கான்ட்ராக்டர்ஸ் பிளாண்ட் மற்றும் மெஷினரி இன்சூரன்ஸ்

Zero Paperwork. Online Process

கான்ட்ராக்டர்ஸ் பிளான்ட் அண்ட் மெஷினரி இன்சூரன்ஸ் என்றால் என்ன?

இந்த பாலிசி கான்ட்ராக்டர்களின் பிளாண்ட் மற்றும் கட்டுமான தளத்தில் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் குப்பை அள்ளும் இயந்திரங்கள், அகழ்வாராய்ச்சி இயந்திரங்கள், ரோலர்கள், துளையிடும் இயந்திரங்கள் போன்றவற்றை கவர் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு கான்ட்ராக்டரின் முதலீட்டின் பெரும் பகுதி மேற்கூறிய இயந்திரங்களுக்குச் செல்வதால், ஒரு பணியை முடிக்க கான்ட்ராக்டர்கள் பயன்படுத்தும் பிளாண்ட் மற்றும் இயந்திரங்களுக்கு ஏற்படக்கூடிய சேதத்திலிருந்து பிஸ்னஸை இந்தப் பாலிசி பாதுகாக்கிறது.

கான்ட்ராக்டர்ஸ் பிளான்ட் அண்ட் மெஷினரி இன்சூரன்ஸ் எதை கவர் செய்கிறது?

ஒரு கான்ட்ராக்டர்ஸ் பிளாண்ட் மற்றும் மெஷினரி இன்சூரன்ஸ் கீழே குறிப்பிடப்பட்டுள்ள கவரேஜை வழங்குகிறது:

ஒப்பந்தக்காரர்களின் கட்டுமான உபகரணங்களுக்கு இழப்பு/சேதம்

தீ விபத்து, கலவரங்கள், வேலைநிறுத்தங்கள், தீங்கிழைக்கும் சேதம், பூகம்பம், வெள்ளம், புயல் போன்ற ஆபத்துக்களால் ஏற்படும் விபத்துகள் காரணமாக கட்டுமான தளத்தில் பயன்படுத்தப்படும் உபகரணங்களின் இழப்பு அல்லது சேதம் காரணமாக ஏற்படும் செலவை பாலிசி கவர் செய்கிறது.

வேலை, ஓய்வு அல்லது பராமரிப்பின் போது ஏற்படும் சேதம்

இன்சூரன்ஸ் செய்யப்பட்ட சொத்து வேலை அல்லது ஓய்வு அல்லது பராமரிப்பு காரணமாக சேதமடைந்தால், பாலிசி அதை ஈடுசெய்யும்.

எது கவர் செய்யப்படவில்லை?

டிஜிட்டின் கான்ட்ராக்டர்ஸ் பிளாண்ட் மற்றும் மெஷினரி இன்சூரன்ஸ் பாலிசி பின்வருவனவற்றால் ஏற்படும் இழப்புகளை கவர் செய்யாது:

கவனக்குறைவு

பாலிசிதாரரின் கவனக்குறைவு அல்லது அவர்களின் பிரதிநிதியின் கவனக்குறைவு காரணமாக இயந்திரம் சேதமடைந்தால், பாலிசி செலவுகளை கவர் செய்யாது.

பயங்கரவாதம்

பயங்கரவாத செயல் காரணமாக உபகரணங்களுக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால், அது கவர் செய்யப்படாது.

போர் மற்றும் அணுசக்தி அபாயங்கள்

போர் மற்றும் அணு அபாயங்கள் போன்ற காரணிகளால் உபகரணங்களுக்கு ஏற்படும் சேதம் இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ் வராது.

பயன்பாடு இல்லாமை மற்றும் சோதனைக்கு உட்படுத்துதல்

பயன்பாடு இல்லாமை மற்றும் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதன் காரணமாக இயந்திரங்களின் சேதம் அல்லது சிதைவு பாலிசியின் கீழ் வராது.

ஏற்கனவே உள்ள சேதங்கள்

பாலிசி வாங்குவதற்கு முன்பு ஏற்கனவே இருந்த உபகரணங்களின் தவறு மற்றும் சேதம் கவர் செய்யப்படாது.

மெக்கானிக்கல் அல்லது எலெக்ட்ரிக்கல் பிரேக்டவுன்

மின்னணு அல்லது இயந்திர பழுது காரணமாக இயந்திரங்களின் செயலிழப்பு கான்ட்ராக்டரின் பிளான்ட் மற்றும் மெஷினரி இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ் கவர் செய்யப்படாது.

வெசல்/பாய்லரின் பிரசரால் வெடித்தல் நிகழ்ந்தால்

ஒரு பிரசரால் வெசல் வெடிப்பதால் உபகரணங்களால் ஏற்படும் எந்த சேதமும் பாலிசியின் கீழ் கவர் செய்யப்படாது.

கான்ட்ராக்டரின் பிளான்ட் மற்றும் மெஷினரி இன்சூரன்ஸ் பாலிசியின் அம்சங்கள்

நீங்கள் அறிந்தபடி, பாலிசிதாரரால் வழங்கப்படும் இன்சூரன்ஸ் பாலிசி குறிப்பிட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது. அவையாவன -

  • டிஜிட்டின் கான்ட்ராக்டர்களின் பிளாண்ட் மற்றும் மெஷினரி இன்சூரன்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட இயந்திரங்களை மட்டுமே கவர் செய்கிறது.
  • கட்டுமான தளங்களில் பயன்படுத்தப்படும் இயந்திரங்களுக்கு ஏற்படும் சேதம் பாலிசியின் கீழ் கவர் ஆகும்.

அது ஏன் தேவைப்படுகிறது?

கீழே பட்டியலிடப்பட்டுள்ள காரணங்களுக்காக கான்ட்ராக்டர்களின் பிளான்ட் மற்றும் மெஷினரி இன்சூரன்ஸ் தேவைப்படுகிறது:

  • பெரும் முதலீட்டு இழப்பிலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்- கனரக இயந்திரங்கள் சேதமடைய வாய்ப்புள்ளதால், அது உரிமையாளருக்கு கடுமையான முதலீட்டு இழப்பை ஏற்படுத்தும். அத்தகைய சந்தர்ப்பங்களில், பாலிசி நன்மை பயக்கும்.
  • ரீப்ளேஸ்மென்ட் வேல்யூ - இயந்திரத்தின் தற்போதைய ரீப்ளேஸ்மென்ட் வேல்யூபடி பாலிசி இன்சூரன்சை வழங்குகிறது.
  • பகுதி மற்றும் மொத்த சேதத்திற்கான கவரேஜ் - இந்த பாலிசி உபகரணங்களின் பகுதி மற்றும் மொத்த சேதத்திற்கு முழுமையான கவரேஜை வழங்குகிறது.

கான்ட்ராக்டர்களின் பிளான்ட் மற்றும் மெஷினரி இன்சூரன்ஸிற்கான பிரீமியம் எவ்வாறு கால்குலேட் செய்யப்படுகிறது?

பாலிசிக்கு செலுத்த வேண்டிய பிரீமியம் பல காரணிகளைப் பொறுத்தது. அவையாவன -

இன்சூரன்ஸ் தொகை

பாலிசியில் இன்சூரன்ஸ் செய்யப்பட்ட தொகை பாலிசிதாரர் செலுத்த வேண்டிய பிரீமியத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இன்சூரன்ஸ் தொகை எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு பிரீமியம் அதிகமாக இருக்கும்.

மெஷினரி வகை

பிரீமியம் சம்பந்தப்பட்ட மெஷினரி வகையைப் பொறுத்தது. ஒரு கட்டுமான தளத்தில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் பொதுவாக விலை உயர்ந்தவை என்பதால், இன்சூரன்ஸ் தொகை பொதுவாக அதிகமாக இருக்கும். அதிக பிரீமியம் செலுத்துவதன் மூலம் பாலிசிதாரர் இயந்திரங்களுக்கு ஏதேனும் இழப்பு அல்லது சேதம் ஏற்பட்டால் நிறைய பணத்தை சேமிக்கிறார்

ரிஸ்குகள்

புராஜெக்ட் சைட்டில் தொடர்புடைய ரிஸ்குகள் பாலிசியின் பிரீமியத்தையும் பாதிக்கின்றன. ஸ்டேக்குகள் அதிகமாக இருந்தால், விபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம், இதன் விளைவாக இன்சூரன்ஸ் நிறுவனம் பெரும் இழப்பைச் சந்திக்க நேரிடும்.

இடம்

வொர்க்சைட்டின் இருப்பிடம் அல்லது உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ள இடம் செலுத்த வேண்டிய பிரீமியத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

உபகரணங்களின் பயன்பாடு

இயந்திரங்கள் ஏதேனும் ஒரு நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டால், அது சேதமடைய அதிக ரிஸ்க்கை உள்ளடக்குகிறது என்றால், இயந்திரங்கள் அதற்கு ஆளாகின்றன. எனவே, உபகரணங்களின் பயன்பாடு பாலிசியின் பிரீமியத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

பாலிசியை யார் வாங்க வேண்டும்?

கான்ட்ராக்டர்களின் பிளாண்ட் மற்றும் மெஷினரி இன்சூரன்சின் பாலிசியை கீழே குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் பெறலாம்:

உபகரண உரிமையாளர்கள்

இந்தப் பாலிசியை மெஷினரியின் உரிமையாளர்கள் கொண்டு வரலாம். உபகரணங்கள் சேதமடையும் போது அல்லது திருடப்படும்போது செலவுகளை ஈடுசெய்ய இது அவர்களுக்கு உதவுகிறது.

புராஜெக்ட்டில் முதலீட்டாளர்கள்

இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்ட புராஜெக்ட்டில் முதலீடு செய்துள்ள வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களும் பாலிசியை வாங்கலாம்.

மெஷினரியின் பயனர்கள்

புராஜெக்ட்டை முடிக்கும் கான்ட்ராக்டர்கள் மற்றும் புராஜெக்ட் இடத்தில் மெஷினரியைப் பயன்படுத்தும் நபர்களும் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்கலாம்.

சரியான கான்ட்ராக்டர்ஸ் பிளான்ட் மற்றும் மெஷினரி இன்சூரன்ஸ் பாலிசியை தேர்ந்தெடுப்பது எப்படி?

சரியான கான்ட்ராக்டர்களின் பிளான்ட் மற்றும் மெஷினரி இன்சூரன்ஸை தேர்ந்தெடுக்கும்போது, நீங்கள் பின்வருவனவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும் -

  • சரியான கவரேஜ் - சரியான இன்சூரன்ஸ் பாலிசியைத் தேர்ந்தெடுக்கும்போது, நீங்கள் பெறும் கவரேஜை சரிபார்க்க வேண்டும். எந்த இன்சூரன்ஸ் பாலிசி உங்களுக்கு நல்லது என்பதை தீர்மானிப்பதற்கு முன்பு போதுமான கவரேஜ் பெறுவதை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
  • கூடுதல் நன்மைகள் - வெவ்வேறு நன்மைகளைக் கொண்ட இன்சூரன்ஸ் பாலிசியை பரிசீலிக்க வேண்டும். பெரும்பாலான இன்சூரன்ஸ் நிறுவனங்கள் நிலையான கவரேஜை வழங்குவதால், உங்களுக்கு எந்த இன்சூரன்ஸ் பாலிசி சிறந்தது என்பதை தீர்மானிக்கும்போது 24×7 உதவி போன்ற கூடுதல் நன்மைகளைத் தேடுங்கள்.
  • தொந்தரவில்லாத கிளைம் செயல்முறை - வேறு எந்த இன்சூரன்ஸ் பாலிசியையும் போலவே, தொந்தரவில்லாத கிளைம் துறையைக் கொண்ட இன்சூரன்ஸ் வழங்கும் நிறுவனம் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது பரிசீலிக்கப்பட வேண்டும். இது கிளைம் விரைவாக தீர்க்க உதவும்.

இந்தியாவில் கான்ட்ராக்டர்களின் பிளாண்ட் மற்றும் மெஷினரி இன்சூரன்ஸ் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

கான்ட்ராக்டர்ஸின் பிளான்ட் அண்ட் மெஷினரி இன்சூரன்ஸ் பாலிசியின் கால அளவு என்ன?

இன்சூரன்ஸ் பாலிசியின் காலம் ஒரு வருடம் ஆகும், மேலும் அதன் நன்மைகளைத் தொடர நீங்கள் அதை ஆண்டுதோறும் புதுப்பிக்க வேண்டும்.

பாலிசியை ரத்து செய்ய, ஏதேனும் ரத்து கட்டணம் உள்ளதா?

இடைக்கால ரத்துக்கான கோரிக்கை உங்களால் செய்யப்பட்டால், பாலிசி நடைமுறையில் இருந்த காலத்திற்கு குறுகிய கால அளவில் பிரீமியத்தை நாங்கள் வைத்திருப்போம். மீதித் தொகை உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

சி.பி.எம் (CPM) இன்சூரன்ஸ் ஒரு ஆல்-ரிஸ்க் இன்சூரன்ஸ் பாலிசியா?

ஆம், இந்த பாலிசி ஒரு ஆல்-ரிஸ்க் இன்சூரன்ஸ் பாலிசியாகும், அதில் குறிப்பிட்டுள்ளபடி குறிப்பிட்ட விலக்குகள் உள்ளன.

தேர்ந்தெடுக்கப்பட்ட இன்சூரன்ஸ் பிளானில் கூடுதல் கவரேஜை சேர்க்க ஆட்-ஆன் கவர்களைக் கொண்டு வர முடியுமா?

ஆம், கவரேஜை விரிவுபடுத்த தேர்ந்தெடுக்கப்பட்ட இன்சூரன்ஸ் பிளானில் ஆட்-ஆன் கவர்களை சேர்க்கலாம்.

இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ் கான்ட்ராக்சுவல் லையபிலிட்டி சேர்க்கப்படுகிறதா?

இல்லை, கான்ட்ராக்சுவல் லையபிலிட்டி இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ் சேர்க்கப்படவில்லை.