ஷெங்கன் விசா இன்டர்நேஷனல் டிராவல் இன்சூரன்ஸ் 

வாங்கவும்

Instant Policy, No Medical Check-ups

வெளிநாடு பயணம் என்பது நம்மில் பலருக்கு நிச்சயம் பக்கெட் லிஸ்ட் ஐட்டம் தான். இன்டர்நேஷனல் டிராவல் என்பது வேறு எந்த அனுபவமும் போல இல்லாமல் ஸ்பெஷலாக இருக்கும் ஒன்று. பலருக்கு பிடித்த இடங்களில், குறைந்தது ஒரு இடமாவது ஷெங்கன் நாடுகளில் ஒன்றாக இருக்கும். 

பயண விலை உயர்ந்ததாகத் தோன்றினாலும், டிஜிட்டின் இன்டர்நேஷனல் டிராவல் இன்சூரன்ஸ் உங்கள் நிதி கவலைகளைக் குறைக்க உதவும். உங்கள் ஷெங்கன் விசாவை செயலாக்க எங்கள் டிராவல் இன்சூரன்ஸை நீங்கள் எளிதாகப் பெறலாம்.

ஷெங்கன் விசாவுக்கான டிராவல் இன்சூரன்ஸ் என்பது ஸோனில் உள்ள அனைத்து 26 நாடுகளையும் உள்ளடக்கிய ஒரு பாலிசியாகும். ஷெங்கன் விசாவுக்கு விண்ணப்பிக்கும்போது டிராவல் இன்சூரன்ஸ் கட்டாயமாகும். ஷெங்கன் டிராவல் இன்சூரன்ஸ் என்பது 27 ஷெங்கன் நாடுகளுக்கு பொருந்தும். ஷெங்கன் ஸோனிற்குள் எந்தவொரு நாட்டிற்கும் பயணிக்கும்போது டிராவல் இன்சூரன்ஸ் வைத்திருப்பது கட்டாயமாகும்.

 

ஷெங்கன் விசாவுக்கு டிராவல் இன்சூரன்ஸ் கட்டாயமா?

ஆம், ஷெங்கன் விசாவுக்கு டிராவல் இன்சூரன்ஸ் வைத்திருப்பது கட்டாயமாகும். ஏனென்றால், ஷெங்கன் விசா தேவைகளின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு சுற்றுலாப் பயணியும் 30,000 யூரோக்கள் வரை மெடிக்கல் கவரை கொண்டிருக்க வேண்டும். இந்த 26 நாடுகளுக்கான விசா தேவைகள் நடைமுறையில் ஒரே மாதிரியானவை, எனவே டிராவல் இன்சூரன்ஸை வைத்திருப்பது உங்கள் ஷெங்கன் விசாவை சுமூகமான முறையில் செயலாக்க உதவும். 

 

ஷெங்கன் விசாவுக்கான டிராவல் இன்சூரன்ஸிற்குத் தேவைப்படுவது யாவை?

ஒவ்வொரு ஷெங்கன் நாடும் டிராவல் இன்சூரன்ஸிற்கு குறிப்பிட்ட நிபந்தனைகளைக் கொண்டிருக்கலாம். நீங்கள் பயணம் செய்வதற்கு முன் அந்தந்த நாட்டின் தூதரகம் அல்லது துணைத் தூதரகத்தில் தேவைகளை சரிபார்க்க மறக்காதீர்கள். உங்கள் டிராவல் இன்சூரன்ஸ் முன்னிலைப்படுத்த வேண்டிய சில குறைந்தபட்ச நிபந்தனைகள் பின்வருமாறு:

  • குறைந்தபட்சம் 30,000 யூரோ மெடிக்கல் கவரேஜ்.

  • விண்ணப்பித்த பாலிசியின் கீழ் ஷெங்கன் ஸோனிற்கான முழு கவரேஜ்.

  • மருத்துவ காரணங்களுக்காக நாடு திரும்புதல், அவசர மருத்துவமனை சிகிச்சை அல்லது மரணம் போன்ற வேறு ஏதேனும் எதிர்பாராத செலவுகளை பாலிசி உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். 

  • பாலிசியின் செல்லுபடியாகும் காலம் தங்கும் காலத்தை உள்ளடக்கியிருக்க வேண்டும்.

அவ்வளவுதான், இப்போது நீங்க ரெடியா இருக்கீங்க! ஷெங்கன் நாடுகளில் ஏதேனும் ஒரு நாடு அல்லது எல்லா நாடுகளுக்கும் பயணம் செய்வது ஒரு வரப்பிரசாதம், அதை அனுபவிக்க உங்களுக்கு உதவ நாங்கள் இங்கே இருக்கிறோம். நீங்கள் ஓய்வு அல்லது வேலை, தனி பயணம் அல்லது குடும்ப விடுமுறைக்காக பயணம் செய்கிறீர்கள் என்றால், உங்கள் பயணத்தை மென்மையாகவும் தொந்தரவின்றியும் செய்ய டிஜிட் டிராவல் இன்சூரன்ஸ் இங்கே உள்ளது.

எனது ஷெங்கன் விசாவுக்கான டிராவல் இன்சூரன்ஸை நான் ஏன் வாங்க வேண்டும்?

2022 ஆம் ஆண்டில், பாரிஸ், இத்தாலி, ஸ்காண்டிநேவியா மற்றும் பிரஸ்ஸல்ஸில் 200க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. (1)

அதிக திருட்டு குற்ற விகிதங்களைக் கொண்ட நாடுகளில் பிரான்ஸும் உள்ளது. பெல்ஜியம், ஸ்வீடன் நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. (2)

ஐரோப்பாவில் மட்டும், 7.3 மில்லியன் லக்கேஜ்கள் தொலைந்து போயுள்ளன, தவறாக கையாளப்படுகின்றன அல்லது தாமதமாகியுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. (3)

கொரோனா பரவலுக்குப் பிறகு நாடுகள் மீண்டும் பயணத்திற்கு திறக்கப்பட்ட பிறகு, தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக விமானங்கள் ரத்து மற்றும் தாமதமான விமானங்கள் அதிகரித்துள்ளன.  (4)

ஷெங்கன் விசாவுக்கு விண்ணப்பிக்கும் போது, உங்களுடன் டிராவல் இன்சூரன்ஸ் வைத்திருப்பது கட்டாயமாகும்.

ஷெங்கன் விசாவுக்கு விண்ணப்பிக்கும் போது உங்கள் டிராவல் இன்சூரன்ஸ் பிளானிற்கு குறைந்தபட்சம் €30,000 யூரோ மருத்துவ பாதுகாப்பு அவசியம்.

டிஜிட்டின் இன்டர்நேஷனல் டிராவல் இன்சூரன்ஸில் அப்படி என்ன சிறப்பு உள்ளது?

ஜீரோ டிடக்டபிள்ஸ் - நீங்கள் கிளைம் செய்யும்போது நீங்கள் எதையும் எதற்கும் செலுத்த வேண்டாம் - அனைத்தையும் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.

சாகச விளையாட்டுக்கள் கவர் செய்யப்படுகிறது - எங்கள் கவரேஜில் ஸ்கூபா டைவிங், பங்கீ ஜம்பிங் மற்றும் ஸ்கைடைவிங் போன்ற ஆக்டிவிட்டிகள் அடங்கும் (கால அளவு ஒரு நாள் மட்டும் பொருந்தும்)

விமான தாமதங்களுக்கு உடனடி பண இழப்பீடு - உங்கள் நேரத்தை மேலும் வீணடிக்க நாங்கள் விரும்பவில்லை. அதனால்தான், உங்கள் விமானம் 6 மணி நேரத்திற்கு மேல் தாமதமாகும்போது, நாங்கள் உங்களுக்கு உடனடியாக ரூ .500-1000 இழப்பீடு வழங்குகிறோம்.

ஸ்மார்ட்போன் மூலம் செய்யக்கூடிய செயல்முறைகள் - பேப்பர்ஒர்க் இல்லை, எங்கும் ஓடி ஒளியவேண்டியதில்லை. நீங்கள் கிளைம் செய்யும்போது உங்கள் ஆவணங்களைப் பதிவேற்றவும்.

மிஸ்டு கால் வசதி +91-7303470000 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுங்கள், நாங்கள் 10 நிமிடங்களில் உங்களை மீண்டும் அழைப்போம். இன்டர்நேஷனல் அழைப்பு கட்டணம் இல்லை!

வேர்ல்டுவைட் ஆதரவு - உலகெங்கிலும் உங்களுக்கு தடையின்றி ஆதரவளிக்க, உலகின் மிகப்பெரிய ஹெல்த் மற்றும் டிராவல் இன்சூரன்ஸ் நெட்வொர்க் அலையன்ஸுடன் நாங்கள் கூட்டு சேர்ந்துள்ளோம். வி&நி பொருந்தும்*

உங்கள் தேவைகளுக்குப் பொருத்தமான ஷெங்கன் டிராவல் இன்சூரன்ஸ் பிளான்கள்

பேசிக் ஆப்ஷன் கம்ஃபர்ட் ஆப்ஷன்

மெடிக்கல் கவர்

×

அவசர விபத்து சிகிச்சை மற்றும் வெளியேற்றம்

எதிர்பாராத நேரங்களில் விபத்துகள் ஏற்படுகின்றன. துரதிர்ஷ்டவசமாக, நாங்கள் உங்களை அவ்விடத்தில் காப்பாற்ற இயலாது, ஆனால் சிறந்த சிகிச்சையைப் பெற நாங்கள் நிச்சயமாக உங்களுக்கு உதவ முடியும். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் உடனடி மருத்துவ சிகிச்சைக்காக நாங்கள் உங்களை கவர் செய்கிறோம்.

×

அவசர மருத்துவ சிகிச்சை மற்றும் வெளியேற்றம்

தெரியாத நாட்டில் பயணத்தின் போது நோய்வாய்ப்பட்டால், பீதியடைய வேண்டாம்! உங்கள் சிகிச்சை செலவுகளை நாங்கள் கவனித்துக் கொள்வோம். மருத்துவமனை ரூம் வாடகை, ஆபரேஷன் தியேட்டர் சார்ஜ்கள் போன்ற செலவுகளை நாங்கள் ஏற்றுக்கொள்வோம்.

×

தனிநபர் விபத்து

இந்த கவர் ஒருபோதும் தேவைப்படாது என்று நாங்கள் நம்புகிறோம். ஆனால் பயணத்தின் போது ஏதேனும் விபத்து ஏற்பட்டால், அதன் விளைவாக மரணம் அல்லது இயலாமை ஏற்பட்டால், இந்த நன்மை ஆதரவுக்கு உள்ளது.

×

டெய்லி கேஷ் அலவன்ஸ் (ஒரு நாளைக்கு / அதிகபட்சம் 5 நாட்கள்)

பயணத்தின் போது, உங்கள் பணத்தை திறம்பட நிர்வகிப்பீர்கள். அவசர தேவைகளுக்கு நீங்கள் கூடுதலாக எதையும் செலவழிக்க நாங்கள் விரும்பவில்லை. எனவே, நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது, உங்கள் அன்றாட செலவுகளை நிர்வகிக்க ஒரு நாளைக்கு ஒரு நிலையான தினசரி பண கொடுப்பனவைப் பெறுவீர்கள்.

×

தற்செயலான மரணம் மற்றும் இயலாமை

இந்த கவரில் அவசர விபத்து சிகிச்சை கவர் போன்ற அனைத்தும் இருந்தாலும், இது ஒரு கூடுதல் அடுக்கு பாதுகாப்பைக் கொண்டுள்ளது. இது விமானத்திற்குள் ஏறும்போது, இறங்கும்போது அல்லது விமானத்திற்குள் இருக்கும்போது மரணம் மற்றும் இயலாமையையும் உள்ளடக்கியது (டச்வுட்!).

×

அவசர பல் சிகிச்சை

பயணத்தின் போது நீங்கள் கடுமையான வலியை சந்தித்தால் அல்லது உங்கள் பற்களுக்கு தற்செயலாக காயம் ஏற்பட்டால், இதன் விளைவாக ஒரு மருத்துவ பயிற்சியாளரால் வழங்கப்படும் அவசர பல் சிகிச்சை, சிகிச்சையின் காரணமாக ஏற்படும் செலவுகளுக்கு நாங்கள் உங்களுக்கு கவர் செய்வோம்.

×

சமூகமான டிரன்சிட் கவர்கள்

×

பயண ரத்து

துரதிர்ஷ்டவசமாக, உங்கள் பயணம் ரத்து செய்யப்பட்டால், உங்கள் பயணத்தின் முன்பே முன்பதிவு செய்யப்பட்ட, திரும்பப் பெற முடியாத செலவுகளை நாங்கள் உள்ளடக்குகிறோம்.

×

பொதுவான பயண தாமதம்

உங்கள் விமானம் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் தாமதமானால், நீங்கள் நன்மைத் தொகையைப் பெறுவீர்கள், வேறு எந்த கேள்விகளும் கேட்கப்படமாட்டாது!

×

செக்டு-இன் பேக்கேஜ் தாமதம்

கன்வேயர் பெல்ட்டில் காத்திருப்பது எரிச்சலூட்டும், என்பது எங்களுக்குத் தெரியும்! எனவே, உங்கள் செக்-இன் பேக்கேஜ் 6 மணி நேரத்திற்கும் மேலாக தாமதமானால், நீங்கள் நன்மைத் தொகையைப் பெறுவீர்கள், வேறு எந்த கேள்விகளும் கேட்கப்படமாட்டாது!

×

செக்டு-இன் பேக்கேஜ்களின் மொத்த இழப்பு

ஒரு பயணத்தில் கடைசியாக நிகழக்கூடிய விஷயம் என்னவென்றால், உங்கள் பேக்கேஜ்கள் தொலைந்து போக வாய்ப்புள்ளது. ஆனால் இது போன்ற ஏதாவது நடந்தால், முழு பேக்கேஜ்களும் நிரந்தரமாக இழக்கப்படுவதற்கான நன்மைத் தொகையை நீங்கள் பெறுவீர்கள். மூன்று பேக்குகளில் இரண்டு தொலைந்தால், நீங்கள் விகிதாச்சார நன்மையைப் பெறுவீர்கள், அதாவது நன்மைத் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு.

×

தவறவிட்ட இணைப்பு விமானம்

விமானத்தை தவறவிட்டீர்களா? கவலை வேண்டாம்! உங்கள் டிக்கெட் / பயணத்திட்டத்தில் காட்டப்பட்டுள்ள அடுத்த இலக்கை அடைய தேவையான கூடுதல் தங்குமிடம் மற்றும் பயணத்திற்கு நாங்கள் பணம் செலுத்துவோம், விமானத்தில் தாமதம் காரணமாக முன்கூட்டியே முன்பதிவு செய்யப்பட்ட விமானத்தை நீங்கள் தவறவிட்டால் இவை பொருந்தும்.

×

வசதியான பயணம்

×

பாஸ்போர்ட் இழப்பு

தெரியாத நாட்டில் நடக்கும் மோசமான விஷயம் உங்கள் பாஸ்போர்ட் அல்லது விசாவை இழப்பது. இது போன்ற ஏதாவது நடந்தால், நீங்கள் உங்கள் நாட்டிற்கு வெளியே இருக்கும்போது அது தொலைந்துவிட்டாலோ, திருடப்பட்டாலோ அல்லது சேதமடைந்தாலோ, செலவுகளை நாங்கள் திருப்பித் தருகிறோம்.

×

அவசர பணத் தேவை

ஒரு மோசமான நாளில், உங்கள் பணம் அனைத்தும் திருடப்பட்டு, உங்களுக்கு அவசர பணம் தேவைப்பட்டால், இந்த கவர் உங்கள் உதவிக்கு வரும்.

×

அவசர பயண நீட்டிப்பு (எமர்ஜென்சி டிரிப் எக்ஸ்டென்ஷன்)

உங்கள் விடுமுறைகள் முடிவடைவதை நாங்கள் விரும்பவில்லை. அதோடு, நீங்கள் மருத்துவமனையில் இருப்பதையும் நாங்கள் விரும்பவில்லை! உங்கள் பயணத்தின் போது அவசரநிலை காரணமாக, உங்கள் தங்குமிடத்தை நீட்டிக்க வேண்டியிருந்தால், ஹோட்டல் எக்ஸ்டென்ஷன்கள் மற்றும் திரும்பும் விமான மறுசீரமைப்பிற்கான செலவை நாங்கள் திருப்பித் தருவோம். அவசரநிலை உங்கள் பயணத்தில் ஒரு இயற்கை பேரழிவாக இருக்கலாம் அல்லது அவசர மருத்துவமனையில் அனுமதிக்கப்படலாம்.

×

பயணத்தை கைவிடுதல் (ட்ரிப் அபாண்டன்மெண்ட்)

அவசர காலத்தில், உங்கள் பயணத்திலிருந்து முன்கூட்டியே வீடு திரும்ப வேண்டியிருந்தால், அது மிகவும் வருத்தமானதாக இருக்கும். எங்களால் அதை சரிசெய்ய முடியாது, ஆனால் மாற்று பயண ஏற்பாடுகள் மற்றும் தங்குமிடம், திட்டமிடப்பட்ட நிகழ்வுகள் மற்றும் சுற்றுலா செலவுகள் போன்ற திரும்பப் பெற முடியாத பயண செலவுகளுக்கான கட்டணங்களை நாங்கள் உள்ளடக்குவோம்.

×

பர்சனல் லையபிலிட்டி மற்றும் ஜாமீன் பத்திரம்

துரதிர்ஷ்டவசமான சம்பவம் காரணமாக, நீங்கள் பயணம் செய்யும் போது உங்களுக்கு எதிராக ஏதேனும் லீகல் சார்ஜ்கள் இருந்தால், அதற்கான பணத்தை நாங்கள் செலுத்துவோம்.

×
Get Quote Get Quote

மேலே பரிந்துரைக்கப்பட்ட கவரேஜ் விருப்பம் சுட்டிக்காட்டக்கூடியதுடன் சந்தை ஆய்வு மற்றும் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் தேவைக்கேற்ப கூடுதல் கவரேஜ்களை நீங்கள் தேர்வு செய்யலாம். நீங்கள் வேறு ஏதேனும் கவரேஜ்களைத் தேர்வு செய்ய விரும்பினால் அல்லது மேலும் விவரங்களை அறிய விரும்பினால் எங்களை 1800-258-5956 என்ற எண்ணிற்கு அழைக்கவும்.

பாலிசி பற்றி விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

நாங்கள் வெளிப்படைத்தன்மையை நம்புகிறோம், அதனால்தான் நாங்கள் உள்ளடக்காத சில சூழ்நிலைகளைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். உங்கள் டிராவல் இன்சூரன்ஸ் எதையெல்லாம் கவர் செய்யாது என்பதைப் புரிந்துகொள்வது எதையெல்லாம் கவர் செய்யும் என்பதை அறிவது போலவே முக்கியமானது. 

 

எங்கள் டிராவல் இன்சூரன்ஸ் உள்ளடக்காத சில விலக்குகள் பின்வருமாறு:
 

  • ஏற்கனவே கண்டறியப்பட்ட நோய்கள் அல்லது உடல்நிலைகளை நாங்கள் கவர் செய்வதில்லை, அல்லது உங்கள் மருத்துவர் ஏற்கனவே பயணம் செய்ய வேண்டாம் என்று பரிந்துரைத்திருந்து நீங்கள் அதை மீறி செய்தால் நாங்கள் அவற்றையும் கவர் செய்வதில்லை.

  • வெளிநாட்டில் விடுமுறை நாட்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களுக்கு மட்டுமே 5 நாட்கள் வரை டெய்லி கேஷ் அலவன்ஸ் செல்லுபடியாகும்.

  • விபத்து நடந்த 365 நாட்களுக்குப் பிறகு மரணம் அல்லது இயலாமைக்கு கவர் செய்யப்படாது.

  • அட்வென்ச்சர் ஸ்போர்ட்களை நீங்கள் ஒரு நாளுக்கு செய்கிறீர்கள் என்றால் கவர் செய்யப்படும். ஒரு நாளுக்கு மேல் நீடிக்கும் வார கால மலையேற்றம், ஹைக்ஸ் அல்லது ப்ரொஃபஷனல் அளவிலான அட்வென்ச்சர் ஸ்போர்ட்கள் கவர் செய்யப்படாது. 

  • குறைந்தது 6 மணி நேரத்திற்கு முன்பே உங்கள் விமான நிறுவனம் விமான தாமதம் பற்றி உங்களுக்குத் தெரிவித்தால் விமான தாமதங்கள் கவர் செய்யப்படாது.

  • கஸ்டம்ஸ் காரணமாக லக்கேஜ் சோதனை செய்வதில் தாமதம் ஏற்பட்டால் அது கவர் செய்யப்படாது.

  • உள்வரும் விமானத்தின் திட்டமிடப்பட்ட வருகைக்கும் இணைக்கும் விமானத்தின் திட்டமிடப்பட்ட புறப்பாட்டிற்கும் இடையேயான நேர இடைவெளி தேவைப்படும் நேரத்தை விட குறைவாக இருந்தால், தவறிய இணைப்பு விமானம் கவர் செய்யப்படாது.

  • போர்ச் செயல்கள் கவர் செய்யப்படாது.

  • 24 மணி நேரத்திற்குள் அந்தந்த மாநில காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காவிட்டால் திருட்டுகள் கவர் செய்யப்படாது.

  • பிரசவம் அல்லது தொடர்புடைய விஷயங்களால் பயண நீட்டிப்புகளை ஈடுசெய்ய முடியாது

  • ஏற்கனவே இருக்கும் நோய்கள் அல்லது சுகாதார நிலைமைகள் காரணமாக பயண கைவிடுதல்களை ஈடுசெய்ய முடியாது.

  • விசா நிராகரிப்பு காரணமாக பயண ரத்துகள் உள்ளடக்கப்படாது. 

எங்களுடன், வி.ஐ.பி கிளைம்களுக்கான அணுகலைப் பெறுங்கள்

ஷெங்கனுக்கான எங்கள் இன்டர்நேஷனல் டிராவல் இன்சூரன்ஸை நீங்கள் வாங்கிய பிறகு, எங்களிடம் வெறும் 3-ஸ்டெப் முற்றிலும் டிஜிட்டல் கிளைம் செயல்முறை இருப்பதால் நீங்கள் பதற்றமின்றி முன்னேறலாம்!

ஸ்டெப் 1

1800-258-5956 (இந்தியாவில் இருந்தால்) என்ற எண்ணில் எங்களுக்கு அழைப்பு கொடுங்கள் அல்லது +91-7303470000 என்ற எண்ணில் மிஸ்டு கால் கொடுங்கள், நாங்கள் 10 நிமிடங்களில் மீண்டும் அழைப்போம்.

ஸ்டெப் 2

அனுப்பப்பட்ட லிங்கில் தேவையான ஆவணங்கள் மற்றும் உங்கள் வங்கி கணக்கு விவரங்களை பதிவேற்றவும்.

ஸ்டெப் 3

மீதியை நாங்கள் பார்த்துக் கொள்வோம்!

கேம்பிரிட்ஜ் ஆங்கில அகராதியின் கூற்றுப்படி, ஷெங்கன் என்ற சொல் "ஐரோப்பிய ஒன்றியத்தின் பல நாடுகளுக்கு இடையிலான ஒரு ஒப்பந்தம், இது பாஸ்போர்ட் அல்லது பிற கட்டுப்பாடுகள் இல்லாமல் ஒவ்வொரு நாட்டின் எல்லைகளையும் கடந்து மக்களையும் பொருட்களையும் சுதந்திரமாக செல்ல அனுமதிக்கிறது."

ஷெங்கன் பகுதி ஐரோப்பாவின் பெரும்பகுதியை உள்ளடக்கிய 26 நாடுகளைக் கொண்டுள்ளது. 1985 ஆம் ஆண்டில் ஷெங்கன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட லக்சம்பர்க்கில் உள்ள ஒரு சிறிய நகரத்தின் பெயரால் இது இத்தகைய பெயர் பெற்றது.

ஷெங்கன் பகுதியின் உருவாக்கம் உள்நாட்டு எல்லைகளை அழித்ததன் மூலம் மக்களின் சுதந்திரமான நடமாட்டத்தை அனுமதித்தது. இது எல்லைக் கட்டுப்பாட்டு சோதனைகள் மற்றும் கடினமான சம்பிரதாயங்கள் இல்லாமல் ஷெங்கன் ஸோனிற்குள் உள்ள நாடுகளுக்கு பயணம் செய்வதை எளிதாக்கியது.

ஷெங்கன் பகுதி ஐரோப்பாவின் பிரதான நிலப்பரப்பில் உள்ள பெரும்பாலான நாடுகளை உள்ளடக்கியது, ஆனால் அனைத்து நாடுகளைதையும் உள்ளடக்கியது அல்ல. அன்டோரா, வாடிகன் சிட்டி மற்றும் மொனாக்கோ மாநிலங்கள் எல்லைக் கட்டுப்பாடுகளைச் செயல்படுத்தாததால் அவை ஷெங்கன் பகுதிக்குள் நடைமுறையாகக் கருதப்படுகின்றன.

ஷெங்கன் ஸோனில் உள்ள அனைத்து 26 நாடுகளுக்கும் நிதானமான பயணத்திற்கு ஷெங்கன் விசா உதவுகிறது. இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் ஸோனிலிருந்து நாடுகளுக்குள் நுழைய ஷெங்கன் விசாவைப் பெற வேண்டும். இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கான ஷெங்கன் விசாவிற்கான விண்ணப்ப நடைமுறை பின்வருமாறு:

  • விசா விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்: விசா விண்ணப்பப் படிவத்திற்காக ஷெங்கன் தூதரகத்தின் இணையதளத்தில் உலாவவும். படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, அதைச் சமர்ப்பிக்கும் முன் விவரங்களைப் பூர்த்தி செய்யவும்.
  • ஷெங்கன் விசா வகையைத் தேர்ந்தெடுக்கவும்: உங்களுக்குத் தேவையான ஷெங்கன் விசா வகையைத் தேர்ந்தெடுக்கவும். இது பயணத்தின் நோக்கம் மற்றும் கால அளவைப் பொறுத்தது. வெவ்வேறு கட்டுப்பாடுகள் குறிப்பிட்ட விசாக்களுக்கு பொருந்தும், எனவே பயணத்திற்கு முன் பொருத்தமான ஒன்றைத் தேர்ந்தெடுக்க மறக்காதீர்கள்.
  • தேவையான ஆவணங்களுடன் உங்கள் ஷெங்கன் விசாவுக்கு விண்ணப்பிக்கவும்: உங்கள் விசாவுக்கு எங்கு, எப்போது விண்ணப்பிக்க வேண்டும் என்பதைக் கண்டறியவும். 90 நாட்கள் வரை தங்க அனுமதிக்கும் மற்றும் ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் ஷெங்கன் விசாவுக்கு இந்தியர்கள் விண்ணப்பிக்கலாம். தேவையான ஆவணங்களைச் சேகரித்து, நாட்டில் அமைந்துள்ள தூதரகம் / துணைத் தூதரகத்தில் உங்கள் விசா விண்ணப்பத்திற்கான சந்திப்பை மேற்கொள்ளுங்கள்.
  • நேர்காணலை முடித்து விசா கட்டணம் செலுத்தவும்: விசா கட்டணம் தற்போதைய பரிமாற்ற விகிதங்களின்படி மாற்றங்களுக்கு உட்பட்டது (யூரோவில்: வயது வந்தோர் - 80, மற்றும் 6-12 வயதுக்குட்பட்ட குழந்தை - 60). விசா கட்டணத்தை தள்ளுபடி செய்வதற்கான அளவுகோல்களையும் நீங்கள் சரிபார்க்கலாம்.
  • உங்கள் விசாவுக்காக காத்திருங்கள்: உங்கள் விசா செயலாக்கம் சுமார் 15 நாட்கள் வரை ஆகலாம்.

ஷெங்கன் விசாவுக்கு விண்ணப்பிக்கும் இந்தியர்களுக்கு தேவையான ஆவணங்கள்

ஒரு இன்விடேஷன் தங்குமிடத்திற்கான ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட துணை ஆவணங்களுடன் ஹோஸ்டிடமிருந்து இன்விடேஷன்.
விசா விண்ணப்பப் படிவம் விசா விண்ணப்ப படிவத்தை முறையாக பூர்த்தி செய்து பயணம் செய்யும் அனைத்து விண்ணப்பதாரர்களும் கையொப்பமிட வேண்டும்.
புகைப்படங்கள் மற்றும் பாஸ்போர்ட் 2 சமீபத்திய பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள். புகைப்படத்தின் விவரக்குறிப்புகளை மனதில் கொள்ளுங்கள். 10 ஆண்டுகளுக்கு மிகாத மற்றும் குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் செல்லுபடியாகும் பாஸ்போர்ட்.
விமான டிக்கெட்டுகள் மற்றும் பயணத் திட்டம் ஒவ்வொரு நாட்டிற்கும் விமான டிக்கெட்டுகள் மற்றும் நீங்கள் தங்கத் திட்டமிடும் ஹோட்டல்கள் / ஏர்பின்ப்களுக்கான தங்குமிட சான்று உள்ளிட்ட முழுமையான பயணத் திட்டம்.
டிராவல் இன்சூரன்ஸ் 30,000 யூரோக்கள் வரை மெடிக்கல் கவரேஜை வழங்கும் டிராவல் அல்லது ஹெல்த் இன்சூரன்ஸ் கட்டாயமாகும்.
நிதி வழிமுறைகளின் சான்று கடந்த மூன்று மாதங்களின் பேங்க் ஸ்டேட்மென்ட் போன்ற நிதி ஆதாரங்களுக்கான சான்று உங்களுக்குத் தேவை. உங்களிடம் ஒரு ஸ்பான்சர் இருந்தால், நிதி ரீதியாக ஸ்பான்சர் செய்யும் கடிதத்தை சமர்ப்பிக்கவும்.
ஒரு ஊழியர் / மாணவர் / சுயதொழில் செய்பவர் என்பதற்கான சான்று. a. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை ஒப்பந்தம், விடுப்பு அனுமதி மற்றும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். b. சுயதொழில் புரிபவர்கள் தங்களது வணிக உரிம நகல், கடந்த 6 மாதங்களுக்கான நிறுவனத்தின் பேங்க் ஸ்டேட்மென்ட் மற்றும் வருமான வரி கணக்கு ஆகியவற்றின் நகலை சமர்ப்பிக்க வேண்டும்.

ஷெங்கன் நாடுகளுக்கான டிராவல் இன்சூரன்ஸ் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எனது பயணம் ரத்து செய்யப்பட்டால் எனக்கு அவர் கிடைக்குமா?

முன்கூட்டியே முன்பதிவு செய்யப்பட்ட, திருப்பித் தர முடியாத செலவுகள் மற்றும் உங்கள் பயணத்தை அவசரமாக கைவிடுதல் ஆகியவற்றை நாங்கள் உள்ளடக்குகிறோம். ஏற்கனவே இருக்கும் நோய்கள் அல்லது சுகாதார நிலைமைகள் காரணமாக பயணக் கைவிடுதல் மற்றும் விசா நிராகரிப்பு காரணமாக பயண ரத்து ஆகியவை இதில் அடங்கும்.

ஷெங்கன் டிராவல் இன்சூரன்ஸின் செலவை எந்த காரணிகள் தீர்மானிக்கின்றன?

ஷெங்கன் டிராவல் இன்சூரன்ஸிற்கு செலுத்த வேண்டிய பிரீமியம் உங்கள் வயது, பயணத்தின் காலம், உடல்நல அபாயங்கள் போன்றவற்றைப் பொறுத்தது. தொந்தரவில்லாத பயணத்தை உறுதி செய்வதற்காக ஆட்-ஆன் கவர்களைப் பெறுவது செலுத்த வேண்டிய பிரீமியத்தையும் பாதிக்கும்.

பல்வேறு வகையான ஷெங்கன் விசாக்கள் யாவை?

  • உங்கள் பயணத்தின் நோக்கத்தைப் பொறுத்து நீங்கள் விண்ணப்பிக்கலாம்:
    • யூனிஃபார்ம் ஷெங்கன் விசா- டைப் A அல்லது டைப் C. டைப் C இன் கீழ் உங்களுக்கு சிங்கிள் என்ட்ரி விசா, டபுள் என்ட்ரி விசா மற்றும் மல்டிபிள் என்ட்ரி விசா உள்ளது.
    • நேஷனல் ஷெங்கன் விசா
    • வரையறுக்கப்பட்ட பிராந்திய செல்லுபடியாகும் விசாக்கள்

ஷெங்கன் டிராவல் இன்சூரன்ஸ் வைத்திருப்பதன் நன்மைகள் என்ன?

டிராவல் இன்சூரன்ஸ் என்பது வெளிநாட்டு எல்லைகளில் உதவுவதற்கான நம்பகமான ஆதாரமாகும். இது மருத்துவ உதவியை வழங்குகிறது மற்றும் விமான ரத்து செலவுகள், விமானங்களில் தாமதம், லக்கேஜ்கள் / பாஸ்போர்ட் இழப்பு போன்ற பல நன்மைகளை உள்ளடக்கியது.