24X7 மணிநேர ரோடு சைடு அசிஸ்டன்ஸ் என்றால் என்ன?
சாலையோர உதவி/ரோடு சைடு அசிஸ்டன்ஸ் அல்லது பிரேக் டவுன் கவர் என்பது வாகனத்திற்கு ஏற்பட்ட கோளாறுகளுக்காக, உங்களுக்கு சாலையோரத்தில் உதவி தேவைப்படும் போதோ அல்லது உங்கள் வாகனத்திற்கு ஏற்பட்ட கோளாறுகளால் சாலையில் நீங்கள் மாட்டிக்கொண்டிருக்கும் போது உதவி தேவைப்பட்டாலோ, நீங்கள் உங்கள் காம்ப்ரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸ் அல்லது டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசியின் மூலம் உதவி பெற்றுக்கொள்ள எடுத்துக்கொள்ளக் கூடிய ஆட்-ஆன் காப்பீடாகும்.
24x7 மணிநேர சாலையோர உதவி என்பது சிறிய தடைகளாக இருந்தாலும் சரி அல்லது பிளாட் டையர்(பஞ்சராக) ஆக இருந்தாலும் சரி, எத்தகைய பிரச்சனையாக இருந்தாலும், கிளைம் செய்ய தேவையில்லாத வகையில் உதவும் அபாரமான கூடுதல் காப்பீடாகும்.
சாலையோர உதவி கவர் எடுத்துக்கொள்ள எவ்வளவு செலவாகும்?
உங்கள் பைக் இன்சூரன்ஸ் பாலிசி அல்லது உங்கள் காம்ப்ரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸ் பிரீமியத்தொகையுடன் கூடுதலாக நிலையான குறைந்தபட்ச தொகைக்கு சாலையோர உதவி அல்லது பிரேக்டவுன் காப்பீட்டை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். இந்த காப்பீட்டை நீங்கள் டிஜிட்டின் மூலம் எடுக்கும் போது, உங்கள் காருக்கென்றால் கூடுதலாக ரூ.102உம், டூ-வீலருக்கென்றால் ரூ.40உம் செலுத்த வேண்டும்.
சாலையோர உதவி கவர் என்பது எப்படி பயன்படும்?
உங்கள் டிஜிட் கார் அல்லது பைக் இன்சாரன்ஸ் பிளானில், நீங்கள் ஏற்கனவே சாலையோர உதவி/ரோடு சைடு அசிஸ்டன்ஸ் கவரை எடுத்துக்கொண்டிருந்தால், சாலையில் நீங்கள் மாடிக்கொண்டு உங்களுக்கு உதவித் தேவைப்படும் அவசரமான சூழ்நிலையின் போது, சாலையோர உதவி/ரோடு சைடு அசிஸ்டன்ஸ் கவரை உபயோகிப்பது என்பது மிக எளிமையாகிவிடும்!
உங்களுக்கு உதவித் தேவைப்படும் அவசர காலங்களில், நீங்கள் செய்யவேண்டியது 1800-103-4448 என்ற எண்ணில் எங்களை அழைப்பது மட்டும் தான். நீங்கள் உங்கள் பாலிசி விவரங்களை தயாராக வைத்திருந்தால் மட்டும் போதும், நாங்கள் கண்மூடி கண் திறக்கும் நேரத்தில் உங்களுக்கு உதவிட அங்கிருப்போம்.
டிஜிட்டுடன் வரும் சாலையோர உதவி/ரோடு சைடு அசிஸ்டன்ஸ் கவர், 24x7 மணி நேர சேவை உடன் வருவது மட்டுமின்றி போக்குவரத்து செலவு மட்டும் பணியாளர் கூலி என அனைத்தையும் பார்த்துக்கொள்ளும். நாங்கள் உங்களுக்கு நகரத்திலிருந்து 500 கிலோமிட்டர் வரை உதவுவோம். (100 கிலோமீட்டர் வரை கவர் செய்யும் மற்றவர்கள் போலில்லாமல்)
RSA/ஆர்எஸ்ஏ கவரில் எதெற்கெல்லாம் காப்பீடு அளிக்கப்படுகிறது - வாருங்கள் அதன் விவரங்களை பார்ப்போம்
நாங்கள் ஏற்கனவே RSA/ஆர்எஸ்ஏ-வின் கீழ் என்னவெல்லாம் காப்பீடு செய்யப்படும் என்பது பற்றிய சுருக்கத்தை உங்களுக்கு கொடுத்துவிட்டோம். இருப்பினும், உங்கள் சாலையோர உதவி அல்லது பிரேக்டவுன் உதவி கவர்களின் பயன்களை நீங்கள் தெளிவாக புரிந்துக்கொள்ள உங்கள் கவரேஜ்களுக்குள் என்னெவெல்லாம் உள்அடங்கும் என்ற விவரங்களை அறிந்துகொள்வது என்பது மிக அவசியம்.
உங்கள் பேட்டரியில் ஏற்பட்டுள்ள கோளாறுகளால் உங்கள் கார் அல்லது டூ-வீலர் ஓடாமல் நின்று போகும் சூழ்நிலைக்காகவே இது அர்பணிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், பணியாளர் கூலி மற்றும் போக்குவரத்து செலவு உட்பட அனைத்தும் கொண்ட உங்கள் RSA/ஆர்எஸ்ஏ கவர் உங்களுக்காக காப்பீடு அளிக்கும்,
உங்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ, ஏரளாமானோர் அவர்களது கார் சாவிகளை அவ்வப்போது தொலைப்பார்கள்! அத்தகைய சூழ்நிலைகளில் நீங்கள் சாவியில்லாமல் ஏதோ ஓரிடத்தில் மாட்டிக்கொண்டால் கூட, உங்கள் ரோடுசைடு அசிஸ்டன்ஸ் கவர் உங்களுக்கான பிக்அப்பை ஏற்பாடு செய்வது மட்டுமின்றி உங்கள் ஸ்பேர் சாவிகளையும் டெலிவரி செய்யும் அல்லது அந்த நேரத்தில் டெக்னிஷியன்களின் உதவியுடன் காரை திறக்க உதவுவோம்.
நமது வாழ்க்கையில் ஏதோ ஒரு தருணத்தில் எல்லோரது வாகனத்திற்கும் டையர் பஞ்சராகியிருக்கும்! கடவுள் டையர் பஞ்சர் மூலம் உங்கள் வாகனத்தைத் தடுக்கிறார், மேலும், உங்களுக்கு உதவி செய்ய ஒருவரும் இல்லை என்ற சூழ்நிலை வரும்போது உங்கள் சாலையோர உதவி /ரோடுசைடு உதவி கவர் உங்களது டையரை ஸ்பேர் டையர் மூலம் மாற்ற சரியான டெக்னிஷியன்களை ஏற்பாடு செய்ய உதவும்.
சிலதருணங்களில், நீங்கள் உங்கள் கார் அல்லது பைக் ஏன் ஸ்டார்ட் ஆகவில்லை என்பது புரியாமல் திகைத்து நிற்கும்படியான சூழ்நிலை ஏற்பட்டிருக்கலாம். எதிர்பாராதவிதமான சூழ்நிலைகளான சாலையோர உதவி /ரோடுசைடு அசிஸ்டன்ஸ் உங்களுக்குத் தேவைப்படும் நேரத்தில் பழுதுகளை சரிபார்க்கும் பயனை வழங்கும்.
உங்கள் வாகனம் தடைபட்டு நின்ற அதே இடத்திலேயே பழுதுப்பார்க்க முடியாத தீவிர கோளாறால் பாதிக்கப்பட்டு, வொர்ஷாப்பிற்கோ அல்லது கேரேஜிர்கோ தான் சர்வீஸ் செய்ய அனுப்பவேண்டிய சூழ்நிலைகளில் சாலையோர உதவி /ரோடுசைடு அசிஸ்டன்ஸ் கட்டியிலுக்கும் வசதியினை உங்களுக்கு வழங்கும்.
எதிர்பாராதவிதமான நிகழ்வுகளினால், நீங்கள் உங்கள் உறவினர்களுக்கு அவசர செய்திகளைத் தெரிவிக்க வேண்டும் என்றாலும் நாங்கள் அதை பார்த்துக்கொள்வோம்!
எதிர்பாராதவிதமான நிகழ்வுகளினால், உங்கள் வாகனம் மட்டுமில்லாமல் நீங்களும் நடுவழியில் விபத்தில் மாட்டிக்கொண்டால், உங்களுக்குத் தேவையான மருத்துவ சேவைகளை அருகில் இருக்கும் மருத்துவ மையத்தின் மூலம் சரியான நேரத்திற்குள் நீங்கள் பெறுவதை சாலையோர உதவி /ரோடுசைடு அசிஸ்டன்ஸ் கவரானது உறுதி செய்திடும்.
நாம் எவ்வளவு சுதாரிப்பானவராக இருந்தாலும் சரி, இது நமக்கு நிகழும்!! உங்கள் பியூவல் டேங்க் ஏற்கனவே காலியாகிவிட்டது என்பது உங்களுக்குத் தெரியவில்லை! அத்தகைய சூழ்நிலையில், உங்கள் கவர் நீங்கள் நின்றுகொண்டிருக்கும் இடத்திற்கே 5 லிட்டர் பியூவலை வழங்க ஏற்பாடு செய்யும்!
ரோடு சைடு அசிஸ்டன்ஸ் காப்பீட்டில் உள்ளடங்காதது, மற்றும் அதைப்பற்றி நினைவில் வைத்துக்கொள்ளவேண்டிய பிற விஷயங்கள்
எங்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் நாங்கள் மிக வெளிப்படையாக இருக்கிறோம், அதனால், கிளைம் என்று வரும்போது உங்களுக்கு எந்தவித மறைமுக கட்டணங்களும் இருக்காது. டிஜிட்டை பொறுத்தவரை ரோடு சைடு அசிஸ்டன்ஸ் கவருக்கு நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவை பின்வருமாறு:
- எங்கள் ரோடு சைடு அசிஸ்டன்ஸ் கவர் மூலம் நீங்கள் உதவி பெறுவது கிளைமாக கணக்கில் கொள்ளப்படாவிட்டாலும், நீங்கள் அதிகபட்சமாக அந்த ஒரு பாலிசியின் மூலம் ஆண்டிற்கு 4 முறை உதவி பெற்றிடலாம்.
- நீங்கள் பாலிசி காலத்தில் 2 முறை வரை பியூவல் அசிஸ்டன்ஸை உபயோகிக்கலாம்.
- ரோடு சைடு அசிஸ்டன்ஸ் என்பதை உங்களுக்கு வேறு வழியில்லாத பட்சத்தில் மட்டுமே நீங்கள் பயன்படுத்த வேண்டும். உதாரணத்திற்கு; உங்கள் வாகனம் எந்தவித பிரச்சனையும் இன்றி அருகாமையில் இருக்கும் ஒர்க்ஷாப்பிற்கோ அல்லது டீலருக்கோ கொண்டுசெல்ல முடியும் என்கிற பட்சத்தில் ரோடு சைடு அசிஸ்டன்ஸ் பொருந்தாது.
- உங்கள் ரோடு சைடு அசிஸ்டன்ஸ் கவரானது, விபத்து நடந்த இடத்தில் செய்யப்படும் பழுது(ரிப்பேர்) மற்றும் பணியாளர் செலவுகளுக்குக் காப்பீடு அளிக்கும். ஆனால், 45 நிமிடங்களுக்கான செலவுகளுக்கு மட்டுமே காப்பீடு அளிக்கப்படும்.
- கார் மற்றும் பைக் கிளைம்கள் போல், நீங்கள் குடிப்போதையிலோ அல்லது சரியான ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இருப்பது கண்டறியப்பட்டால், காப்பீடு அளிக்கப்படாது.
யாரெல்லாம் ரோடு சைடு அசிஸ்டன்ஸ் கவரை எடுக்க வேண்டும்?
ஒருவேளை உங்களிடம் இருக்கும் பைக் அல்லது கார் வாங்கி 5 வருடத்திற்குள் ஆகிறது என்றால், நீங்கள் அவசியம் உங்கள் காம்ப்ரிஹென்சிவ் கார் அல்லது பைக் இன்சூரன்ஸ் பாலிசியில் ரோடு சைடு அசிஸ்டன்ஸ் கவரைத் தேர்வு செய்ய வேண்டும். எனவே, உங்கள் பிராண்ட் நியூ வாகனம் எப்போதும் எல்லா சூழ்நிலைகளிலும் நன்றாக பராமரிக்கப்பட்டு பாதுகாக்கப்படும்.
ஒருவேளை நீங்கள் அடிக்கடி பயணம் செய்பவராக இருப்பின், 24x7 மணிநேரமும் ரோடு சைடு அசிஸ்டன்ஸ் கவர் பெறுவது ஒரு சிறந்த யோசனையாக அமையும். உங்கள் பயணங்களில் ஒன்றில் எப்போது இந்த உதவி தேவைப்படும் என்பதை உங்களால் கணிக்க முடியாது.
சிலர் சின்ன பிரச்சனைகளிலிருந்தும் மீண்டு வந்துவிடுவார்கள் ஆனால் சிலரால் முடியாது. எனவே, ஒருவேளை’நீங்கள் உங்கள் காருக்கோ அல்லது டூ-வீலருக்கோ பிரேக்டவுனால் ஏற்படும் சிறிய பழுதுகளைக் கூட சரி செய்ய முடியாத சூழ்நிலைகளில் இருந்தால், ரோடு சைடு அசிஸ்டன்ஸை உங்கள் பாலிசியின் ஆட்-ஆனில் பெறுவது என்பது உங்களைப் பாதுகாக்கும் காவல் தெய்வமாக இருக்கும்!
மோட்டார் இன்சூரன்ஸில் 24X7 மணி நேர சாலையோர உதவிக் காப்பீடு பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
சாலையோர உதவி மதிப்புடையதா?
சாலையோர உதவி கவரின் பல்வேறு நன்மைகளைக் கருத்தில் கொண்டு, உங்களுக்கு எப்போது சேவை தேவைப்படும் என்று உங்களுக்குத் தெரியாததால், இது நிச்சயமாக மதிப்புக்குரியது!
எனது காருக்கு சாலையோர உதவியைப் பெற எவ்வளவு செலவாகும்?
சாலையோரம் அல்லது பிரேக் டவுன் உதவிக்கு, உங்கள் கார் இன்சூரன்ஸ் பிரீமியத்தில் கூடுதலாக ரூ.102 செலவாகும்.
எனது டூ-வீலருக்கான சாலையோர உதவியைப் பெற எனக்கு எவ்வளவு செலவாகும்?
டிஜிட்டில், ஒருவேளை நீங்கள் சாலையோர உதவியைத் தேர்வுசெய்தால், உங்கள் டூ-வீலருக்கான பிரீமியமத்துடன் நிலையான குறைந்தபட்சக் கட்டணமாக ரூ.40 வசூலிக்கப்படும்.
சாலையோர உதவிக்கு கிளைம் செய்வது என்பது எனது நோ கிளைம் போனஸை பாதிக்குமா?
இல்லை! அதிர்ஷ்டவசமாக, நீங்கள் சாலையோர உதவி மூலம் மட்டுமே பயனடைந்தாலும், அது கிளைமில் சேர்க்கப்படாது. மேலும், அந்த ஆண்டில் நீங்கள் வேறு எந்த கிளைமையும் செய்யவில்லை என்றால், உங்கள் நோ க்ளைம் போனஸ் அப்படியே இருக்கும்.
சாலையோர உதவி கார்களைத் திறக்க உதவுமா?
ஆம், நீங்கள் உங்கள் சாவியை தொலைத்து விட்டாலோ அல்லது உங்கள் சொந்த காரிலேயே பூட்டப்பட்டுவிட்டாலோ, சாலையோர உதவி கவர் ஸ்பேர் சாவி மூலம் உங்களுக்கு உதவும். மேலும், சில சமயங்களில் டெக்னிஷியன் உதவியுடன் காரை திறக்கவும் உதவும். அதற்கு நீங்கள் பாதுகாப்பு நோக்கங்களுக்காக உங்கள் செல்லுபடியாகும் அடையாளச் சான்றை தயராக வைத்திருக்க வேண்டும்.
நான் சாலையோர உதவி கவரை வாங்க விரும்புகிறேன். RSA கவரில் நான் எதைப் பார்க்க வேண்டும்?
- எளிதாகத் தொடர்புகொள்தல்: உங்கள் காருடன் நீங்கள் நடுவழியில் மாட்டிக்கொள்ளும் போது, நீங்கள் உங்கள் இன்சூரரை எளிதாகத் தொடர்புகொள்ள முடியுமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அதனால்தான், சாலையோர உதவி காப்பீட்டை எடுக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்களில் ஒன்று, உங்கள் இன்சூரரை நீங்கள் எவ்வளவு எளிதாக அணுகலாம் என்பது
- நேரங்கள்: முன்னறிவிப்பின்றி வருவதுதான் பிரச்சனைகள்! அதனால்தான், நீங்கள் உறுதியாக இருக்க விரும்பும் விஷயங்களில் ஒன்று, உங்கள் இன்சூரரின் சாலையோர உதவி 24x7 மணி நேர சேவையுடன் வருகிறது என்பது!
- கவரேஜ்: நாளின் முடிவில், உங்களின் சாலையோர உதவிக் கவர் உங்களுக்குப் பலன்கள் மற்றும் கவரேஜ்களைத் தர வேண்டும். எனவே, வழங்கப்படும் கவரேஜ் நன்மைகள் என்ன என்பதையும், அது உங்களுக்கு மதிப்புக்குரியதா இல்லையா என்பதையும் எப்போதும் பார்க்கவும்.
- சேவை பயன்கள்: சில இன்சூரர்கள் அடிப்படை கவரேஜுக்கு அப்பால் பயன்களை வழங்குகிறார்கள். சமயோஜிதமாக தேர்வு செய்வதில் உங்களுக்கு உதவ, வெவ்வேறு இன்சூரர்கள் என்ன வழங்குகிறார்கள் என்பதையும் பார்க்கவும்.