பல தனிநபர்கள் அமெரிக்காவில் வேலை செய்ய விரும்புகிறார்கள். இருப்பினும், ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அந்த நாட்டிற்குச் சென்று வேலை செய்ய விசாவைப் பெற வேண்டும். இது சம்பந்தமாக, அமெரிக்காவில் வேலை செய்ய விரும்பும் நபர்கள் L-1 விசாவை பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கு முன் இந்த விசாவின் முக்கிய அம்சங்களைக் கண்டறிய தொடர்ந்து ஸ்க்ரோல் செய்யுங்கள்.
அமெரிக்காவின் L-1 விசா என்பது புலம்பெயர் இல்லாத விசா ஆகும், இது வெளிநாட்டினரை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அமெரிக்காவில் வேலை செய்ய அனுமதிக்கிறது, இது விண்ணப்பதாரர்களின் சொந்த நாடுகளைப் பொறுத்து 3 மாதங்கள் முதல் 5 ஆண்டுகள் வரை இருக்கலாம். அமெரிக்காவிலும் வெளிநாட்டிலும் அலுவலகங்களைக் கொண்ட ஒரு கம்பெனியில் பணிபுரியும் நபர்களுக்கு இது செல்லுபடியாகும்.
வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கள் கம்பெனியின் அமெரிக்க நிறுவனக் கிளையில் உள்ள பதவியில் வேலை செய்ய வேண்டுமானால் அமெரிக்காவில் இருக்கத் தொடங்குவதற்கு முன்பு உள்ள 3 ஆண்டுகளில் குறைந்தது 1 ஆண்டுக்கு வெளிநாட்டில் இதேபோன்ற கம்பெனியில் பணிபுரிந்திருக்க வேண்டும். அமெரிக்க மற்றும் அமெரிக்கா அல்லாத கம்பெனிகளுக்கு இடையிலான முக்கிய தொடர்பு கிளைகள் மற்றும் தலைமையகம், தாய் மற்றும் துணை கம்பெனிகள், இணை கம்பெனிகள் அல்லது பரஸ்பர உரிமையுடன் சகோதரி கம்பெனிகள் மூலம் வரையறுக்கப்படலாம்.
தவிர, அமெரிக்காவின் L-1 விசா, அமெரிக்காவில் எந்த நிறுவனக் கிளையும் இல்லாத வெளிநாட்டு கம்பெனிகள், குறிப்பிட்டத் தேவைகளைப் பூர்த்தி செய்த பின், அமெரிக்காவில் ஒரு கிளையை அமைக்க பணியாளர் ஒருத்தரை அனுப்ப உரிமை அளிக்கிறது.
L-1 விசா இரண்டு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது:
இந்த விசா 7 வருட காலத்திற்கு செல்லுபடியாகும். அதன் காலாவதியைத் தொடர்ந்து, தனிநபர்கள் ஒரு அமெரிக்க தாய், துணை கம்பெனி, கிளை அல்லது துணை கம்பெனி தொடர்பான கம்பெனியில் குறைந்தபட்சம் 1 வருடம் வெளிநாட்டில் பணிபுரிவதன் மூலம் L-1 அந்தஸ்தைப் பெறலாம்.
இந்த அனுமதி ஐந்து வருட காலத்திற்கு செல்லுபடியாகும். அதன் காலாவதியைத் தொடர்ந்து, அதை வைத்திருக்கும் நபர்கள் வெளிநாட்டில் அமைந்துள்ள ஒரு அமெரிக்க கம்பெனியின் கிளை, இணை, துணை அல்லது தாய் கம்பெனியில் ஒரு வருட அனுபவத்தைப் பெறுவதன் மூலம் L-1 நிலைக்குத் தகுதி பெறலாம்.
L-1 விசாவில் தகுதி பெறுவதற்கான எலிஜிபிளிட்டி கிரைட்டிரியாக்கள் பின்வருமாறு:
தொழில் வழங்குனர்களுக்கு
ஊழியர்களுக்கு
பிசினஸ் உரிமையாளர்களுக்கு
முதன்மையாக, L-1 விசாவிற்கு விண்ணப்பிக்க பின்வரும் இரண்டு ப்ராசஸ்கள் உள்ளன:
இந்த ப்ராசஸில் சாத்தியமான நபரின் சார்பாக தொழில் வழங்குநர்கள் L-1 விசாவிற்கு விண்ணப்பிக்கிறார்கள். அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகளில் (யூ.எஸ்.சி.ஐ.எஸ்) ஒரு மனுவைத் தாக்கல் செய்வதன் மூலம் அவர்கள் தொடங்கலாம், பின்னர் அது மேலும் தொடர அப்ளிக்கேஷனை மதிப்பாய்வு செய்து அங்கீகரிக்கிறது.
இந்த நடைமுறையில், யூ.எஸ்.சி.ஐ.எஸ் ஏற்கனவே ஒரு கம்பெனியின் தகுதியை மதிப்பிடுகிறது. எனவே, விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பிளான்க்கெட் மனுவின் புகைப்பட நகலை துணை ஆவணங்களுடன் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.
L-1 விசாவிற்கு விண்ணப்பிக்கும் போது பின்வரும் ஆவணங்களை சமர்ப்பிக்கவும்:
அமெரிக்காவில் உள்ள கம்பெனியிடமிருந்து தரப்பட வேண்டிய ஆவணங்கள்
வெளிநாட்டுக் கம்பெனிகளிடமிருந்து தரப்பட வேண்டிய ஆவணங்கள்
டிரான்ஸ்பர் செய்யப்படுபவரிடமிருந்து தரப்பப்பட ஆவணங்கள்
ஃபீ ஒவ்வொரு நாட்டிற்கும் வேறுபடலாம். இருப்பினும், L-1 விசாவிற்கு பின்வரும் செலவுகளை தனிநபர்கள் எதிர்பார்க்கலாம்:
L-1 விசா வைத்திருப்பவர் 7 ஆண்டுகள் அமெரிக்காவில் இருக்க முடியும். இருப்பினும், இந்த நாட்டிற்குள் குடியேறும் ஆரம்ப கட்டத்தில், வைத்திருப்பவர்கள் 1 முதல் 3 ஆண்டுகள் வரை தங்கலாம்.
விண்ணப்பதாரர்களுக்கான முதல் படி, அவர்களின் L-1 விசா அப்ளிக்கேஷன் ரிக்வெஸ்ட் நிராகரிக்கப்பட்டது என்பதை அறிந்த பிறகு நிராகரிப்புக்கான காரணங்களை பகுப்பாய்வு செய்ய வேண்டும். பின்னர், அவர்கள் இந்த முடிவை சவால் செய்ய விரும்பினால், அவர்கள் நிர்வாக மேல்முறையீட்டு அலுவலகத்தில் (அட்மினிஸ்ட்ரேடிவ் அப்பீல்ஸ் ஆஃபிஸ்) அல்லது அமெரிக்க மாவட்ட நீதிமன்றம் மூலம் மேல்முறையீடு செய்யலாம். மாற்றாக, விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட தேவைகளை பூர்த்தி செய்வதற்கு எதிராக H-1B போன்ற பிற பொருத்தமான விசாக்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
L-1 விசா பற்றிய பாயிண்ட்டர்களை மனதில் கொள்ளுங்கள், மேலே குறிப்பிட்டுள்ளபடி, அதற்கு விண்ணப்பிக்கும் போது ஏற்பட சாத்தியமுள்ள சிரமத்தையும் தவிர்க்கவும்.