பாஸ்போர்ட்டில் பெயர் மற்றும் முகவரியை மாற்றுவது எப்படி?
பாஸ்போர்ட்டில் உங்கள் பெயர் மற்றும் முகவரி உட்பட பல முக்கிய விவரங்கள் உள்ளன. எனவே, நீங்கள் சமீபத்தில் இடம் பெயர்ந்திருந்து, உங்கள் பாஸ்போர்ட் பழைய முகவரியைக் குறிப்பிட்டால், அதை நீங்கள் புதுப்பிக்க வேண்டும். அதேபோல, பாஸ்போர்ட்டில் உங்கள் பெயர் தவறாக குறிப்பிடப்பட்டிருந்தால், அதையும் கூடிய விரைவில் மாற்ற வேண்டும்.
எனவே, பாஸ்போர்ட்டில் உங்கள் பெயரை மாற்றுவதற்கான செயல்முறையை இந்தக் கட்டுரை விவரிக்கிறது. கூடுதலாக, பாஸ்போர்ட்டில் உங்கள் முகவரியை எவ்வாறு மாற்றுவது என்பது குறித்தும், உங்களுக்கு வழிகாட்டுகிறது.
ஆரம்பிக்கலாமா!
பாஸ்போர்ட்டில் பெயரை மாற்றுவது எப்படி?
பாஸ்போர்ட்டில் எழுத்துப் பிழையான பெயரைத் திருத்தவோ அல்லது தனது குடும்பப்பெயரை மாற்றவோ விரும்பும் நபர் பாஸ்போர்ட் மீண்டும் வழங்க விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் பாஸ்போர்ட்டை மீண்டும் வழங்குவதற்கான படிவத்தை பூர்த்தி செய்து சமர்பிப்பதற்கான படிகள் இங்கே உள்ளன-
- பாஸ்போர்ட் சேவாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் சென்று, 'இப்போதே பதிவு செய்யவும்' விருப்பத்தை கிளிக் செய்யவும்.
- உங்கள் பதிவு செய்யப்பட்ட ஐடி-யுடன் உள்நுழைந்து, ‘புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கவும்/பாஸ்போர்ட் மீண்டும் வழங்கவும்" விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- தொடர்புடைய விவரங்களுடன் விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.
- உங்கள் திரையில் காட்டப்படும் இணைப்பைக் கிளிக் செய்து பணம் செலுத்தவும், அப்பாயிண்ட்மெண்ட்டை திட்டமிடவும். மேலும், உங்கள் அருகிலுள்ள பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகம் (ஆர்பிஓ - RPO) அல்லது பாஸ்போர்ட் சேவா கேந்திராவில் (பி.எஸ்.கே - PSK) அப்பாயிண்ட்மெண்ட்டை திட்டமிட குறிப்பிட்ட தொகையைச் செலுத்த வேண்டும்.
- இப்போது, உங்கள் விண்ணப்பக் குறிப்பு எண் அல்லது ஏ.ஆர்.என் அடங்கிய சலான் பெற, ‘விண்ணப்ப ரசீதை அச்சிடுக’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும். வெற்றிகரமாக விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு, ஒதுக்கப்பட்ட தேதியில் விண்ணப்பத்தைச் சரிபார்க்க அசல் ஆவணங்களுடன் அருகிலுள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தைப் அணுகவும்.
மாற்றாக, நீங்கள் ஒரு இ-படிவத்தைப் பதிவிறக்கம் செய்து அதை நிரப்பலாம். அதன் பிறகு, 'சரிபார்க்கவும்' என்பதைக் கிளிக் செய்து கோப்பைச் சேமிக்கவும். பின்னர், பாஸ்போர்ட் அலுவலகத்தில் அப்பாயிண்ட்மெண்ட்டை முன்பதிவு செய்ய, மேலே குறிப்பிடப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றி, இந்த எக்ஸ்.எம்.எல்(XML) கோப்பைப் பதிவேற்றவும்.
பாஸ்போர்ட்டில் பெயரை மாற்ற என்னென்ன ஆவணங்கள் தேவை?
இதற்குக் தேவையான ஆவணங்களின் பட்டியல் இதோ:
திருமணச் சான்றிதழ் (அசல் மற்றும் நகல்)
உங்கள் வாழ்க்கைத் துணையின் பாஸ்போர்ட்டின் சுய சான்றொப்பமிட்ட நகல்
தற்போதைய முகவரிக்கான சான்று
பழைய பாஸ்போர்ட்டின் முதல் மற்றும் கடைசி இரண்டு பக்கங்களின் சுய சான்றொப்பமிட்ட நகல். இதில் ஈ.சி.ஆர்/ஈ.சி.ஆர் அல்லாத பக்கத்தையும் சேர்க்க வேண்டும்.
பொருந்தும் பட்சத்தில், பழைய பாஸ்போர்ட்டில் செல்லுபடியாகும் நீட்டிப்புப் பக்கமும், கண்காணிப்புப் பக்கமும் இருக்க வேண்டும்.
குறிப்பு: விவாகரத்து பெற்றவர் தனது பாஸ்போர்ட்டில் உள்ள குடும்பப்பெயரை மாற்ற, விவாகரத்து ஆணையின் நீதிமன்ற சான்றளிக்கப்பட்ட நகலை அல்லது விவாகரத்துச் சான்றிதழின் நகலை (சுய சான்றொப்பமிட்ட) சமர்ப்பிக்க வேண்டும்.
பாஸ்போர்ட்டில் பெயர் மாற்றத்திற்கான படிகள் மற்றும் ஆவணங்களை இப்போது நாம் அறிந்துள்ளோம், பாஸ்போர்ட்டில் முகவரியை மாற்றுவதற்கான செயல்முறையைப் பற்றி அறியலாம்.
பாஸ்போர்ட்டில் முகவரியை மாற்றுவது எப்படி?
ஆன்லைனில் முகவரியை மாற்றுவதற்கான படிகள் பின்வருமாறு-
- பாஸ்போர்ட் சேவாவின் அதிகாரப்பூர்வ வளைத்தளத்தைப் பார்வையிடவும். இங்கே, பதிவுசெய்த பயனர்கள் தங்கள் ஐடி மற்றும் கடவுச்சீட்டுடன் கணக்குகளில் உள்நுழையலாம், அதே நேரத்தில் புதிய பயனர்கள் புதிய கணக்கை உருவாக்க வேண்டும்.
- உங்கள் கணக்கில் உள்நுழைந்த பிறகு, அருகிலுள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தைத் தேர்ந்தெடுக்கவும். இந்த கட்டத்தில், போர்ட்டலில் உங்கள் பெயர் மற்றும் பிறந்த தேதி போன்ற சில விவரங்களை உள்ளிட வேண்டும்.
- பின்னர், உங்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் கணக்கில் செயல்படுத்தும் இணைப்பைப் பெறுவீர்கள். இந்த இணைப்பைக் கிளிக் செய்து, 'புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கவும்/பாஸ்போர்ட்டை மீண்டும் வழங்கவும்' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
முன்னர் அறிவித்தபடி, ஒரு நபர் அருகில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் அப்பாயிண்ட்மண்ட் பெற வேண்டும். புதுப்பிக்கப்பட்ட முகவரி விவரங்களுடன் ஒரு பி.டி.எஃப்(pdf) விண்ணப்பப் படிவம் பூர்த்தி செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்பட வேண்டும். இந்தப் படிவத்தை ஆஃப்லைனிலும் பதிவிறக்கம் செய்து நிரப்பலாம் என்பதை நினைவில் கொள்ளவும். முடிந்ததும், பதிவிறக்கம் செய்யப்பட்ட அதே பக்கத்தில் பதிவேற்றலாம்.
பாஸ்போர்ட்டில் முகவரியை மாற்ற என்னென்ன ஆவணங்கள் தேவை?
ஒருவரின் பாஸ்போர்ட்டில் முகவரி மாற்றத் தேவையான ஆவணங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
அசல் பாஸ்போர்ட்
உங்கள் ஆன்லைன் விண்ணப்பத்தின் நகல்
சலான் அல்லது பணம் செலுத்திய ரசீதின் நகல்
ஆதார் அட்டை, மின் கட்டணம், தண்ணீர் கட்டணம், வாக்காளர் அடையாள அட்டை போன்ற தற்போதைய முகவரிக்கான சான்று.
பாஸ்போர்ட் வழங்கும் அதிகாரியால் பார்வையிடப்பட்ட கண்காணிப்புப் பக்கத்தின் நகல் (சுய சான்றொப்பமிடப்பட்டது)
வாழ்க்கைத் துணையின் பாஸ்போர்ட் (விண்ணப்பதாரரின் தற்போதைய முகவரியும், வாழ்க்கைத் துணையின் பாஸ்போர்ட்டில் உள்ள முகவரியும் ஒன்றாக இருக்க வேண்டும்)
மேலே குறிப்பிட்டுள்ளபடி, பெயர் அல்லது முகவரி மாற்றத்திற்கு கட்டணங்கள் பொருந்தும். அதை நாம் இப்போது காணலாம்.
பாஸ்போர்ட்டில் பெயர் மற்றும் முகவரியை மாற்ற கட்டணம் எவ்வளவு?
பெயர், முகவரி உள்ளிட்டதனிப்பட்ட விவரங்களில் மாற்றம் இருந்தால், ஏற்கனவே உள்ள பாஸ்போர்ட்டை மீண்டும் வழங்க விண்ணப்பிக்க வேண்டும்.
10 ஆண்டுகள் செல்லுபடியாகும் பாஸ்போர்ட் (விசா பக்கங்கள் தீர்ந்துவிட்டதால் கூடுதல் கையேடு உட்பட) மீண்டும் வழங்குவதற்கான விண்ணப்பக் கட்டணம் ₹2000 (60 பக்கங்களுக்கு) மற்றும் ₹1500 (36 பக்கங்களுக்கு). தட்கல் சேவைகளைப் பொறுத்தவரை, ஒரு நபர் கூடுதலாக ₹2000 செலுத்த வேண்டும்.
மேலும், மைனர்களுக்கு, 5 ஆண்டுகள் செல்லுபடியாகும் பாஸ்போர்ட்டை மீண்டும் வழங்குவதற்கு விண்ணப்பக் கட்டணம் ₹1000 (36 பக்கங்களுக்கு) மற்றும் கூடுதல் தட்கல் கட்டணம் ₹2000 ஆகும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
முகவரி மாற்ற விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் போது விண்ணப்பதாரர் நேரில் இருக்க வேண்டியது அவசியமா?
இல்லை, முகவரி மாற்றத்திற்கான விண்ணப்ப செயல்முறை ஆன்லைனில் நடைபெறுகிறது.
பெண்கள் திருமணத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டில் பெயர் மாற்றுவது கட்டாயமா?
இல்லை, பெண்கள் திருமணத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டில் தங்கள் பெயர்களை மாற்ற வேண்டியது கட்டாயம் இல்லை. அத்தகைய மாற்றங்களைச் செய்வது விண்ணப்பதாரரின் விருப்பமாகும்.