொள்வது சிறந்தது.
பேசிவ் வருமானம் ஈட்டுவதில் நீங்கள் ஒரு பிகினர் என்றால், உங்கள் பணத்தையும் நேரத்தையும் முதலீடு செய்வதற்கு முன்பு, நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய ஒரு சில விஷயங்கள் இதோ.
- இது "உடனடியாக பணக்காரர் ஆகிவிடும்" ஒரு திட்டம் கிடையாது. அதிக அளவு விழிப்புடன் வேலை செய்யாமல், சிறிதளவு பணம் சம்பாதிக்க பேசிவ் வருமானம் உங்களுக்கு உதவும். ஆனால் எதுவுமே செய்யாமல் இருந்தால், உங்களுக்கு எந்தவொரு பணமும் கிடைக்காது. குறிப்பிட்ட அளவு வேலை, முன் முதலீடு ஆகியவற்றை ஆரம்பத்தில் செய்வதன் மூலமாகவே உங்களுக்கான வருமானம், டிவிடெண்டுகள், வட்டி அல்லது பங்கின் மதிப்பு உயர்வதால் கிடைக்கும் லாபம் போன்றவை காரணமாக ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு உங்களுக்கு பொருளாதாரப் பாதுகாப்பு கிடைக்கும்.
- இதற்குப் பிறகும் நீங்கள் ஒரு சில கூடுதல் வேலைகளை செய்ய வேண்டி இருக்கும். உங்களது பெரும்பாலான முதலீடு மற்றும் வேலை ஆரம்பத்தில் தேவைப்படும் என்றாலும் கூட, வருமானம் கிடைக்க ஆரம்பித்த உடன் அதனைத் தக்கவைத்து கொள்ள அவ்வப்போது சிறு சிறு வேலைகளை நீங்கள் செய்ய வேண்டும். உங்கள் புராடக்டுகளை அப்டேட் ஆக வைப்பது, உங்கள் ரெண்டல் புராப்பர்ட்டியை சரியாக பராமரிப்பது அல்லது பங்குகள் மற்றும் முதலீடு போன்றவற்றை அவ்வப்போது கவனிப்பது மூலமாக உங்களுக்குத் தொடர்ந்து பேசிவ் வருமானம் கிடைப்பதை நீங்கள் உறுதி செய்கிறீர்கள்.
- பேசிவ் வருமானம் வருமான வரிக்கு உட்பட்டது உங்களது வழக்கமான வருமானம் (உங்களது சம்பளம்) போல இல்லாமல், வித்தியாசமான முறையில் பேசிவ் வருமானத்திற்கும் வரிகள் வசூலிக்கப்படும்.