ப்ரீ-ரிட்டைரீஸ் தங்கள் புரொபஷனல் வாழ்க்கையின் எல்லையை நெருங்கும்போது, அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு வாழப்போகும் வாழ்க்கைக்கான திட்டமிடுதலில் முழு கவனம் செலுத்த தொடங்குகிறார்கள். அந்தத் தருணத்தில் அவர்கள் கவனமாக ஆராய வேண்டிய ஒரு முக்கியமான அம்சம் ஹெல்த் இன்சூரன்ஸ் கவரேஜ் என்றால் மிகையாகாது.
எம்ப்ளாயரால் வழங்கப்பட்ட ஹெல்த் இன்சூரன்ஸ் முடிவுக்கு வரும் நிலையில், ப்ரீ-ரிட்டைரீஸ் தான் ஓய்வுபெற்ற பொற்காலங்களில் அவர்களது மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ற காம்ப்ரிஹென்சிவ் புரட்டெக்ஷனை உறுதி செய்யும் பர்சனல் ஹெல்த் இன்சூரன்ஸைப் பெறுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது அவசியம். இந்த முக்கிய மாற்றமானது ஒருவர் நன்கு தகவலறிந்து எடுக்கப்படும் முதன்மையான முடிவுகளின் தேர்வு மற்றும் மாற்றத்துக்கு உட்பட்ட விருப்பங்கள் போன்றவற்றை வழிநடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் காலகட்டத்தில் ஹெல்த் இன்சூரன்ஸ் வாங்கும் போது ஓய்வு பெற்றவர்கள் நன்கு அலசி ஆராய வேண்டிய முக்கிய காரணிகளைப் பற்றி விவாதிப்போம்.
சரியான ஹெல்த் இன்சூரன்ஸைத் தேர்ந்தெடுப்பது என்பது மன அமைதியையும் நிதி பாதுகாப்பையும் தருவதுடன் ஓய்வூதியம் பெறுவதற்கும் தடையற்ற வழி செய்கிறது. ஓய்வுக்குப் பிறகு பர்சனல் ஹெல்த் கவரைத் தேர்ந்தெடுக்கும்போது கவனிக்க வேண்டிய அத்தியாவசிய காரணிகளை ஆராய்வோம்:
நீங்கள் ஓய்வுப் பெற்ற பிறகு வாழும் வாழ்க்கையில் உங்களுக்கான உடல்நலத் தேவைகள் மற்றும் பட்ஜெட் விருப்பங்களை மதிப்பிடுவதிலிருந்து தொடங்குங்கள். உங்களுக்குத் தேவையான கவரேஜ் வகையைத் தீர்மானிக்க உங்கள் வயது, ஏற்கெனவே உங்களுக்கு இருக்கும் உடல் நிலைகள், குடும்ப மருத்துவ வரலாறு மற்றும் வாழ்க்கை முறை போன்ற காரணிகளில் அதிக கவனம் செலுத்துங்கள்.
பர்சனல் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்கள் வழங்கும் காம்ப்ரிஹென்சிவ் பெனிஃபிட்கள் மற்றும் கவரேஜை மதிப்பிடுங்கள், அவை உங்கள் குறிப்பிட்ட இன்சூரன்ஸ் தேவைகளுடன் ஒத்துப்போகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும், ஓய்வு காலத்தில் உங்களது வருமானத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, உங்களால் பிரீமியம் தொகையைச் செலுத்தமுடியுமா என்பதை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
தெளிவான ஆரோக்கிய மற்றும் நிதி இலக்குகளை அமைப்பது பொருத்தமான ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பதில் உங்களுக்கு வழிகாட்டும்.
ஓய்வு காலத்தில் முதலாளியிடமிருந்து பர்சனல் ஹெல்த் இன்சூரன்ஸுக்கு மாறும்போது, முன்கூட்டியே தொடங்குவது மற்றும் இடைவெளிகளைத் தவிர்ப்பது என்பது நீங்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள்.
நீங்கள் ஓய்வுபெறும் தேதிக்கு முன்பிருந்தே சிறப்பாகத் திட்டமிடத் தொடங்குங்கள், ஒரு ப்ரீ-ரிட்டைரீயாக உங்கள் குறிப்பிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருத்தமான ஹெல்த் இன்சூரன்ஸ் விருப்பங்களை ஆராயுங்கள். உங்கள் முதலாளி வழங்கிய ஹெல்த் இன்சூரன்ஸ் முடிவடையும் போது கவரேஜில் எந்த சிக்கலும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், ஏனெனில் ஏதேனும் இடைவெளிகள் ஏற்பட்டால் அது ஓய்வு பெற்ற பிறகு எதிர்பாராத நிதி சுமைகளுக்கு வழிவகுக்கும்.
செயல்முறையை முன்கூட்டியே தொடங்குவதன் மூலமும், சரியான பாலிசியைத் தேர்ந்தெடுப்பதன் மூலமும், உங்கள் ஓய்வூதிய பயணம் முழுவதும் உங்கள் உடல்நலம் மற்றும் நிதி நல்வாழ்வை தடையின்றி போற்றி பேணலாம்.
பல்வேறு இன்சூரன்ஸ் நிறுவனங்களின் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்களை முழுமையாக ஆராய்ந்து ஒப்பிட்டுப் பாருங்கள்.
முதலாவதாக, ஏற்கனவே இருக்கும் உடல் நிலைகள் அல்லது எதிர்பாராமல் ஏற்படும் மருத்துவத் தேவைகள், உங்கள் உடல்நலத் தேவைகள், உங்கள் குடும்ப உறுப்பினர்களின் தேவைகள் போன்றவற்றையும் மதிப்பிடுங்கள். பொருத்தமான கவரேஜ், பெனிஃபிட்கள் மற்றும் மருத்துவமனைகளின் பெரிய நெட்வொர்க்கை வழங்கும் பல்வேறு பர்சனல் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்களை ஒப்பிட்டுப் பார்த்து உங்களுக்கு ஏற்ற திட்டத்தைத் தேர்ந்தெடுங்கள்.
லைஃப்டைம் ரீனியூவபிளிட்டி, மூத்த குடிமக்கள்-குறிப்பிட்ட பெனிஃபிட்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கென கஸ்டமைஸ் செய்துகொள்ள கூடிய திட்டங்கள் போன்ற அம்சங்கள் உள்ளதா எனப் பாருங்கள். பாலிசி உங்கள் பட்ஜெட்டிற்குள் பொருந்துகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், ஓய்வு காலத்தில் வருமானத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கு இடமளிக்க நெகிழ்வான பிரீமியம் செலுத்தும் விருப்பங்களுடன்.
ப்ரீ-ரிட்டைரியாக இருக்கும்போது, உங்கள் எதிர்கால வாழ்க்கையில் எதிர்பாராமல் ஏற்படும் கிரிட்டிகள் இல்னஸ்களுக்கான கவரேஜை வழங்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்களை ஆராய்வதும் விவேகமானது. உங்களுக்கு ஏற்படும் சவாலான காலங்களில் கூடுதல் செலவுகளை நிர்வகிக்க உதவும் இத்தகைய கவரேஜில் கடுமையான நோய்கள் கண்டறியப்பட்டவுடன் அதற்கான குறிப்பிட்ட தொகையை வழங்கப்படும்.
அதிக கவரேஜ் தொகைகளைக் கொண்ட திட்டங்களைத் தேடுங்கள். ஓய்வூதியத்தின் போது உங்களுக்குப் போதிய பாதுகாப்பு இருப்பதை உறுதிசெய்ய பாலிசி சேர்ப்புகள், எக்ஸ்க்ளூஷன்ஸ் (விலக்குகள்) மற்றும் காத்திருப்பு காலங்கள் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். சரியான கிரிட்டிகள் இல்னஸ் கவரேஜைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், இந்த முக்கியமான வாழ்க்கை மாற்றத்தின்போது உங்கள் உடல்நலம் மற்றும் நிதியைப் பாதுகாக்கலாம்.
உங்கள் ஓய்வுக்குப் பிறகு உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் இன்சூரன்ஸ் கவர் செய்ய விரும்பினால், ஃபேமிலி ஃப்ளோட்டர் இன்சூரன்ஸ் ஹெல்த் பிளான்களை வாங்குவது உகந்ததாக இருக்கும். இந்தப் பாலிசிகள் உங்கள் வாழ்க்கைத் துணை மற்றும் உங்களைச் சார்ந்துள்ள குழந்தைகளுக்கு ஒரே பிரீமியத்தின் கீழ் பாதுகாப்பை வழங்குவதுடன் செலவு-செயல்திறனையும் வசதியையும் வழங்குகிறது.
உங்கள் குடும்பத்தின் குறிப்பிட்ட ஹெல்த்கேர் தேவைகளை மதிப்பீடு செய்து, உகந்த கவரேஜை வழங்கும் பாலிசியைத் தேர்ந்தெடுங்கள். உங்கள் அன்புக்குரியவர்களுடன் கவலையற்ற, சிரமமற்ற ஓய்வூதிய வாழ்க்கை பயணத்தைப் பயணிக்க போதுமான கவரேஜைப் பெறும்போது நீங்கள் ஓய்வுப்பெற்ற பிறகு கிடைக்கும் வருமானத்திற்கு ஏற்ற பட்ஜெட்டுடன் பொருந்தக்கூடிய பிரீமியங்களை வாங்குவது சாலச்சிறந்தது.
பாலிசியில் உள்ள கோ-பேமெண்ட் மற்றும் சப்-லிமிட்கள் எனும் உட்பிரிவுகள் குறித்து கவனமாக இருங்கள்.
கோ-பேமெண்ட் என்பது இன்சூர் செய்யப்பட்டவர் அவரது வருமானத்திற்கு மீறி ஏற்க வேண்டிய மருத்துவ செலவுகளின் பகுதியைக் குறிக்கிறது, அதே நேரத்தில் சப்-லிமிட்கள் குறிப்பிட்ட மருத்துவ சேவைகள் அல்லது அறை வாடகைகளுக்கு என ஒரு வரம்பை விதிக்கின்றன.
இந்த உட்பிரிவுகளைப் புரிந்துகொள்வது என்பது ஓய்வு பெற்றவர்கள் அவர்களது பாக்கெட்டிலிருந்து செய்யப்படும் செலவுகளை மதிப்பிடுவதற்கும் அவர்கள் சமாளிக்கக்கூடிய கோ-பேமெண்ட் மற்றும் சப்-லிமிட்களுடன் கூடிய பாலிசியைத் தேர்ந்தெடுப்பதற்கும் உதவுகிறது. உங்கள் ஓய்வு காலங்களில் எதிர்பாராத நிதிச் சுமைகள் இல்லாமல் காம்ப்ரிஹென்சிவ் கவரேஜை உறுதி செய்ய குறைந்தபட்ச அல்லது கோ-பேமெண்ட் மற்றும் நியாயமான சப்-லிமிட்களுடன் கூடிய ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள்.
ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தில் நீங்கள் விரும்பும் இடங்களில் மருத்துவமனைகளின் பரந்த நெட்வொர்க் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
வருமானத்திற்கு மீறிய செலவுகளைத் தவிர்க்க உங்களுக்கு விருப்பமான மருத்துவமனைகள் பட்டியலிடப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கவும். கூடுதலாக, கேஷ்லெஸ் வசதியின் செயல்திறன் மற்றும் பயன்பாட்டின் எளிமையைச் சரிபார்க்கவும், ஏனெனில் இது கிளைம் செயல்முறையை எளிதாக்குகிறது மற்றும் உடனடி பேமெண்ட்களின் தேவையையும் நீக்குகிறது.
தடையற்ற நெட்வொர்க் மற்றும் கேஷ்லெஸ் வசதி மருத்துவ அவசரநிலைகளின் போது மன அமைதியை வழங்குகிறது, நிதி நெருக்கடி இல்லாமல் சரியான நேரத்தில் சிகிச்சையைப் பெறுவதையும் உறுதி செய்கிறது, உங்கள் ஓய்வுகால பயணத்தை ஆரோக்கியமானதாகவும் மன அழுத்தமற்றதாகவும் ஆக்குகிறது.
பல்வேறு ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளின் சிக்கல்களைப் புரிந்துகொள்ள ஒரு சான்றளிக்கப்பட்ட நிதி ஆலோசகர் அல்லது இன்சூரன்ஸ் எக்ஸ்பர்ட்டை அணுகவும்.
இன்சூரன்ஸ் பாலிசி வாங்கும் செயல்முறையை வழிநடத்தவும், தகவலறிந்த முடிவுகளை எடுக்கவும் அவர்களின் நிபுணர் வழிகாட்டலைப் பெறுங்கள். நம்பகமான இன்சூரன்ஸ் வழங்குநர்களுடன் இணைந்திடுங்கள், ஓய்வூதிய-குறிப்பிட்ட அம்சங்களை ஆராய்ந்து, தனித்துவமான மருத்துவ தேவைகளை நிவர்த்தி செய்ய உங்கள் பாலிசியை கஸ்டமர்களுக்கு ஏற்றவாறு கஸ்டமைஸ் செய்யுங்கள். கவலையற்ற ஓய்வூதிய பயணத்திற்கு சரியான ஹெல்த் இன்சூரன்ஸைப் பெற துறை சார்ந்த நிபணரது ஆலோசனை உதவும்.
ஓய்வுக்கு முந்தைய கட்டத்தில் பர்சனல் ஹெல்த் இன்சூரன்ஸைப் பெறுவது பாதுகாப்பான மற்றும் நிறைவான ஓய்வூதிய பயணத்தை நோக்கிய ஒரு முக்கியமான படியாகும்.
ஆரம்பகால திட்டமிடல் மற்றும் தகவலறிந்த முடிவு எடுப்பது என்பது முதலாளி வழங்கிய கவரேஜிலிருந்து ஓய்வு காலம் முழுவதும் உங்கள் உடல்நலம் மற்றும் நிதியைப் பாதுகாக்கும் பர்சனல் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்திற்கு மாறுவதற்கு ஒரு திறவுகோலாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.