இந்தியர்களுக்கு வருகைக்கான விசா வழங்கும் நாடுகள்
பெரும்பாலான இந்தியர்கள் விசா விண்ணப்பிப்பதில் உள்ள ஏராளமான செயல்முறை காரணமாகவே வெளிநாடு செல்வதை தவிர்த்து விடுக்கின்றனர். எனினும், வருகைக்கான விசா அல்லது இ- விசாவை எளிய செயல்முறை மூலம் வழங்கும் பல நாடுகள் உள்ளன. இதன் மூலமாக நீங்கள் வெளிநாட்டிற்கு சென்ற பிறகு தேவையான ஆவண சமர்ப்பிப்புகளை செய்து கொள்ளலாம். மார்ச் 2023-ன் படி, கிட்டத்தட்ட 60 நாடுகள் வருகைக்கான விசா மற்றும் விசா இல்லாமலே பயணிக்கும் வாய்ப்பினை அளிக்கின்றன என்று ஹென்லே பாஸ்போர்ட் இன்டெக்ஸ் கூறுகிறது.
இதற்கு நீங்கள் ஒரு சில ஆவணங்களை சமர்ப்பித்து, தேவையான கட்டணத்தை செலுத்தினாலே போதும். உங்கள் அன்பிற்குரியவர்களை வெளிநாடுகளில் எளிதாக சந்திக்கலாம்.
2023-ல் இந்தியர்களுக்கு வருகைக்கான விசா வழங்கும் நாடுகள்
இந்திய குடிமக்களுக்கு வருகைக்கான விசா வழங்கும் நாடுகள் பின்வருமாறு:
1. மாலத்தீவுகள்
கடலுக்கு அடியில் உள்ள அற்புதங்களை கண்டுகளிக்க விரும்புவோருக்கு மாலத்தீவுகள் ஒரு சிறந்த இடம். ஓய்வெடுப்பதற்கு கடற்கரைகள், ஜாலியாக விளையாட வாட்டர் கேம்கள் மற்றும் காணக்கிடைக்காத சூரிய அஸ்தமனங்கள் போன்றவை இந்த இடத்தை ஒரு சொர்கமாகவே மாற்றுகிறது.
2. இலங்கை
இந்தியப் பெருங்கடலின் முத்து என்றழைக்கப்படும் இலங்கையில் ஆளை மயக்கும் கடற்கரைகள், நாவூறும் உணவுகள் மற்றும் பண்பாட்டுப் பாரம்பரியத்தை குடும்பம் மற்றும் நண்பர்களுடன் ஒருவர் கண்டு ரசிக்கலாம்.
3. தாய்லாந்து
ஆண்டு முழுவதும் உள்ள அற்புதமான வானிலை, இயற்கை அழகு, கோவில்கள், அரண்மனைகள் மற்றும் கடற்கரைகள் காரணமாக இந்தியப் பயணிகள் பலருக்கு இது விருப்பமான நாடாக அமைகிறது.
4. இந்தோனேசியா
கண்ணைக்கவரக்கூடிய இடங்கள் மற்றும் புத்துணர்ச்சியூட்டும் செயல்பாடுகள் போன்றவற்றிக்கு பெயர் போனது இந்தோனேசியா. இங்கு நீங்கள் கண்டுகளிக்க வேண்டிய பல விஷயங்கள் உள்ளன. மேலும் ஜகார்த்தா, கொமோடோ, பாலி மற்றும் பெனிடா போன்ற நீங்க காண வேண்டிய நகரங்கள் ஏரளமாக உள்ளது.
5. ஈரான்
கலை, இலக்கியம், கவிதை, சமையல் பாணிகள் மற்றும் கட்டிடக்கலை ஆகியவற்றின் சிறந்த பண்பாட்டு வரலாறு, கண்ணைக்கவரக்கூடிய இடங்கள் மற்றும் புத்துணர்ச்சியூட்டும் செயல்பாடுகள் போன்றவற்றை ஈரான் வழங்குகிறது. இங்கு நீங்கள் கண்டுகளிக்க வேண்டிய பல விஷயங்கள் உள்ளன. மேலும் ஜகார்த்தா, கொமோடோ, பாலி மற்றும் பெனிடா போன்ற நீங்க காண வேண்டிய நகரங்கள் ஏரளமாக உள்ளது.
6. ஜோர்டான்
செங்கடல் மற்றும் சாக்கடலுக்கு அருகே உள்ள ஜோர்டான் இந்தியர்களுக்கு வருகைக்கான விசா வழங்கும் மற்றொரு நாடாகும். ஜோர்டானின் இயற்கை அற்புதங்கள் உங்களை மெய் சிலிர்க்க வைப்பதோடு, இந்நாட்டின் வரலாறு பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய ஆர்வத்தையும் தூண்டும்.
7. மியான்மர்
தென் ஆசியாவின் மேற்கு பகுதியில் உள்ள ஒரு சிறிய நாடு தான் மியான்மர். இந்நாடு கோவில்களுக்கும், பல்வேறு கலாச்சாரங்களுக்கும் பெயர் போனது. வெயிலை சமாளிப்பதற்கேற்ப இங்குள்ள குடியேற்ற கட்டிடக்கலை பல சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கக்கூடிய ஒன்றாகும்.
மியான்மர் செல்வதற்கு உகந்த நேரம் - ஆக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலான மாதங்களில் மியான்மர் செல்வது சிறந்தது. இந்த நேரத்தில் வெப்பநிலை குளுமையாகவும், மழை பொழிவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக இருப்பதால் நாட்டை சுற்றிப்பார்க்க இந்நேரம் சரியாக இருக்கும்.
இந்தியர்களுக்கான மியான்மர் விசா
விசாவின் வகை - வருகைக்கான விசா
கால அளவு - 30 நாட்கள் வரை செல்லுபடியாகவும்.
கட்டணம் - $50
8. கம்போடியா
கம்போடியா சிறிய நாடாக இருந்தாலும் இங்கு பார்வையிட வேண்டிய பல இடங்கள் உள்ளன. அதன் சிறப்புத்தன்மை வாய்ந்த வரலாறு, மரபுவலம் முதல் இயற்கை அழகு வரை இந்நாடு உலகெங்கும் உள்ள பல சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கிறது.
கம்போடியா செல்வதற்கு உகந்த நேரம் - நவம்பர் முதல் ஏப்ரல் வரை கம்போடியாவில் குறைந்தபட்ச மழை காணப்படுகிறது. ஆகையால், இடங்களை சுற்றிப்பார்க்க இந்த மாதங்கள் சிறந்தது.
இந்தியர்களுக்கான கம்போடியா விசா
விசாவின் வகை - வருகைக்கான விசா
கால அளவு - 30 நாட்கள் வரை செல்லுபடியாகவும்.
கட்டணம் – $30
டிராவல் இன்சூரன்ஸுக்கான செலவு - பெரியவர்களுக்கான டிஜிட்-ன் கம்போடியா செல்வதற்கான டிராவல் இன்சூரன்ஸ் பிளான் ஆனது $50,000 கவரேஜுடன் 225 ரூபாய் முதல் தொடங்குகிறது.
9. மடகாஸ்கர்
ஆர்வமூட்டும் தாவரவகைகளும் விலங்கினங்களும் நிறைந்த மடகாஸ்கர் சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்க வேண்டிய வெப்பமண்டல சொர்க்கம் என்று தான் கூற வேண்டும். உலகின் நான்காவது பெரிய தீவான மடகாஸ்கர், உங்கள் விடுமுறையைக் கொண்டாட ஏற்ற இயற்கையாய் அமைந்த அழகான நிலத்தோற்றம் ஆகும்.
மடகாஸ்கர் செல்வதற்கு உகந்த நேரம் – வறண்ட, குளுமையான காலநிலை கொண்ட ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான மாதங்களில் மடகாஸ்கர் செல்வது சிறந்தது. இந்த நேரத்தில் வெப்பநிலை மிதமான குளுமையுடன் இருக்கும், அதோடு விலங்குகளும் (குறிப்பாக லெமூர்கள்) விழிப்புடன் இருக்கும் சமயம்.
இந்தியர்களுக்கான மடகாஸ்கர் விசா
விசாவின் வகை - வருகைக்கான விசா
கால அளவு - 30 நாட்கள் வரை செல்லுபடியாகவும்.
கட்டணம் - எம்ஜிஏ (MGA) 115,000 ($37)
டிராவல் இன்சூரன்ஸுக்கான செலவு - பெரியவர்களுக்கான டிஜிட்-ன் மடகாஸ்கர் செல்வதற்கான டிராவல் இன்சூரன்ஸ் பிளான் ஆனது $50,000 கவரேஜுடன் 225 ரூபாய் முதல் தொடங்குகிறது.
10. சீசெல்சு
115 பவளம் மற்றும் கிரானைட் தீவுகளைக் கொண்ட சீசெல்சு பயணிகளுக்கான ஒரு சொர்க்கம். கண்கவரும் கடற்கரைகள் தவிர, பல வண்ணங்களுடனான இயற்கையாய் அமைந்த அழகான நிலத்தோற்றம் மற்றும் கண்ணுக்கு விருந்தளிக்கும் தீவுகளின் திரளைக் கொண்டுள்ளது. மேலும் இந்நாடு பல அரிதான உயிரினங்களின் வீடாக அமைகிறது.
சீசெல்சு செல்வதற்கு உகந்த நேரம்: ஏப்ரல் முதல் அக்டோபர் வரை- இந்த மாதங்கள் சீசெல்சு நாட்டில் குளுமையாகவும், வறண்ட வானிலை கொண்டதாகவும் இருப்பதால், இது சுற்றுலா பயணிகள் செல்ல ஏற்றது.
இந்தியர்களுக்கான சீசெல்சு விசா
விசாவின் வகை - வருகைக்கான விசா
கால அளவு - 30 நாட்கள் வரை செல்லுபடியாகவும்.
கட்டணம் – இலவசம்
டிராவல் இன்சூரன்ஸுக்கான செலவு - பெரியவர்களுக்கான டிஜிட்-ன் சீசெல்சு டிராவல் இன்சூரன்ஸ் பிளான் ஆனது $50,000 கவரேஜுடன் 225 ரூபாய் முதல் தொடங்குகிறது.
11. எத்தியோப்பியா
புதிய மற்றும் தனித்துவமான விஷயங்களை நீங்கள் எத்தியோப்பியாவில் காணலாம். ஆப்ரிக்காவில் அமைந்துள்ள இந்த நாடு, ஆப்ரிக்கா கண்டத்தின் 10வது மிகப்பெரிய நாடாகும். உயர்-தர காபி, நம்பமுடியாத பாரம்பரிய கலாச்சாரம் மற்றும் கண்ணுக்கினிய நிலப்பரப்பு போன்றவற்றிக்கு இந்நாடு பெயர் போனது.
எத்தியோப்பியா செல்வதற்கு உகந்த நேரம்- வறண்ட காலநிலை இருக்கும் செப்டம்பர் முதல் மார்ச் வரையிலான மாதங்களில் எத்தியோப்பியா செல்வதற்கு உகந்த நேரம். இந்த மாதங்களில் குறைந்தபட்ச மழைப்பொழிவுடன் மிதமான வெப்பநிலை இருப்பது டிரெக்கிங் மற்றும் விலங்கினங்கள் காண சிறந்த நேரம்,
இந்தியர்களுக்கான எத்தியோப்பியா விசா
விசாவின் வகை - வருகைக்கான விசா/இ-விசா
கால அளவு - 30 நாட்கள் வரை செல்லுபடியாகவும்.
கட்டணம் - $82
டிராவல் இன்சூரன்ஸுக்கான செலவு - பெரியவர்களுக்கான டிஜிட்-ன் எத்தியோப்பியாவிற்கான டிராவல் இன்சூரன்ஸ் பிளான் ஆனது $50,000 கவரேஜுடன் 225 ரூபாய் முதல் தொடங்குகிறது.
12. தான்சானியா
நீங்கள் தான்சானியா என்ற நாட்டைப் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்கள் என்றால், நிச்சயமாக நீங்கள் கிழக்கு ஆப்ரிக்க கண்டத்தில் இருக்கும் கிளிமஞ்சாரோ மலை பற்றியும் கேள்விப்பட்டு இருக்க வேண்டும். இயற்கை அழகு, கண்கவர் கடற்கரைகள், விலங்கினங்கள், தொல்லியல் தளங்கள் மற்றும் பாரம்பரிய நகரங்களுக்கு பெயர் போன தான்சானியாவை நிச்சயமாக நீங்கள் பார்க்க வேண்டும்!
தான்சானியா செல்வதற்கு உகந்த நேரம் - தான்சானியா செல்ல ஜூன் முதல் அக்டோபர் வரையிலான மாதங்கள் ஏற்றது. இந்நேரம் வறண்ட வானிலையாக இருப்பதால், தெளிவான வானம் மற்றும் ஆறுகளைக் கண்டுகளிக்கலாம்.
இந்தியர்களுக்கான தான்சானியா விசா
விசாவின் வகை - வருகைக்கான விசா
கால அளவு - 90 நாட்கள் வரை செல்லுபடியாகவும்.
கட்டணம் - $50
டிராவல் இன்சூரன்ஸுக்கான செலவு - பெரியவர்களுக்கான டிஜிட்-ன் தான்சானியாவிற்கான டிராவல் இன்சூரன்ஸ் பிளான் ஆனது $50,000 கவரேஜுடன் 225 ரூபாய் முதல் தொடங்குகிறது.
13. ஜிம்பாப்வே
ஆளை மயக்கக்கூடிய கலாச்சாரம், அழகான நிலப்பரப்பு, பாரம்பரிய வரலாறு மற்றும் கட்டிடக்கலை போன்றவை காரணமாக உலகமெங்கும் உள்ள பல சுற்றுலா பயணிகளை ஆண்டு முழுவதும் ஜிம்பாப்வே கவர்கிறது.
ஜிம்பாப்வே செல்வதற்கு உகந்த நேரம் - மே முதல் அக்டோபர் வரையிலான மாதங்களில் ஜிம்பாப்வே செல்வது சிறந்தது. இந்த சமயத்தில் உள்ள வறண்ட வானிலை அங்குள்ள நிலப்பரப்பு மற்றும் விலங்குகளைக் காண சிறந்த நேரம்.
இந்தியர்களுக்கான ஜிம்பாப்வே விசா
விசாவின் வகை - வருகைக்கான விசா
கால அளவு - 30 நாட்கள் வரை செல்லுபடியாகவும்.
கட்டணம் - $30
டிராவல் இன்சூரன்ஸுக்கான செலவு - பெரியவர்களுக்கான டிஜிட்-ன் ஜிம்பாப்வேவிற்கான டிராவல் இன்சூரன்ஸ் பிளான் ஆனது $50,000 கவரேஜுடன் 225 ரூபாய் முதல் தொடங்குகிறது.
14. உகாண்டா
ஆப்ரிக்காவின் பவளமான உகாண்டாவை அதன் சிறப்பியல் உயிரினங்கள் முதல் ஏரிகள், நீர்வீழ்ச்சிகள், மலைகள், மற்றும் கலாச்சார தளங்களுக்காகவே பார்வையிடலாம்.
உகாண்டா செல்வதற்கு உகந்த நேரம் - டிசம்பர் முதல் பிப்ரவரி வரை மற்றும் ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான மாதங்களில் நீங்கள் உகாண்டா செல்லலாம். இந்த மாதங்களில் வறண்ட வானிலை இருப்பதால், உங்கள் விருப்பம் போல் வெளியில் சென்று சுற்றிப் பார்க்கலாம்.
இந்தியர்களுக்கான உகாண்டா விசா
விசாவின் வகை - வருகைக்கான விசா/இ-விசா
கால அளவு - 30 நாட்கள் வரை செல்லுபடியாகவும்.
கட்டணம் - $50
15. லாவோஸ்
தென்-கிழக்கு ஆசியாவின் மறைமுகமான இதயமான லாவோஸில் கண்டுகளிக்க பல இடங்கள் உண்டு. அற்புதமான வரலாறு, கலாச்சாரங்கள், மற்றும் நிலப்பரப்பு, பண்பட்ட நிலை உட்பட பயணிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் பல விஷயங்கள் லாவோஸில் உள்ளது.
லாவோஸ் செல்வதற்கு உகந்த நேரம் - அக்டோபர் முதல் ஏப்ரல் வரையிலான வறண்ட மாதங்களில் லாவோஸ் செல்வது சிறந்தது.
இந்தியர்களுக்கான லாவோஸ் விசா
விசாவின் வகை - வருகைக்கான விசா
கால அளவு - 30 நாட்கள் வரை செல்லுபடியாகவும்.
கட்டணம் - $40
டிராவல் இன்சூரன்ஸுக்கான செலவு - பெரியவர்களுக்கான டிஜிட்-ன் லாவோஸ் செல்வதற்கான டிராவல் இன்சூரன்ஸ் பிளான் ஆனது $50,000 கவரேஜுடன் 225 ரூபாய் முதல் தொடங்குகிறது.
16. சோமாலியா
சிறிய, பசுமையான நாடான சோமாலியா ஆப்ரிக்கா கண்டத்தில் அமைந்துள்ளது. மலைகள், குன்றுகள் மற்றும் முற்றாப் பாலைநிலங்கள் அமைந்துள்ள இந்நாடு புலவர்களின் நாடு என்று அழைக்கப்படுகிறது.
சோமாலியா செல்வதற்கு உகந்த நேரம் - அக்டோபர் மாதத்தின் இடையில் இருந்து பிப்ரவரி வரையிலான மாதங்களில் நீங்கள் சோமாலியா செல்லலாம்.
இந்தியர்களுக்கான சோமாலியா விசா
விசாவின் வகை - வருகைக்கான விசா
கால அளவு - 30 நாட்கள் வரை.
கட்டணம்- $40
17. பொலிவியா
மத்திய தென்-அமெரிக்காவில் அமைந்துள்ள பொலிவியா பல சுற்றுலா பயணிகளைக் கவரக்கூடிய ஒரு நாடாகும். உலகின் ஆறு பாரம்பரியக் களங்கள் இந்த நாட்டில் உள்ளது. கூடுதலாக, இந்த நாட்டில் ஏராளமான மேட்டுநிலங்கள் மற்றும் தாழ்நிலங்கள் இருப்பதால் இது டிரெக்கிங் செல்ல ஏற்றது.
பொலிவியா செல்வதற்கு உகந்த நேரம் – ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான மாதங்களில் பொலிவியா செல்வது சிறந்தது. இந்த மாதங்களில் தெளிவான வானம் மற்றும் அமைதியான சூழல் இருப்பதால் எல்லா இடங்களையும் சந்தோஷமாக சுற்றிப் பார்க்கலாம்.
இந்தியர்களுக்கான பொலிவியா விசா
விசாவின் வகை - வருகைக்கான விசா
கால அளவு - 30 நாட்கள் வரை.
கட்டணம் – $60*
டிராவல் இன்சூரன்ஸுக்கான செலவு - பெரியவர்களுக்கான டிஜிட்-ன் பொலிவியாவிற்கான டிராவல் இன்சூரன்ஸ் பிளான் ஆனது $50,000 கவரேஜுடன் 225 ரூபாய் முதல் தொடங்குகிறது.
18. போட்ஸ்வானா
ஆப்ரிக்க நாடான போட்ஸ்வானா உலகின் சிறந்த விலங்குகளைக் கொண்ட நாடாக அமைகிறது. இந்த நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று சுற்றிப் பார்ப்பது நீங்கள் ஏதோ வண்டர்லேண்டிற்கு செல்வது போன்ற அனுபவத்தை உங்களுக்கு அளிக்கும்,
போட்ஸ்வானா செல்வதற்கு உகந்த நேரம்– மே முதல் அக்டோபர் வரையிலான வறண்ட வானிலையில் போட்ஸ்வானா செல்வது சிறந்தது. இந்த மாதங்களில் வெளிச்சம் நிறைந்த பகலும், குளுமையான இரவுகளும் இருப்பதால், இதுவே போட்ஸ்வானா செல்வதற்கு உகந்த நேரம்.
இந்தியர்களுக்கான போட்ஸ்வானா விசா
விசாவின் வகை - வருகைக்கான விசா
கால அளவு - 30 நாட்கள்.
கட்டணம் – பிடபிள்யூபி (BWP) 300 ($30)
டிராவல் இன்சூரன்ஸுக்கான செலவு - பெரியவர்களுக்கான டிஜிட்-ன் போட்ஸ்வானாவிற்கான டிராவல் இன்சூரன்ஸ் பிளான் ஆனது $50,000 கவரேஜுடன் 225 ரூபாய் முதல் தொடங்குகிறது.
19. புருண்டி
மத்திய ஆப்ரிக்காவைச் சேர்ந்த புருண்டி அதன் தென்-மேற்கு பகுதியில் தங்கனிகா ஏரியை எல்லையாக கொண்டுள்ளது. இந்த நாட்டினர் பிறரை உபசரிப்பதில் பெயர் போனவர்கள். அதே போல அங்கு விளையும் டீ மற்றும் காபியும் அற்புதமான சுவையில் இருக்கும். இந்த நாட்டின் மிகவும் பிரபலமான சரணாலயங்கள், மற்றும் தேசிய பூங்காக்களை நிச்சயமாக ஒருவர் பார்வையிட வேண்டும்.
புருண்டி செல்வதற்கு உகந்த நேரம் – ஜனவரி, பிப்ரவரி மற்றும் மே முதல் அக்டோபர் வரையிலான மாதங்களில் புருண்டி செல்வது சிறந்தது. இந்த மாதங்களில் சீரான வெப்பநிலை இருப்பதால், பல்வேறு இடங்களை சுற்றிபார்ப்பது எளிதாக இருக்கும்.
இந்தியர்களுக்கான புருண்டி விசா
விசாவின் வகை - வருகைக்கான விசா
கால அளவு - 90 நாட்கள்.
கட்டணம் – $90
20. மொசாம்பிக்
மொசாம்பிக் என்பது இந்தியப் பெருங்கடலில் நீண்ட கடற்கரையைக் கொண்டுள்ள தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஒரு நாடாகும். இங்கு டோஃபோ மற்றும் கடல்சார் பூங்காக்களுக்கு பெயர் போனது.
மொசாம்பிக் செல்வதற்கு உகந்த நேரம்– ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான வறண்ட மாதங்களில் மொசாம்பிக் செல்வது சிறந்தது.
இந்தியர்களுக்கான மொசாம்பிக் விசா
விசாவின் வகை - வருகைக்கான விசா
கால அளவு - 90 நாட்கள்.
கட்டணம் – $50
டிராவல் இன்சூரன்ஸுக்கான செலவு - பெரியவர்களுக்கான டிஜிட்-ன் மொசாம்பிக் செல்வதற்கான டிராவல் இன்சூரன்ஸ் பிளான் ஆனது $50,000 கவரேஜுடன் 225 ரூபாய் முதல் தொடங்குகிறது.
21. ருவாண்டா
ஆயிரம் மலைகளின் நாடு என்றழைக்கப்படும் ருவாண்டா மூச்சடைக்க செய்யும் நிலப்பரப்பு மற்றும் வந்தோரை அன்புடன் வரவேற்கும் ஒரு நாடு. அதோடு இந்நாடு தனிச்சிறப்புடைய பல்லுயிர், நம்பமுடியாத விலங்கினங்கள், எரிமலைகள், மழைக்காடுகள் மற்றும் பரந்த சமவெளியைக் கொண்டுள்ளது.
ருவாண்டா செல்வதற்கு உகந்த நேரம் – மலை வாழ் கொரில்லாக்களைக் காண ஜூன் முதல் செப்டம்பர் வரை செல்வது சிறந்தது. அதுவே சிம்பன்ஸிகளைக் காண மார்ச் முதல் மே மற்றும் நவம்பர் வரையிலான மாதங்களில் செல்வது சிறந்தது.
இந்தியர்களுக்கான ருவாண்டா விசா
விசாவின் வகை - வருகைக்கான விசா
கால அளவு - 30 நாட்கள்.
கட்டணம்– $50
டிராவல் இன்சூரன்ஸுக்கான செலவு - பெரியவர்களுக்கான டிஜிட்-ன் ருவாண்டாவிற்கான டிராவல் இன்சூரன்ஸ் பிளான் ஆனது $50,000 கவரேஜுடன் 225 ரூபாய் முதல் தொடங்குகிறது.
22. மொரிட்டானியா
ஆப்ரிக்காவின் வட-கிழக்கு பகுதியில் அரசால் ஆளப்படும் ஒரு நாடு மொரிட்டானியா. இது பாலைவனம் மற்றும் பெருங்கடலுக்கு பெயர் போனது. அட்லாண்டிக் கடற்கரைக்கு அருகில், உலக மரபுவழி பட்டியலில் இடம் பெற்றுள்ள கேரவன் நகரங்களுடன் சஹாரா அட்ரார் பகுதி பார்ப்போரை கவரக்கூடிய ஒரு அழகான காட்சி. பார்க் நேஷனல் டு பாங்க் டி ஆர்குயின் கடற்கரையில் மில்லியன் கணக்கான பறவைகள் குளிர்காலத்தில் படையெடுத்து வருவதையும் நீங்கள் காணலாம்.
மொரிட்டானியா செல்வதற்கு உகந்த நேரம்– ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் நீங்கள் மொரிட்டானியா செல்வது சிறந்தது. இந்த மாதங்களில் அவ்வப்போது பொழியும் மழையுடன் வானிலை அருமையாக இருக்கும்.
இந்தியர்களுக்கான மொரிட்டானியா விசா
விசாவின் வகை - வருகைக்கான விசா
கால அளவு - 90 நாட்கள்.
கட்டணம் – €95 ($100*)
டிராவல் இன்சூரன்ஸுக்கான கட்டணம் - பெரியவர்களுக்கான டிஜிட்-ன் மொரிட்டானியாவிற்கான டிராவல் இன்சூரன்ஸ் பிளான் ஆனது $50,000 கவரேஜுடன் 225 ரூபாய் முதல் தொடங்குகிறது.
23. காபோன்
பல வகையான மிருகங்கள் வாழும் அடர்ந்த மழைக்காடுகளில் மற்றும் பரந்த புல்வெளி போன்றவை இயற்கை விரும்பிகளுக்கு விருந்தளிக்க காபோனில் காத்திருக்கிறது. வெள்ளை-மணல் நிறைந்த கடற்கரைகள், ஆறுகள், மற்றும் தலைசிறந்த நிலப்பரப்பு ஆகிய ஆப்ரிக்காவின் புதிதாய்ந்து காணப்படாத பல இடங்கள் காபோனில் உள்ளது.
காபோன் செல்வதற்கு உகந்த நேரம் – மே முதல் செப்டம்பர் வரையிலான வறண்ட மாதங்களில் நீங்கள் காபோன் செல்வது சிறந்தது.
இந்தியர்களுக்கான காபோன் விசா
விசாவின் வகை - வருகைக்கான விசா
கால அளவு - 90 நாட்கள்.
கட்டணம்– சிஎஃப்ஏ (CFA) 45,000 ($75*)
டிராவல் இன்சூரன்ஸுக்கான கட்டணம் - பெரியவர்களுக்கான டிஜிட்-ன் காபோன் டிராவல் இன்சூரன்ஸ் பிளான் ஆனது $50,000 கவரேஜுடன் 225 ரூபாய் முதல் தொடங்குகிறது.
24. சமோவா
தென் பசிபிக்கின் மத்தியில் உள்ள ஒரு சிறிய தீவு தான் சமோவா. இது தோராயமாக ஒன்பது தீவுகளின் குழுவாகும். அதில் நான்கு தீவுகளில் மட்டும் மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் இது நியூசிலாந்து மற்றும் ஹவாய்க்கு மத்தியில் காணப்படுகிறது. அங்குள்ள மக்கள் மற்றும் பார்ப்பவரை கவரக்கூடிய இயற்கை காட்சிகள் சமோவாவை நிச்சயமாக பூமியில் ஒரு சொர்க்கமாக காட்சியளிக்க செய்கிறது.
சமோவா செல்வதற்கு உகந்த நேரம் – ஜூன் முதல் செப்டம்பர் ஆகிய மாதங்களில் சமோவா செல்வது சிறந்தது. ஆண்டு முழுவதும் ஏராளமான சுற்றுலா பயணிகளை இந்த தீவு கவர்ந்து வருகிறது. எனினும் இந்த வறண்ட வானிலையின் போது செல்வது தீவை சுற்றி பார்க்க ஏற்றதாக அமையும்.
இந்தியர்களுக்கான சமோவா விசா
விசாவின் வகை - வருகைக்கான விசா/ விசிட்டர் பெர்மிட்
கால அளவு - 90 நாட்கள்.
டிராவல் இன்சூரன்ஸுக்கான கட்டணம் - பெரியவர்களுக்கான டிஜிட்-ன் சமோவாவிற்கான டிராவல் இன்சூரன்ஸ் பிளான் ஆனது $50,000 கவரேஜுடன் 225 ரூபாய் முதல் தொடங்குகிறது.
25. சியரா லியோன்
சியரா லியோன் என்பது மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள ஒரு நாடாகும். இங்குள்ள அற்புதமான வெளிப்புற சாகசங்கள், அமைதியான சூழல் போன்றவை பார்ப்பவரை வாய் அடைத்துப் போக செய்துவிடும். மேலும், அட்லான்டிக்கின் வழியாக நடந்த அடிமை வாணிபம் குறித்த வரலாறு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.
சியரா லியோன் செல்வதற்கு உகந்த நேரம்– சியாரா லியோனில் வறண்ட வானிலை நவம்பர் முதல் ஏப்ரல் வரை காணப்படுகிறது. இந்த மாதங்களில் சாலைவழிப் பயணம் சுமூகமாக இருப்பதாலும், கடற்கரைக்கு செல்லவும், அங்குள்ள உயிரினங்களைக் காணவும் இந்த காலநிலை ஏற்றது.
இந்தியர்களுக்கான சியரா லியோன் விசா
விசாவின் வகை - வருகைக்கான விசா
கால அளவு - 30 நாட்கள்.
கட்டணம் – $80
டிராவல் இன்சூரன்ஸுக்கான கட்டணம் - பெரியவர்களுக்கான டிஜிட்-ன் சியரா லியோனிற்கான டிராவல் இன்சூரன்ஸ் பிளான் ஆனது $50,000 கவரேஜுடன் 225 ரூபாய் முதல் தொடங்குகிறது.
26. டோகோ
கினியா வளைகுடாவில் அமைந்துள்ள மேற்கு ஆப்பிரிக்க நாடான டோகோ, அதன் மலைவாழ் மக்கள் மற்றும் பனைமரங்கள் நிறைந்த கடற்கரைகளுக்கு பெயர் போனது. கண்டுபிடிக்கப்படாத வழிகளில் பயணிப்பதை விரும்புபவர்களுக்கு இது ஒரு அற்புதமான இடம்.
டோகோ செல்வதற்கு உகந்த நேரம் – டோகோவிற்கு நவம்பர் முதல் ஏப்ரல் வரையிலான மாதங்களில் நீங்கள் செல்லலாம். இந்த வறண்ட மாதங்களில் வானிலை குளுமையாக இருப்பதோடு, குறைந்தபட்ச மழைப்பொழிவு காணப்படுகிறது.
இந்தியர்களுக்கான டோகோ விசா
விசாவின் வகை - வருகைக்கான விசா
கால அளவு - 90 நாட்கள்.
கட்டணம்– $25*
டிராவல் இன்சூரன்ஸுக்கான கட்டணம் - பெரியவர்களுக்கான டிஜிட்-ன் டோகோவிற்கான டிராவல் இன்சூரன்ஸ் பிளான் ஆனது $50,000 கவரேஜுடன் 225 ரூபாய் முதல் தொடங்குகிறது.
27. கிழக்கு டிமோர் (டிமோர்-லெஸ்டா)
கிழக்கு டிமோர், அல்லது டிமோர்-லெஸ்டே, தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு நாடு. இது டிமோர் தீவில் உள்ள பாதி இடத்தை சூழ்ந்துள்ளது. இங்கு பவளப் பாறைகள் மற்றும் கடல் வாழ் உயிரினங்கள் அதிகம் காணப்படுகிறது. பார்ப்பவரை பிரமிக்க வைக்கும் இந்த சுற்றுலாத் தளம் பயணிகளுக்கு ஒரு தனித்துவமான கலாச்சார அனுபவத்தை வழங்குகிறது.
டிமோர்-லெஸ்டா செல்வதற்கு உகந்த நேரம் – மே முதல் அக்டோபர் வரையிலான மாதங்களில் டிமோர்-லெஸ்டா செல்வது சிறந்தது. ஏனெனில், இந்த மாதங்களில் குறைந்தபட்ச மழைப்பொழிவு மற்றும் ஈரப்பதம் காணப்படுகிறது.
இந்தியர்களுக்கான டிமோர்-லெஸ்டா விசா
விசாவின் வகை - வருகைக்கான விசா
கால அளவு - 30 நாட்கள்.
கட்டணம்– $30
28. துவாலு
துவாலு என்பது பசிபிக் கடற்கரையில் அமைந்துள்ள ஒரு சிறிய தனித்த தீவு ஆகும். இது அன்றாட வேளைகளில் இருந்து விடுபட்டு ஓய்வெடுப்பதற்கான சிறந்த இடம். அதோடு கடல் சூழ்ந்த இயற்கையோடு ஒன்றிட விரும்புவோருக்கு ஏற்ற இடமாகவும் அமைகிறது.
துவாலு செல்வதற்கு உகந்த நேரம்– ஜூன் முதல் அக்டோபர் வரையிலான மாதங்களில் துவாலு செல்வது சிறந்தது. கடல் மற்றும் ஒட்டுமொத்த தீவை சுற்றிப்பார்க்க இந்த மாதங்கள் ஏற்றது.
இந்தியர்களுக்கான துவாலு விசா
விசாவின் வகை - வருகைக்கான விசா
கால அளவு - 30 நாட்கள்.
கட்டணம்– ஏயுடி (AUD) 100 ($67*)
டிராவல் இன்சூரன்ஸுக்கான கட்டணம் - பெரியவர்களுக்கான டிஜிட்-ன் துவாலுக்கான டிராவல் இன்சூரன்ஸ் பிளான் ஆனது $50,000 கவரேஜுடன் 225 ரூபாய் முதல் தொடங்குகிறது.
29. செயின்ட் லூசியா
செயின்ட் லூசியா என்பது கரீபியன் கடலில் உள்ள ஒரு தீவு ஆகும். சாகசமும் உத்வேகத்தையும் இத்தீவு வெளிப்படுத்துகிறது. அமைதியான கடல் அலைகள், சூடான கடற்கரைகள் மற்றும் வந்தோரை உபசரிக்கும் மக்களுடன் கூடிய செயின்ட் லூசியா எவரையும் கவர்ந்திழுக்கும் விதமாக அமைகிறது.
செயின்ட் லூசியா செல்வதற்கு உகந்த நேரம் – டிசம்பர் முதல் ஏப்ரல் வரையிலான மாதங்களில் செயின்ட் லூசியா செல்வது சிறந்தது. வசந்தகாலத்தின் இறுதி நாட்கள், ஆரம்ப கால கோடைகாலமான இந்த மாதங்கள் சுற்றுலா பயணிகளின் வருகைக்கு ஏற்றது.
இந்தியர்களுக்கான செயின்ட் லூசியா விசா
விசாவின் வகை - வருகைக்கான விசா
கால அளவு - 42 நாட்கள்.
கட்டணம் – இசி (EC) $125 ($46*)
டிராவல் இன்சூரன்ஸுக்கான கட்டணம் - பெரியவர்களுக்கான டிஜிட்-ன் செயின்ட் லூசியாவிற்கான டிராவல் இன்சூரன்ஸ் பிளான் ஆனது $50,000 கவரேஜுடன் 225 ரூபாய் முதல் தொடங்குகிறது.
30. மார்ஷல் தீவுகள்
மார்ஷல் தீவுகள் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது. இது உலகின் கண்டுபிடிக்கப்படாத கடைசி இடங்களில் ஒன்றாகும். அமைதியான கடற்கரைகள் மற்றும் படிகம் போன்ற தெளிவான நீர் கொண்ட கடல்களுடன் இயற்கை ததும்பும் அழகு நிறைந்தது மார்ஷல் தீவுகள்.
மார்ஷல் தீவுகள் செல்வதற்கு உகந்த நேரம்– ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான மாதங்களில் மார்ஷல் தீவுகள் செல்வது சிறந்தது. இந்த வறண்ட மாதங்களில் சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ற வானிலையாக அமைகிறது.
இந்தியர்களுக்கான மார்ஷல் தீவுகள் விசா
விசாவின் வகை - வருகைக்கான விசா
கால அளவு - 30 நாட்கள்.
கட்டணம் – $100
டிராவல் இன்சூரன்ஸுக்கான கட்டணம் - பெரியவர்களுக்கான டிஜிட்-ன் மார்ஷல் தீவுகளுக்கான டிராவல் இன்சூரன்ஸ் பிளான் ஆனது $50,000 கவரேஜுடன் 225 ரூபாய் முதல் தொடங்குகிறது.
31. கினியா பிசாவு
செனகலுக்கும் கினியாவுக்கும் இடையே அமைந்துள்ள இந்த முன்னாள் போர்த்துகீசியப் பகுதி, அதன் கலாச்சார வளங்கள், பல்லுயிர் மற்றும் வனவிலங்குகளுக்கு பெயர் போனது. உப்புநீரில் வாழக்கூடிய நீர்யானைகள் மற்றும் மத வழிபாடுகள் நடத்தப்படும் விசித்திரமான இடங்களைக் கொண்ட 80 தீவுகளின் குழுவான பிஜாகோஸ் தீவுக்குழுமம், கினியா-பிசாவிற்கு ஒரு கிரீடம் போல அமைகிறது.
கினியா பிசாவு செல்வதற்கு உகந்த நேரம் – நவம்பர் முதல் ஏப்ரல் வரையிலான மாதங்களில் கினியா-பிசாவுக்குச் செல்வதற்கு உகந்தது. ஏனெனில் இந்த மாதங்களில் வானிலையானது வெப்பமாகவும், ஈரப்பதமாகவும் காணப்படுகிறது.
இந்தியர்களுக்கான கினியா பிசாவு விசா
விசாவின் வகை - வருகைக்கான விசா
கால அளவு - 30 நாட்கள்.
கட்டணம் – ஜிஎன்எஃப் (GNF) 900,000 ($100)
டிராவல் இன்சூரன்ஸுக்கான கட்டணம் - பெரியவர்களுக்கான டிஜிட்-ன் கினியா-பிசாவுவிற்கான டிராவல் இன்சூரன்ஸ் பிளான் ஆனது $50,000 கவரேஜுடன் 225 ரூபாய் முதல் தொடங்குகிறது.
32. கேப் வெர்டே தீவுகள்
கபோ வெர்டே, அல்லது கேப் வெர்டே தீவுக்குழுமத்தை 1460 ஆம் ஆண்டில் போர்த்துகீசிய ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். போர்த்துகீசிய காலனித்துவம் இத்தீவுகளில் கடந்த ஐந்து நூற்றாண்டுகளாக பல அழிக்க முடியாத வரலாற்றை விட்டு சென்றாலும், ஆப்பிரிக்க மரபுகள் மற்றும் கிரியோலின் அடையாளம் அவர்களின் இலக்கிய மற்றும் இசைப் படைப்புகளில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கேப் வெர்டே தீவுகள் செல்வதற்கு உகந்த நேரம் – ஆண்டு முழுவதும் மிதமான வானிலை நிலவினாலும், நவம்பர் முதல் ஜூன் வரையிலான மாதங்கள் கேப் வெர்டே தீவுகளுக்கு செல்ல ஏற்றது.
இந்தியர்களுக்கான கேப் வெர்டே தீவுகள் விசா
விசாவின் வகை - வருகைக்கான விசா/ இ விசா
கால அளவு - 30 நாட்கள்/60 நாட்கள்.
கட்டணம்– €22.67 ($25*)
டிராவல் இன்சூரன்ஸுக்கான கட்டணம் - பெரியவர்களுக்கான டிஜிட்-ன் கேப் வெர்டே தீவுகளுக்கான டிராவல் இன்சூரன்ஸ் பிளான் ஆனது $50,000 கவரேஜுடன் 225 ரூபாய் முதல் தொடங்குகிறது
33. கொமோரோ தீவுகள்
மொசாம்பிக் மற்றும் மடகாஸ்கருக்கு மத்தியில் அமைந்துள்ள கொமொரோ தீவுகளில் பின்பற்றப்படும் கலாசாரங்கள், அதன் வசீகரிக்கும் இயற்கைக் காட்சிகள், கண்கவர் கடற்கரைகள் மற்றும் வனவிலங்குகள் போன்றவை இதனை ஒரு சொர்க்கமாக மாற்றுகிறது.
கொமோரோ தீவுகள் செல்வதற்கு உகந்த நேரம்– ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான மாதங்கள் கொமோரோ தீவுகள் செல்வதற்கு உகந்தது. இந்த நாட்டில் ஆண்டு முழுவதும் சீரான வானிலை நிலவி வந்தாலும், இந்த மாதங்களில் வானிலையானது வறண்டதாகவும், குளுமையாகவும் காணப்படுகிறது.
இந்தியர்களுக்கான கொமோரோ தீவுகள் விசா
விசாவின் வகை - வருகைக்கான விசா
கால அளவு- 45 நாட்கள் வரை
கட்டணம்– கேஎம்எஃப் (KMF) 15,000 ($32*)
டிராவல் இன்சூரன்ஸுக்கான கட்டணம் - பெரியவர்களுக்கான டிஜிட்-ன் கொமோரோ தீவுகளுக்கான டிராவல் இன்சூரன்ஸ் பிளான் ஆனது $50,000 கவரேஜுடன் 225 ரூபாய் முதல் தொடங்குகிறது.
34. பலாவு தீவுகள்
500 தீவுகளின் குழுவான பலாவு தீவுகள், மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள மைக்ரோனேசியாவின் ஒரு பகுதியாகும். ஸ்கூபா டைவிங் மற்றும் ஸ்நோர்கெலிங் போன்றவை உலகெங்கும் உள்ள சுற்றுலா பயணிகளைக் கவர்கிறது.
பலாவு செல்வதற்கு உகந்த நேரம் – ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான மாதங்கள் பலாவு செல்வதற்கு உகந்தது. ஆண்டின் இந்த மாதங்களில், வெப்பநிலை மிதமாக இருப்பதால் வெவ்வேறு இடங்களை சுற்றிப்பார்க்க ஏற்ற வானிலையாக அமைகிறது.
இந்தியர்களுக்கான பலாவு விசா
விசாவின் வகை - வருகைக்கான விசா
கால அளவு- 30 நாட்கள்
கட்டணம்- $50
டிராவல் இன்சூரன்ஸுக்கான கட்டணம் - பெரியவர்களுக்கான டிஜிட்-ன் பலாவுவிற்கான டிராவல் இன்சூரன்ஸ் பிளான் ஆனது $50,000 கவரேஜுடன் 225 ரூபாய் முதல் தொடங்குகிறது.
2023-ல் விசா இல்லாமல் இந்திய குடிமக்கள் செல்லக்கூடிய நாடுகளின் பட்டியல்
35. அல்பேனியா | 48. மொரிஷியஸ் |
36. பார்படாஸ் | 49. மைக்குரோனீசியா |
37. பூடான் | 50. மொன்செராட் |
38. பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் | 51. நேபாளம் |
39. குக் தீவுகள் | 52. நியுவே |
40. டொமினிக்கா | 53. ஓமன் |
41. எல் சல்வடார் | 54. கதார் |
42. பிஜி | 55. செனகல் |
43. கிரெனடா | 56. செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் |
44. ஹைட்டி | 57. செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரனடைன்ஸ் |
45. ஜமைகா | 58. டிரினிடாட் மற்றும் டொபாகோ |
46. கசகஸ்தான் | 59. துனிசியா |
47. மக்காவ்(எஸ்ஏஆர்/SAR சைனா) | 60. வனுவாட்டு |
2023 ஆம் ஆண்டில் இந்திய குடிமக்களுக்கு இ-விசா/என்ட்ரி பெர்மிட்டுகளை வழங்கும் நாடுகளின் பட்டியல்
பொதுவாக இ-விசா என்பது வழக்கமான ஆவணங்களின் அடிப்படையில் ஒரு நாட்டின் எம்பசியால் வழங்கப்படும் விசாவிற்கான மாற்றாகும். இது ஒரு நாட்டிற்குள் நுழைய அந்நாட்டு இமிக்ரேஷன் அதிகாரிகளால் ஆன்லைனில் வழங்கப்படுகிறது.
என்ட்ரி பெர்மிட் என்பது ஒரு குறிப்பிட்ட காலம் வெளிநாட்டவர்களை அந்நாட்டில் தங்க சட்ட ரீதியாக அனுமதிக்க விசாவிற்கு பதிலாக வழங்கப்படுகிறது.
இந்திய குடிமக்களுக்கு இ-விசா மற்றும் என்ட்ரி பெர்மிட்டுகளை வழங்கும் நாடுகளின் பட்டியல் பின்வருமாறு:
61. அங்கோலா | 74. மாலேசியா |
62. ஆன்டிகுவா மற்றும் பார்புடா | 75. மால்டோவா |
63. ஆஸ்திரேலியா | 76. மொராகோ |
64. அஸர்பய்ஜன் | 77. ரஷியா |
65. பஹ்ரைன் | 78. சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி |
66. பெனின் | 79. சிங்கப்பூர் |
67. கொலம்பியா | 80. சுரினாம் |
68. ஜிபூட்டி | 81. தாய்வான் |
69. ஜார்ஜியா | 82. தஜிகிஸ்தான் |
70. கென்யா | 83. துருக்கி |
71. குவைத் | 84. உஸ்பெகிஸ்தான் |
72. கிர்கிஸ்தான் | 85. வியட்னாம் |
73. லெசோத்தோ | 86. சாம்பியா |
குறிப்பு: விசாவிற்கு தேவையானவைகள் ஒவ்வொரு நாட்டைப் பொறுத்து மாறும். ஆகவே, நீங்கள் எந்தவொரு பயண புக்கிங் செய்வதற்கு முன்பு அந்த குறிப்பிட்ட நாட்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பாஸ்போர்ட் மற்றும் விசாவிற்கு தேவையானவைகளை சரிபார்க்கவும்.
வெளிநாட்டு பயணங்களின்போது டிராவல் இன்சூரன்ஸ் வாங்குவதன் முக்கியத்துவம்
நீங்கள் பயணிக்க வேண்டிய வெளிநாட்டை தேர்வு செய்த பிறகு, உங்கள் தேவைக்கு ஏற்ற ஒரு டிராவல் இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது அவசியம். ஏன் இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும் என்பதற்கான சில முக்கிய காரணங்களின் பட்டியலை இப்போது
- தெரியாத இடங்களில் பாதுகாப்பு வழங்குகிறது- வெளிநாடுகளுக்கு பயணிக்கும்போது, தெரியாத இடம், அறியாத மொழி மற்றும் கலாச்சாரம் போன்றவை காரணமாக உங்களின் பயணம் சற்று மோசமாக இருக்கலாம். உங்களின் பயணத்தின்போது ஏதேனும் வருந்தக்கூடிய சூழ்நிலைகளில் சிக்கிக்கொண்டால், உங்களின் டிராவல் இன்சூரன்ஸ் உங்களுக்கு தேவையான பொருளாதார உதவியையும், ஆதரவையும் அளிக்கிறது.
- பர்சனல் லையபிலிட்டி (பொறுப்பு) கவர் - உங்கள் வெளிநாட்டு பயணத்தின்போது, தவறுதலாக யாரேனும் நபருக்கோ அல்லது பொருளுக்கோ சேதம் ஏற்படுத்தி விட்டால், அதனால் ஏற்படும் இழப்புகளுக்கு எதிராக பாதுகாக்கப்படுகிறீர்கள். உதாரணமாக, நீங்கள் ஒரு பைக்கை வாடகைக்கு எடுத்து, அதில் பயணிக்கும்போது விபத்து நேர்ந்து பைக்கிற்கு சேதம் ஏற்பட்டு விட்டால், அதற்கான சேதத்தை உங்களின் சொந்த செலவில் சீர் செய்ய வேண்டும். எனினும், பர்சனல் லையபிலிட்டி (பொறுப்பு) கவர் வைத்திருந்தால் அந்த சேதத்திற்கான செலவை உங்களின் இன்சூரர் ஏற்றுக்கொள்வார்.
- ஒரு சில நாடுகளுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது- ஒரு சில நாடுகள் டிராவல் இன்சூரன்ஸ் கொண்டிருப்பதை கட்டாயமாக்கி உள்ளன. அந்த நாட்டிற்கு பயணிக்கவோ அல்லது விசா எடுக்கவோ நீங்கள் டிராவல் இன்சூரன்ஸ் சார்ந்த ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
- பயணத்தின்போது மெடிக்கல் கவரேஜ் வழங்கப்படுகிறது - வெளிநாடுகளில் மருத்துவ சிகிச்சைப் பெறுவது என்பது விலையுயர்ந்த ஒன்றாகும். இந்தியாவில் நீங்கள் பெற்ற ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி வெளிநாடுகளில் செல்லுபடியாகாது. ஆகையால், காம்ப்ரிஹென்சிவ் (விரிவான) டிராவல் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்குவதன் மூலமாக, வெளிநாடுகளில் நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலோ அல்லது உங்களுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டாலோ இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்தியர்களுக்கான வருகைக்கான விசா வழங்கும் நாடுகள் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
நாடுகள் எதற்காக வருகைக்கான விசா வழங்குகின்றன?
சுற்றுலாவை ஊக்குவிக்கும் விதமாகவும், விண்ணப்ப செயல்முறையை எளிதாக்கவும் ஒரு சில குறிப்பிட்ட போர்டுகளின் நுழைவாயிலில் வருகைக்கான விசா வழங்கப்படுகிறது.
வருகைக்கான விசா பெறுதல் அந்நாட்டிற்குள் நுழைவதற்கான உத்திரவாதத்தை எனக்கு அளிக்குமா?
விசாவிற்கான விண்ணப்பம் நிராகரிக்கப்படுவது போலவே, உங்களின் வருகைக்கான விசாவும் நிராகரிக்கப்படலாம். இதனைத் தவிர்க்க, நீங்கள் பயணிக்க போகும் நாடு இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்போருக்கு வருகைக்கான விசா வழங்குமா என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். மேலும் உங்களிடம் சரியான ஆவணங்கள் இருக்க வேண்டும் மற்றும் வருகைக்கான விசா எடுப்பதற்கான செயல்முறை குறித்து முன்னதாக தெரிந்து வைத்துக்கொள்வதும் முக்கியம்.
வருகைக்கான விசா எடுக்க நான் பணம் செலுத்த வேண்டுமா?
வருகைக்கான விசா எடுப்பதற்கான செயல்முறை ஒவ்வொரு நாட்டிற்கும் வேறுபடும். ஒரு சில நாடுகள் எந்தவொரு கட்டணமுமின்றி வருகைக்கான விசா வழங்குகின்றன. மேலும் சில நாடுகள் இதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை வசூலிக்கின்றன.
என் விசா காலாவதியாகிவிட்டால் நான் என்ன செய்ய வேண்டும்?
விசா காலாவதி ஆகும் முன் அதற்கு விண்ணப்பிக்க மறந்துவிட்டால், விசாவை நீட்டிக்கும் வாய்ப்பினை ஒரு சில நாடுகள் வழங்குகின்றன. எனினும், அவ்வாறு செய்ய நீங்கள் கூடுதல் பணம் செலுத்த வேண்டி இருக்கும்.
வருகைக்கான விசாவிற்கு விண்ணப்பிக்க என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும்?
வருகைக்கான விசாவிற்கு விண்ணப்பிக்க உங்களிடம் பாஸ்போர்ட் போட்டோகாப்பி, விசா விண்ணப்ப படிவம், ஹோட்டல் முன்பதிவுகள், பயோமெட்ரிக் புகைப்படங்கள், உங்களிடம் போதிய பணம் இருக்கிறது என்பதற்கான வங்கி அறிக்கைகள் போன்ற ஆவணங்கள் இருக்க வேண்டும். அதோடு விசா எடுக்க ஆகும் செலவை வெளிநாட்டு நாணயத்தில் செலுத்த வேண்டும். இவற்றைத் தவிர மேலும் தெரிந்துகொள்ள, வருகைக்கான விசா எடுக்கும் முன் கட்டாயமாக அந்நாட்டின் அதிகாரப்பூர்வ தளத்தை ஒருமுறை சரிபார்க்க வேண்டும்.
2023 ஆம் ஆண்டில் இந்திய பாஸ்போர்ட் எந்த இடம் வகுக்கிறது?
ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்சின்படி, 2023 ஆம் ஆண்டில் இந்திய பாஸ்போர்ட் உலக அளவில் 84வது இடத்தைப் பிடித்துள்ளது. அதிக விசா-ஃப்ரீ ஸ்கொர் கொண்டுள்ள நாடே வலிமையான பாஸ்போர்ட்டாக கருதப்படுகிறது. இந்தியர்கள் 60 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம்.