பெற்றோர்களுக்கான ஹெல்த் இன்சூரன்ஸ்

டிஜிட் இன்சூரன்ஸிற்கு மாறுங்கள்

இந்தியாவில் உள்ள பெற்றோர்களுக்கான ஹெல்த் இன்சூரன்ஸ் பற்றி அனைத்தும்

வயது முதிர்ந்தவகளுக்கான ஹெல்த் கேர் வசதிகளுக்கு அதிகளவில் செலவாகிறது, இச்செலவானது பின்னர் அக்குடும்பத்தில் சம்பாதிக்கும் குடும்பத்தலைவர் மீது பெரும் நிதிச்சுமையாக அமைந்துவிடுகிறது. 

ஹெல்த் கேர் துறையில் மானியம் வழங்குவதற்காக, நம் நாட்டில் சுகாதாரத் துறைக்கு சுமார் ரூ.1.58 டிரில்லியன் டாலர்களை அரசாங்கம் ஒதுக்கியிருந்தாலும், உயர்தர சிகிச்சைகள் பெரும்பாலும் அதிக செலவுகளுக்கே வழிவகுக்கிறது.

இந்தியாவில் உள்ள பெற்றோருக்கு முதுமை காரணமாக ஏற்படும் நோய்களுக்காக ஆகும்             செலவுகளை சமாளிக்க ஹெல்த் இன்சூரன்ஸை தேர்ந்தெடுப்பதே பாதுகாப்பான வழியாகும். ஏனெனில், அத்தகைய ஹெல்த் இன்சூரன்ஸானது மருத்துவ செலவுகளை சுலபமாக சமாளிப்பதற்கான தனிப்பயனாக்கப்பட்ட விரிவான பயன்களை வழங்குகிறது.

குறிப்பாக ஒருவர் அவரது  வயது முதிர்ந்த பெற்றோரின் ஹெல்த் கேருக்கு ஏற்படும் செலவுகளை கவர் செய்ய வேண்டுமெனில் ஹெல்த் இன்சூரன்ஸ் கவர் அத்தியாவசிய  தேவைகளில் இன்றியமையாததாகும்.

பெற்றோர்களுக்கான ஹெல்த் இன்சூரன்ஸின் வகைகள் ஹெல்த் இன்சூரன்ஸ்

என்று வரும்போது, பெற்றோர்கள் உட்பட உங்கள் குடும்பத்திற்கான சிகிச்சை செலவுகளை சமாளிப்பதற்கெனவே மூன்று வகையான இன்சூரன்ஸ்கள் உள்ளன. இவை பின்வருமாறு: 

1. இன்டிவிஜுவல் (தனிநபர்) ஹெல்த் இன்சூரன்ஸ்

இந்த வகை இன்சூரன்ஸ் பாலிசி இன்சூரன்ஸ் செய்யப்பட்ட நபர்களுக்கு மட்டுமே கவரை(காப்பீடை) வழங்குகிறது. இந்த பிளானில் உங்கள் பெற்றோர் போன்ற உங்கள் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கும் காப்பீடு அளிக்கலாம். 

இப்பாலிசியின் மூலம், இன்சூர் செய்யப்பட்ட தனிநபர், மாறுபடும் ப்ளோட்டிங் தொகைக்கு பதிலாக, ஒரு நிலையான (கான்ஸ்டன்ட் சம்) உறுதியளிக்கப்பட்டத் தொகையைக் காப்பீடாக பெறும் நன்மையை அனுபவிக்க முடிகிறது. மேலும், உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியில் உங்கள் பெற்றோரும் கவர் செய்யப்பட்டிருந்தால் அது உங்களுக்கு மிகவும் சாதகமானதாக இருக்கும்.

 இன்டிவிஜுவல் ஹெல்த் இன்சூரன்ஸ் பற்றி மேலும் அறிந்துக்கொள்ளுங்கள்.

2. ஃபேமிலி ப்ளோட்டர் ஹெல்த் இன்சூரன்ஸ்

இன்டிவிஜுவல்(தனிநபர்) ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான் போலின்றி, இத்திட்டத்தின் கீழ் கவர் செய்யப்பட்ட ஒவ்வொரு உறுப்பினருக்கும் இத்திட்டத்தின் கீழ் உறுதியளிக்கப்பட்ட முழுத் தொகையின் கீழ் காப்பீடு அளிக்கப்படுகிறது. நீங்கள் ஒருவேளை உங்கள் பெற்றோருக்கு ஃபேமிலி ப்ளோட்டர் ஹெல்த் இன்சூரன்ஸை எடுக்கப்போகிறீர்கள் என்றால், அது ஒரு சிறந்த  தேர்வாக இருக்காது. ஏனெனில், ஒரு வருடத்தில் இந்த இன்சூரன்ஸின் கீழ் பல கிளைம்கள் செய்யப்படும்போது, இன்சூர்  செய்யப்பட்டவர் அடுத்தடுத்து கிளைம்களை கோரும் போது, இன்சூரன்ஸில் உறுதியளிக்கப்பட்ட தொகையில், முன்னர் கோரிய கிளைம்களுக்கான தொகை போக மீதமுள்ள(தின்ட்-அவுட்) தொகைக்கு மட்டுமே காப்பீடு வழங்கப்படும். 

மேலும், 50 வயதிற்கு மேற்பட்ட இந்திய பெற்றோர்களை அதிகமாக பாதிக்கும் பல நோய்களுக்கு தக்க காப்பீட்டு பாதுகாப்பை வழங்கும் பல ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்கள் உள்ளன. எனவே, உங்கள் பெற்றோருக்கு சிகிச்சையளிக்கும் போது ஏற்படும் செலவுகளை சமாளிப்பதற்கான சரியான தேர்வாக அந்த இன்சூரன்ஸ் பிளான்களே இருக்கும்.

ஃபேமிலி ஹெல்த் இன்சூரன்ஸ் பற்றி மேலும் அறிந்துக்கொள்ளுங்கள்.

3.சீனியர் சிட்டிஸன் ஹெல்த் இன்சூரன்ஸ்

இத்தகைய இன்சூரன்ஸ் பாலிசியானது, வயது முதிர்ந்த தனிநபர்கள் எவ்வித நோயினாலும் பாதிக்கப்பட்டிருந்தாலும், அதற்கு வேண்டிய அனைத்து மருத்துவ தேவைகளுக்கும் ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. இது கணிசமான கிளைம் டிஸ்பர்ஸ்மென்ட் மூலம், இந்த வகையின் கீழ் வரும் அனைத்து தனிநபர்களின் தேவைகளுக்கும் பொருந்தும் என்பதால் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும், வீட்டிலேயே இருந்து மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்வது, ஆயுஷ் பாதுகாப்பு போன்ற நன்மைகளுடன் உள்ளதால், இந்த காப்பீட்டு பாலிசி 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஆகும் சிகிச்சை செலவுகளை சமாளிக்கும் சரியானதேர்வாக உள்ளது.

பற்றி மேலும் அறிந்துக்கொள்ள

இந்தியாவிலுள்ள பெற்றோருக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் வாங்கும் போது பார்க்க வேண்டிய விஷயங்கள்

நாடு முழுவதும் உள்ள இன்சூரன்ஸ் வழங்குநர்கள், உங்கள் பெற்றோருக்கு காம்ப்ரிஹென்சிவ் கவரேஜை நாடுவதில் இருந்து ஏற்படும் நிதி பொறுப்பைக் குறைக்க விரிவான பாதுகாப்பைப் பெற அனுமதிக்கும் பல்வேறு நன்மைகளை வழங்குகிறார்கள்.

உங்கள் ஹெல்த்கேர் பிளான் மூலம் நீங்கள் பெறும் பயன்கள் அதிகமாக உள்ளது என்பதை உறுதி செய்திட, உங்கள் இன்சூரன்ஸ் பிளான் பின்வரும் செலவுகளுக்கு காப்பீடு அளிக்கிறதா என்பதை சரிபார்ப்பது மிகவும் முக்கியம்.

1.கவரேஜ்

  • விபத்துகள் & நோயினால் மருத்துவமனையில்(ஆக்சிடென்டல் & இல்னஸ் ஹாஸ்பிட்டலைசேஷன்) அனுமதிக்கப்படும் செலவுகள் உங்களிடம் காம்ப்ரிஹென்சிவ் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி இல்லாத போது எதிர்பாராமல் நிகழும் விபத்துக்கள் அல்லது நோய்கள் போன்றவை உங்களுக்கு அதிக நிதிச்சுமையை ஏற்படுத்தும். எனவே, விபத்து அல்லது நோய் காரணமாக ஏற்படும் மருத்துவ செலவுகளை சமாளிக்கும் வகையில் கவரேஜை (காப்பீடை) வழங்கும் இன்சூரன்ஸ் வழங்குநர்களைத் தேர்வு செய்யுங்கள்.
  • மருத்துவமனையில் அனுதிப்பதற்கு முன் மற்றும் பின் ஏற்படும் செலவுகள்(ப்ரீ - போஸ்ட் ஹாஸ்பிட்டலைசேஷன் எக்ஸ்பென்ஸ் )உங்கள் சிகிச்சையின் போது ஏற்படும் செலவுகளுடன், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய மற்றும் பிந்தைய செலவுகளை உள்ளடக்கிய பாலிசியைத் தேர்ந்தெடுங்கள். உதாரணமாக, ஒரு காம்ப்ரிஹென்சிவ் பாலிசியானது நோயறிதல் சோதனைகள், மருத்துவ கட்டணம், அறுவை சிகிச்சைக்கான  பின்தொடர்தல்கள்(சர்ஜிக்கல் ஃபாலோ-அப்ஸ்), ஓ.பி.டி(OPD) வருகைகள் போன்றவற்றிற்கான செலவுகளையும் கவர் வேண்டும்.
  • வருடாந்திர ஹெல்த் செக்-அப்க்கான எக்ஸ்பென்சஸ்- வயதானவர்களின் வருடாந்திர உடல்நலப் பரிசோதனை (ஹெல்த் செக்-அப்) என்பது அவர்களின் ஆரோக்கியமான உடல் நிலையை உறுதிசெய்துகொள்வதற்கான முன்கூட்டிய ஏற்பாடாகும்.  ஏனெனில், இது ஆபத்தான நோயினால் (ஃபேட்டல் டிஸ்ஆர்டரை) பாதிக்கப்படுவதை முதலிலேயே கண்டறிந்து அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கான வாய்ப்புகளை குறைக்கிறது. வருடாந்திர உடல்நலப் பரிசோதனை செய்துகொள்வதற்கான அனைத்து செலவுகளும் உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ் கவர் (காப்பீடு) செய்யப்படுகிறதா என்பதை உறுதி செய்யவும்.
  • பெரிய அறுவை சிகிச்சைகள் - பேரியாட்ரிக் அறுவை சிகிச்சைகள் உட்பட எந்தவொரு பெரிய அறுவை சிகிச்சையும் அதிக செலவுகளை ஏற்படுத்துபவை. அத்தகைய கட்டணங்கள் பெற்றோருக்காக நீங்கள் எடுத்துக்கொள்ளும் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியின் மூலம் காப்பீடு அளிக்கப்படுவதை உறுதி செய்யவும். மேலும், அத்தகைய உயர்தர சிகிச்சையை உங்கள் பெற்றோருக்கு அளிக்கவேண்டும் என்ற பட்சத்தில், எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் இருப்பதை உறுதிபடுத்துங்கள். நீங்கள் உங்கள் பெற்றோரை,நாட்டில் உள்ள தலைசிறந்த மருத்துவமனைகளில் அனுமதித்து, புகழ்பெற்ற அறுவை சிகிச்சை நிபுணர்களை கொண்டு அவர்களுக்குச் சிகிச்சை அளித்திடலாம்.
  • மனநல நோய்க்கான சிகிச்சை - நாட்டில் மனநல சிகிச்சை பற்றி நீண்ட நாட்களாக சமூகத்தில் இருந்து வந்த பிற்போக்கான கண்ணோட்டம் தற்போது மாறி வருவதுடன், அதற்கான மருத்துவ சிகிச்சைகளும் ஏற்றுக்கொள்ளப்படுவதுடன், பிரபலமடைந்து வருகிறது. மேலும், முக்கியமான இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பெரும்பாலும் தங்கள் பாலிசிகளில் அதுபோன்ற சிகிச்சைகளுக்காகும் செலவுகளை இணைத்துக் கொள்கின்றனர். எனவே, நீங்கள் மனநல சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் ஆகும் செலவுகளையும் உள்ளடக்கியுள்ள ஒரு பாலிசியைத் தேர்வு செய்யுங்கள்.·
  • அறை வாடகைக்கு கேப்பிங் இல்லை (நோ ரூம் ரென்ட் கேப்பிங்) - நாடு முழுவதும் உள்ள பிரீமிய மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை பெறும் போது, அறை வாடகை பற்றிய செலவுகள் கவலைக்கான காரணமாக இருக்கலாம். காப்பீடு மூலம் அளிக்கப்படும் அறை வாடகைக்கு வரம்பில்லை (கேப்பிங் இல்லாமல்) என்னும் பட்சத்தில், உங்கள் பெற்றோர்கள் நீண்ட காலத்திற்கு சிகிச்சை தேவைப்படும் நோயிற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது, நீங்கள் அவர்களை எளிதாக தனி அறையில் தங்க வைக்க முடியுமல்லவா. எனவே, மருத்துவமனை அறை வாடகைக்கு வரம்பில்லாத (கேப்பிங்) அம்சத்தைக் கொண்ட ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிப் பெறுவதை நீங்கள் உறுதி செய்வது சிறந்தது..

3. கிரிட்டிக்கல் இல்னஸ் பெனிபிட்ஸ்

தீவிர இதய நோய்கள், புற்றுநோய், இறுதி-நிலையிலிருக்கும் நுரையீரல் மற்றும் கல்லீரல் செயலிழப்பு, சிறுநீரகம் தொடர்பான நோய்கள் போன்றவை தீவிர ஆபத்தை அளிக்கும் நோய்களாகக் கருதப்படுபவையாகும். இத்தகைய மருத்துவ நிலைகளுக்கான சிகிச்சைக்கு சராசரியாக 1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை அல்லது அதற்கு மேலும் செலவாகலாம்.

கிரிட்டிக்கல் இல்னஸ் கவரைத்(காப்பீட்டை) தேர்ந்தெடுப்பது தீவிர நோய்க்கான சிகிச்சைகளை மேற்கொள்ளும் சந்தர்ப்பங்களில் பயனுள்ளதாக அமையும். ஏனெனில், அத்தகைய விரிவான காப்பீடு (கவரேஜ்) அதிகமான உத்திரவாதத் தொகையை கூடுதல் நன்மையாக வழங்குகிறது. மருத்துவமனையிலுள்ள போது ஏற்படும் செலவுகள், மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு திரும்பியப்பின் ஏற்படும் செலவுகள், மற்றும் அறுவை சிகிச்சைக்கான கட்டணங்கள் ஆகிய அனைத்தும் கவர்(காப்பீடு) செய்யப்படுகின்றது.

அத்தகைய இன்சூரன்ஸ் பாலிசியைப் பற்றி கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், அப்பாலிசிகள் 30 நாட்கள் லாக்-இன் காலம் கொண்டவை.  லாக்-இன் காலத்தில் எந்த கிளைம்களும் (உரிமைகோரல்) ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை

3. பாலிசி வாங்குவதற்கான நிதித்திறன்

உங்கள் பெற்றோருக்கு நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிக்கு நீங்கள் செலுத்தும் பிரீமியங்கள் செலுத்தக்கூடியவையாகவும், உங்களுக்கு நிதி சுமையை ஏற்படுத்தாமல் இருப்பதையும் உறுதி செய்யவும். பல்வேறு ஹெல்த் இன்சூரன்ஸ் வழங்குநர்களால் வழங்கப்படும் இன்சூரன்ஸ், இன்சூரன்ஸ் தொகை மற்றும் பிரீமியம் ஆகியவற்றை ஒப்பிட்டு சிறந்த தகவலறிந்த முடிவை எடுக்கவும்.

கம்பேர் ஹெல்த் இன்சூரன்ஸை பற்றி மேலும் தெரிந்துக்கொள்ளுங்கள்

4.கிளைம் இன்கம் டேக்ஸ் பெனிபிட்ஸ்

ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ் வழங்கப்படும் மிக முக்கியமான நன்மைகளில் கேஷ்லெஸ் சிகிச்சையும் ஒன்றாகும்.

இந்த பெனிபிட் மூலம், இன்சூரன்ஸ் வழங்குநர்கள் தங்கள் நெட்வொர்க்கில் உள்ள மருத்துவமனையில் உங்கள் பெற்றோர் அனுமதிக்கப்பட்டிருப்பதற்கு ஆகும் சிகிச்சை கட்டணங்களை நேரடியாக  அம்மருத்துவமனைக்கே செலுத்துகிறார்கள். எனவே, இந்த பயனைப் பெறுவதற்காக, தங்கள் நெட்வொர்க்கின் கீழ் அதிகபட்ச மருத்துவமனைகளைக் கொண்ட ஒரு பாலிசி வழங்குநரை பாருங்கள்.

மேலும் தெரிந்து கொள்ளுங்கள்: ·      

5. 0% கோபேமெண்ட் ஆப்ஷன்

சிகிச்சைக்கு ஏற்படும் செலவுகளில், குறிப்பிட்ட சதவீகதத்தை நீங்கள் செலுத்தும் சில இன்சூரன்ஸ் பாலிசிகளும் இருக்கின்றன. உங்கள் பெற்றோருக்கான சிகிச்சை செலவுகள் மிக இருக்குமென்ற பட்சத்தில், கோபேமெண்ட் கிளாஸ்(உடன்பாடு) இல்லாத ஒரு பாலிசியைத் தேர்ந்தெடுப்பதே சிறந்தது..

பெற்றோர்களுக்கான கோபேமெண்ட் 0% கொண்ட ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி-யைத் தேடுகிறீர்களா? டிஜிட் இன்சூரன்ஸ் வழங்கும் பிளான்களை பாருங்கள்

6 .கிளைம் செட்டில்மென்ட் ரேஷியோ

கிளைம் செட்டில்மென்ட் ரேஷியோ என்பது உங்கள் இன்சூரன்ஸ் வழங்குநரால் பெறப்பட்ட மொத்த கிளைம்களின் எண்ணிக்கைக்கு எதிராக செட்டில் செய்யப்பட்ட  கிளைம்களின் எண்ணிக்கையைக் குறிக்கிறது. உங்களுக்கு ஏற்படும் மருத்துவ அவசர நிலையின் போது, நீங்கள் கோரும் கிளைமானது இன்சூரன்ஸ் வழங்குநரால் நிராகரிக்கப்படாமல் இருப்பதற்காக, நீங்கள் உன்னிப்புடன் கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகளில் ஒன்றாக இருப்பது உயர் கிளைம் செட்டில்மென்ட் ரேஷியோ ஆகும்.

7.ஏற்கனவே உள்ள நோய்களுக்கான விரிவானக் காப்பீடு (காம்ப்ரிஹென்சிவ் பிரீ-எக்சிஸ்டிங் இல்னஸ் கவரேஜ்)

ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளால் வழங்கப்படும் பெரும்பாலான பிரீ-எக்சிஸ்டிங் இல்னஸ்க்கு (ஏற்கனவே ஒருவருக்கு உள்ள நோய்கள்), நீங்கள் கிளைம் கோருவதற்கு முன் காத்திருப்பு காலம்(வெயிட்டிங் பீரியட்) இருக்கும். எனவே, ஏற்கனவே உள்ள நோய்களுக்கு அளிக்கப்படும் கவரேஜுக்கு (காப்பீடு) குறைவான காத்திருப்பு காலம்  கொண்ட பாலிசிகளைத் தேர்ந்தெடுப்பதுப் பொருத்தமானது. உங்கள் பாலிசி உங்களுக்கு அதிகபட்ச நன்மைகளை வழங்குவதை உறுதி செய்ய, கவரேஜில் ஏற்றுக்கொள்ளப்படும் நோய்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதையும்  நீங்கள் பார்க்க வேண்டும்.

8. ஆட்-ஆன் பெனிபிட்ஸ்

மேலே குறிப்பிட்ட அம்சங்களைத் தவிர, உங்கள் பாலிசியை சிறப்பாக அமைத்திடக்கூடிய ஆட்-ஆன் கவர்களை நீங்கள் தேட வேண்டும்.அவற்றில் சில: ·       

9. சுலபமான கிளைம் செயல்முறை

பெரும்பாலும், இன்சூரன்ஸ் வழங்குநர்கள் கிளைம்களைத் செட்டில் செய்யும் போது இரண்டு விருப்பங்களை வழங்குகின்றனர்.

இவை: ·    

  • கேஷ்லெஸ் கிளைம்களுக்கு வழங்கப்படும் செட்டில்மென்ட்கள்
  • கோரப்படும் கிளைம்களுக்கான ரீயிம்பர்ஸ்மெண்ட்ஸ் (காப்பீட்டுத் தொகையை திருப்பி அளித்தல்) செய்தல்   

நீங்கள் தேர்வு செய்யும் விருப்பத்தைப் பொருட்படுத்தாமல், கோரப்படும் கிளைம்களை செட்டில் செய்வதற்கான செயல்முறை சிக்கலற்றதாக உள்ளது என்பதை நீங்கள் உறுதி செய்துக்கொள்ள வேண்டும். பெரும்பாலான இன்சூரன்ஸ் வழங்குநர்கள் தங்கள் கிளைம் செயல்முறையை ஆன்லைனில் மாற்றியுள்ளதால், கிளைம்களை கோருவது என்பது முன்இருந்ததை விட மிகவும் எளிமையானதாக உள்ளது.

10.நிறுவனத்தின் நற்பெயரை மதிப்பாய்வு செய்க

இறுதியாக, உங்கள் ஹெல்த் கேர் பிளானுக்கான சிறந்த சேவைகளை நீங்கள் பெறுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த, உங்கள் இன்சூரன்ஸ் வழங்குநருக்கான கஸ்டமர் ரிவ்யூஸ் மற்றும் டெஸ்டிமோனியல்களை சோசியல் மீடியா சைட்களில், கூகுள் ரிவ்யூகள் போன்றவைகளில் பார்க்க மறவாதீர்கள். 

பெற்றோருக்கான ஹெல்த் இன்சூரன்ஸில் கவர் செய்யப்படாதவை யாவை?

உங்கள் இன்சூரஸ் மூலம் அதிகபட்ச நன்மைகளைப் பெற, உங்கள் இன்சூரன்ஸ் கவர் பற்றிய போதுமான தகவல்கள் உங்களுக்கு இருப்பதை உறுதி செய்வது முக்கியம். உங்கள் பெற்றோருக்கான ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளின் கீழ் பொதுவாக உள்ளடங்காத நிகழ்வுகள் பின்வருமாறு - 

  • ·காத்திருக்கும் காலம் முடியும் வரை தற்போதிருக்கும் நோய்களுக்கான மருத்துவ கட்டணங்களுக்கு இன்சூரன்ஸ் பாலிசி மூலம் சிகிச்சை அளிக்க முடியாது.·    
  • மருத்துவரின் பரிந்துரை/மருந்துசீட்டு இல்லாமல் உங்கள் பெற்றோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், உங்கள் இன்சூரன்ஸ் கவரின் கீழ் வழங்கப்படும் நன்மைகளைப் பெறுவதற்கான தகுதியை நீங்கள் பெற முடியாது. 

உங்கள் பெற்றோர்களுக்கான ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி ஏன் உங்களுக்குத் தேவைப்படுகிறது?

      ஒரு காம்ப்ரிஹென்சிவ் இன்சூரன்ஸ் பாலிசி நடைமுறையில் உள்ள நிலையில், நீங்கள் பின்வரும் நன்மைகளை அனுபவிக்க முடியும்:

  • பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலம் மற்றும் குறைந்த வளர்சிதை மாற்ற விகிதம் காரணமாக, வயது முதிர்ந்தவர்கள்  நோய்த்தொற்றுகளால் அதிகம் பாதிக்கப்படுவதுடன், பெரும்பாலும் உறுப்பு செயலிழப்புக்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது. இது தொடர்பாக ஏற்படும் மருத்துவ  நிதிச் செலவுகளை குறைக்க, உங்கள் பெற்றோருக்கு மருத்துவ இன்சூரன்ஸ் பாதுகாப்பை நீங்கள் பெற வேண்டும்.
  • உங்கள் பெற்றோரின் எந்த மருத்துவ நிலைக்கும் சிகிச்சை அளிக்க, உறுதி செய்யப்பட்ட தொகையைப் பயன்படுத்தி தரமான சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்கிறது.·   
  • ·பல நிறுவனங்கள் இன்சூர் செய்யப்பட்டத் தொகையை மீண்டும் செலுத்த (ரீபில்)  அனுமதிக்கின்றன. இதில் எடுக்கப்பட்ட தொகையை ஆண்டுக்கு ஒரு முறை மீண்டும் அளிக்கலாம், இது நிதிசுமையைக் குறைக்க அனுமதிக்கிறது.
  • நிதிச்சுமை இல்லாததால் குணமடையும் செயல்முறையை எளிதாக்குவதுடன், அதனால் ஏற்படும் மனச்சுமையை கணிசமாக குறைகிறது.

பெற்றோர்களுக்கான ஹெல்த் இன்சூரன்ஸ் உங்களுக்கு எவ்வாறு நன்மைப்பயக்குகிறது?

உங்கள் பெற்றோர் மருத்துவ அவசரநிலையை எதிர்கொண்டால், ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி, உங்களுக்கு தீடிரென ஏற்படும் நிதிசுமையை கணிசமாக குறைக்கிறது. ஏற்படும் செலவுகள் குறித்து எந்த கவலையுமின்றி, நீங்கள் முழுமையாக உங்கள் அன்புக்குரியவர் குணமடைவதில் கவனம் செலுத்த முடியும். 

அத்தகைய இன்சூரன்ஸ் பாலிசிகளின் பிரீமியம் செலுத்துதலை நோக்கி ஒதுக்கப்பட்ட மொத்த வருமானத்தின் மீதான வரி தள்ளுபடிகளை நீங்கள் அனுபவிக்கலாம். உங்கள் பெற்றோர் 60 வயதிற்கு மேற்பட்டவராக இருந்தால், உங்கள் மொத்த வருமான வரியிலிருந்து ரூ.50,000 வரை தள்ளுபடி செய்யப்படுகிறது. 60 வயது குறைந்த  பெற்றோருக்கு, நீங்கள் ரூ.25,000 வரை தள்ளுபடி பெறலாம்.

எவ்வாறு பெற்றோர்களுக்கான ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானை வாங்குவது?

ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியானது மருத்துவத் தேவை ஏற்படும் போது, நிதி ரீதியான பாதுகாப்பை வழங்க உதவுகிறது. பெரும்பாலான இன்சூரன்ஸ் வழங்குநர்கள் சரிபார்ப்பு மற்றும் பிரீமியம் கட்டணங்களுக்கு உட்பட்டு ஆன்லைனிலேயே அத்தகைய பாலிசிகளை வழங்குகின்றனர்.

உங்கள் தேவைகளுக்கு ஏற்ற ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிக்கு விண்ணப்பிக்க கீழே உள்ள செயல்முறையை நீங்கள் பின்பற்றலாம். முதலில், மேலே உள்ள காரணிகளைப் படித்து உங்கள் இன்சூரன்ஸ் வழங்குநரைத் தேர்ந்தெடுக்கவும்.

உதாரணத்திற்கு, உங்கள் இன்சூரன்ஸ் வழங்குநராக நீங்கள் டிஜிட்-ஐத் தேர்வு செய்தால், ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிக்கு விண்ணப்பிக்க கீழே உள்ள படிகளைப் பின்பற்றலாம்: 

  • படி 1 - அவர்களின் அதிகாரப்பூர்வமான வலைத்தளத்தைப் பார்வையிடவும், உங்கள் பின் கோடை (உங்கள் நகரத்திற்காக) உள்ளிட்டு, உங்களுக்கு இன்சூரன்ஸ் பாலிசி தேவைப்படும் உறுப்பினர்களைத் தேர்வு செய்யவும். இந்நிலையில், நீங்கள் உங்கள் பெற்றோருக்கு பொருந்தும் விருப்பங்களை தேர்வு செய்ய வேண்டும்.·   
  • படி 2 - அடுத்து, உங்கள் தாயின் மற்றும் தந்தையின் பிறந்த நாள் போன்ற விவரங்களை உள்ளிடவும்.·    
  • படி 3 - தொடர்புக்கொள்ள வேண்டிய/கான்டாக்ட் விவரங்களை உள்ளிடவும்.·    
  • படி 4 - உறுதியளிக்கப்பட்ட கூட்டுத் தொகையைத் தேர்வு செய்யவும்.·   
  • படி 5 - தேவையான தனிப்பட்ட விவரங்களை நிரப்பவும்.·   
  • படி 6 - பாலிசி பிரேக்-அப்பை சரிபார்ப்பது போன்ற அனைத்து விவரங்களையும் மதிப்பாய்வு செய்யவும்     
  • படி 7 - ஆன்லைனில் பிரீமியம் செலுத்தவும்.

இந்த படிகள் அனைத்தும் முடிந்தவுடன், அனைத்து விவரங்கள் மற்றும் ஆவணங்கள் (ஏதேனும் இருந்தால்) சரிபார்க்கப்பட்டவுடன், உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி விரைவில் செயல்படுத்தப்படும். நாட்டில் அதிகரித்து வரும் மருத்துவ செலவுகள் மற்றும் சில்லறை பணவீக்கம் ஆகியவற்றினால், உங்கள் பெற்றோருக்கு ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானை தேர்ந்தெடுப்பது முக்கியமானது. விரிவான மருத்துவ சிகிச்சைத் தொடர் மற்றும் பல ஆட்-ஆன் பெனிபிட் மூலம் நிர்ணயிக்கப்பட்டுள்ள மருத்துவக் கட்டணங்களை எளிதில் கையாண்டு அவர்களின் ஆரோக்கியத்தை நன்றாக பாதுகாக்க முடியும். 

இந்தியாவில் உள்ள பெற்றோர்களுக்கான ஹெல்த் இன்சூரன்ஸ் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

என் சீனியர் சிட்டிசன் பெற்றோரை ஃபேமிலி ப்ளோட்டர் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானில் சேர்க்கலாமா?

இல்லை, ஃபேமிலி ப்ளோட்டர் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்களில் 60 வயதிற்குட்பட்ட உறுப்பினர்களை மட்டுமே சேர்க்க முடியும்..

என் பெற்றோருக்கு ஆரம்பத்திலேயே ஹெல்த் இன்சூரன்ஸை தேர்ந்தெடுப்பது ஏன் நல்லது?

பல இன்சூரன்ஸ் வழங்குநர்கள், அதிக வயதினருக்கான இன்சூரன்ஸ் பாலிசிகள் என்று வரும்போது கட்டயமாக கோபேமெண்ட் செலுத்தும்  உடன்படிக்கைகளைக் கொண்டுள்ளது. அதனால்தான், உங்கள் பெற்றோருக்கு முடிந்தவரை விரைவில் ஹெல்த் இன்சூரன்ஸ்களைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது.

ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ் எனது பெற்றோரின் பாதுகாப்பை நான் எவ்வாறு அதிகரிக்க முடியும்?

தனித்தனியாக கவர்களைத்(காப்பீடு) தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக, உங்கள் பெற்றோரின் கவரேஜை(காப்பீடு) அதிகம் பயனுள்ளதாக ஆக்க அனுமதிக்கும் டாப்-அப்(கூடுதல்) கவர்களை நீங்கள் தேர்வு செய்யலாம்.