நீங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தாலும் காலாவதியாவதற்கு முன்பே உங்கள் கார் மற்றும் பைக் இன்சூரன்ஸை புதுப்பித்திடுங்கள்
தற்போதைய கோவிட்-19 நோய்த்தொற்றினால் பெரும்பாலான மக்கள் வீட்டிலேயே இருப்பதினால், வாகனங்கள் அனைத்தும் உபயோகப்படுத்தப்படாமல், தூசி படிந்த நிலையில் உள்ளன.
இத்தகைய சூழ்நிலையில், உபயோகப்படுத்தப்படாத, எந்த வித சேதமும் ஏற்பட வாய்பில்லா வாகனத்தின் மோட்டார் இன்சூரன்ஸை புதுப்பிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்று கூட நீங்கள் சொல்லலாம்.
ஆனால் நீங்கள் அவ்வாறு எண்ணினால் அது தவறு. கேரேஜில் நிறுத்தப்பட்டிருந்தாலும் கார்கள் மற்றும் பைக்குகள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும், அதனால் தான் உங்கள் கார் மற்றும் பைக்கின் இன்சூரன்ஸை காலாவதியாவதற்கு முன்பே புதுப்பிப்பது அவசியமாகக் கருதப்படுகிறது.
மேலும் தெரிந்துக்கொள்ளுங்கள்:
ஊரடங்கின் போது உங்கள் வாகனத்திற்கு எத்தகைய சேதம் ஏற்படலாம்?
ஊரடங்கின் போது உபயோகிக்கப்படாமல் இருக்கும் உங்கள் கார் அல்லது பைக்கை பாதிக்கும் விஷயங்கள் பல இருக்கின்றன. அத்துடன் நல்ல விஷயம் என்னவென்றால், அதில் பெரும்பான்மையானவை மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசியின் மூலம் காப்பீடு செய்யப்படுகிறது.
இருப்பினும், சரியான நேரத்தில், நீங்கள் உங்கள் பாலிசி புதுப்பித்தலை நினைவு வைத்திருந்தால் மட்டுமே உங்கள் இன்சூரரால் உதவ முடியும்:
திருட்டு
ஒரு நாள் காலையில் நீங்கள் எழுந்து, முந்தைய நாள் இரவு உங்கள் ஆசை கார் அல்லது பைக் நின்ற இடம் காலியாக இருப்பதைப் பார்க்கலாம். இந்தியாவில் வாகன திருட்டு அசாதாரணமானது அல்ல.
நாசப்படுத்துதல்
வேண்டுமென்றோ அல்லது தவறுதலாகவோ வாகனம் நாசப்படுத்தப்படலாம் அல்லது பாதிக்கப்படலாம். எடுத்துக்காட்டிற்கு, அருகாமையில் குழந்தைகள் பந்து விளையாடும் போது. அத்தகைய சேதத்தை பழுதுபார்ப்பது அதிக செலவாகலாம்.
இயற்கை சீற்றங்கள்
நிலச்சரிவு, நிலநடுக்கம் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை பேரழிவுகள் ஏற்படும் பொதுவான பகுதிகளில், இயற்கை சீற்றங்கள் வாகனத்திற்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தும்.
ஆனால் நீங்கள் அத்தகைய பகுதியில் வசிக்காவிட்டாலும் கூட, மரக்கிளை போன்று விழும் சிறிய துரும்பு கூட உங்கள் வாகனத்தைத் தாக்கி சேதப்படுத்தலாம்.
காலாவதியாவதற்கு முன்பு ஏன் நீங்கள் உங்கள் கார் மற்றும் பைக் இன்சூரன்ஸை புதுப்பிக்க வேண்டும்?
நாங்கள் ஏற்கனவே கூறியது போல், நீங்கள் சரியான நேரத்தில் இன்சூரன்ஸைப் புதுப்பிக்கவில்லை என்றால், உங்கள் இன்சூரரால் உங்கள் கிளைமை வழங்க இயலாது. அதனால், இம்மாதிரியான சேதங்கள் ஏற்படும் போது நீங்களே அனைத்து செலவுகளையும் செலுத்த வேண்டும். இன்சூரன்ஸ் புதுப்பிக்க வேண்டியதற்கான பிற முக்கிய காரணங்கள் பின்வருமாறு:
நோ கிளைம் நிராகரிப்பு
இன்சூரன்ஸ் நிறுவனம் மதிப்பாய்வு செய்யும் முதல் விஷயம், உங்கள் கார் மற்றும் பைக் இன்சூரன்ஸ் பாலிசியின் காலம். காலாவதியான பிறகு நீங்கள் கிளைம் கோரும் போது, அது எந்தவித விசாரணையுமின்றி நிராகரிக்கப்படும்.
உங்கள் நோ கிளைம் போனஸ் சைக்கிள் பாதுகாப்பாக இருக்கும்
மோட்டார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வழக்கமாக நீங்கள் கிளைம் செய்யாத வருடங்களுக்கு போனஸை வழங்குகின்றன. ஆனால், அதன் பலனை அனுபவிக்க, உங்கள் பாலிசியை சரியான நேரத்தில் புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையெனில், உங்கள் என்சிபி(NCB)யை நீங்கள் இழந்துவிடுவீர்கள், மேலும் தள்ளுபடியும் கூட!
மதிப்பாய்வு தேவையில்லை
உங்கள் மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசியை சரியான நேரத்தில் புதுப்பித்தால் மட்டுமே, அதை சில நிமிடங்களில் செய்யமுடியும். இருப்பினும், முந்தைய பாலிசியின் காலாவதி தேதிக்குப் பிறகு நீங்கள் அதைச் செய்தால், இன்சூரர்கள் உங்கள் வாகனத்தில் ஏற்கனவே ஏற்பட்டிருக்கும் சேதத்தை வந்து மதிப்பாய்வு செய்ய வலியுறுத்தலாம், இது உங்களை நிதிப் பொறுப்புகளுக்கு உட்படுத்தும்.
பிரீமியத்தில் எந்த வித விலை அதிகரிப்பும் இல்லை
உங்கள் பாலிசியை சரியான நேரத்தில் புதுப்பிக்காவிடில், ஏற்கனவே உள்ளதை விட அதிக விலை கொண்ட புதிய மோட்டார் இன்சூரன்ஸ் திட்டத்தை நீங்கள் வாங்க நேரிடலாம்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
டிஜிட் உடன் எப்படி உங்கள் மோட்டார் இன்சூரன்ஸை புதுப்பிக்கலாம்?
ஏற்கனவே இருக்கும் கார் இன்சூரன்ஸை டிஜிட் மூலம் புதுப்பிப்பதலை எங்களின் விரைவான மற்றும் எளிமையான ஸ்மார்ட்ஃபோன்-இயக்கப்பட்ட செயல்முறைகள் மூலம் ஆன்லைனில் செய்யலாம்.
மேலும் தொடர "டிஜிட் பாலிசியை புதுப்பிக்கவும்" என்ற பட்டனை கிளிக் செய்யவும் அல்லது உங்கள் கார் எண்ணை உள்ளிடவும். நீங்கள் ஒரு முறை கடவுச்சொல் உள்ளிடதல் மூலம் உள்நுழைந்து எளிய செயல்முறையைப் பின்பற்றி புதுப்பிக்க வேண்டும்.
உங்கள் வாகன இன்சூரன்ஸ் புதுப்பித்தலுக்கு ஏன் டிஜிட்டை தேர்வு செய்ய வேண்டும்?
உங்களின் பழைய கார் இன்சூரன்ஸ் பாலிசி எங்களிடம் இருக்கிறதா இல்லையா என்பது முக்கியமல்ல, கார் இன்சூரன்ஸ் புதுப்பித்தலுக்கு டிஜிட்டை தேர்ந்தெடுப்பது எளிதானது மற்றும் தொந்தரவு இல்லாதது, மேலும் டிஜிட் மூலம் சில நிமிடங்களிலேயே இன்சூரன்ஸ் புதுப்பித்தல் ஆன்லைனில் செய்துவிடலாம்.
ஊரடங்கு முடிந்த பிறகு எனது கார் அல்லது பைக்கில் எந்தவித பிரச்சனையுமில்லை என்பதை நான் எப்படி உறுதி செய்வது?
உங்கள் கார் அல்லது பைக்கின் இன்ஜினை தொடர்ந்து இயக்குவதன் மூலம் வண்டி வேலை செய்யும் நிலையில் இருப்பதை உறுதிசெய்யலாம். வாரத்திற்கு இரண்டு முறையாவது இப்படிச் செய்தால் பேட்டரி தோய்ந்து போவதைத் தவிர்க்கலாம்.
கொரோனா வைரஸ் ஊரடங்கின் போது எனது கார் இன்சூரன்ஸ் காலாவதியானால் நான் என்ன செய்ய வேண்டும்?
கொரோனா வைரஸ் ஊரடங்கின் போது உங்கள் கார் அல்லது பைக் இன்சூரன்ஸ் பாலிசி காலாவதியானால், உடனடியாக உங்கள் கார் இன்சூரன்ஸ் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு புதுப்பித்தல் செயல்முறையை பூர்த்தி செய்யவும். பாலிசியை ஆன்லைனில் புதுப்பித்தல் சிறந்த முறையாகும், ஏனெனில் இது நேரடி தொடர்பு இல்லாத செயல்முறை ஆகும்.