இந்திய டிப்ளோமெடிக் பாஸ்போர்ட்
டிப்ளோமெடிக் பாஸ்போர்ட் ஒரு டிப்ளோமெட் அல்லது அரசாங்க கடமைகளுக்காக வெளிநாடு செல்லும் அதிகாரிக்கு வழங்கப்படுகிறது. இதில், தனிநபர்கள் மெரூன் கவரில் வரும் “டைப் டி” பாஸ்போர்ட்டைப் பெறுகிறார்கள். இது சாதாரண குடிமக்களுக்கு (விஐபி குடியிருப்பாளர்கள் உட்பட) அடர் நீல அட்டையுடன் வழங்கப்படும் சாதாரண பாஸ்போர்ட்டில் இருந்து வேறுபட்டது.
இந்த அதிகாரப்பூர்வ பாஸ்போர்ட்களைப் பற்றி மேலும் அறிய விரும்புகிறீர்களா? டிப்ளோமெடிக் பாஸ்போர்ட் என்றால் என்ன என்பது குறித்த உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் இந்தக் கட்டுரை பதிலளிக்கும்.
டிப்ளோமெடிக் பாஸ்போர்ட்டை யார் பெற முடியும்?
"டிப்ளோமெடிக் பாஸ்போர்ட் பெற யார் தகுதியானவர்?" என்று ஆச்சரியப்படும் நபர்கள் தங்கள் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள பின்வரும் பட்டியலைப் பார்க்கவும் -
வெளிநாடு பயணம் செய்யும் இந்திய வெளிநாட்டு சேவை (பிரான்ச் ஏ) அதிகாரிகள்.
வெளியுறவுத்துறை அமைச்சரகத்தின் அதிகாரிகள் மற்றும் உத்தியோகபூர்வ கடமைகளுக்காக வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் இந்திய வெளிநாட்டு சேவை (பிரான்ச் பி) யிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள்.
தகுதியான அதிகாரியுடன் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் சார்ந்திருக்கும் பெற்றோர், மகன் மற்றும் மகள், வாழ்க்கை துணை அல்லது உத்தியோகபூர்வ பணிப்பெண். வெளியுறவு அமைச்சகம் சார்பு நிலையை அங்கீகரிக்க வேண்டும்.
மேலே குறிப்பிட்டுள்ள குடும்ப உறுப்பினர்கள் தங்களுடைய குடியுரிமை நாடு தவிர வேறு நாட்டில் கல்வி மற்றும் பிற நோக்கங்களுக்காக டிப்ளோமெடிக் பாஸ்போர்ட்டைப் பெறலாம்.
டிப்ளோமெடிக் அந்தஸ்துள்ள நபர்கள்.
இந்திய அரசால் வெளிநாடுகளுக்குச் செல்ல நியமிக்கப்பட்ட அதிகாரிகள்.
இந்தியாவில் டிப்ளோமெடிக் பாஸ்போர்ட் என்றால் என்ன மற்றும் அதன் தகுதிக்கான பதில் உங்களுக்குக் கிடைத்ததா? அதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்று இப்போது பார்க்கலாம்.
டிப்ளோமெடிக் பாஸ்போர்ட்டை எவ்வாறு பெறுவது?
தூதரகம், பாஸ்போர்ட் மற்றும் விசா, புது தில்லி பிரிவில் மட்டுமே டிப்ளோமெடிக் பாஸ்போர்ட்டுகளுக்கான விண்ணப்பம் அனுமதிக்கப்படுகிறது. இருப்பினும், உங்கள் அருகிலுள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திலும் நீங்கள் டிப்ளோமெடிக் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம்.
டிப்ளோமெடிக் பாஸ்போர்ட்டுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்று நீங்கள் தேடுகிறீர்களானால் பின்வரும்எளிய வழிமுறைகளைப் பின்பற்றவும் -
பாஸ்போர்ட் சேவா போர்ட்டலில் உங்கள் விவரங்களைப் பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளுங்கள்.
நீங்கள் ஒரு கணக்கை உருவாக்கியதும், உங்கள் பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லைக் கொண்டு உள்நுழையவும்.
“டிப்ளோமெடிக்/அதிகாரப்பூர்வ பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கவும்” என்ற இணைப்பைத் தேர்ந்தெடுக்கவும்.
உங்கள் பெயர், குடும்ப விவரங்கள் போன்ற தொடர்புடைய விவரங்களை படிவத்தில் நிரப்பவும்.
“பார்க்கவும்/ சமர்ப்பித்த படிவத்தைப் அச்சிடவும்” என்ற இணைப்பைத் தேர்ந்தெடுத்து விண்ணப்பப் படிவத்தின் பிரிண்ட் அவுட்டை எடுக்கவும்.
புதுதில்லியில் உள்ள தூதரக அலுவலகத்திற்குச் செல்லும்போது இந்த அச்சிடப்பட்ட விண்ணப்பப் படிவம் மற்றும் பிற முக்கிய ஆவணங்களை எடுத்துச் செல்லவும். இல்லையெனில், அருகிலுள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திற்குச் செல்லும்போது இவற்றை எடுத்துச் செல்லுங்கள்.
டிப்ளோமெடிக் பாஸ்போர்ட்டுக்கு தேவையான ஆவணங்கள்:
பின்வரும் ஆவணங்களின் நகலை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும் -
உங்களின்அதிகாரப்பூர்வ அடையாள அட்டை.
அனுப்புதல் அதிகாரியிடமிருந்து பெற்ற அதிகாரப்பூர்வ கடிதத்தை சமர்ப்பிக்கவும்.
அலுவலகத் தலைவர் சான்றிதழ்.
ஏதேனும் அரசியல் அனுமதி சான்றிதழ் இருந்தால்சமர்ப்பிக்கவும்.
அசல் டிப்ளோமெடிக் பாஸ்போர்ட்.
உங்களின் அசல் டிப்ளோமெடிக் பாஸ்போர்,வெளியுறவு அமைச்சரகத்திடம் பாதுகாப்பில் இருந்தால், அசல் பாதுகாப்புஅல்லது தன்னொப்படைப்பு சான்றிதழை எடுத்துச் செல்லவும்.
வெளியுறவு அமைச்சரகம் பாதுகாப்புஅல்லது தன்னொப்படைப்பு சான்றிதழை ரத்து செய்தால், அசல் ரத்துச் சான்றிதழைச் சமர்ப்பிக்கவும்.
விண்ணப்பித்த நாளிலிருந்து 6 மாதங்களுக்குள் ஓய்வுபெறும் டிப்ளோமெட்கள் தங்கள் அலுவலகத்திலிருந்து உறுதிமொழியைசமர்ப்பிக்க வேண்டும். உத்தியோகபூர்வ சுற்றுப்பயணத்திலிருந்து திரும்பிய பிறகு அவர்கள் பாஸ்போர்ட்டை தங்கள் அலுவலகத்தில் ஒப்படைப்பார்கள் என்று இது குறிப்பிடுகிறது.
குறிப்பு: நீங்கள் பின்வரும் வரிசையில் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் -
விண்ணப்பப் படிவத்தின் அச்சிடப்பட்ட நகல்
அரசியல் அனுமதி சான்றிதழ்
அடையாளஅட்டையின் நகல்
அலுவலகத் தலைவரால் வழங்கப்பட்ட சான்றிதழ்
அனுப்பும் அதிகாரியிடமிருந்து கோரிக்கை கடிதம்
மற்ற முக்கியமான ஆவணங்கள்
சாதாரண மற்றும் டிப்ளோமெடிக் பாஸ்போர்ட்டுகளுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன?
இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இங்கே -
அளவுருக்கள் | சாதாரண பாஸ்போர்ட் | டிப்ளோமெடிக் பாஸ்போர்ட் |
பொருள் | இந்த பாஸ்போர்ட் விஐபி நபர்கள் உட்பட பொது குடிமக்களுக்கு வழங்கப்படுகிறது. பாஸ்போர்டில் 30-60 பக்கங்கள் இருக்கும். | இது உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்படுகிறது. பாஸ்போர்டில் 28 பக்கங்கள் மட்டுமே இருக்கும். |
செல்லுபடியாகும் காலம் | பெரியவர்கள் - 10 ஆண்டுகள் வயது வரா மைனர்கள் - 5 ஆண்டுகள் | 5 ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவாகவழங்கப்படும். |
பயன்பாடு | இந்த பாஸ்போர்ட் தனிப்பட்ட அல்லது வணிக பயணங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதில் அரசின் தலையீடு இல்லை. | இந்திய அரசின் உத்தியோகபூர்வ கடமைக்காக வெளிநாடு செல்லும் அதிகாரிகள் இந்த பாஸ்போர்ட்டை பயன்படுத்துகின்றனர். |
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
இந்தியாவில் டிப்ளோமெடிக் பாஸ்போர்ட் வைத்திருந்தாலும் புதிய சாதாரண பாஸ்போர்ட்டுக்கு
ஆம். நீங்கள் டிப்ளோமெடிக் பாஸ்போர்ட்டை வைத்திருந்தாலும் புதிய சாதாரண பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம். முகவரி, பிறந்த தேதி ஆதாரம் மற்றும் தன்னொப்படைப்புச் சான்றிதழை சமர்ப்பிக்கவும்.
டிப்ளோமெடிக் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க ஆகும் கட்டணம் எவ்வளவு?
டிப்ளோமெடிக் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க கட்டணம் ஏதும் தேவையில்லை.
டிப்ளோமெடிக் பாஸ்போர்ட் விண்ணப்பத்தை செயலாக்க எவ்வளவு நேரம் ஆகும்?
டிப்ளோமெடிக் பாஸ்போர்ட்டுக்கான உங்கள் விண்ணப்பத்தின் செயலாக்க நேரம் தோராயமாக 3 முதல் 5 வேலை நாட்கள் ஆகும்.