பாஸ்போர்ட்டில் உங்கள் வாழ்க்கை துணையின் பெயரை சேர்க்கவோ அல்லது மாற்றவோ, முதலில் உங்கள் பாஸ்போர்ட்டை மீண்டும் வழங்குதல் செயல்முறையை நடைமுறைப்படுத்த நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த செயல்முறையை நீங்கள் இரண்டு விதமாக செயல்படுத்தலாம் -
ஆன்லைன் படிவம் சமர்ப்பித்தலுக்கான செயல்முறை
திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கை துணையின் பெயரை பாஸ்போர்ட்டில் சேர்க்க உதவும் ஆன்லைன் படிவம் சமர்ப்பித்தல் செயல்முறைக்கான படிப்படியான விளக்கம் உங்களுக்காக-
1. பாஸ்போர்ட் சேவா ஆன்லைன் போர்டல் இணையதளத்தை பார்வையிட்டு, உங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளவும்.
2. இப்பொழுது உங்களின் உள்நுழைவு ஐடி மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்நுழையவும். பின்னர் உங்கள் வாழ்க்கை துணையின்பெயரைச் சேர்க்க "புதிய பாஸ்போர்டிற்கு விண்ணப்பிக்க/பாஸ்போர்ட் மீண்டும் வழங்குதலுக்கு விண்ணப்பிக்க" என்பதை கிளிக் செய்யவும்.
3. தேவையான விவரங்கள் அனைத்தையும் உள்ளிட்ட பிறகு, "சமர்ப்பிக்கவும்" என்பதை கிளிக் செய்யவும்.
4. அடுத்ததாக, "பணம் செலுத்தி, அப்பாயிண்ட்மெண்ட் திட்டமிடவும்" என்பதைக் கிளிக் செய்யவும்.
5. பணம் செலுத்துதல் பக்கத்தில் காணப்படும் எஸ்பிஐ (SBI) வங்கி சலான், இன்டர்நெட் பேங்கிங், மற்றும் டெபிட்/கிரடிட் கார்டு போன்ற உங்களுக்குசௌகரியமான பணம் செலுத்தும் முறையை தேர்வு செய்து, உரிய கட்டணத்தை செலுத்தவும். பிஓ (PO)/பிஓபிஎஸ்கே (POPSK)/பிஎஸ்கே (PSK) போன்றவற்றில் அப்பாயிண்ட்மெண்ட் பெற முன்கூட்டிய ஆன்லைன் கட்டணம் செலுத்துதல் கட்டாயம்.
6. "விண்ணப்பத்திற்கான ரசீதை அச்சிடவும்" என்பதை கிளிக் செய்க. அந்த ரசீதில் பின்வரும் விவரங்கள் காணப்படும்:
அப்பாயிண்ட்மெண்ட் எண்
விண்ணப்ப குறிப்பு எண்
ஆஃப்லைன் படிவம் சமர்ப்பித்தலுக்கான செயல்முறை
பாஸ்போர்ட்டில் வாழ்க்கை துணையின் பெயரைச் சேர்க்க விரும்பும் நபர்களுக்கான இ-படிவம் சமர்ப்பித்தலின் படிப்படியான செயல்முறை பின்வருமாறு-
1. பாஸ்போர்ட் சேவா கேந்திரா இணையதளத்தில் உள்ள இ-படிவத்தை எக்ஸ்எம்எல் (XML) முறையில் பதிவிறக்கம் செய்து, தேவையான விவரங்களை உள்ளிடவும்.
2. இப்பொழுது போர்ட்லில் உள்நுழைந்து, எக்ஸ்எம்எல் கோப்பைப் பதிவேற்றம் செய்யவும்.
3. ஆன்லைன் செயல்முறைக்கு விவரிக்கப்பட்டது போலவே, பணம் செலுத்துதல் பக்கத்திற்கு சென்று உரிய கட்டணத்தை செலுத்தவும். பின்னர், மேலே குறிப்பிட்டுள்ளபடி பணம் செலுத்துதலுக்கான ரசீதை பதிவிறக்கம் செய்யுங்கள்.
நீங்கள் ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் படிவத்தை சமர்ப்பித்த பிறகு அப்பாயிண்ட்மெண்ட் குறித்த விவரங்கள் உங்களுக்கு எஸ்எம்எஸ் (SMS) மூலம் அனுப்பி வைக்கப்படும். இறுதிப்படியாக, அனைத்து அசல் ஆவணங்களுடன் உங்கள் பகுதியில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு செல்லவும்.
ஆகவே, பாஸ்போர்ட்டில் கணவரின் பெயரை எப்படி சேர்ப்பது என்பது தெரியாமல் இருக்கும் நபர்களுக்கு மேற்கூறிய தகவல்கள் உதவியாக இருக்கும்.
மனைவியின் பெயரை பாஸ்போர்ட்டில் எப்படி சேர்ப்பது என்பதற்கும் இதே செயல்முறை பொருந்தும்.