Work
in spare time
Earn
side income
FREE
training by Digit
இன்சூரன்ஸ் பி.ஓ.எஸ்.பி (POSP) ஆவதால் கிடைக்கும் பலன்கள்
நிச்சயமற்ற இந்த உலகில் ஏராளமான மக்கள் கூடுதல் வருமானம் சம்பாதிப்பதற்கான வழிகளை தேடிக் கொண்டிருக்கிறார்கள். மாற்று வேலை அல்லது பகுதி நேர வேலைகளை தேடுவது போன்ற எதுவாக இருந்தாலும், பி.ஓ.எஸ்.பி ஆக (பாயிண்ட் ஆஃப் சேல்ஸ்பர்சன்) இன்சூரன்ஸ்களை ஆன்லைனில் விற்பனை செய்வது ஒரு சிறந்த ஆப்ஷன் ஆகும்.
பி.ஓ.எஸ்.பி என்பது இன்சூரன்ஸ் நிறுவனம் அல்லது புரோக்கர்களுக்கு வேலை செய்வதன் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு இன்சூரன்ஸ் பாலிசிகளை நேரடியாக விற்பனை செய்யும் ஒரு நபர்.
பி.ஓ.எஸ்.பி (POSP) ஆவதற்கான தகுதிகள் என்ன?
அடிப்படை தகுதியை ஒருவர் பூர்த்தி செய்யும் பட்சத்தில் (குறைந்தபட்ச வயது 18 மற்றும் பத்தாம் வகுப்பு வரையாவது படித்திருக்க வேண்டும்), அவர்கள் பயிற்சித் திட்டத்திற்குத் தங்களை பதிவு செய்து கொண்டு, ஆன்லைன் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதன் மூலமாக லைஃப் இன்சூரன்ஸ் மற்றும் ஜெனரல் இன்சூரன்ஸ் பிரிவுகளில் இன்சூரன்ஸ்களை விற்பனை செய்வதற்கான பி.ஓ.எஸ்.பி ஆக தகுதி பெறலாம்.
இன்சூரன்ஸ் பி.ஓ.எஸ்.பி (POSP) ஆவதால் கிடைக்கும் 10 சிறந்த பலன்கள்
1. பி.ஓ.எஸ்.பி (POSP) ஆவது மிகவும் எளிது
மேலே குறிப்பிட்ட உள்ளபடி ஒரு சில அளவுகோல்களை பூர்த்தி செய்வதன் மூலமாக ஒருவர் பி.ஓ.எஸ்.பி ஆகலாம். அதாவது இதற்கு உங்களது குறைந்தபட்ச வயது 18 ஆக இருக்க வேண்டும். அதோடு நீங்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், உங்களிடம் ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் உங்கள் பெயரில் ஒரு வங்கிக் கணக்கு வைத்திருக்க வேண்டும்.
மேலும் நீங்கள் இன்சூரன்ஸ் பாலிசிகளை ஆன்லைனில் விற்பனை செய்ய வேண்டும் என்பதால் உங்களிடம் ஸ்மார்ட் ஃபோன், ஒரு லேப்டாப் மற்றும் நல்ல இன்டர்நெட் இணைப்பு இருக்க வேண்டும். கல்லூரி மாணவர்கள், ஃபிரஷர்கள் மற்றும் பிற வேலைகளில் பெரிதாக அனுபவம் இல்லாதவர்களுக்கு இந்த வேலை சிறந்தது.
2. குறிப்பிட்ட வேலை நேரம் கிடையாது
ஒரு பி.ஓ.எஸ்.பி ஆக உங்களுக்கு விருப்பமான நேரத்தில் நீங்கள் வேலை செய்து கொள்ளலாம். 9 மணி முதல் 5 மணி வரை வேலை செய்ய வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் கிடையாது. உங்களுக்கான வேலை நேரத்தை உங்கள் சௌகரியத்திற்கு ஏற்ப நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். மேலும் நீங்கள் முழுநேரம் வேலை பார்க்க வேண்டுமா அல்லது பகுதி நேரமாக பார்க்க வேண்டுமா என்பதையும் நீங்களே முடிவு செய்து கொள்ளலாம். இந்த வேலை மாணவர்கள், இல்லத்தரசிகள் மற்றும் ஓய்வு பெற்ற நபர்களுக்கு வருமானம் ஈட்டுவதற்கான சிறந்த வேலையாக அமையும்.
3. வீட்டில் இருந்தபடியே வேலை செய்யலாம்
பாலிசிகளை விற்பனை செய்ய பி.ஓ.எஸ்.பி-கள் ஆன்லைன் செயல்முறைகளை பயன்படுத்தலாம் என்பதால் வெளியே சென்று பயணிப்பதற்கான அவசியம் இருக்காது. வாடிக்கையாளர்களை ஃபோன் மூலம் தொடர்பு கொண்டு, பாலிசிகளை இன்டர்நெட்டில் விற்பனை செய்வதால் இந்த வேலையை வீட்டில் இருந்தபடியே அல்லது எங்கு இருந்து கொண்டு வேண்டுமானாலும் செய்து விடலாம்.
4. நீங்களே உங்களுக்கு முதலாளி
பி.ஓ.எஸ்.பி தனக்கு தானே முதலாளியாக செயல்படலாம். இதற்கான அர்த்தம் பாலிசிகளை விற்பனை செய்வதற்கு உங்களுக்கான வேலை நேரம், டார்கெட்டுகள் எவ்வளவு நேரம் மற்றும் எவ்வளவு முயற்சி எடுக்க வேண்டும் போன்ற அனைத்தையும் நீங்களே முடிவு செய்து கொள்ளலாம். ஆகவேஃக்ஷ, உங்களுக்கு நீங்களே முதலாளி ஆவதன் மூலமாக, உங்களது தேவை மற்றும் சௌகரியம் ஆகியவற்றிற்கு ஏற்றார் போல நீங்கள் வேலை செய்யலாம்.
5. நிலையான வருமானம் ஈட்டலாம்
பி.ஓ.எஸ்.பி-களுக்கான நிலையான கமிஷன் அளவுகள் ஒழுங்குமுறை அமைப்புகளால் (ஐ.ஆர்.டி.ஏ.ஐ) முன்னதாகவே தீர்மானிக்கப்படுகின்றன. ஆரம்பத்தில் ஒரு சிறந்த வாடிக்கையாளர் தளத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளை எடுத்தாலே போதும். அதன் பின்னர் பாலிசைகளை புதுப்பிப்பது போன்ற குறைந்தபட்ச முயற்சிகளை எடுத்தே நல்ல வருமானங்களைப் பெறலாம். ஆகவே, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் நீங்கள் ஒரு நிலையான வருமானத்தைப் பெற ஆரம்பித்துவிடுவீர்கள். கூடுதல் முயற்சிகளை எடுப்பதன் மூலமாக உங்கள் வருமானத்தை அதிகரித்தும் கொள்ளலாம்.
6. அதிக வருமானம் பெறுவதற்கான வாய்ப்பு
ஒரு பி.ஓ.எஸ்.பி ஈட்டும் வருமானம் ஆனது அவர் செய்யும் வேலை நேரத்தை பொறுத்து அமையாமல் அவர் விற்பனை செய்யும் பாலிசிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தே அமையும். இதற்கான நிலையான வருமானம் அல்லது அதிகபட்ச வரம்பு என்பது கிடையாது. ஆகவே, இதில் அதிக வருமானம் பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. உங்களது வருமானமானது கமிஷன் அடிப்படையில் அமையும் மற்றும் நீங்கள் விற்பனை செய்யும் பாலிசிகள் மற்றும் புதுப்பிப்புகளின் அடிப்படையில் கொடுக்கப்படும். எனவே, ஒரு பி.ஓ.எஸ்.பி ஆக நீங்கள் அதிக பாலிசிகளை விற்பனை செய்து நிறைய வருமானம் ஈட்டலாம்.
7. எந்த ஒரு முதலீடும் தேவையில்லை
பி.ஓ.எஸ்.பி ஆக உங்கள் பணியைத் தொடங்குவதற்கு முதலீடு செய்வதற்கான அவசியம் இல்லை. உங்களது நேரம் மற்றும் முயற்சி மட்டுமே உங்களது முதலீடு ஆகும். இதைத் தவிர உங்களிடம் ஸ்மார்ட் ஃபோன், கம்ப்யூட்டர் மற்றும் நல்ல இன்டர்நெட் இணைப்பு இருப்பது அவசியம்.
இந்த தொழிலில் நீங்கள் எந்த ஒரு பணத்தையும் முதலீடு செய்யவில்லை என்பதால், இதன் மூலமாக அதிக லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்பு உள்ளது.
8. துறை சார்ந்த நிபுணர்களிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ளலாம்
பி.ஓ.எஸ்.பி அல்லது இன்சூரன்ஸ் ஏஜெண்டாக நீங்கள் பயிற்சி பெற்று வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது, உங்கள் திறன்களை வளர்த்துக் கொள்ளவும், புதிய வாய்ப்புகளைப் பெறுவதற்குமான பல பயிற்சி முகாம்கள் துறைச் சார்ந்த நிபுணர்களால் நடத்தப்படும். சமீபத்திய வருடங்களில் இன்சூரன்ஸ் எடுப்பதற்கான விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்து வருவதால், பல இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மற்றும் இடைத்தரகர்கள் இந்த தேவையைப் பூர்த்தி செய்வதற்காக பி.ஓ.எஸ்.பி-களை நாடத் தொடங்கியுள்ளனர். இதற்கான அர்த்தம் இந்த துறையில் ஏராளமான வாய்ப்புகள் இருக்கிறது என்பதே ஆகும்.
9. இது மக்களுக்கு உதவி செய்வதற்கான ஒரு வித்தியாசமான வழியாகும்
பி.ஓ.எஸ்.பி ஆக மக்களின் வாழ்வில் ஒரு நேர்மறையான தாக்கத்தை நீங்கள் ஏற்படுத்தலாம். மக்கள் அவர்களது ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளவும், அவர்களது குழந்தைகளை நல்லபடியாக பார்த்துக் கொள்ளவும், ஓய்வு காலத்திற்குப் பிறகான திட்டத்தை தீட்டவும் மற்றும் பலவற்றிற்கும் அவர்களுக்கு நீங்கள் உதவி செய்யலாம். ஏனென்றால், அவர்களுக்கான சரியான இன்சூரன்ஸ் பாலிசிகளை நீங்கள் விற்பனை செய்யும் பொழுது, அவர்களை பொருளாதார ரீதியாக அவர்களுக்கான பாதுகாப்பை வழங்குகிறீர்கள். மேலும், அவர்களது சொந்த ஆரோக்கியம் மற்றும் குடும்பத்தினரின் ஆரோக்கியம் குறித்த பயம் இல்லாமல் இருக்க உதவி செய்கிறீர்கள்.
லைஃப் இன்சூரன்ஸ், ஹோம் இன்சூரன்ஸ், மோட்டார் இன்சூரன்ஸ், ஹெல்த் இன்சூரன்ஸ் அல்லது எந்த ஒரு பாலிசியாக இருந்தாலும், வீட்டில் தீப்பிடித்தல், குடும்ப உறுப்பினரின் இறப்பு, பிள்ளைகளுக்கான மருத்துவ உதவி மற்றும் பல விஷயங்களில் இருந்தும் நீங்கள் அவர்களை பாதுகாக்கிறீர்கள். இது ஒரு முக்கியமான மற்றும் அர்த்தமுள்ள பணியாகும்.
10. விருதுகள் மற்றும் அங்கீகாரம் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது
பி.ஓ.எஸ்.பி மற்றும் இன்சூரன்ஸ் ஏஜெண்டாக தேசிய மற்றும் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெறுவதற்கான வாய்ப்புகள் பல உள்ளன. உதாரணமாக, ஆசியாவின் நம்பகமான ஏஜெண்டுகள் மற்றும் அட்வைஸர்கள் போன்ற விருதுகளுக்கு நீங்கள் தகுதி பெறலாம். மேலும் இதன் மூலமாக உங்களுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
பி.ஓ.எஸ்.பி (POSP) ஆவதற்கான சிறந்த நிறுவனத்தைத் தேர்வு செய்வது எப்படி
ஒரு பி.ஓ.எஸ்.பி ஆக இன்சூரன்ஸ் பாலிசிகளை விற்பனை செய்வதற்கு, இன்சூரன்ஸ் நிறுவனம் அல்லது இடைத்தரகர் போன்றவர்களுடன் கையெழுத்திடலாம். இதனைச் செய்வதற்கு முன்பு நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்:
- நிறுவனம் பல வகையான இன்சூரன்ஸ் பாலிசிகளை வழங்கக்கூடியது. உதாரணமாக ஹெல்த், மோட்டார், டிராவல், ஹோம், கமர்சியல் போன்றவை.
- நீங்கள் நேரடியாக நிறுவனத்துடன் பணி புரிவீர்கள். இதில் இடைத்தரகர்களுக்கான வேலை இருக்காது.
- நீங்கள் சேர்த்த ஒரு வாடிக்கையாளர் அவரது பாலிசியை புதுப்பிக்கும் போது கூட, அதற்கான கமிஷனை நீங்கள் பெறுவீர்கள்.
- பாலிசிகளை பெறுவதற்கு எந்த ஒரு ஆவணம் அல்லது குழப்பம் இல்லாத ஆன்லைன் செயல்முறையை மட்டுமே நிறுவனம் வழங்குகிறது.
- நீங்கள் விற்பனை செய்யும் பாலிசிகளுக்கான கமிஷன்களை நிறுவனம் உடனடியாக உங்களுக்கு வழங்கிவிடும்.
- உங்களுக்கு உதவக்கூடிய வலிமையான பேக்என்ட் ஆதரவு குழு உள்ளது.
இந்த அளவுகோல்கள் அனைத்தையும் பூர்த்தி செய்ய கூடிய டிஜிட் இன்சூரன்ஸ் உட்பட, பல இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மற்றும் இடைத்தரகர்கள் உள்ளனர். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் அவர்களுடன் இணையும் முன் அவர்களை பற்றியானத் தகவல்களை சேகரிக்க சிறிது நேரம் செலவிடுவது மட்டுமே.