ஹெல்த் இன்சூரன்ஸிற்கு ஆன்லைனில் வாங்கவும்

டிஜிட் ஹெல்த் இன்சூரன்ஸிற்கு மாறுங்கள்.

லாங் டெர்ம் ஹெல்த் இன்சூரன்ஸ் வாங்குவதை ஏன் கருத்தில் கொள்ள வேண்டும்?

உலத்தையே உலுக்கிய சமீபத்திய தொற்றுநோய்களால், முன்னெப்போதும் இல்லாத வகையில் சுகாதாரப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை நாம் அறிந்தோம். எப்பொழுதும் இருந்து வரும் சுகாதார சேவைகளின் விலை உயர்ந்து வருவது, தொற்றுநோய்களின் போது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது மற்றும் ஹெல்த் இன்சூரன்ஸின் முக்கியத்துவத்தை நாம் அனைவரும் அறிய உதவியது.

ஹெல்த் இன்சூரன்ஸ் என்பது நம்மைச் சுற்றி எப்போதும் இருக்க வேண்டிய "கவச்" ஆகும், மேலும் ஒவ்வொரு இன்சூரன்ஸ் புதுப்பித்தலுக்கும் நாம் நன்கு தயாராக இருக்க வேண்டும். மற்றொரு விருப்பம், வழக்கமான முறையில் ஆண்டுதோறும் புதுப்பிப்பதற்குப் பதிலாக, ஒரு வருடத்திற்கும் மேலாக செல்லுபடியாகும் லாங் டெர்ம் திட்டங்களை பெறலாம்.

தொடர்ந்து புதுப்பித்தல் பற்றிய பதற்றத்தில் இருந்து கவலையின்றி இருப்பதன் பலனைத் தவிர, லாங் டெர்ம் திட்டங்கள், வருடாந்திரத் திட்டங்களுக்களைக் காட்டிலும் வேறு சில பலன்களைக் கொண்டுள்ளன.

 

லாங் டெர்ம் ஹெல்த் இன்சூரன்ஸ் என்றால் என்ன?

நீண்ட கால ஹெல்த் இன்சூரன்ஸ், பெயருக்கு ஏற்றாற்போல், ஹெல்த். இன்சூரன்ஸின் நிலையான ஓராண்டு காலத்தை விட அதிக கால அளவைக் கொண்டுள்ளது. அதன் காலம் பொதுவாக 2-3 ஆண்டுகள் வரை இருக்கும். எனவே, நீண்ட காலத்திற்கு எந்தவொரு உடல்நலத் தேவைகளுக்கு எதிராகவும் உங்களுக்கு நிதிப் பாதுகாப்பு உள்ளது.

லாங் டெர்ம் ஹெல்த் இன்சூரன்ஸின் அம்சங்கள்

பாலிசி முடிந்துவிடும் ஆபத்து குறைவு

மனித இனத்தின் மறதியின் தன்மையைக் கருத்தில் கொண்டு, முதல் மற்றும் முக்கிய நன்மை இதுதான்! பாலிசி காலாவதியானால் ஹெல்த் இன்சூரன்ஸை நிறுத்தப்படுவது மட்டுமல்லாமல், காத்திருப்பு காலத்தை மீண்டும் முதலில் இருந்து தொடங்குவது போன்ற பிற தொந்தரவுகளையும் நமக்குத் தருகிறது. லாங் டெர்ம் ஹெல்த் இன்சூரன்ஸுடன், பிரீமியம் செலுத்துதலின் தவணை குறைக்கப்படுகிறது, இது பிரீமியம் கொடுப்பனவுகளைத் தவறவிடுவதற்கான வாய்ப்புகளை மேலும் குறைக்கிறது.

பிரீமியத்தில் தள்ளுபடி

லாங் டெர்ம் திட்டத்தை வாங்குவதன் மற்றொரு குறிப்பிடத்தக்க நன்மை, நிறுவனம் வழங்கும் தள்ளுபடி பிரீமியம் ஆகும். பெரும்பாலான நேரங்களில், ஒரு ஷார்ட் டெர்ம் பாலிசிக்கு ஆண்டுதோறும் செலுத்தப்படும் மொத்த பிரீமியத்தை விட லாங் டெர்ம் பாலிசிக்கு செலுத்தப்படும் பிரீமியம் மிகவும் குறைவாக இருக்கும்.

குறைவான ஆவணங்கள்

ஒரு முறை ஆவணங்கள் சமர்ப்பித்தால், 2-3 ஆண்டுகளுக்கு ஆவண சமர்ப்பித்தல் வேலையில்லை. ஒவ்வொரு ஆண்டும் உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸைப் புதுப்பிப்பதை விட குறைவான எண்ணிக்கையிலான புதுப்பித்தல்களுக்கு குறைவான ஆவணங்களேத் தேவைப்படுகிறது.

சந்தை விலை மாற்றங்களிலிருந்து பாதுகாப்பானது

பெரும்பாலான நிதித் தயாரிப்புகளைப் போலவே, சந்தை மற்றும் அதன் விதிமுறைகளில் ஏற்படும் மாற்றங்களின்படி, ஹெல்த் இன்சூரன்ஸ்க் பாலிசியின் விலையும் விதிமுறைகளும் மாறிக்கொண்டே இருக்கலாம். நீங்கள் லாங் டெர்ம் பாலிசியை வாங்கும் போது, தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்திற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் முதலிலேயே நிர்ணயிக்கப்படும். மற்றும் பிரீமியம் மாறுமா? இல்லை, மதிப்பீட்டை முடித்த பிறகு நீங்கள் உடனேயே பணம் செலுத்திவிடுகிறீர்கள். அதனால், மாற்றம் இருக்காது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கும் பொருந்துமா? லாங் டெர்ம் ஹெல்த் இன்சூரன்ஸில் ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கு எதிராக நீங்கள் கிளைம் செய்ய முடியுமா?

ஆம், வருடாந்தர ஹெல்த் திட்டத்தில் உள்ள அதே முறைதான். லாங் டெர்ம் ஹெல்த் இன்சூரன்ஸிலும் ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கு காப்பீடு உள்ளடக்கப்படுகிறது, ஆனால், தேவையான காத்திருப்பு காலத்துடன் வருகிறது.

மூத்த குடிமக்களுக்கு லாங் டெர்ம் இன்சூரன்ஸ் தேர்வு உள்ளதா?

மூத்த குடிமக்கள் அதிக ஆபத்துள்ள குழுவாகக் கருதப்படுகிறார்கள், எனவே இன்சூரர்கள் பொதுவாக மூத்த குடிமக்களுக்கு லாங் டெர்ம் திட்டங்களை வழங்குவதில்லை. இருப்பினும், விதிகள் மற்றும் நிபந்தனைகள் ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொன்றுக்கு வேறுபடுவதால், உங்கள் இன்சூரன்ஸ் வழங்குனருடன் நீங்கள் எப்போதும் சரிபார்க்கலாம்.