ஆம் ஆத்மி பீமா யோஜனா பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
1.3 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில், உழைக்கும் மக்களில் 22% பேர் சர்வதேச தினசரி ஊதிய அளவுகோலான ரூ.143-ஐ விட குறைவாக சம்பாதிக்கின்றனர்.
தொழிலாளர்களில் பெரும்பாலோர் எதிர்பாராத ஹெல்த் அவசரநிலைகளின் போது முற்றிலும் ஆதரவற்ற நிலையில் கைவிடப்படுகிறார்கள். இதனால் அவர்களின் குடும்பம் சம்பாதிக்கும் ஆதாரத்தை இழக்கிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், ஆம் ஆத்மி பீமா யோஜனா திட்டத்தை, மத்திய அரசு கொண்டு வந்தது.
இந்த திட்டம் என்ன, அது எவ்வாறு செயல்படுகிறது என்று யோசிக்கிறீர்களா?
எங்கள் வழிகாட்டியை தொடர்ந்து படியுங்கள்.
ஆம் ஆத்மி பீமா யோஜனா (AABY) என்றால் என்ன?
ஆம் ஆத்மி பீமா யோஜனா திட்டம் அமைப்புசாரா தொழிலாளர்களின் நலனுக்காக இந்திய அரசால் அக்டோபர் 2, 2007 அன்று தொடங்கப்பட்டது. இந்த சமூக பாதுகாப்புத் திட்டம் குறைந்த வருவாய் பிரிவினருக்கு உடல்நலப் பிரச்சனைகள் மற்றும் இறப்புக்கு எதிராக நிதி உதவியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தெருவோர வியாபாரிகள், கட்டுமானத் தொழிலாளர்கள், மீனவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், நெசவாளர்கள், தோல் தொழிலாளர்கள் போன்றோர் எந்தச் சட்டத்தின் கீழும் பதிவு செய்யப்படவில்லை என்பதைக் கருத்தில் கொண்டு இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. இதனால், அமைப்பு சார்ந்த தொழிலாளர்களை உள்ளடக்கிய அரசு இன்சூரன்ஸ் திட்டங்களை அவர்கள் தவறவிடுகின்றனர்.
பிரதான் மந்திரி ஆம் ஆத்மி பீமா யோஜனா திட்டத்தின் கீழ் என்ன பயன் கிடைக்கிறது?
இப்போது நீங்கள் இந்த அரசு உதவி பெறும் திட்டத்திலிருந்து எந்த வகையான பாதுகாப்பைப் பெறலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கலாம், இல்லையா?
உங்கள் சந்தேகங்களைத் தெளிவுபடுத்தும் வகையில் காப்பீட்டுத் தொகையுடன் செல்லுபடியாகும் சூழ்நிலைகளை விவரிக்கும் அட்டவணை இங்கே.
அவசரகால வகை | இன்சூரன்ஸ் செய்யப்பட்ட தொகை |
---|---|
விபத்து காரணமாக மரணம் நேரிடுதல் | Rs.75000 |
இயற்கை மரணம் | Rs.3000 |
விபத்தில் பகுதி ஊனமடைதல் | Rs.37500 |
விபத்தில் முழுமையாக ஊனமடைதல் | Rs.75000 |
மேற்கூறிய சலுகைகளுக்கு மேலதிகமாக, இன்சூரன்ஸ் செய்யப்பட்ட நபரின் சந்ததியினருக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டாலும் மற்றும் ஸ்காலர்ஷிப் நன்மையையும் இலவசமாகப் பெறலாம். ஆம் ஆத்மி பீமா யோஜனா திட்டத்தின் கீழ் ஒரு குழந்தைக்கு மாதந்தோறும் ரூ.100 வழங்கப்படுகிறது. இது 2 குழந்தைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேலும் அவர்கள் இருவரும் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்க வேண்டும்.
ஏ.ஏ.பி.ஒய் (AABY)-இன் கீழ் விதிவிலக்குகள்
தனிநபர்களிடையே ஒரு பொதுவான தவறான கருத்து என்னவென்றால், ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டம் என்பதால், இது அனைத்து வகையான மருத்துவ செலவுகளையும் ஈடுசெய்யும். இருப்பினும், மற்ற அனைத்து மருத்துவ இன்சூரன்ஸ் பாலிசிகளையும் போலவே, ஆம் ஆத்மி பீமா யோஜனாவிலும் குறிப்பிட்ட விலக்குகள் உள்ளன.
இந்த திட்டத்தின் கீழ் வராத நிபந்தனைகள்/ சூழ்நிலைகளின் பட்டியல் பின்வருமாறு.
- மருத்துவமனையில் சேர்க்கும் செலவு
- கர்ப்பம் மற்றும் பிரசவம்
- போதைப்பொருள் துஷ்பிரயோகம் காரணமாக மரணம் அல்லது உடல் ஊனம்
- உயிரியல், இரசாயன அல்லது கதிரியக்க ஆயுதங்களால் ஏற்படும் காயம்
- மன நோய்
- தீவிர விளையாட்டுகளில் பங்கேற்பதால் ஏற்படும் காயம்
- தற்கொலை அல்லது சுயமாக காயம் ஏற்படுத்திக் கொள்ளுதல்
- குற்றச் செயல்களால் ஏற்படும் மரணம் அல்லது இயலாமை
- போர் அல்லது போர் போன்ற சூழ்நிலைகளில் காயம்
மேலே உள்ள பட்டியலில் இருந்து, இந்த திட்டத்திலிருந்து உங்கள் குடும்பம் எவ்வாறு பயனடையலாம் என்பதைப் பற்றிய தெளிவான யோசனையை நீங்கள் பெறலாம்.
ஆம் ஆத்மி பீமா யோஜனா (AABY) சிறப்பம்சங்கள்
பாலிசி சேர்ப்புகள் மற்றும் விலக்குகளைத் தவிர, இந்த இன்சூரன்ஸ் திட்டத்தின் வேறு சில முக்கிய பண்புகளின் பட்டியல் இங்கே.
- ஏ.ஏ.பி.ஒய் (AABY)-இன் முதன்மை குறிக்கோள், நகர்ப்புற ஹெல்த்கேரை அணுகுவதற்கான வழிகள் இல்லாத நபர்களுக்கு சமூக பாதுகாப்பை வழங்குவதாகும்.
- இந்த பாலிசியானது தற்செயல் வகையைப் பொறுத்து மாறுபடும் நிலையான இன்சூரன்ஸ் தொகையை உள்ளடக்கியது.
- இந்த முழு கவரேஜ் தொகையும் ஒரு முறை கிளைமில் செலுத்தப்படுகிறது.
- ஆம் ஆத்மி பீமா யோஜனா ஒரு குடும்பத்திற்கு ஒரு உறுப்பினருக்கு மட்டுமே பொருந்தும். எனவே, மற்றொரு குடும்ப உறுப்பினர் ஏற்கனவே அதன் பலனை பெற்றிருந்தால், குறிப்பிடப்பட்ட நன்மைகளைப் பெற முடியாது.
- ஆர்வமுள்ள நபர்கள் இந்தத் திட்டத்தை லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (LIC) மூலம் மட்டுமே வாங்க முடியும். ஏனெனில் தற்போது இந்தத் திட்டத்தை வழங்கும் ஒரே இன்சூரன்ஸ் நிறுவனம் இதுவாகும்.
இந்த திட்டத்தின் முக்கிய பண்புகளை இப்போது நீங்கள் அறிந்திருக்கிறீர்கள், அதன் நன்மைகளைப் பார்க்க வேண்டிய நேரம் இது.
ஆம் ஆத்மி பீமா யோஜனா (AABY) நன்மைகள்
இந்த இன்சூரன்ஸ் திட்டத்தின் சில முக்கிய நன்மைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
- மானியம் மற்றும் மலிவு விலை பிரீமியங்கள்: மற்ற இன்சூரன்ஸ் பாலிசிகளுடன் ஒப்பிடும்போது இந்தத் திட்டம் மிகவும் மலிவு விலையில் வருகிறது. இதில் 50% அரசாங்கத்தால் வழங்கப்படும். பிரீமியங்கள் பற்றிய பிரிவின் கீழ் இந்த அம்சத்தைப் பற்றி விரிவாகப் பேசியுள்ளோம்.
- உடனடி உதவி: திட்ட உறுப்பினர்களின் டிஜிட்டல் டேட்டாபேஸ் தேவைக்கேற்ப தகவல் பரிமாற்றத்தை எளிதாக்குகிறது. பாலிசிதாரர்கள் தங்கள் அருகில் உள்ள எல்.ஐ.சி (LIC) கிளையை எளிதாக தொடர்பு கொண்டு தீர்வு காணலாம்.
- தொந்தரவு இல்லாத பதிவு: விண்ணப்பம் மற்றும் சேர்க்கை விரிவான ஆவணங்களை உள்ளடக்குவதில்லை.
- எளிய கிளைம் செயல்முறை: பதிவுச் செயல்முறையைப் போலவே, ஏ.பி.பி.ஒய் (ABBY) கார்டு வழியாக கிளைமைப் பதிவு செய்வதற்கான செயல்முறையும் எளிதாக்கப்படுகிறது.
இருப்பினும், வருமானம், வயது மற்றும் தொழிலுக்கான குறிப்பிட்ட அளவுகோல்களை நீங்கள் பூர்த்தி செய்தால் மட்டுமே இந்த நன்மைகளைப் பெற முடியும் என்பதை நினைவில் கொள்ளவும்.
ஆம் ஆத்மி பீமா யோஜனாவின் கீழ் எந்தத் தொழில்கள் வருகின்றன?
ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, இந்த திட்டம் முதன்மையாக குறைந்த வருமானம் கொண்ட குழுவைச் சேர்ந்த தனிநபர்கள் மீது கவனம் செலுத்துகிறது.
இருப்பினும், நீங்கள் குறிப்பிட்ட விவரங்களைத் தேடுகிறீர்களா என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஆம் ஆத்மி பீமா யோஜனா சமூகப் பாதுகாப்பை யாருக்கு வழங்குகிறது என்பதை நீங்கள் அறிய விரும்பினால், பின்வரும் பட்டியலைப் பார்க்கவும்.
- ராஷ்ட்ரிய ஸ்வஸ்திய பீமா யோஜனாவின் கீழ் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்கள்
- மீனவர்கள்
- பட்டாசு தொழிலாளர்கள்
- காகித தயாரிப்பு உற்பத்தியாளர்கள்
- விவசாயிகள்
- போக்குவரத்து ஓட்டுநர்கள் சங்கம்
- அங்கன்வாடி ஆசிரியர்கள்
- மரப் பொருட்கள் உற்பத்தியாளர்
- போக்குவரத்து தூய்மைப் பணியாளர்கள்
- தூய்மைப் பணியாளர்கள்
- ஆட்டோ ஓட்டுனர்கள் அல்லது ரிக்ஷாகாரர்கள்
- வெளிநாட்டு இந்தியத் தொழிலாளர்கள்
- மண் பொம்மைகள் உற்பத்தியாளர்கள்
- பீடித் தொழிலாளர்கள்
- சுய உதவி குழுக்களுடன் தொடர்புடைய பெண்கள்
- செங்கல் சூளை தொழிலாளர்கள்
- வன ஊழியர்கள்
- சுமைத் தூக்குபவர்கள்
- பாதுகாவலர்கள்
- பெண் தையல்காரர்கள்
- தச்சர்கள்
- கைவினைக் கலைஞர்கள்
- சுயதொழில் செய்யும் உடல் ஊனமுற்றோர்
- மலைவாழ் பெண்கள்
- எஸ்.இ.டபிள்யூ.ஏ (SEWA) உடன் தொடர்புடைய அப்பளத் தொழிலாளர்கள்
- மெழுகுவர்த்தி உற்பத்தியாளர்கள்
- ஆடு வளர்ப்பவர்கள்
- கைத்தறி நெசவாளர்கள்
- உப்பு உற்பத்தியாளர்கள்
- கள் இறக்குபவர்கள்
- வெற்றிலை சேகரிப்பாளர்கள்
- செருப்பு தைக்கும் தொழிலாளிகள்
- தோல் மற்றும் தோல் பதனிடும் தொழிலாளர்கள்
- ரப்பர் மற்றும் நிலக்கரி பொருட்களை அச்சிடுவதில் பணிபுரியும் நபர்கள்
- தோட்டத் தொழிலாளர்கள்
- பட்டு வளர்ப்பு ஊழியர்கள்
- விசைத்தறி தொழிலாளர்கள்
- இளநீர் வியாபாரிகள்
- முதன்மை பால் உற்பத்தியாளர்கள்
- ஜவுளி ஊழியர்கள்
- கட்டுமானத் தொழிலாளர்கள்
- தோல் பொருட்கள் உற்பத்தியாளர்கள்
மேற்கூறிய தொழில்களில் ஏதேனும் ஒன்றைச் சேர்ந்தவர் என்பதைத் தவிர, இந்த இன்சூரன்ஸ் திட்டத்திற்கு தகுதி பெற நீங்கள் சில தகுதிகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்.
தகுதி வரம்பு
வெற்றிகரமான அப்ளிகேஷனை அனுபவிப்பதற்கான நிபந்தனைகளைப் பாருங்கள்.
- சாத்தியமான இன்சூரன்ஸ் செய்யப்பட்ட உறுப்பினர் 18-59 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள (BPL) குடும்பத்தைச் சேர்ந்தவர், கிராமப்புற நிலமற்ற குடும்பம் (RLH) அல்லது குறிப்பிடப்பட்ட ஏதேனும் தொழில் குழுக்களில் ஈடுபட்டிருக்க வேண்டும்.
- வருமானம் ஈட்டும் ஒரே உறுப்பினராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் விண்ணப்பிக்கும் தனிநபர் குடும்பத் தலைவராக இருக்க வேண்டும்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இந்தத் திட்டம் இருக்கும் இடம் பற்றி முழுமையாகத் தெரியாமல் இருந்தால், உங்கள் முதல் முறை விண்ணப்பத்திற்கான வழிகாட்டி இதோ.
ஆம் ஆத்மி பீமா யோஜனாவிற்கு எப்படி விண்ணப்பிப்பது?
ஆம் ஆத்மி பீமா யோஜனாவிற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கொடுக்கப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றவும்.
படி 1: லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்திாயவின் (LIC) அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லவும்.
படி 2: முகப்புப் பக்கத்தில் “எல்.ஐ.சி (LIC) ஆம் ஆத்மி பீமா யோஜனா ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
படி 3: அடுத்த திரையில், சரியான விவரங்களுடன் விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.
படி 4: தேவையான அனைத்து ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களைப் பதிவேற்றி, "சமர்ப்பி" என்பதைக் கிளிக் செய்யவும்.
இணைய அணுகல் இல்லாத நபர்கள் ஏ.ஏ.பி.ஒய் (AABY) விண்ணப்ப நடைமுறையை ஆஃப்லைனில் முடிக்கலாம். அதற்கான படிகள் பின்வருமாறு.
படி 1: விண்ணப்பப் படிவத்தைப் பெற உங்கள் அருகிலுள்ள என்.ஐ.சி (NIC) நோடல் ஏஜென்சியைப் பார்வையிடவும்.
படி 2: ஆன்லைன் செயல்முறையைப் போலவே, இங்கேயும் சரியான தகவலுடன் இந்த விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.
படி 3: விண்ணப்பப் படிவத்துடன் தேவையான அனைத்து ஆவணங்களின் நகல்களையும் இணைக்கவும்.
படி 4: உங்கள் அருகிலுள்ள எல்.ஐ.சி (LIC) அலுவலகத்திற்குச் சென்று, முன்பு குறிப்பிட்டபடி சில ஆவணங்களைச் சமர்ப்பிக்கவும்.
இதோ உங்களுக்காக மேலும் தகவல்!
இப்போது, இந்தத் திட்டத்தைப் பற்றிய கூடுதல் தகவல் உங்களுக்குத் தேவைப்பட்டால், 9222492224 அல்லது 56767877 என்ற எண்ணுக்கு பின்வரும் எஸ்.எம்.எஸ் (SMS) அனுப்பவும்:
“எல்ஐசிஹெல்ப் <Policy Number>.”
ஏ.ஏ.பி.ஒய் (AABY)-க்கு விண்ணப்பிக்கும்போது என்னென்ன கட்டாய ஆவணங்கள் தேவை?
விண்ணப்பத்திற்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும் கண்காணிப்பது முதல் முறையாக விண்ணப்பிப்பவருக்கு கடினமாக இருக்கலாம். உங்கள் கவலையை நிவர்த்தி செய்ய, விண்ணப்பிக்கும் முன் நீங்கள் கையில் வைத்திருக்க வேண்டிய அனைத்து தேவையான ஆவணங்களின் பட்டியல் கீழே உள்ளது.
- ரேஷன் கார்டு
- ஆதார் அட்டை
- வாக்காளர் அடையாள அட்டை
- வருமானச் சான்றிதழ்
- நாமினி விண்ணப்பப் படிவம்
ஏதேனும் கூடுதல் ஆவணத்தின் தேவையை உறுதிசெய்து, உங்கள் விண்ணப்பப் படிவத்துடன் அதை வழங்குவதை உறுதிசெய்யவும்.
வெற்றிகரமான விண்ணப்ப நடைமுறையை நீங்கள் செய்தவுடன், செலுத்த வேண்டிய பிரீமியத்தைப் பற்றி நீங்கள் கவலைப்படலாம். சரி, நாங்கள் அதையும் உங்களுக்காக இந்தக் கட்டுரையில் உள்ளடக்கியுள்ளோம்!
ஆம் ஆத்மி பீமா யோஜனாவின் பிரீமியம் எவ்வளவு?
மற்ற இன்சூரன்ஸ் திட்டத்தைப் போலவே, ஏ.ஏ.பி.ஒய் (AABY) திட்டமும் பெயரளவில் இருந்தாலும் பிரீமியங்களுடன் வருகிறது. ஆம், இந்தத் திட்டம் குறைந்த வருமானம் பெறும் தொழிலாளர்களின் வாழ்க்கையை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டிருப்பதால், இன்சூரன்ஸ் தொகையான ரூ.30,000-க்கு மட்டும் ஆண்டு பிரீமியம் ரூ.200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல், இந்த தொகையில் 50% ஏற்கனவே மத்திய அரசால் செலுத்தப்பட்டுள்ளது.
கூடுதலாக, பின்வரும் வகைகளை சேர்ந்த நபர்கள் அடுத்தடுத்த பலன்களை அனுபவிக்க முடியும்.
- கிராமப்புற நிலமற்ற குடும்பங்கள் (RLH): மீதமுள்ள 50% பிரீமியத்தை யூனியன் பிரதேச/மாநில அரசு செலுத்துகிறது.
- அங்கீகரிக்கப்பட்ட தொழிற்கல்வி குழுக்கள்: மீதமுள்ள 50% பிரீமியத்தை நோடல் ஏஜென்சி அல்லது யூனியன் பிரதேச/மாநில அரசு செலுத்துகிறது.
எனவே, மேலே குறிப்பிட்டுள்ள குழுக்களில் நீங்கள் ஒரு பகுதியாக இருந்தால், ஆம் ஆத்மி பீமா யோஜனாவின் கீழ் முழுத் திட்டத்தின் பலன்களையும் பூஜ்ஜிய பிரீமியத்திற்கு எதிராகப் பெறலாம்!
ஏ.ஏ.பி.ஒய் (AABY) திட்டத்தின் கீழ் கிளைம் செய்வது எப்படி?
பாதிக்கப்பட்ட தற்செயல் வகையைப் பொறுத்து, உங்கள் இன்சூரன்ஸ் கிளைம் செயல்முறை வேறுபடலாம்.
இங்கே, நீங்கள் கிளைமை பெறக்கூடிய அனைத்து சாத்தியமான சூழ்நிலைகளையும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளையும் நாங்கள் பட்டியலிடுகிறோம்.
1) விபத்து அல்லது இயற்கை காரணங்களால் மரணம்
காப்பீடு செய்யப்பட்ட நபரின் இறப்புக்குப் பிறகு, ஒரு நாமினி பின்வரும் படிகளில் இறப்புக்கான கிளைமை செய்யலாம்.
- படி 1: ஆம் ஆத்மி பீமா யோஜனா இறப்பு கிளைம் படிவத்தை நிரப்பவும்.
- படி 2: பாலிசிதாரரின் அசல் இறப்பு சான்றிதழ் மற்றும் சான்றொப்பமிட்ட நகலுடன் சம்பந்தப்பட்ட நோடல் ஏஜென்சி அதிகாரியிடம் சமர்ப்பிக்கவும்.
- படி 3: சரிபார்ப்புக்குப் பிறகு, வழங்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் இறந்த பாலிசிதாரரின் தகுதிச் சான்றிதழுடன் கிளைம் படிவத்தை அதிகாரி சமர்ப்பிப்பார்.
தற்செயலான மரணம் ஏற்பட்டால், நியமனதாரர்கள் பிரேத பரிசோதனை அறிக்கை, எஃப்.ஐ.ஆர், போலீஸ் விசாரணை அறிக்கை மற்றும் இறுதி போலீஸ் அறிக்கை ஆகியவற்றின் நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்க.
2) பகுதி அல்லது முழு இயலாமை
ஊனமுற்றோருக்கான கிளைமை தாக்கல் செய்ய, காப்பீடு செய்தவர் ஆம் ஆத்மி பீமா யோஜனா கிளைம் படிவத்தைத் தவிர பின்வரும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
- போலீஸ் எஃப்.ஐ.ஆர் (FIR) போன்ற விபத்து ஆதாரங்களுடன் கூடிய ஆவணங்கள்.
- இயலாமையின் விவரங்கள் மற்றும் வகையைக் குறிப்பிடும் மருத்துவச் சான்றிதழ். இது பதிவுசெய்யப்பட்ட அரசு எலும்பியல் அல்லது அரசு சிவில் அறுவை சிகிச்சை நிபுணரால் வழங்கப்பட வேண்டும்.
- ஸ்காலர்ஷிப் சலுகை
உங்கள் குழந்தை ஏ.ஏ.பி.ஒய் (AABY)-இன் கீழ் உதவித்தொகை நன்மை பெற தகுதியுடையவராக இருந்தால், நீங்கள் ஆம் ஆத்மி பீமா யோஜனா ஸ்காலர்ஷிப் ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து உங்கள் நோடல் ஏஜென்சியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
உங்கள் குழந்தை தகுதி வரம்புகளைத் தாண்டிவிட்டாரா என்பதை நோடல் நிறுவனம் கிராஸ் செக் செய்ய ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் இந்த நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். அடையாளம் காணப்பட்ட மாணவர்களின் பட்டியலை நிறுவனம் எல்.ஐ.சியின் ஓய்வூதியம் மற்றும் குழு திட்ட பிரிவுக்கு அனுப்பும்.
இந்த பட்டியலில் ஒவ்வொரு பயனாளிக்கும் எதிராக பின்வரும் விவரங்கள் இருக்க வேண்டும்.
- மாணவரின் பெயர்
- வகுப்பு
- பள்ளியின் பெயர்
- இன்சூரன்ஸ் செய்யப்பட்ட நபர்
- ஆம் ஆத்மி பீமா யோஜனா பாலிசி எண்
- என்.இ.எஃப்.டி (NEFT) எண்
- இன்சூரன்ஸ் செய்யப்பட்ட உறுப்பினரின் உறுப்பினர் எண்.
தகுதியான மாணவர்களின் முழு பட்டியலையும் பெற்றவுடன், எல்.ஐ.சி (LIC) ஸ்காலர்ஷிப் தொகை என்.இ.எஃப்.டி (NEFT) மூலம் பாலிசிதாரரின் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படும்.
இந்த முழு செயல்முறையின் பல சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, ஆர்வமுள்ள நபர்களுக்கு குழப்பங்கள் மற்றும் கேள்விகள் இருப்பது சாத்தியமாகும்.
அதற்கு, எல்.ஐ.சி (LIC) அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் கிடைக்கும் ஆம் ஆத்மி பீமா யோஜனா ஹெல்ப்லைன் எண்ணை நீங்கள் தொடர்பு கொள்ளலாம். உங்கள் அருகிலுள்ள எல்.ஐ.சி (LIC) கிளையின் தொடர்பு விவரங்கள் மூலம் உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
எந்த நிலைமைகளின் கீழ் பகுதி ஊனம் மற்றும் நிரந்தர முழு இயலாமையின் கீழ் நான் கவரேஜைப் பெறலாம்?
பகுதி இயலாமை என்பது ஒரு நபர் இன்னும் வாழ்க்கைக்காக வேலை செய்யக்கூடிய நிலையைக் குறிக்கிறது மற்றும் ஒரு கண் அல்லது மூட்டு இழப்பை உள்ளடக்கியது. நிரந்தர முழு இயலாமை என்பது இரண்டு கண்கள், இரு கைகால்கள் அல்லது ஒரு கண் மற்றும் ஒரு கால் இழப்பைக் குறிக்கிறது. ஊனத்தின் வகையைப் பொறுத்து, இன்சூரன்ஸ் செய்யப்பட்ட நபர்கள் அதற்கேற்ப இன்சூரன்ஸ் தொகையைப் பெறலாம்.
ஏ.ஏ.பி.ஒய் (AABY) விண்ணப்பத்தின் போது நான் ஒரு நாமினியை நியமிக்க வேண்டுமா?
ஆம், இந்த இன்சூரன்ஸ் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் போது ஒரு நாமினியை நியமிப்பது கட்டாயமாகும். இதனால் இன்சூரன்ஸ் செய்யப்பட்ட நபரின் மரணத்திற்குப் பிறகு கிளைம் செய்ய முடியும். இதற்காக, சமர்ப்பிப்பதற்கு முன்பு உங்கள் விண்ணப்பப் படிவத்துடன் வழங்கப்பட்ட நாமினேஷன் படிவத்தை முறையாக நிரப்ப வேண்டும். இறப்பு கிளைமின் போது எல்.ஐ.சி. (LIC)-க்கு மாற்றப்படும் வரை இந்த படிவம் நோடல் ஏஜென்சியிடம் இருக்கும்.
சமூகப் பாதுகாப்பு நிதியத்தின் பங்கு என்ன?
பொருளாதாரத்தில் பின்தங்கிய தொழிலாளர்களுக்கு ஏ.ஏ.பி.ஒய் (AABY) இன்சூரன்ஸ் திட்டங்களை மலிவு விலையில் வழங்குவதே இதன் நோக்கம். இதனால்தான் பிரீமியம் தொகையில் பாதியை மானியமாக வழங்க மத்திய அரசு சமூகப் பாதுகாப்பு நிதியத்தை அமைத்தது.
எனது குடும்பத்தின் முந்தைய பாலிசிதாரர் இறந்த பிறகு நான் மீண்டும் ஆம் ஆத்மி பீமா யோஜனாவின் கீழ் விண்ணப்பிக்க முடியுமா?
இல்லை, ஆம் ஆத்மி பீமா யோஜனாவில் ஒரு குடும்பத்திற்கு ஒரு விண்ணப்பம் வரை மட்டுமே செல்லுபடியாகும். உங்கள் குடும்பத்தின் பாலிசிதாரர் இறந்துவிட்டால், இறப்பு கிளைமைத் தாக்கல் செய்வதன் மூலம் தற்போதுள்ள கவரேஜில் இருந்து நீங்கள் பயனடையலாம். இருப்பினும், இந்த திட்டத்தின் நன்மையை இரண்டாவது முறையாகப் பெற நீங்கள் விண்ணப்பிக்க முடியாது.