L-1 விசா: அர்த்தம், வகைகள், எலிஜிபிளிட்டி கிரைட்டிரியாக்கள், அப்ளிக்கேஷன் ப்ராசஸ் மற்றும் தேவையான ஆவணங்கள் இந்தக் கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளன
பல தனிநபர்கள் அமெரிக்காவில் வேலை செய்ய விரும்புகிறார்கள். இருப்பினும், ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அந்த நாட்டிற்குச் சென்று வேலை செய்ய விசாவைப் பெற வேண்டும். இது சம்பந்தமாக, அமெரிக்காவில் வேலை செய்ய விரும்பும் நபர்கள் L-1 விசாவை பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கு முன் இந்த விசாவின் முக்கிய அம்சங்களைக் கண்டறிய தொடர்ந்து ஸ்க்ரோல் செய்யுங்கள்.
L-1 விசா என்றால் என்ன?
அமெரிக்காவின் L-1 விசா என்பது புலம்பெயர் இல்லாத விசா ஆகும், இது வெளிநாட்டினரை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அமெரிக்காவில் வேலை செய்ய அனுமதிக்கிறது, இது விண்ணப்பதாரர்களின் சொந்த நாடுகளைப் பொறுத்து 3 மாதங்கள் முதல் 5 ஆண்டுகள் வரை இருக்கலாம். அமெரிக்காவிலும் வெளிநாட்டிலும் அலுவலகங்களைக் கொண்ட ஒரு கம்பெனியில் பணிபுரியும் நபர்களுக்கு இது செல்லுபடியாகும்.
வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கள் கம்பெனியின் அமெரிக்க நிறுவனக் கிளையில் உள்ள பதவியில் வேலை செய்ய வேண்டுமானால் அமெரிக்காவில் இருக்கத் தொடங்குவதற்கு முன்பு உள்ள 3 ஆண்டுகளில் குறைந்தது 1 ஆண்டுக்கு வெளிநாட்டில் இதேபோன்ற கம்பெனியில் பணிபுரிந்திருக்க வேண்டும். அமெரிக்க மற்றும் அமெரிக்கா அல்லாத கம்பெனிகளுக்கு இடையிலான முக்கிய தொடர்பு கிளைகள் மற்றும் தலைமையகம், தாய் மற்றும் துணை கம்பெனிகள், இணை கம்பெனிகள் அல்லது பரஸ்பர உரிமையுடன் சகோதரி கம்பெனிகள் மூலம் வரையறுக்கப்படலாம்.
தவிர, அமெரிக்காவின் L-1 விசா, அமெரிக்காவில் எந்த நிறுவனக் கிளையும் இல்லாத வெளிநாட்டு கம்பெனிகள், குறிப்பிட்டத் தேவைகளைப் பூர்த்தி செய்த பின், அமெரிக்காவில் ஒரு கிளையை அமைக்க பணியாளர் ஒருத்தரை அனுப்ப உரிமை அளிக்கிறது.
L-1 விசாவின் வகைகள் என்ன?
L-1 விசா இரண்டு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது:
1. L-1A (நிர்வாகிகள் மற்றும் மேலாளர்களுக்கு பொருந்தும்)
இந்த விசா 7 வருட காலத்திற்கு செல்லுபடியாகும். அதன் காலாவதியைத் தொடர்ந்து, தனிநபர்கள் ஒரு அமெரிக்க தாய், துணை கம்பெனி, கிளை அல்லது துணை கம்பெனி தொடர்பான கம்பெனியில் குறைந்தபட்சம் 1 வருடம் வெளிநாட்டில் பணிபுரிவதன் மூலம் L-1 அந்தஸ்தைப் பெறலாம்.
2. L-1B (ஸ்பெஷலைஸ்டு நாலெட்ஜ் கொண்ட தொழிலாளர்களுக்கு பொருந்தும்)
இந்த அனுமதி ஐந்து வருட காலத்திற்கு செல்லுபடியாகும். அதன் காலாவதியைத் தொடர்ந்து, அதை வைத்திருக்கும் நபர்கள் வெளிநாட்டில் அமைந்துள்ள ஒரு அமெரிக்க கம்பெனியின் கிளை, இணை, துணை அல்லது தாய் கம்பெனியில் ஒரு வருட அனுபவத்தைப் பெறுவதன் மூலம் L-1 நிலைக்குத் தகுதி பெறலாம்.
L-1 விசாவிற்கு தகுதி பெறுவதற்கான எலிஜிபிளிட்டி கிரைட்டிரியாக்கள் என்ன?
L-1 விசாவில் தகுதி பெறுவதற்கான எலிஜிபிளிட்டி கிரைட்டிரியாக்கள் பின்வருமாறு:
தொழில் வழங்குனர்களுக்கு
- தொழில் வழங்குநர்கள் தாய் கம்பெனியின் துணை அல்லது வெளிநாட்டு துணை கம்பெனிகளுடன் தொடர்பு கொண்டிருக்க வேண்டும்.
- தொழில் வழங்குநர் தற்போது அல்லது விரைவில் அமெரிக்காவிற்குள் பிசினஸை செய்ய வேண்டும்.
- ஒரு தொழில் வழங்குநர் அமெரிக்காவில் ஒரு புதிய பிசினஸை நிறுவ ஒரு பணியாளரை அனுப்பினால், ஒரு கம்பெனியை அமைக்க தொழில் வழங்குநர் ஒரு ப்ராபர்டியை வைத்திருக்க வேண்டும் மற்றும் ஊழியர்களுக்கு பணம் செலுத்துவதற்கான வலுவான நிதி திறனைக் (ஃபைனான்சியல் கெப்பாசிட்டி) கொண்டிருக்க வேண்டும்.
ஊழியர்களுக்கு
- அமெரிக்காவிற்கு வருகை தரும் ஒரு தனிநபர் தனது வருகைக்கு முந்தைய மூன்று ஆண்டுகளுக்குள் குறைந்தபட்சம் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- அமெரிக்காவிற்குச் சென்று ஸ்பெஷலைஸ்டு நாலெட்ஜ் உடன் ஒரு கம்பெனிக்கு சேவை செய்ய விரும்புதல்.
பிசினஸ் உரிமையாளர்களுக்கு
- உலகளாவிய நெட்வொர்க்கைக் கொண்ட கம்பெனிகள்
- தேசிய அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்ட கம்பெனிகள்
- குறைபாடற்ற வளர்ச்சியைக் கொண்ட கம்பெனிகள்
L-1 விசாவின் அப்ளிக்கேஷன் ப்ராசஸ்கள் என்னென்ன?
முதன்மையாக, L-1 விசாவிற்கு விண்ணப்பிக்க பின்வரும் இரண்டு ப்ராசஸ்கள் உள்ளன:
1. ரெகுலர் L-1 விசா
இந்த ப்ராசஸில் சாத்தியமான நபரின் சார்பாக தொழில் வழங்குநர்கள் L-1 விசாவிற்கு விண்ணப்பிக்கிறார்கள். அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகளில் (யூ.எஸ்.சி.ஐ.எஸ்) ஒரு மனுவைத் தாக்கல் செய்வதன் மூலம் அவர்கள் தொடங்கலாம், பின்னர் அது மேலும் தொடர அப்ளிக்கேஷனை மதிப்பாய்வு செய்து அங்கீகரிக்கிறது.
2. பிளான்க்கெட் L-1 விசா
இந்த நடைமுறையில், யூ.எஸ்.சி.ஐ.எஸ் ஏற்கனவே ஒரு கம்பெனியின் தகுதியை மதிப்பிடுகிறது. எனவே, விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பிளான்க்கெட் மனுவின் புகைப்பட நகலை துணை ஆவணங்களுடன் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.
L-1 விசாவிற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன?
L-1 விசாவிற்கு விண்ணப்பிக்கும் போது பின்வரும் ஆவணங்களை சமர்ப்பிக்கவும்:
- ஃபார்ம் DS-160 இன் நகல்
- L- சப்ளிமெண்ட்டின் நகல்
- நோட்டீஸ் ஆப் ஆக்ஷன் இன் நகல் (ஃபார்ம் I-797)
அமெரிக்காவில் உள்ள கம்பெனியிடமிருந்து தரப்பட வேண்டிய ஆவணங்கள்
- அலுவலகத்தின் இருப்பிடத்தின் குத்தகை
- ஸ்டாக் செர்டிஃபிகேட்கள் மற்றும் பேங்க் ஸ்டேட்மென்ட்கள்
- அகௌன்ட்டிங் ரிப்போர்ட்கள்
- தொழில் வழங்குநரின் இன்கம் டேக்ஸ் ரிட்டர்ன் அல்லது ஃபார்ம் 1120 (தேவைப்பட்டால்)
- தொழில் வழங்குநரின் குவார்ட்டர்லி ரிப்போர்ட் அல்லது ஃபார்ம் 941 (தேவைப்பட்டால்)
- கம்பெனியின் பிசினஸ் ஆக்டிவிட்டிகள் பற்றிய விரிவான ரிப்போர்ட்டுகள்
- கம்பெனியின் லெட்டர்ஹெட்கள்
- கமர்ஷியல் அக்ரீமெண்ட்கள், இன்வாய்ஸ்கள், கிரெடிட் லெட்டர்கள்
வெளிநாட்டுக் கம்பெனிகளிடமிருந்து தரப்பட வேண்டிய ஆவணங்கள்
- ஆர்டிக்ல் ஆஃப் இன்கார்பரேஷன்
- கடந்த 3 ஆண்டுகளுக்கான இன்கம் டேக்ஸ் ரிட்டர்ன்கள்
- பிசினஸ் லைசன்ஸ்
- பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை, டிரான்ஸ்பர் செய்யப்படுபவரின் நிலை போன்ற விவரங்களுடன் ஒரு நிறுவன விளக்கப்படம்
- கம்பெனியின் பிரோச்சர்
- பிசினஸ் பரிவர்த்தனைகளின் ஆவணங்கள்
- கம்பெனியின் பெயர், முகவரி மற்றும் லோகோவுடன் லெட்டர்ஹெட்கள்
டிரான்ஸ்பர் செய்யப்படுபவரிடமிருந்து தரப்பப்பட ஆவணங்கள்
- ரெஸ்யூம்
- பேமெண்ட் ஸ்டேட்மென்ட்டுகள்
- டிப்ளமோ செர்டிஃபிகேட்கள்
- இன்கம் டேக்ஸ் தொடர்பான ஆவணங்கள்
- டிரான்ஸ்பர் செய்யப்படுபவரின் நிலையுடன் ஒரு நிறுவனத்தின் விளக்கப்படம்
- மேற்பார்வையாளர்கள் மற்றும் சக ஊழியர்களிடமிருந்து பெறப்பட்ட ரெஃபெரென்ஸ் லெட்டர்கள்
- நிர்வாக அல்லது நிர்வாகப் பாத்திரத்தில் பொறுப்புகள்
- வெளிநாட்டு கம்பெனி அனுப்பிய வெரிஃபிகேஷன் லெட்டர்
- அப்பாயின்மெண்ட்கள் மற்றும் போர்டு ரெசொல்யூஷன் தொடர்பான ஆவணங்கள்
- டிரான்ஸ்பர் செய்பவர் ஸ்பெஷலைஸ்ட் நாலெட்ஜ் ஐ கொண்டிருந்தால் ரெஜிஸ்டரேஷனை சமர்ப்பிக்க வேண்டும்
- ஒரு நிர்வாகியாக இருப்பதற்கும் பிசினஸை இயக்குவதற்கும் திறனை நிரூபிக்க கூடுதல் ஆவணங்கள்
L-1 விசாவிற்கான ஃபீ எவ்வளவு?
ஃபீ ஒவ்வொரு நாட்டிற்கும் வேறுபடலாம். இருப்பினும், L-1 விசாவிற்கு பின்வரும் செலவுகளை தனிநபர்கள் எதிர்பார்க்கலாம்:
L-1 விசாவின் செல்லுபடியாகும் காலம் என்ன?
L-1 விசா வைத்திருப்பவர் 7 ஆண்டுகள் அமெரிக்காவில் இருக்க முடியும். இருப்பினும், இந்த நாட்டிற்குள் குடியேறும் ஆரம்ப கட்டத்தில், வைத்திருப்பவர்கள் 1 முதல் 3 ஆண்டுகள் வரை தங்கலாம்.
L-1 விசாவிற்கான அப்ளிக்கேஷன் நிராகரிக்கப்பட்டால் என்ன செய்வது?
விண்ணப்பதாரர்களுக்கான முதல் படி, அவர்களின் L-1 விசா அப்ளிக்கேஷன் ரிக்வெஸ்ட் நிராகரிக்கப்பட்டது என்பதை அறிந்த பிறகு நிராகரிப்புக்கான காரணங்களை பகுப்பாய்வு செய்ய வேண்டும். பின்னர், அவர்கள் இந்த முடிவை சவால் செய்ய விரும்பினால், அவர்கள் நிர்வாக மேல்முறையீட்டு அலுவலகத்தில் (அட்மினிஸ்ட்ரேடிவ் அப்பீல்ஸ் ஆஃபிஸ்) அல்லது அமெரிக்க மாவட்ட நீதிமன்றம் மூலம் மேல்முறையீடு செய்யலாம். மாற்றாக, விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட தேவைகளை பூர்த்தி செய்வதற்கு எதிராக H-1B போன்ற பிற பொருத்தமான விசாக்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
L-1 விசா பற்றிய பாயிண்ட்டர்களை மனதில் கொள்ளுங்கள், மேலே குறிப்பிட்டுள்ளபடி, அதற்கு விண்ணப்பிக்கும் போது ஏற்பட சாத்தியமுள்ள சிரமத்தையும் தவிர்க்கவும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
L-1 விசாவிற்கான ப்ராசஸிங் டைம் என்ன?
அப்ளிக்கேஷன் ரிக்வெஸ்ட்டை சமர்ப்பித்த தேதியிலிருந்து L-1 விசாவுக்கான அப்ளிக்கேஷனை ப்ராசஸ் செய்ய விசாவிற்கானத் துறை தோராயமாக 3 முதல் 4 மாதங்கள் எடுத்துக்கொள்ளும். 1 முதல் 3 வாரங்களில் தங்கள் மனுவின் அப்ரூவல் அல்லது மறுப்பை அறிய தொழில் வழங்குநர்கள் கூடுதல் கட்டணம் செலுத்தத் தேர்வுசெய்தால்.
L-1 விசாவின் செல்லுபடியாகும் காலத்தை நீட்டிக்க முடியுமா?
ஆம், விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட அளவுருக்களை பூர்த்தி செய்த பிறகு தங்கள் L-1 விசாவின் செல்லுபடியை 2 ஆண்டுகள் நீட்டிக்கலாம்.