இந்தியாவில் இருந்து ஸ்பெயின் விசா
இந்தியாவில் இருந்து ஸ்பெயின் டூரிஸ்ட் விசா பற்றி அனைத்தும்
பயணம் நமது லைஃபில் மறக்க முடியாத தருணங்களை உருவாக்குகிறது. அது ஒரு வேடிக்கையான அனுபவமாக இருந்தாலும் சரி அல்லது வாழ்க்கையில் ஒரு முக்கியமான பாடமாக இருந்தாலும் சரி, உங்களுக்கு எதுவாக இருந்தாலும், புதிய இடங்களை ஆராய்வது எப்போதும் இயற்கையை நம்முடனும் நெருக்கமாக கொண்டு வருகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பயணம் நமது கம்ஃபோர்ட் ஸோனைத் தாண்டிச் செல்லவும், நாம் வாழும் பரந்த உலகின் எல்லைகளை விரிவுபடுத்தவும் அனுமதிக்கிறது. ஸ்பெயின் என்று வரும்போது, கடற்கரைகள், சாங்ரியா மற்றும் உணவு ஆகியவை உங்கள் நினைவிற்கு வரும் சில விஷயங்கள் ஆகும். பலர் இதை அருமையான சமையல் அனுபவம் என்று அழைக்கிறார்கள், சிலர், கடற்கரைகள், கலை, வரலாறு மற்றும் பார்ட்டிகளுக்காக சிறந்த இடமாக கருதுகிறார்கள்.
நீங்கள் விரும்பிய ஸ்பெயின் பயணத்தை ரசிப்பதற்கு முன்பு, அந்த சிறிய நோட்பேடை எடுத்துக் கொண்டு, மேஜிக் எண்ட்ரி டிக்கெட் - உங்கள் விசாவிலிருந்து தொடங்கி, உங்களை செக்கியூர்டாக வைத்திருக்க - ஒரு டிராவல் இன்சூரன்ஸை எடுங்கள்.
ஸ்பெயின் செல்ல இந்தியர்களுக்கு விசா தேவையா?
ஆம், அனைத்து இந்தியர்களுக்கும் ஸ்பெயினுக்கு செல்லுபடியாகும் ஷெங்கன் விசா தேவை. இதற்கான டூரிஸ்ட் விசா 90 நாட்கள் வரை செல்லுபடியாகும், மேலும் ப்ராசஸிங்குக்கு நேரம் ஆகலாம் மற்றும் கடைசி நிமிட ஆச்சரியங்கள் எதுவும் தேவையில்லை என்பதால் தோராயமாக ஒன்று முதல் இரண்டு மாதங்களுக்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டும்!
இந்திய குடிமக்களுக்கு ஸ்பெயினில் ஆன் அரைவல் விசா வசதி உள்ளதா?
இல்லை, துரதிர்ஷ்டவசமாக இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் ஸ்பெயினுக்கு வந்தவுடன் ஆன் அரைவல் விசா பெற தகுதியற்றவர்களாக கருதப்படுகிறார்கள்.
இந்திய குடிமக்களுக்கான ஸ்பெயின் விசா தேவைகள்
உங்கள் விசா விண்ணப்பத்தை புது டெல்லியில் உள்ள ஸ்பெயின் தூதரகத்திற்கு அல்லது உங்கள் அருகிலுள்ள விசா அவுட்சோர்சிங் மையம் அல்லது ஏஜெண்டிடம் நேரடியாக சமர்ப்பிப்பதற்கு முன்பு உங்களுக்கு பின்வரும் ஆவணங்கள் தேவைப்படும்.
- குறைந்தபட்சம் 2 பிளாங்க் பக்கங்கள் கொண்ட பாஸ்போர்ட். உங்கள் பாஸ்போர்ட் நீங்கள் ஸ்பெயினுக்கு வந்த பின்னர் குறைந்தது 3 மாதங்களுக்கு செல்லுபடியாகும் வகையில் இருக்க வேண்டும்.
- கடந்த 6 மாதங்களில் எடுக்கப்பட்ட 4.5 செ.மீ X 3.5 செ.மீ டைமன்ஷனில் 2 போட்டோஸ். போட்டோ ஒயிட் பேக்கிரவுண்ட் கொண்டதாக இருக்க வேண்டும்.
- வருகையின் தெளிவான நோக்கத்தையும் தேதியையும் குறிப்பிடும் ஒரு கவரிங் லெட்டர்
- ஒரு ஸ்பெயினுக்கான டிராவல் இன்சூரன்ஸ் . (ஸ்பெயினுக்கான டிஜிட் டிராவல் இன்சூரன்ஸ் 7 நாட்களுக்கு 1 அடல்ட்டுக்கு ₹ 225 முதல் தொடங்குகிறது)
- பயணத்திட்டம் மற்றும் கன்ஃபர்மேஷன் ரிட்டர்ன் டிக்கெட்டுகள்.
- உங்கள் சாலரி ஸ்லிப்களுடன் கடந்த 3 மாதங்களின் பேங்க் ஸ்டேட்மென்ட்டுகள்.
இந்திய குடிமக்களுக்கான ஸ்பெயின் விசா ஃபீ
வயது | ஐ.என்.ஆர் (INR)-இல் ஃபீ |
---|---|
12 வயதுக்கு மேற்பட்டவர்கள் | ₹6883 |
6 வயது முதல் 12 வயது வரையிலான குழந்தைகள் | ₹3441 |
இந்தியாவில் இருந்து ஸ்பெயின் டூரிஸ்ட் விசாவுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
ஸ்பெயின் டூரிஸ்ட் விசாவுக்கு விண்ணப்பிப்பதற்கான ப்ராசஸஸ் சிக்கலானது அல்ல, ஆனால் சிறிது நேரம் எடுக்கும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம்:
- அப்ளிக்கேஷன் ஃபார்ம் டவுன்லோட் செய்து அனைத்து விவரங்களையும் நிரப்பவும்.
- ஸ்பெயின் ஷெங்கன் விசாவுக்கான அப்பாயின்மெண்ட்டை ஆன்லைனில் செய்யுங்கள்.
- உங்கள் விசாவுக்கு நீங்கள் சமர்ப்பிக்க வேண்டிய அனைத்து ஆவணங்களையும் சேகரிக்கவும்.
- அப்பாயின்மெண்ட் தேதியில், தூதரகத்திற்குச் சென்று அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்கவும். உங்கள் விசா ப்ராசஸஸ் ஆகும் வரை காத்திருங்கள்.
நீங்கள் ஸ்பெயினில் உள்ள ஒரு உறவினர் அல்லது நண்பரைப் பார்க்க செல்கிறீர்கள் என்றால், உங்கள் ஸ்பெயின் விசா அப்ளிக்கேஷனை வலுப்படுத்தும் இன்விடேஷன் லெட்டர் மற்ற ஆவணங்களுடன் நீங்கள் செல்ல வேண்டும்.
ஸ்பெயின் டூரிஸ்ட் விசா ப்ராசஸிங் நேரம்
ஸ்பெயின் தூதரகத்தால் உறுதிப்படுத்தப்பட்ட விசாவின் குறைந்தபட்ச ப்ராசஸிங் நேரம் 15 நாட்கள் ஆகும்.
நான் ஸ்பெயினுக்கான டிராவல் இன்சூரன்ஸை வாங்க வேண்டுமா?
ஆம், ஸ்பெயினுக்கு டிராவல் இன்சூரன்ஸ் வைத்திருப்பது கட்டாயமாகும்.
ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய நாடாக ஸ்பெயின் உள்ளது, பிரான்ஸ் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்த நாட்டில் கடற்கரைகள், அதன் கலாச்சாரம், அதன் உணவு மற்றும் நிச்சயமாக, அதன் கலை மற்றும் வரலாறு வரை ஆராய நிறைய உள்ளன. ஒருவர் வெளிநாடு செல்லும் போது, பயணத் திட்டம், பயண எசென்ஷியல் முதல் நிதி வரை நிறைய திட்டமிடல் இருக்கும்.
ஒரு டிராவல் இன்சூரன்ஸ் நீங்கள் எந்த கவலைக்கும் ஆளாகாமல் இருக்கலாம் என்பதை உறுதிப்படுத்துகிறது, குறிப்பாக நிதி ரீதியாக! அதுமட்டுமின்றி, நாம் அனைவரும், எவ்வளவு பயணம் செய்தாலும், ஹோமிலிருந்து வெகு தொலைவில் உள்ள ஒரு இடத்தில் இருக்கும்போது எப்போதும் கொஞ்சம் பாதிக்கப்படக்கூடியவர்களாக இருக்கிறோம்.
அதனால்தான், எப்போதும் டிராவல் இன்சூரன்ஸ் உங்களுக்கு ஆதரவாக இருக்கும்! ஸ்பெயினுக்கான இன்டெர்நேஷனல் டிராவல் இன்சூரன்ஸ் வழங்கக்கூடிய சில பெனிஃபிட்கள் பின்வருமாறு:
இந்திய குடிமக்களுக்கான ஸ்பெயின் டூரிஸ்ட் விசா பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் ஸ்பெயினுக்கு வருகை தரும் போது விசா பெற தகுதியானவர்களா?
இல்லை, இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் ஸ்டாண்டர்டு விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும், ஏனெனில் இப்போதைக்கு வேறு எந்த ஏற்பாடுகளும் இல்லை.
ஸ்பெயினுக்கு டிராவல் இன்சூரன்ஸ் கட்டாயமா?
அப்ளிக்கேஷன் ப்ராசஸின் போது விவரங்கள் தேவைப்படும் என்பதால் ஒரு பயணத்தைத் திட்டமிடுவதற்கு முன்பு டிராவல் இன்சூரன்ஸ் பாலிசிகளை வாங்க வேண்டும்.
எனது பயணத் திட்டம் மற்றும் திட்டமிடப்பட்ட ஸ்டாப்களையும் நான் காண்பிக்க வேண்டுமா?
அத்தகைய கோரிக்கை மிகவும் அசாதாரணமானது என்றாலும், இந்த டீடைல்ஸின் நகலை நீங்கள் கையில் வைத்திருக்க பரிந்துரைக்கப்படுகிறது.
ஒரு மைனர் ஸ்பெயினுக்கு விசா பெற முடியுமா?
ஆம், பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலரிடமிருந்து எழுத்துப்பூர்வ ஒப்புதல் கடிதம் இருந்தால் விண்ணப்பிக்கலாம். தேவையான அனுமதிகள் இல்லை என்றால், அவர்கள் தகுதியற்றவர்களாகக் கருதப்படுவார்கள்.
பேங்க் ஸ்டேட்மென்ட்டுகளின் நகல்களும் தேவையா?
ஆம், ப்ராசஸுக்கு உங்கள் நிதி ஸ்திரத்தன்மை மற்றும் ஆரோக்கியத்திற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும். இத்தகைய சூழ்நிலையில், பேங்க் ஸ்டேட்மென்ட்கள் தேவைப்படுகின்றன.