இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கான இ-விசா நாடுகள்
வணிக நோக்கம், மகிழ்ச்சிகரமான சுற்றுலா, கல்விச் சுற்றுலா போன்றவற்றிற்காக ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் நாட்டு எல்லைகளைத் தாண்டி பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்கின்றனர். ஒரு குறிப்பிட்ட நாட்டிற்குள் நுழைவதற்கு முன், நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டிய அத்தியாவசிய ஆவணங்களில் ஒன்று உங்கள் விசா ஆகும். விசா பெறுவது ஒரு நீண்ட நேரம் எடுக்கும் மற்றும் சோர்வை ஏற்படுத்தக் கூடிய ஒரு செயலாகும். இருப்பினும், இ-விசாவின் அறிமுகத்துடன், நீங்கள் இப்போது அதை விரைவாகவும் சுமுகமாகவும் செய்யலாம்!
இணையவழி விசா (இ-விசா) என்றால் என்ன?
எலக்ட்ரானிக் விசா அல்லது இ-விசா என்பது டிஜிட்டல் முறையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விசா ஆவணமாகும். இது பயணிகள் வேறொரு நாட்டிற்கு செல்லும் போது அந்நாட்டு குடியேற்றத் துறை அதிகாரிகளிடம் அந்த ஆவணத்தை சமர்ப்பித்த பிறகு அவர்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்க உதவும் ஓர் ஆவணம் எனலாம். இ-விசா மூலம், பயணிகள் ஆன்லைனில் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்யலாம். ஆதரவு ஆவணங்களைப் பதிவேற்றலாம் மற்றும் செல்லும் நாட்டின் அதிகாரப்பூர்வ அரசாங்க இணையதளம் மூலம் விசா கட்டணத்தையும் செலுத்தலாம்.
ஹென்லி மற்றும் பார்ட்னர்களின் பாஸ்போர்ட் இன்டெக்ஸ்-இன் படி, 2023 மார்ச் வரை, இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் பட்டியலில் உள்ள இந்த நாடுகளுக்குச் செல்ல இ-விசாவிற்கு விண்ணப்பிக்கலாம். தற்போது, பயணம் செய்வதற்கான சுதந்திரத்தின் அடிப்படையில் 84வது இடத்தில், இந்திய பாஸ்போர்ட் உள்ளது.
2023 மார்ச் மாத நிலவரப்படி இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு இ-விசா வழங்கும் நாடுகளின் பட்டியலைப் பார்க்க மேலும் படிக்கவும்.
இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு இ-விசா வசதியை வழங்கும் நாடுகளின் பட்டியல்
1. அங்கோலா | 14. மலேசியா |
2. ஆன்டிகுவா மற்றும் பார்புடா | 15. மால்டோவா |
3. ஆஸ்திரேலியா | 16. மொராக்கோ |
4. அஜர்பைஜான் | 17. ரஷ்யா |
5. பஹ்ரைன் | 18. சாவோ டோம் மற்றும் பிரின்சிப் |
6. பெனின் | 19. சிங்கப்பூர் |
7. கொலம்பியா | 20. சுரினாம் |
8. ஜிபூட்டி | 21. தைவான் |
9. ஜார்ஜியா | 22. தஜிகிஸ்தான் |
10. கென்யா | 23. துருக்கி |
11. குவைத் | 24. உஸ்பெகிஸ்தான் |
12. கிர்கிஸ்தான் | 25. வியட்நாம் |
13. லெசோதோ | 26. ஜாம்பியா |
இந்திய குடிமக்களுக்கு 2023-இல் விசா-ஆன்-அரைவல் வழங்கும் நாடுகளின் பட்டியல்
பல நாடுகள் அந்த நாட்டிற்குள் நுழையும் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு விசா-ஆன்-அரைவல் (Visa-on-arrival) மற்றும் இ-விசா (e-visa) வசதிகளை வழங்குகின்றன. வழக்கமாக, சம்பந்தப்பட்ட நாட்டிற்குள் பயணி நுழைந்ததும், அந்நாட்டு குடிவரவு அதிகாரிகள் பயணியின் பாஸ்போர்ட், அவர்களின் பயோமெட்ரிக் ஆகியவற்றை ஆய்வு செய்து, நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை வசூலித்துவிட்டு விசா அனுமதியை வழங்குவார்கள். சம்பந்தப்பட்ட நாட்டில் முக்கிய இடங்களில் ஆன்-அரைவல் விசா வழங்கப்படுகிறது.
கீழே உள்ள பட்டியலில், இந்திய குடிமக்களுக்கு 2023 இல் விசா-ஆன்-அரைவல் வழங்கும் நாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன:
27. பொலிவியா | 44. மொசாம்பிக் |
28. போட்ஸ்வானா | 45. மியான்மர் |
29. புருண்டி | 46. பலாவ் தீவுகள் |
30. கம்போடியா | 47. ருவாண்டா |
31. கேப் வெர்டே தீவுகள் | 48. சமோவா |
32. கொமோரோ தீவுகள் | 49. சீஷெல்ஸ் |
33. எத்தியோப்பியா | 50. சியரா லியோன் |
34. காபோன் | 51. சோமாலியா |
35. கினியா-பிசாவ் | 52. ஸ்ரீ லங்கா |
36. இந்தோனேசியா | 53. செயின்ட் லூசியா |
37. ஈரான் | 54. தான்சானியா |
38. ஜோர்டான் | 55. தாய்லாந்து |
39. லாவோஸ் | 56. டிமோர்-லெஸ்டே |
40. மடகாஸ்கர் | 57. டோகோ |
41. மாலத்தீவுகள் | 58. டுவாலு |
42. மார்ஷல் தீவுகள் | 59. உகாண்டா |
43. மொரிட்டேனியா | 60. ஜிம்பாப்வே |
இந்திய குடிமக்களுக்கு 2023-இல் விசா தேவைப்படாத நாடுகளின் பட்டியல்
விசா தேவையில்லாமல் பயணிகளை அனுமதிக்க பரஸ்பரமாக ஒப்புக்கொண்ட நாடுகளே விசா தேவைப்படாத நாடுகள் ஆகும். விசா விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டிய பிரச்சனை இல்லாமல் ஒருவர் இந்த நாடுகளுக்குள் நுழைவதற்கு அடையாளச் சான்றை வழங்கினால் போதுமானது.
இந்தியர்கள் விசா இல்லாமல் பயணம் செய்யக்கூடிய நாடுகளின் பட்டியல் இதோ:
61. அல்பேனியா | 74. மொரிஷியஸ் |
62. பார்படாஸ் | 75. மைக்ரோனேசியா |
63. பூட்டான் | 76. மாண்ட்செராட் |
64. பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள் | 77. நேபாளம் |
65. குக் தீவுகள் | 78. நியு |
66. டொமினிகா | 79. ஓமன் |
67. எல் சல்வடோர் | 80. கத்தார் |
68. ஃபிஜி | 81. செனகல் |
69. கிரெனடா | 82. செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் |
70. ஹைட்டி | 83. செயின்ட் வின்சென்ட் அண்ட் கிரெனடைன்ஸ் |
71. ஜமைக்கா | 84. டிரினிடாட் அண்ட் டொபாகோ |
72. கஜகஸ்தான் | 85. துனிசியா |
73. மக்காவ் (SAR சீனா) | 86. வனுவாட்டு |
40. மடகாஸ்கர் | 57. டோகோ |
41. மாலத்தீவுகள் | 58. டுவாலு |
42. மார்ஷல் தீவுகள் | 59. உகாண்டா |
43. மொரிட்டேனியா | 60. ஜிம்பாப்வே |
இந்திய குடிமக்களுக்கான இ-விசா தேவைகள் என்னென்ன?
உங்கள் இந்திய பாஸ்போர்ட் அந்த குறிப்பிட்ட நாட்டில் இ-விசாவிற்கு தகுதி பெற்றிருந்தால் மட்டுமே நீங்கள் இ-விசாவிற்கு விண்ணப்பிக்க முடியும். சில நாடுகளில் கூடுதல் தகுதி அளவுகோல்கள் உள்ளன, எனவே அந்தந்த நாடுகளின் இணையதளங்களில் அவற்றைச் சரிபார்க்கவும்.
இ-விசா ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டிருப்பதால், சம்பந்தப்பட்ட நாடுகளின் எல்லைகளில் பயணிகளுக்கான செயலாக்க நேரத்தை விரைவுபடுத்த இ-விசா அமைப்பு உதவி உண்டு. தேவையான ஆவணங்கள் உள்ளதா என்பதைச் சரிபார்த்து, உங்கள் பாஸ்போர்ட்டை முத்திரையிட, உங்களுக்கு குடிவரவு அதிகாரி மட்டுமே தேவை.
நீங்கள் வழங்க வேண்டிய சில நிலையான ஆவணங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:
- டிஜிட்டல் புகைப்படம்
- வெளிநாட்டிற்கு வந்த நாளிலிருந்து குறைந்தது ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் பாஸ்போர்ட்.
- பயண ஏற்பாடுகள், தங்குமிடம், திரும்புவதற்கான டிக்கெட் போன்ற தனிப்பட்ட மற்றும் பயணத் தகவல்கள் போன்றவற்றை சரிபார்ப்பார்கள்.
- இ-விசா விண்ணப்பப் படிவம்
- ஆன்லைன் கட்டண ரசீது
நாட்டைப் பொறுத்து கூடுதல் தகவல் அல்லது ஆவணங்கள் தேவைப்படலாம். எனவே, இ-விசாவிற்கு விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அரசாங்க இணையதளங்களை முழுமையாக நீங்கள் பார்ப்பது அவசியம்.
சர்வதேச பயணங்களுக்கு நீங்கள் ஏன் டிராவல் இன்சூரன்ஸ் வாங்க வேண்டும்?
டிராவல் இன்சூரன்ஸ் அறிமுகமில்லாத பகுதிகளில் நிதிப் பாதுகாப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல், பரந்த அளவிலான பாதுகாப்புகளையும் வழங்குகிறது. பெரும்பாலான பயணிகள் டிராவல் இன்சூரன்ஸை வெளிநாடுகளுக்குச் செல்லும்போது வாங்குகிறார்கள். திருட்டு அல்லது பொருட்கள் தொலைபோதல் அல்லது பயண ஆவணங்கள் இழப்பு போன்ற எதிர்பாராத சூழ்நிலைகளில் நிதி ரீதியாக உங்களைப் பாதுகாத்துக் கொள்ள டிராவல் இன்சூரன்ஸ் உதவுகிறது. உங்களுக்கு வெளிநாட்டில் சிகிச்சை ஏதேனும் தேவைப்பட்டால் டிராவல் இன்சூரன்ஸ் விரிவான மருத்துவக் காப்பீட்டையும் வழங்குகிறது.
டிராவல் இன்சூரன்ஸில் நிறைய பலன்கள் இருக்கின்றன. அவற்றில் சில:
- மருத்துவ அவசரநிலைகளுக்கான பாதுகாப்பு - உங்கள் பயணத்தின் போது, உங்களுக்கு - அவசர மருத்துவ உதவி தேவைப்படும் சூழ்நிலைகள் இருக்கலாம்- அல்லது விபத்து அல்லது நோய் தொடர்பாக ஏதாவது உதவி தேவைப்படலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் உங்கள் மருத்துவமனை பில்கள் மற்றும் சிகிச்சைச் செலவுகளை டிராவல் இன்சூரன்ஸ் ஈடுசெய்யும்.
- பயண ரத்து அல்லது விமான தாமதங்கள் - விமான தாமதம், கனெக்டிங் விமானத்தை தவறவிடுதல் அல்லது பயணத்தை ரத்து செய்தல் ஆகியவையும் டிராவல் இன்சூரன்ஸின் கீழ் உங்களுக்கு பாதுகாப்பு கிடைக்கச் செய்யும்.
- தாமதம்/பொருட்கள் தொலைந்துபோதல் -உங்கள் விடுமுறையை மகிழ்ச்சியுடன் வெளிநாட்டில் தொடங்க நீங்கள் காத்திருக்க முடியாது. ஆனால் உங்கள் செக்-இன் பேக்கேஜ் வர தாமதமாகிவிட்டது என வைத்துக் கொள்வோம்! இந்த சூழ்நிலைகளின் போது, அதாவது உங்கள் பேக்கேஜ் வர தாமதம் அல்லது உங்கள் பொருட்கள் தொலைந்துபோதல் போன்ற சமயங்களில் உங்கள் டிராவல் இன்சூரன்ஸானது பண இழப்பீட்டை உங்களுக்கு வழங்க முடியும்.
- வாலெட்டை தொலைத்துவிட்டால் டிராவல் இன்சூரன்ஸில் பாதுகாப்பு -உங்கள் வாலெட் தொலைந்துபோதல் அல்லது திருடு போதல் போன்றவை உங்கள் வெளிநாட்டுப் பயணங்களின் போது எழும் மிக முக்கியமான பிரச்சனைகள் ஆகும். உங்கள் டிராவல் இன்சூரன்ஸானது, அத்தகைய சூழ்நிலைகளில் நீங்கள் சிக்கித் தவிப்பதைத் தவிர்க்க உங்களுக்கு அவசர நிதியை வழங்குகிறது.
- நீட்டிக்கப்பட்ட அல்லது கைவிடப்பட்ட பயணத்திற்கான பாதுகாப்பு - வேலைநிறுத்தங்கள், கலவரங்கள், இயற்கை பேரழிவுகள் மற்றும் பிற ஆபத்தான நிகழ்வுகள் வெளிநாடுகளில் ஏற்பட்டால், உங்கள் பயணத்தின் காலம் தடைபடலாம். இதுபோன்ற சூழ்நிலைகள் மின்னல் போல் தாக்குவதால், நீங்கள் தங்குவதை கைவிட அல்லது அங்கே தங்கும் காலத்தை நீட்டிக்க நேரிடும். அந்த சமயங்களில் செலவுகளைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால் உங்களுடைய டிராவல் இன்சூரன்ஸ் ரத்து செய்யப்பட்ட அல்லது நீட்டிக்கப்பட்ட பயணத்தையும் உள்ளடக்கியது ஆகும்.
- பவுன்ஸ் ஆன முன்பதிவுகள்-நீங்கள் எப்போதாவது உங்கள் தங்குமிடம் மற்றும் நிகழ்வு முன்பதிவுகளை இறுதி செய்து, ஹோட்டலில் அதிக முன்பதிவு செய்யப்பட்டுள்ளதையும், உங்கள் முன்பதிவு பவுன்ஸ் ஆனதையும் அறிந்துகொண்டு கவலையில் இருந்திருக்கிறீர்களா? இத்தகைய விரக்தியான சூழ்நிலைகளில் பவுன்ஸ் ஆன முன்பதிவு, டிராவல் இன்சூரன்ஸ் உடன் உங்கள் பணத்தை மிச்சமாகும்!
எனவே, உங்கள் பயணத்தை பாதுகாப்பானதாக மாற்றவும், நிதி பாதுகாப்பை உறுதி செய்யவும் விரும்பினால், இன்டர்நேஷனல் டிராவல் இன்சூரன்ஸ் திட்டத்தை ஆரம்பத்திலேயே வாங்குவது சிறந்தது! சந்தையில் பல டிராவல் இன்சூரன்ஸ் திட்டங்கள் உள்ளன. எனவே நீங்கள் பணம் செலுத்துவதற்கு முன், நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். டிராவல் இன்சூரன்ஸ் திட்டங்களை ஒப்பீடு செய்வது தான் அது. மலிவு விலையில் சிறந்த பலன்களைப் பெற இதை செய்யுங்கள்.
இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கான இ-விசா நாடுகளைப் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
இந்தியர்கள் இ-விசாவிற்கு விண்ணப்பிக்கலாமா?
ஆம், இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் இ-விசாவுக்கான நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள நாடுகளுக்கு இ-விசா கோரி விண்ணப்பிக்கலாம். ஆஸ்திரேலியா, கொலம்பியா, ஜார்ஜியா, குவைத், மொராக்கோ, மலேசியா, ரஷ்யா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் இந்தியர்களுக்கு இ-விசா வசதிகளை வழங்குகின்றன.
இந்தியர்களுக்கான இ-விசா வசதிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?
உங்கள் இ-விசா விண்ணப்ப செயல்முறையைத் தொடங்க அதிகாரப்பூர்வ சம்பந்தப்பட்ட நாட்டு அரசாங்க இணையதளத்தைப் பார்வையிடவும். நீங்கள் தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, விசா கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். படிப்படியான செயல்முறை முடிந்ததும், நீங்கள் வழங்கிய மின்னஞ்சலின் மூலம் உங்கள் விண்ணப்பம் மற்றும் உங்களின் இ-விசா ஆவணத்தின் உறுதிப்படுத்தலைப் பெறுவீர்கள்.
எத்தனை நாடுகள் இந்தியர்களுக்கு இ-விசாவை வழங்குகின்றன?
ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டின் படி, 2023 மார்ச் மாத நிலவரப்படி 26 நாடுகள் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு இ-விசா வழங்கும் நாடுகளாக உள்ளன.
இந்தியர்களுக்கான இ-விசாவின் செல்லுபடியாகும் காலம் என்ன?
இ-விசாவின் செல்லுபடியாகும் காலம் நாட்டுக்கு நாடு வேறுபடும். நீங்கள் ஒரு நாட்டில் 15-30 நாட்கள் வரை தங்கலாம் மற்றும் உங்கள் தங்கியிருக்கும் காலத்தையும் தேவைப்பட்டால் நீட்டித்துக் கொள்ளலாம்.
வருகையின் போது ஆன்-அரைவல் விசா வழங்கும் நாடுகளும் இந்தியர்களுக்கு இ-விசாவை வழங்குகின்றனவா?
ஆம், பல நாடுகள் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு விசா-ஆன்-அரைவல் மற்றும் இ-விசா வசதிகளை வழங்குகின்றன. எடுத்துக்காட்டாக, மலேசியா, எத்தியோப்பியா, உகாண்டா, கேப் வெர்டே, தாய்லாந்து போன்றவை இந்தியர்களுக்கு விசா-ஆன்-அரைவல் மற்றும் இ-விசா ஆப்ஷன்களை வழங்குகின்றன. நீங்கள் செல்ல நினைக்கும் நாட்டிற்கான விசா ஆப்ஷன்களைப் பற்றி மேலும் புரிந்து கொள்ள அந்நாடுகளின் அதிகாரப்பூர்வ அரசாங்க வலைத்தளங்களை நீங்கள் பார்க்கலாம்.