PA கவருடன் கூடிய மோட்டார் இன்சூரன்ஸ்

பர்சனல் ஆக்சிடன்ட் கவர்

மோட்டார் இன்சூரன்ஸில் PA கவர் என்றால் என்ன?

பொதுவாக விபத்துகள் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் உடலில் காயங்கள் ஏற்படலாம் அல்லது சில நேரங்களில் உயிர் இழப்பிற்கு கூட இது வழிவகுத்து விடும். இத்தகைய உடல் ரீதியிலான, மன ரீதியிலான மற்றும் பண ரீதியிலான பாதிப்பை உண்டாக்கும் நிகழ்வுகளுக்கு பலியாக நீங்கள் விரும்புவீர்களா?

ஒரு இன்சூரன்ஸ் பாலிசி என்பது, அது மோட்டார் இன்சூரன்ஸ் அல்லது பர்சனல் ஆக்சிடன்ட் கவர் என எதுவாக இருந்தாலும், ஒருவரை பொருளாதார மற்றும் தனிப்பட்ட இழப்புகளிலிருந்து பாதுகாக்கும். மோட்டார் இன்சூரன்ஸில் பர்சனல் ஆக்சிடன்ட் கவர் என்பது வாகன உரிமையாளர் மற்றும் ஓட்டுனருக்கானது. மோட்டார் பாலிசியின் கீழ் வாகனத்தின் உரிமையாளரால் இது கண்டிப்பாக எடுக்கப்பட வேண்டும். நீங்கள் ஒரு விரிவான தொகுப்பு அல்லது மூன்றாம் தரப்பு பொறுப்புக் கொள்கையைத் தேர்வு செய்யலாம்.

மோட்டார் இன்சூரன்ஸின் கீழ் உள்ள கட்டாய PA பாலிசி, வாகன உரிமையாளரின் பெயரில் வழங்கப்படுகிறது. இந்தக் கவரானது அதிகாரப் பூர்வமாக வாகனம் ஓட்டுவதற்கான லைசென்ஸ் கொண்டிருந்தால் தான் செல்லுபடியாகும். ஒருவேளை உங்களிடம் PA கவர் இல்லை என்றால், நீங்கள் கார் இன்சூரன்ஸோ அல்லது பைக் இன்சூரன்ஸோ வாங்கும் போது அதனைப் பெற்று கொள்ளலாம்.

பர்சனல் ஆக்சிடன்ட் கவர் எவற்றையெல்லாம் உள்ளடக்கியுள்ளது?

மோட்டார் இன்சூரன்ஸின் கீழ் வரும் PA கவரானது விபத்தின் காரணமாக உடலில் ஏற்படும் காயங்கள், மரணம் போன்றவற்றிற்கு ஈடு செய்யும் விதமாக தகுந்த இழப்பீட்டினை வழங்கும். இந்த காப்பீட்டின் வரம்பானது IRDA வரையறையின் படி 15 லட்சம் ஆகும்.

விபத்தினால் ஏற்படும் மரணத்திற்க்கு ஏதுவாக - இன்சூரன்ஸ் செய்தவர் திடீரென சாலை விபத்தின் காரணமாக இறக்க நேர்ந்தால், இன்சூரன்ஸ் நிறுவனமானது முழு தொகையையும் அவரது நாமினிக்கு வழங்கும்.

நிரந்தர உடல் ஊனத்திற்கு ஏதுவாக - நிரந்தர உடல் ஊனத்திற்கு உள்ளானால், அதற்கான இழப்பீடு பின்வருமாறு இருக்கும் :

கவரேஜ் இழப்பீட்டின் %
மரணம் 100%
2 கை/கால்கள் அல்லது இரண்டு கண்கள் அல்லது 1 கை/கால் அல்லது 1 கண்ணை இழந்தால் 100%
1 கண்ணின் பார்வையை அல்லது கை/கால் இழந்தால் 50%
நிரந்தர மொத்த செயலிழப்பு 100%

பர்சனல் ஆக்சிடன்ட் கவர் ஏன் முக்கியமானது?

மனிதர்கள் தங்களுக்கு ஆபத்து வரலாம் என உணரும் போது, அவர்கள் தங்களை அதிலிருந்து காத்துக் கொள்ள, தகுந்த திட்டத்தினை வகுத்துவிடுவார்கள். நாள் முழுவதும் நிலவும் மோசமான போக்குவரத்து நெரிசல் மற்றும் புயல் வேகத்தில் விரைந்து செல்லும் வாகனங்கள் போன்றவற்றின் மத்தியில் நாம் சாலையில் வாகனம் ஓட்டுவது என்பது நமக்கு மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்திவிடுகிறது. ஆனால், உங்கள் மீது தவறு இல்லாத போதிலும், இது போன்ற சூழலில் விபத்து ஏற்படுவது என்பது பொதுவான ஒன்றாகும்.

வேகமாக வரும் ஒரு லாரி ஒரு காரின் பாக்கவாட்டில் மோதி ஓட்டுனரை காயப்படுத்தும் காட்சியை சற்று யோசித்துப் பாருங்கள். இதனால் ஏற்படும் பாதிப்பின் தீவிரம் அதிகமாக இருக்கலாம், ஏனெனில் அது உயிரிழப்பிலும் சென்று முடியலாம்! இது போன்ற கணிக்க முடியாத நிகழ்வுகள் நிரந்தர உடல் செயலிழப்பிற்கு வழிவகுக்கலாம், மற்றும் இது நடப்பதற்கான சாத்தியத்தை நம்மால் மறுக்க இயலாது. எனவே PA கவர் அத்தியாவசியமான ஒன்றாக மாறுகிறது.

இன்சூரன்ஸின் கீழ், ஒரு பர்சனல் ஆக்சிடன்ட் கவர் இருப்பது என்பது முக்கியமானதாகும், ஏனெனில் இது உரிமையாளர்-ஓட்டுநருக்கு எல்லா சந்தர்ப்பங்களிலும் அதிகபட்ச நிதி உதவியை வழங்குகிறது. குறிப்பாக, ஒரு நபரின் சம்பாதிக்கும் திறனானது பாதிக்கப்படும் போது இந்த பாலிசி கைக்கொடுக்கும்.

பர்சனல் ஆக்சிடன்ட் கவர் வைத்திருப்பது கட்டாயமா?

மோட்டார் வாகனச் சட்டம் 1988 இன் கீழ், மூன்றாம் தரப்பு இன்சூரன்ஸ் கவர் மட்டுமே கட்டாயமாக்கப்பட்டது. உடல் காயம் அல்லது சொத்து சேதம் ஆகியவற்றிற்காக கோரப்பட்ட கிளைம்கள் (Claim) தற்போது அதிகமாக உள்ளது. TP கிளைம்களை தவிர, உரிமையாளர்-ஓட்டுநர்கள் சார்ந்தவைக்கு கவனம் தேவைப் பட்டது . பின்னர், மோட்டார் உரிமையாளர்கள் பெர்சனல் ஆக்சிடன்ட் கவரை  வாங்குவது கட்டாயமாக்கப்பட்டது. விபத்தினால் ஏற்படக்கூடிய இழப்புகள் மற்றும் காயங்களுக்கு பயனளிப்பதே இதன் நோக்கம் ஆகும்.

ஆனால், ஜனவரி 2019 முதல், மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ் கட்டாயமாக PA கவரை வாங்கும் இந்த அம்சம் சற்று மாறிவிட்டது. மாற்றம் கீழுள்ள இந்த இரண்டு நிபந்தனைகளைக் குறிக்கிறது:

  • வாகனத்தின் உரிமையாளர் ரூ.15 லட்சம் காப்பீட்டுத் தொகையுடன் ஸ்டேண்ட்-அலோன் ஆக்சிடன்ட் பாலிசி வைத்திருந்தால், இந்தக் கவருக்கு விலக்கு அளிக்கப்படலாம் என்று அது குறிப்பிடுகிறது. 
  • இந்த காப்பீட்டுக்கான சட்ட  திருத்தத்தின் படி, ஒரு வாகனத்தின் உரிமையாளர்-ஓட்டுநர் தனது தற்போதைய கார் அல்லது பைக்கிற்கு PA பாலிசி வைத்திருந்தால், அவர் தனது புதிய வாகனத்திற்கு மீண்டும் வாங்குவது முக்கியமல்ல என்பதை இது குறிக்கிறது.

PA கவர் கட்டாயமானது மற்றும் விரிவான பேக்கேஜ் பாலிசி  அல்லது மூன்றாம் தரப்பு இன்சூரன்ஸ் பாலிசியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

பர்சனல் ஆக்சிடன்ட் கவரின் நன்மைகள் யாவை?

வாழ்க்கையில் என்ன நடக்கு என்பதை நம்மால் கணிக்க முடியாது, அதே போல் தான் விபத்துகளும். எனவே, நமக்கு பெர்சனல் ஆக்சிடன்ட் பாலிசி நிச்சயம் தேவை. ஒரு முழுமையான கவர் தவிர, மோட்டார் பாலிசியின் கீழும் ஒரு தனிநபர் PA பாதுகாப்பை வாங்க முடியும். இது பிணவரும் சில நன்மைகளை வழங்குகிறது:

இதை எப்படி கிளைம் செய்வது?

பெர்சனல் ஆக்சிடன்ட் பாலிசியின் கீழ் உள்ள கிளைம்- மோட்டார் இன்சூரன்ஸின் ஒரு பகுதியாகும், அந்தந்த கார் அல்லது பைக்கின்  உரிமையாளர்-ஓட்டுநர் அல்லது நாமினி மூலம் இதனை கிளைம் செய்து கொள்ளலாம். நாமினி அல்லது எஞ்சியிருக்கும் உரிமையாளர் அதிகபட்ச பலன்களைப் பெற வேண்டும் என்பதே இந்த பாலிசியின் நோக்கம் ஆகும் (பாலிசியில் குறிப்பிடப்பட்டுள்ளது).

விபத்தின் போது, ​​உரிமையாளர் அல்லது ஓட்டுனர் காயமடைந்தால், PA கவரின் கீழுள்ள பலன்களைப் பெற, ஒருவர் கிளைமை ஃபைல் செய்ய வேண்டும். இதனை செய்வதற்கான வழிமுறைகள் பின்வருமாறு:

உரிமையாளர்-ஓட்டுனர் இறக்க நேர்ந்தால், நாமினி கிளைம் செய்யலாம். பாலிசியைப் பொறுத்து கிளைம் தொகை அவருக்கு வழங்கப்படும்.

மோட்டார் இன்சூரன்ஸில் பெர்சனல் ஆக்சிடன்ட் கவர் தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

பைக்கிற்கு PA கவர் கட்டாயமா?

ஆம், அனைத்து டூ-வீலர்களுக்கும் PA  கவர் கட்டாயமாகும். இதையே உங்கள் டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசியுடன் சேர்த்து வாங்கலாம்.

என் பெயரில் இரண்டு டூ-வீலர்கள் உள்ளன, நான் தனித்தனியாக 2 PA கவர்கள் வாங்க வேண்டுமா?

இல்லை, ஒருவருக்கு ஒரு தனிப்பட்ட PA கவர் மட்டுமே போதும். ஏனெனில், PA கவர் வாகனத்துடன் அல்லாமல், தனிப்பட்ட நபருடன்  தொடர்புடையதாக உள்ளது.

என் பெயரில் ஒரு கார் மற்றும் பைக் இருக்கிறது, நான் இரண்டு வாகனங்களுக்கும் தனித்தனியாக பிஏ (PA) கவர் வாங்க வேண்டுமா?

இல்லை, ஒரு பிஏ (PA) கவர் போதுமானது. ஏனெனில், அது தனிநபரான உங்களைச் சார்ந்தது, உங்கள் வாகனத்தைச் சார்ந்தது அல்ல.

PA கவர் உரிமையாளர்-ஓட்டுநருக்கு மட்டும் தான் பொருந்துமா?

ஆம், உரிமையாளர்-ஓட்டுநருக்கு மட்டுமே PA கவர் கட்டாயம் ஆகும்.