Work
in spare time
Earn
side income
FREE
training by Digit
இல்லத்தரசிகள் வீட்டிலிருந்தபடியே பணம் சம்பாதிப்பது எப்படி?
பொதுவாக இல்லத்தரசிகள் வீட்டில் இருக்கக்கூடிய வேலைகளை செய்தும், குடும்பத்தைக் கவனித்துக் கொண்டும் தங்களது நேரத்தை செலவிடுவார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. சவாலான இந்த வேலைக்கு விடுமுறையே கிடையாது.
எனினும், நீங்கள் ஒரு இல்லத்தரசியாக இருந்தால், வீட்டில் இருந்தபடியே ஏதாவது செய்து, அதன் மூலம் சிறிய வருமானத்தையாவது ஈட்ட வேண்டும் என்று நீங்கள் நினைத்திருக்கலாம்.
அதிர்ஷ்டவசமாக, இல்லத்தரசிகள் வீட்டிலிருந்தே பணம் சம்பாதிக்க பல வேலைகள் உள்ளன. இதில் உள்ள சிறப்பு என்னவென்றால், இது அவர்களின் அன்றாட வேலைகளைப் பாதிக்காது. தங்களுக்கு விருப்பமான நேரங்களில் வேலை செய்து கொள்ளலாம். அதோடு இதற்கு எந்தவிதமான முதலீடும் தேவையில்லை.
இல்லத்தரசிகள் வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிக்க உதவும் சிறந்த வழிகளில் சில இதோ உங்களுக்காக
1. இன்சூரன்ஸ் பிஓஎஸ்பி (POSP) ஆக மாறுங்கள்
ஒரு பிஓஎஸ்பி (அல்லது பாயிண்ட் ஆஃப் சேல்ஸ் பர்சன்) என்பது இன்சூரன்ஸ் புராடக்டுகளை விற்பனை செய்யும் ஒரு நபராகும். இன்சூரன்ஸ் ஏஜெண்டுகள் என்று அழைக்கப்படும் இவர்கள் இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன் பணிபுரிந்து, அவர்களது பாலிசிகளை வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப அவர்களுக்கு விற்பனை செய்யும் நபர்கள்.
- இதற்கு ஏதேனும் முதலீடு செய்ய வேண்டுமா? அல்லது தகுதி வரம்புகள் ஏதேனும் உள்ளனவா? இன்சூரன்ஸ் ஏஜென்ட் ஆவதற்கான குறைந்தபட்ச வயது 18. மேலும் குறைந்தது பத்தாம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். இந்தத் தகுதிகளை நீங்கள் பூர்த்தி செய்யும் பட்சத்தில், உங்களது லைசன்ஸ் ஐ.ஆர்.டி.ஏ.ஐ-யிடம் இருந்து பெறுவதற்கு நீங்கள் 15 மணி நேர கட்டாய பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
- இதன் மூலம் நான் எவ்வளவு சம்பாதிக்கலாம்? - உங்களது வருமானமானது கமிஷன் பிரகாரம் வழங்கப்படும், அதாவது நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள் என்பது நீங்கள் விற்பனை செய்யும் பாலிசிகளின் எண்ணிக்கையை பொருத்தே அமையும். நீங்கள் அதிக விற்பனைகளை செய்தால், உங்களது வருமானமும் அதிகமாக இருக்கும்.
- விற்பனை செய்யும் திறன்கள் கொண்ட நபர்கள் தாராளமாக பிஓஎஸ்பி ஏஜென்ட் ஆக முயற்சி செய்யலாம். ஆனால், உங்களிடம் தரமான ஒரு ஸ்மார்ட் போன் மற்றும் சிறந்த இன்டர்நெட் இணைப்பு இருப்பது அவசியம்.
2. கைவினைப் பொருட்களை விற்பனை செய்தல்
வீட்டிலிருந்தபடியே பணம் சம்பாதிப்பதற்கான மற்றொரு எளிமையான வழி கைவினைப் பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்வதுதான். பேக் செய்யப்பட்ட பொருட்கள், ஆரோக்கியமான திண்பண்டங்கள், வாசனை மெழுகுவர்த்திகள், வால் ஹேங்கிங்கள், டேபிள் மேட்கள் மற்றும் அலங்கார பொருட்கள் போன்றவை இதில் அடங்கும். உங்களுக்கு ஆர்ட் அண்ட் கிராஃப்ட் அல்லது சமையலில் ஆர்வம் இருந்தால் நீங்கள் உங்களை ஒரு விற்பனையாளராக எட்சி, அமேசான், ஃபிளிப்கார்ட் அல்லது அஜியோ போன்ற செயலிகளில் பதிவு செய்து கொள்ளலாம்
அல்லது சோசியல் மீடியாவில் இருக்கக்கூடிய உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களை தொடர்பு கொண்டு, செகண்டரி டெலிவரி சேவை மூலமாக உங்கள் பொருட்களை நேரடியாக அவர்களுக்கு விற்பனை செய்யலாம்.
- இதற்கு ஏதேனும் முதலீடு செய்ய வேண்டுமா? அல்லது தகுதி வரம்புகள் ஏதேனும் உள்ளனவா?- நீங்கள் சமைக்கப் போகிறீர்கள் என்றால் சமையலுக்குத் தேவையான பொருட்கள் அல்லது கைவினைப் பொருட்கள் செய்வதற்குத் தேவையான பொருட்கள் போன்றவற்றை உங்கள் சொந்த பணம் கொண்டு வாங்க வேண்டி இருக்கும்.
- நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கலாம்? - உங்களது வருமானம் என்பது நீங்கள் விற்பனை செய்யும் பொருட்கள், உங்களின் விற்பனைத் திறன் மற்றும் நீங்கள் அணுகக்கூடிய செல்லர் பார்ட்னர் போன்ற காரணிகளைப் பொறுத்து அமையும். மேலும், உங்கள் பொருட்களுக்கு அதிக விலை வைத்தும் நீங்கள் விற்பனை செய்யலாம்.
3. மொழிபெயர்ப்பு வேலைகளைத் தேடுங்கள்
உங்களுக்கு பலவிதமான மொழிகள் தெரியும் பட்சத்தில் இல்லத்தரசியாக மொழிபெயர்ப்பாளர் பணியை செய்வதன் மூலமாக நீங்கள் பணம் சம்பாதிக்கலாம். இன்றளவில் ஆவணங்கள், வாய்ஸ் மெயில்கள், பேப்பர்கள், சப்டைட்டில் மற்றும் பலவற்றுக்கு அதிக தேவை உள்ளது. நீங்கள் ட்ரான்ஸ்லேஷன் ஏஜென்சிகளை அணுகியோ அல்லது ஃப்ரீலான்ஸ் இந்தியா, அப் வொர்க் அல்லது ட்ரூலான்சர் போன்றத் தளங்களைப் பார்வையிடலாம்.
- இதற்கு ஏதேனும் முதலீடு செய்ய வேண்டுமா? அல்லது தகுதி வரம்புகள் ஏதேனும் உள்ளனவா?- இதற்கு அதிக முதலீடு எதுவும் தேவையில்லை, அது மட்டும் இல்லாமல் குறிப்பிட்ட கல்வி தகுதியும் அவசியம் இல்லை வழக்கமான கல்வியே போதுமானது.
- நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கலாம்? - இந்த பணியில் உங்களது வருமானமானது உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும் என்பதைப் பொருத்தே அமையும். கூடுதலாக உங்களுக்கு மொழிபெயர்க்கப்படும் ஒவ்வொரு வார்த்தைக்கான பணம் கொடுக்கப்பட்டால், அந்தந்த மொழியை பொறுத்து ஒரு வார்த்தைக்கு ஒரு ரூபாய் முதல் நான்கு ரூபாய் வரை நீங்கள் சம்பாதிக்கலாம்.
- வெளிநாட்டு மொழிகளை (ஃப்ரஞ்ச், ரஷியன், ஸ்பானிஷ் அல்லது ஜப்பானீஸ்) போன்றவற்றை கற்றுக் கொள்வதன் மூலமும், அதற்கான சான்றிதழைப் பெற்றிருப்பது மூலமாகவும் நீங்கள் அதிக பணம் ஈட்டலாம் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
4. பிலாக் (Blog) எழுதத் தொடங்கவும்
வீட்டிலிருந்தே பணம் சம்பாதிப்பதற்கான மிகவும் பிரபலமான வழிகளில் ஒன்று பிலாக் எழுதுவது ஆகும். நீங்கள் ஒரு பிலாக்கர் ஆவதற்கு உங்களுக்கு பிடித்தமான ஒரு துறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பயணம், ஆர்ட்ஸ் அண்ட் கிராஃப்ட், உணவு, புத்தகங்கள், மேக்கப் போன்ற உங்களுக்கு விருப்பமான எந்த ஒரு துறையை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்து அது குறித்த பிலாக்களை வெளியிடலாம்.
வேர்ட் பிரஸ், விப்லீ, மீடியம் அல்லது பிலாக்கர் போன்ற பிலாகிங் தளங்களில் முதலில் சைன் அப் செய்யவும். பின்னர் உங்களுக்குப் பிடித்தமான ஒரு துறையை தேர்ந்தெடுத்து அதில் பிலாக் எழுதத் தொடங்கவும். உங்கள் பிலாகிற்கு டிராபிக் அதிகரிக்க ஆரம்பித்த உடன், அதாவது உங்களுக்கு வாசகர்கள் கிடைத்தவுடன் விளம்பரங்கள் மூலமாக நீங்கள் பணம் சம்பாதிக்கலாம்.
கூடுதலாக, நீங்கள் பிடிஎஃப்-கள், பிரிண்ட்பில்ஸ், இ-புக் போன்றவற்றை உங்கள் பிலாகில் விற்பனை செய்வதன் மூலமாகவும் பணம் சம்பாதிக்கலாம். குறிப்பாக, ஏதேனும் ரெசிபிகள் அல்லது கைவினைப் பொருட்கள் செய்வதற்கான குறிப்புகளை நீங்கள் பகிர்கிறீர்கள் என்றால் அதன் மூலமாகவும் வருமானம் ஈட்டலாம்.
- இதற்கு ஏதேனும் முதலீடு செய்ய வேண்டுமா? அல்லது தகுதி வரம்புகள் ஏதேனும் உள்ளனவா?- இதற்கு அதிக அளவில் முதலீடு தேவையில்லை. உங்களுக்கானக் குறிப்பிட்ட டொமைன் பெயரைத் தேர்ந்தெடுக்க விரும்பினாலே ஒழிய இதற்கு அதிக முதலீடு செய்ய தேவையில்லை. எனினும் சர்ச் இன்ஜின் ஆப்டிமைசேஷன் (அல்லது எஸ்.இ.ஓ) என்ற திறனை வளர்த்துக் கொள்வதன் மூலமாக உங்கள் தளத்திற்கு கிடைக்கக்கூடிய ட்ராஃபிக்கை நீங்கள் அதிகரிக்கலாம்.
- நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கலாம்? - உங்கள் தளத்திற்கு கிடைக்கும் டிராஃபிக்கை பொறுத்தே உங்கள் வருமானம் அமையும். உங்கள் தளம் மிகவும் பிரபலமான தளம் என்றால் 2″x2″ என்ற ஆட் ஸ்பேஸ்க்கு ஒரு மாதத்திற்கு ₹2,000 முதல் 15,000 வரை வருமானம் கிடைக்கும்.
5. யூடியூப் சேனல் தொடங்கவும்
உங்களுக்கு எழுதுவதில் பெரிய அளவில் ஆர்வம் இல்லாவிட்டாலும், எதையாவது இந்த உலகிற்கு நீங்கள் பகிர நினைக்கும் போது நீங்கள் யூடியூப் சேனல் ஆரம்பிப்பதை கருத்தில் கொள்ளலாம். பிலாக் போலவே, நீங்கள் எந்தவிதமான கன்டன்ட்டை வேண்டுமானாலும் யூடியூப்பில் பகிரலாம். ரெசிபிகள் முதல் சமையல் வரை, நடனம், கலை என உங்களுக்கு விருப்பமான ஒன்றை தேர்ந்தெடுத்து அது சம்மந்தமான வீடியோக்களை உருவாக்கலாம். இதற்கு நீங்கள் எந்த ஒரு தளத்திலும் உள்நுழையத் தேவையில்லை. உங்களுக்குத் தேவையானதெல்லாம் ஒரு மின்னஞ்சல் முகவரி மற்றும் யூடியூப் அகௌண்ட் மட்டுமே. பிலாக்கில் பணம் சம்பாதிப்பது போலவே இதிலும் விளம்பரங்கள் மூலமாக பணம் சம்பாதிக்கலாம்.
விளம்பரங்கள் மூலமாக கிடைக்கும் வருமானத்தை தவிர உங்களுக்கு அதிக ஃபாலோவர்கள் இருக்கும் பட்சத்தில், பிராண்டுகளுடன் பெயிட் ஸ்பான்சர்ஷிப் டீல்களை வைத்துக் கொண்டு, அவர்களது பிராண்டுகளை பிரமோஷன் செய்தும் பணம் வருமானம் ஈட்டலாம்.
- நீங்கள் வீடியோ உருவாக்கத் தேவையானப் பொருட்களைத் தவிர இதற்கு எந்த விதமான ஒரு முதலீடும் தேவையில்லை.
- நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கலாம்? - உங்கள் வீடியோக்களை பார்க்கும் நபர்களின் சராசரி எண்ணிக்கையைப் பொறுத்து நீங்கள் ஒவ்வொரு வீடியோவிற்கும் 10K பார்வையாளர்களுக்கு 200 முதல் 500 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகமாகும் பொழுது உங்களுக்கான வருமானமும் அதிகமாகும்.
6. டிராவல் ஏஜென்ட் அல்லது பிளானர் ஆக முயற்சி செய்யலாம்
வீட்டிலிருந்தே டிராவல் ஏஜென்ட் ஆக பணிபுரிவது இல்லத்தரசிகளால் பெரிதும் கவனிக்கப்படாத ஒரு வேலையாக உள்ளது. பயணத்திற்கான ஏற்பாடுகள் மற்றும் டிக்கெட்டுகளை ஆன்லைனில் புக் செய்வது போன்றவை இன்றைய காலகட்டத்தில் அதிக நபர்களால் செய்யப்படுகிறது. எனினும், பிசியாக இருப்பவர்கள் அல்லது இன்டர்நெட் குறித்த அனுபவம் இல்லாதவர்களுக்கு இது கடினமாகும். இது டிராவல் ஏஜெண்டுகள் மற்றும் பிளானர்களுக்கானத் தேவையை அதிகரிக்கிறது.
இதற்கு அப் வொர்க், அவான்ட் ஸ்டே, அல்லது ஹாப்பர், போன்ற தளங்களில் பதிவு செய்வதன் மூலமாகவோ அல்லது சுயமாகவே நீங்கள் ஒரு டிராவல் ஏஜெண்டாக பணி புரியலாம்.
- இதற்கு ஏதேனும் முதலீடு செய்ய வேண்டுமா? அல்லது தகுதி வரம்புகள் ஏதேனும் உள்ளனவா?- இதற்கு எந்தவிதமான முதலீடு அல்லது தகுதி வரம்பும் தேவையில்லை. எனினும் விலை மலிவான விமான சேவைகள், ஹோட்டல் புக்கிங் மற்றும் பிற சிறந்த பயணம் சார்ந்த விஷயங்களை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கலாம்? - நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள் என்பது உங்களது கிளைண்டுகள், நீங்கள் வேலை செய்யும் நிறுவனம், நீங்கள் கவனித்துக் கொள்ளும் விடுமுறையின் வகை (உதாரணமாக லக்சுரி வெக்கேஷன்கள், ஃபேமிலி டிரிப்புகள் போன்றவை) ஆகியவற்றைப் பொறுத்து அமையும்.
இன்றளவில் வீட்டிலிருந்தே பணம் சம்பாதிக்க நினைக்கும் இல்லத்தரசிகள், குறைவான அல்லது முதலீடு இல்லாமலேயே தங்களுக்கான வேலையை தேடிக் கொள்வதை தொழில்நுட்பம் எளிதாக்கி விட்டது. இது நீங்கள் நினைப்பதை விட எளிதானது. உங்களுக்குத் தேவையானதெல்லாம் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை நன்றாக பயன்படுத்திக் கொள்ள சிறிது நேரம் மட்டுமே. இதன் மூலமாக வீட்டில் இருந்து கொண்டே பணம் சம்பாதிக்கலாம்.