ஷாப் இன்சூரன்ஸ் பாலிசி ஆன்லைன்

property-insurance
property-insurance
usp icon

Zero

Documentation

usp icon

Quick Claim

Process

usp icon

Affordable

Premium

ஸிரோ பேப்பர் ஒர்க். ஆன்லைன் செயல்முறை
Select Property Type
Enter Valid Pincode
+91
Please enter valid mobile number
I agree to the Terms & Conditions
Please accept the T&C
background-illustration
usp icon

Zero

Documentation

usp icon

Quick Claim

Process

usp icon

Affordable

Premium

background-illustration

ஷாப் இன்சூரன்ஸ் என்றால் என்ன?

ஷாப் இன்சூரன்ஸ் ஏன் முக்கியமானதாக கருதப்படுகிறது?

1
2021-ல் மட்டுமே 1.6 மில்லியன் தீ விபத்துகள் நாட்டில் பதிவிடப்பட்டுள்ளது.(1)
2
இந்திய அபாய கணக்கெடுப்பு, 2021ன்படி தீயானது நான்காவது மோசமான அபாயமாக கருதப்படுகிறது .(2)
3
இந்தியாவில், 2020 ஆம் ஆண்டில் மொத்தமாக 9,329 தீ விபத்து நிகழ்வுகள் அறிக்கையிடப்பட்டுள்ளது.. (3)

டிஜிட்-ன் ஷாப்கீப்பர் இன்சூரன்ஸ் பாலிசி எந்த வகையில் சிறந்தது?

  • முழுமையான பாதுகாப்பு: வெள்ளம், நிலநடுக்கங்கள் மற்றும் தீ விபத்தில் இருந்து; எங்களது ஷாப் இன்சூரன்ஸ் ஒரே ஒரு பாலிசி மூலமாகவே அனைத்து விதமான நன்மைகளை வழங்கும் ஒரு ஒட்டுமொத்த பேக்கேஜாக கிடைக்கிறது. 
  • இன்சூர் செய்யப்பட்ட தொகை: நீங்கள் செய்யும் தொழிலின் வகை மற்றும் அளவைப் பொறுத்து, நீங்கள் உங்களின் இன்சூர் செய்யப்பட்ட தொகையை தனிப்பயனாக்கும் ஆப்ஷன் உங்களுக்கு உண்டு! 
  • ஆன்லைன் மூலமாக விரைவில் கிளைம் செய்யலாம்:  எங்களின் ஷாப்கீப்பர் இன்சூரன்ஸ் ஆனது தொழிற்நுட்பத்தினால் இயக்கப்படுகிறது. எனவே, கிளைம் செய்வதும் சுலபம், இழப்பீட்டை பெறுவதும் சுலபம். ஸ்மார்ட்ஃபோன் மற்றும் எங்களின் டிஜிட் ஆப் மட்டும் இருந்தால் போதும் நீங்கள் எளிதில் கிளைம் செய்துவிடலாம். டிஜிட் ஆப், செல்ஃப் இன்ஸ்பெக்ஷன் செயல்முறைக்குத் தேவையான வழிகாட்டுதல்களை உங்களுக்கு அளிக்கும் (குறிப்பு: ஐஆர்டிஏஐ(IRDAI) நிர்ணயித்த சட்டங்களின்படி ரூ.1 லட்சத்துக்கும் அதிகமான கிளைம் தொகைக்கு நேரடி மதிப்பீடு கட்டாயமாகும்). 
  • பணத்துக்கு ஏற்ற மதிப்பு: ஒரு வணிகத்தில் வரவுகள், செலவுகள், லாபம் மற்றும் நஷ்டம் ஆகிய அனைத்தும் அடங்கும். இது எங்களுக்கும் தெரியும். அதனால்தான், உங்கள் கடையின் பட்ஜெட்டுக்குத் தகுந்தாற்போல் ஷாப் இன்சூரன்ஸ் பிரீமியத்தை தேர்வு செய்யும் வசதியை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம். 
  • எல்லா விதமான வணிகங்களையும் பாதுகாக்கிறது : நீங்கள் ஒரு சிறிய பொது அங்காடியின் உரிமையாளரோ அல்லது பெரிய உற்பத்தி ஆலையின் உரிமையாளரோ; உங்களின் வணிகம் எதுவாயினும் ஒவ்வொரு வணிகத்தின் வகை மற்றும் அதன் அளவிற்கு ஏற்ப எங்கள் ஷாப்கீப்பர் இன்சூரன்ஸ் பாலிசியை தனிப்பயனாக்கிக் கொள்ளலாம்.

டிஜிட்-ன் ஷாப்கீப்பர் இன்சூரன்ஸ் பாலிசி எந்தெந்த இழப்புகளுக்குக் காப்பீடு அளிக்கிறது?

fire

தீயினால் ஏற்பட்ட சேதம்

இன்சூர் செய்யப்பட்ட சொத்துக்கு சொந்த நொதித்தல், இயற்கையாக வெப்பமாதல், அல்லது தன்னியல்பு எரிமானம் போன்றவற்றின் காரணமாக ஏற்படும் சேதத்திற்கு இந்த பாலிசி காப்புறுதி அளிக்கிறது.

Explosion, Implosion, Collison, Impact

வெடிப்பு, கசிவு, மோதல், விளைவு

வெடிப்பு, கசிவு, அல்லது ஏதேனும் வெளிப்புற பொருளினால் உண்டான விளைவு/மோதலின் காரணமாக அலுவலக வளாகத்தில் ஏற்பட்ட சேதத்திற்கு காப்புறுதி அளிக்கிறது.

Damage due to natural calamities

இயற்கை சீற்றங்கள்

புயல், நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்பு, சூறாவளி, கடுங்காற்று, வெள்ளம் மற்றும் பல அல்லது நிலச்சரிவு, பாறைச்சரிவு போன்றவற்றின் காரணமாக இன்சூர் செய்யப்பட்ட சொத்துக்கு ஏதேனும் இழப்பு ஏற்படுமாயின் இதற்கான காப்புறுதியை வழங்குகிறது.

Terrorism

தீவிரவாதம்

வேலை நிறுத்தம், கலவரங்கள், போன்ற தீவிரவாத செயல்கள் மற்றும் தீங்கிழைக்கும் நோக்கத்துடன் செய்யப்படும் செயல்களால் சொத்துக்களுக்கு ஏற்படும் சேதங்களில் இருந்து காப்புறுதி வழங்குகிறது.

Theft

திருட்டு

மேலே உள்ள புள்ளிகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் நிகழ்விற்கு பிறகு 7 நாட்களுக்குள் இன்சூர் செய்யப்பட்ட வளாகத்தில் ஏற்பட்ட திருட்டு.

Other coverages

பிற கவரேஜ்கள்

தண்ணீர் தொட்டிகள், ஆய் கருவிகள் மற்றும் குழாய்கள் வெடித்தல்/நிரம்பி வழிதல், ஆட்டோமேட்டிக் ஸ்ப்ரின்க்லர் இன்ஸ்டலேஷனில் இருந்து ஏற்படும் கசிவு காரணமாக சொத்துக்கு ஏற்படும் சேதம்.

எவ்வித காரணங்களுக்கு இழப்பீடுகளை பெற முடியாது?

ஷாப் இன்சூரன்ஸ் பிளான்களின் வகைகள்

ஆப்ஷன் 1

ஆப்ஷன் 2

ஆப்ஷன் 3

உங்கள் கடையில் இருக்கும் உள்ளிருப்பு பொருட்களுக்கு மட்டும் காப்பீடு அளிக்கும்.

உங்கள் கடையின் கட்டிடம்/கட்டமைப்பு மற்றும் உங்கள் கடையில் இருக்கும் உள்ளிருப்பு பொருட்கள் ஆகிய இரண்டிற்கும் காப்பீடு அளிக்கும்.

கட்டிடத்திற்கு காப்புறுதி வழங்குகிறது.

 

ஷாப் இன்சூரன்ஸ் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை

  • ஷாப்கீப்பர் இன்சூரன்ஸின் ‘கன்டண்ட்’ என்றால் என்ன?  : ஷாப்கீப்பர் இன்சூரன்ஸின் ‘கன்டண்ட்’ என்பது உங்கள் கடையில் உள்ள முதன்மையான பொருட்களைக் குறிக்கிறது. உதாரணமாக, நீங்கள் ஒரு துணிக்கடையை நடத்தி வந்தால், இங்கே கூறப்பட்டுள்ள கன்டண்ட் என்பது விற்பனைக்காக கடையில் உள்ள அனைத்து இரகமான துணிகளைக் குறிக்கும்.  

 

  • ஷாப்கீப்பருக்கான இன்சூரன்ஸ்-இல் ‘கட்டிடம்/கட்டமைப்பு’ என்றால் என்ன?- ஷாப்கீப்பருக்கான இன்சூரன்ஸ்-இல் ‘கட்டிடம்/கட்டமைப்பு’ என்பது உங்கள் கடை இருக்கும் இடத்தைக் குறிக்கும். இது ஒரு தனிக்கடையாகவோ  அல்லது ஒரு அறையாகவோ, பெரிய மால் அல்லது கூட்டமைப்பு கட்டிடத்தின் ஒரு அங்கமாகவோ  இருக்கலாம். 

கிளைம் செய்வது எப்படி?

நீங்கள் எங்களின் ஷாப்கீப்பர் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்கிய பின், நீங்கள் எந்தவொரு டென்க்ஷனும் இல்லாமல் இருக்கலாம். ஏனெனில் எங்களிடம் மிக எளிமையான டிஜிட்டல் கிளைம்களைக் கொண்டுள்ளது!

படி 1

எங்களை 1800-258-5956 என்ற எண்ணில் அழைக்கவும் அல்லது hello@godigit.com என்ற மின்னஞ்சல் முகவரியில் எங்களை தொடர்புகொள்ளவும், இதன் மூலம் உங்களின் இழப்பை நாங்கள் பதிவு செய்வோம்.

படி 2

செல்ஃப் இன்ஸ்பெக்ஷன் லிங்க் ஒன்று உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் மூலம் உங்கள் கடைக்கோ அல்லது கடையில் உள்ள பொருட்களுக்கோ ஏற்பட்ட இழப்புகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றி எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

படி 3

நீங்கள் செல்ஃப் இன்ஸ்பெக்ஷன் செயல்முறையை முடித்ததும், உங்களுக்கு ஏற்பட்ட சேதத்தை மதிப்பிடப்படும், பின்பு அது சரிபார்க்கப்படும். அவசியம் ஏற்பட்டால் (இழப்புகளை டிஜிட்டல் முறையில் ஆய்வு செய்ய முடியாத சூழ்நிலைகளில்), இழப்பு மதிப்பீட்டாளர் ஒருவர் நியமிக்கப்படலாம்.

படி 4

எப்ஐஆர், கண்டுபிடிக்க முடியவில்லை என்கிற அறிக்கை (நான் டிரேஸபில் ரிப்போர்ட்) , தீயணைப்புப் படை அறிக்கை (தீ விபத்து ஏற்பட்டால்), இன்வாய்ஸ்கள், கொள்முதல் ஆவணங்கள், விற்பனை அறிக்கைகள் போன்ற கூடுதல் ஆவணங்கள் ஏதேனும் எங்களுக்கு தேவைப்பட்டால், எங்கள் வாடிக்கையாளர் சேவை அதிகாரி ஒருவர் உங்களை தொடர்பு கொள்வார்.

படி 5

அனைத்து படிகளையும் சரியாக கடந்து விட்டால், உங்களுக்கு ஏற்பட்ட இழப்பு அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பின் உங்களுக்கு ஏற்பட்ட அந்தந்த சேதங்கள் மற்றும் இழப்புகளுக்கு இழப்பீட்டுத் தொகை பெறுவீர்கள்.

படி 6

NEFT மூலமாக பணம் உங்களை வந்து சேரும்.

ஷாப்கீப்பருக்கான இன்சூரன்ஸ் பாலிசி யாருக்கு தேவைப்படும்?

குடும்ப தொழில் செய்யும் முதலாளிகள்

நீங்கள் சொந்தமாக ஒரு கடையை வைத்து நடத்துபவராகவோ, துணிகள், பொம்மைகள், வீட்டு உபயோக பொருட்கள், ஆக்சஸரிகள், மற்றும் பல போன்ற பொருட்களை விற்பனை செய்யும் நபராகவோ இருப்பதாக வைத்துக் கொள்வோம். ஏதேனும் தொழில் ரீதியான இழப்புகளில் இருந்து உங்கள் கடையை காப்புறுதி செய்ய உங்களுக்கு ஷாப் இன்சூரன்ஸ் தேவைப்படும்.

தனித்து இயங்கும் கடைகாரர்கள்

தாங்கள் நடத்தி வரும் கடையே தங்களது முதன்மை வருமானத்தின் மூலமாக இருந்தால், கடை முதலாளிகள் கண்டிப்பாக ஷாப்கீப்பர் இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பது அவசியம். உங்கள் கடையை இழக்க நேர்ந்தாலோ அல்லது நிதி இழப்புகளை அனுபவித்து வரும் அபாயத்தில் இருக்கும் சமயத்தில் இந்த பாலிசி  உங்களை பாதுகாக்கும். 

முக்கியமான பகுதிகளில் கடையை நடத்தும் கடைகாரர்கள்

நகரத்தின் மிகவும் பிரபலமான பகுதிகளில் கடையை நடத்தி வரும் தொழிலதிபராக இருக்கும் பட்சத்தில்,    இது போன்ற கடைகளில் அபாயங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். 

பல கடைகளுக்கு சொந்தமான முதலாளிகள்

பல கடைகளுக்கு சொந்தமான முதலாளிகள் தங்களின் ஒவ்வொரு கடைக்கும் ஷாப்கீப்பர்ஸ் இன்சூரன்ஸ் பாலசி எடுக்க வேண்டி இருக்கும். உங்கள் தொழிலை இன்சூர் செய்வது என்பது எதிர்பாராத சூழ்நிலைகளால் உங்கள் கடைக்கும், அதிலுள்ள பொருட்களுக்கும் காப்புறுதி வழங்காது. ஆனால் திட்டமிடப்படாத நிதி இழப்புகளால் உங்கள் தொழிலின் நிலைத்தன்மை பாதிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்கிறது. 

அதிக-அபாயங்கள் கொண்ட தொழில்கள்

ஒரு சில தொழில்கள் பிறவற்றுடன் ஒப்பிடுகையில் அதிக அபாயங்களை சந்திக்க நேரிடும். உதாரணமாக, ஒரு நகைக்கடை மளிகைக்கடையைக் காட்டிலும் திருடு போவதற்கான வாய்ப்பு அதிகம்.  இது போலவே, தொழிற்சாலைகளில் அலுவகத்தை விட தீ விபத்து ஏற்படுவதற்கான அபாயம் அதிகம். ஆகவே, நீங்கள் என்ன மாதிரியான தொழிலை செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்து உங்கள் கடைக்கு இன்சூரன்ஸ் தேவைப்படுமா இல்லையா என்பதை நீங்கள் முடிவு செய்யலாம்.  

இதில் பாதுகாக்கப்படும் கடைகளின் வகைகள்

மொபைல் மற்றும் மற்ற மின்னணு சாதனனங்கள்

மொபைல் ஃபோன்கள், மொபைல் பாகங்கள் அல்லது பிற மின்னணு பொருட்களை பிரதானமாக விற்கும் கடைகள். அதாவது குரோமா, ஒன்பிளஸ், ரெட்மி ஸ்டோர்கள் மற்றும் இது போன்ற கடைகள் இதற்கு சிறந்த உதாரணம் ஆகும். இது போன்ற கடைகளில் திருட்டு ஏற்படுவது சகஜம் ஆகும். இது போன்ற கடைகளையும், கடைகளில் இருக்கும் பொருட்களையும் இழப்புகள் மற்றும் சேதங்களிலிருந்து பாதுகாக்க ப்ராபர்டி இன்சூரன்ஸ் ஆனது மிகவும் உதவியாக இருக்கும். 

மளிகை மற்றும் ஜெனரல் ஸ்டோர்கள்

அக்கம் பக்கத்தில் இருக்கும் அண்ணாச்சி கடை முதல் மலிவான விலையில் பொருட்களை விற்கும் சூப்பர்மார்க்கெட்கள் மற்றும் ஜெனரல் ஸ்டோர்கள் வரை;அனைத்து மளிகைக் கடைகள் மற்றும் ஜெனரல் ஸ்டோர்கள் அனைத்தும் ப்ராபர்டி இன்சூரன்ஸில் பாதுகாக்கப்படுகின்றன. பிக் பஜார், ஸ்டார் பஜார் மற்றும் ரிலையன்ஸ் சூப்பர்மார்க்கெட்கள் இது போன்ற கடைகளுக்கு சிறந்த உதாரணம் ஆகும். 

அலுவலகங்கள் மற்றும் கல்விக்கூடங்கள்

இது அலுவலக வளாகம் மற்றும் கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள், மற்றும் பயிற்சி வகுப்புகள் போன்ற கல்விக்கூடங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது போன்ற சொத்தை இன்சூர் செய்வது, அதனை இழப்புகளில் இருந்து மட்டும் பாதுகாக்காமல், உங்கள் ஊழியர்கள் அல்லது மாணவர்களுக்கு உங்களின் அமைப்பு குறித்த நம்பிக்கையையும் அதிகரிக்கச் செய்யும். 

உற்பத்தி மற்றும் செயலாக்கம்

உங்கள் தொழில் சார்ந்த இறுதி பொருட்களை உற்பத்தி செய்யும் உங்களின் தொழிற்சாலைகள் மற்றும் மில்கள் இதில் அடங்கும். அது ஒரு டெக்ஸ்டைல் மில் அல்லது இரசாயன உற்பத்தி நிலையமாக இருந்தாலும் சரி, டிஜிட்டின் ஷாப்கீப்பர்ஸ் இன்சூரன்ஸ் இவை அனைத்திற்கும் காப்புறுதி அளிக்கிறது. 

தனிநபர் வாழ்க்கைமுறை மற்றும் உடற்தகுதி

உங்களுக்குப் பிடித்த மால்கள் மற்றும் துணிக்கடைகள் முதல் ஸ்பாக்கள், ஜிம்கள் மற்றும் பிற கடைகள் வரை; வாழ்க்கைமுறைக்குத் தேவையான பொருட்கள் மற்றும் உடற்பயிற்சி சாரந்த துறைகள் அனைத்து வணிகங்களுக்கும் டிஜிட்-ன் ப்ராப்பர்டி இன்சூரன்ஸ் பாதுகாக்கும். என்ரிச் சலூன்கள், கல்ட் ஃபிட்னஸ் சென்டர்கள், ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி மற்றும் இது போன்ற கடைகள் இதற்கு சிறந்த உதாரணமாகும்.

உணவகங்கள் மற்றும் உணவு சார்ந்த தொழில்

இது போன்ற இடங்களை பிடிக்காதவர்களே இருக்க முடியாது! கஃபே , ஃபுட் டிரக்கள் முதல் ரெஸ்டாரண்ட் மற்றும் பேக்கரிகள் போன்ற அனைத்து விதமான உணவு சார்ந்த தொழில்கள் அனைத்தும் டிஜிட்-ன் ப்ராப்பர்டி இன்சூரன்ஸ் பாதுகாக்கும். ஃபுட் கோர்ட்டில் இருக்கும் ரெஸ்டாரண்ட்கள், சாய் பாயிண்ட் மற்றும் சய்யோஸ் போன்ற டீ கடைகள் மற்றும் பர்கர் கிங், பீட்ஸா ஹட் போன்ற ஃபாஸ்ட் ஃபுட் கிடைக்கும் இடங்கள் அனைத்தும் இதற்கு சிறந்த உதாரணமாகும்.

ஹெல்த்கேர்

இது பாதுகாக்கப்பட வேண்டிய மிக முக்கியமான தொழில் ஆகும்; மருத்துவமனைகள், கிளினிக்குகள், நோயை கண்டறியும் மையங்கள் அதாவது டையக்னஸ்டிக் சென்டர்கள் மற்றும் மருந்தகங்கள் / பார்மசீக்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பிற கடைகள் அனைத்தையும் டிஜிட்-ன் ப்ராப்பர்டி இன்சூரன்ஸ் பாதுகாக்கும்.

வீட்டை பழுதுபார்க்கும் சேவைகள்

தச்சு வேலை / கார்பென்டரி, பிளம்பிங் வேலை முதல் மோட்டார் கேரேஜ்கள் , இன்ஜினியரிங் ஓர்க்ஷாப்கள் வரை போன்ற அனைத்து தொழில்களும் இதில் அடங்கும். 

மற்றவைகள்

மேலே குறிப்பிடப்படாத தொழில்களைத் தவிர வேறு எந்த வித தொழில்களையும் டிஜிட்-ன் ப்ராப்பர்டி இன்சூரன்ஸ் பாதுகாக்கும். அந்தத் தொழிலானது எந்த அளவிலும் இருக்கலாம் அதே சமயம் அதன் தன்மை எதுவாகவும் இருக்கலாம்.

உங்கள் ஷாப்கீப்பருக்கான இன்சூரன்ஸ் பாலிசிக்கான சரியான காப்பீட்டுத் தொகையைத் தேர்வு செய்வது எப்படி?

இந்தியாவில் கிடைக்கும் ஷாப் இன்சூரன்ஸ் பிளான்களைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்

ஷாப் இன்சூரன்ஸ் பாலிசி பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்