பாஸ்போர்ட் இழப்பை உள்ளடக்கிய பயணக் காப்பீடு 
Instant Policy, No Medical Check-ups

உங்கள் பாஸ்போர்ட் தொலைந்து போயிவிட்டால் அனைத்தும் தொலைந்து போய்விட்டதாக எண்ண வேண்டாம்

பாஸ்போர்ட் மிக முக்கியமான டிராவல் ஆவணங்களில் அவசியமானது மட்டுமல்ல, உலகெங்கிலும் நாம் மேற்கொண்ட பயணங்களின் ஒரு சிறிய பிரதிநிதித்துவமாகும். நமது பாஸ்போர்ட்டின் பக்கங்களில் உள்ள முத்திரைகள் உலகெங்கிலும் நாம் விட்டுச்சென்ற அடையாளங்களின் உருவகமாகும்.

பாஸ்போர்ட் நமது சர்வதேச பயணங்களுக்காக மட்டுமல்ல, அடையாள நோக்கங்களுக்காகவும் அல்லது ஒன்றைப் பெறுவதற்கான செயல்முறை கடினமாக இருப்பதன் காரணமாகவும் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது! நாம் வைத்திருக்கும் முதல் ஐந்து மிக முக்கியமான ஆவணங்களில் பாஸ்போர்ட்டும் ஒன்றாகும். "வீட்டில் எதிர்பாராத விதமாக தீவிபத்து ஏற்பட்டால் வீட்டிலிருந்து உங்களுடன் எடுத்துச் செல்லும் 5 பொருட்கள் என்னவாக இருக்கும்?" என்றால் அதில் பாஸ்போர்ட்டும் ஒன்று என்பது உங்களுக்குத் தெரியும்.

நீங்கள் விடுமுறையில் இருக்கும்போது அல்லது அதை விட மோசமான நேரத்தில் அதாவது நீங்கள் விமானத்தில் புறப்படுவதற்கு முன்பே, உங்கள் பாஸ்போர்ட்டை இழக்க நேரிட்டால் என்ன ஆகும் என்று கற்பனை செய்து பாருங்கள்! சில நேரங்களில், நாம் எவ்வளவு கவனமாகவும் விழிப்புடனும் இருந்தாலும், இதுபோன்ற விஷயங்கள் நடக்கின்றன. எனவே, அத்தகைய சூழ்நிலைகளில் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? அதிர்ஷ்டவசமாக, இன்டர்நேஷனல் டிராவல் இன்சூரன்ஸ் வாங்கி உங்கள் பயணத்தை முன்கூட்டியே பாதுகாத்திருந்தால், அது உங்களுக்கு எப்போதும் துணை இருக்கும்! இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில், பாஸ்போர்ட்டை தொலைத்து விட்டால், மனம் உடைந்து விடாமல் இருக்க, டிராவல் இன்சூரன்ஸ் பெரிதும் உதவுகிறது!

பாஸ்போர்ட் லாஸ் கவர் என்றால் என்ன?

பாஸ்போர்ட் லாஸ் கவர் என்பது டிஜிட்டின் டிராவல் இன்சூரன்ஸில் சேர்க்கப்பட்ட ஒரு நன்மையாகும், இது நீங்கள் விடுமுறையில் இருக்கும்போது ஒருவேளை நீங்கள் உங்கள் பாஸ்போர்ட்டை இழந்தால், தற்காலிக பாஸ்போர்ட்டைப் பெறுவதற்கும், புதிய பாஸ்போர்ட்டைப் பெறுவதற்கும் உதவும். நீங்கள் எங்கு பயணம் செய்தாலும் இது பொருந்தும், அதாவது அந்தந்த நாட்டின் இன்டர்நேஷனல் டிராவல் இன்சூரன்ஸ் எடுத்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

இந்த கவர் எப்போது பயன்படும்?

நீங்கள் விடுமுறையில் இருக்கும்போது உங்கள் பாஸ்போர்ட்டை இழக்க நேரிட்டால், நீங்கள் செல்லும் நாட்டின் அந்தந்த இந்திய தூதரகத்திலிருந்து பாஸ்போர்ட் ரீபிலேஸ்மென்ட்டை பெறுவதற்கான செலவுகளை உங்கள் டிராவல் இன்சூரன்ஸ் ஈடுசெய்யும்.

பாஸ்போர்ட் தொலைந்தால் நான் என்ன செய்ய வேண்டும்?

எனது பயணத்தின் போது எனது பாஸ்போர்ட்டை நான் தொலைத்திருந்தால் என்ன செய்வது?

பாஸ்போர்ட்டை இழந்தது உண்மையில் வேதனை அளிக்கும்! ஆனால், இதற்கு வேறு வழி இல்லாமல் இல்லை. உங்கள் பாஸ்போர்ட் தொலைந்துவிட்டது அல்லது திருடப்பட்டது என்பதை நீங்கள் உணர்ந்தவுடன், அதை காவல்துறையில் புகாரளித்து எழுத்துப்பூர்வமான காவல்துறை அறிக்கையைக் கோருவதுதான் முதல்படி. உங்கள் காணாமல் போன அல்லது திருடப்பட்ட பாஸ்போர்ட்டைப் புகாரளித்தவுடன், அருகிலுள்ள இந்திய துணைத் தூதரகம் அல்லது தூதரகத்திலிருந்து டூப்ளிகேட் பாஸ்போர்ட் அல்லது எமர்ஜென்சி டிராவல் ஆவணத்தைப் பெற காவல்துறை அறிக்கையைப் பயன்படுத்தலாம். நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், எங்கள் 24×7 மணி நேர டிராவல் அசிஸ்டென்ட் ஹெல்ப்லைனில் எங்களுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுங்கள். அருகிலுள்ள இந்தியத் தூதரகம் அல்லது துணைத் தூதரகத்தின் முகவரி உட்பட தற்காலிக அல்லது அவசர பாஸ்போர்ட்டை எவ்வாறு பெறுவது என்பதற்கான செயல்முறை பற்றி உங்களுக்குத் தெளிவாக வழிகாட்ட 10 நிமிடங்களுக்குள் நாங்கள் உங்களை மீண்டும் அழைப்போம்.

பயணத்தின்போது பாஸ்போர்ட்டை இழந்தால் டிஜிட்டின் டிராவல் இன்சூரன்ஸ் எவற்றையெல்லாம் கவர் செய்கிறது?

செயல்முறை மூலம் உங்களுக்கு வழிகாட்டுவதோடு மட்டுமல்லாமல், உங்கள் தொலைந்த பாஸ்போர்ட்டை மாற்றுவதற்கான செலவையும் டிஜிட் உங்களுக்காக செலுத்தும். கிளைம் செய்யக்கூடிய செலவுகள் பின்வருமாறு:

1. உங்கள் பயணத்தைத் தொடர்வதற்கும்/அல்லது இந்தியாவுக்குத் திரும்புவதற்கும் அவசர சான்றிதழை வழங்குவதற்காக இழப்பு ஏற்பட்ட இடத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு செலுத்த வேண்டிய பரிந்துரைக்கப்பட்டக் கட்டணம்.

2. அவசர சான்றிதழைப் பெறுவது தொடர்பாக உங்களுக்கு ஏற்படக்கூடிய எந்தவொரு மற்றும் தற்செயலான செலவுகளுக்கும் 50 அமெரிக்க டாலர் நிலையான தொகையாக அளிக்கப்படும். எடுத்துக்காட்டாக, இந்திய தூதரகம் அல்லது துணைத் தூதரகத்திற்கு கேப் கட்டணத்தை நாங்கள் செலுத்துகிறோம். நீங்கள் கேப் கட்டணத்தின் ரசீதை வைத்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

3. டூப்ளிகேட் பாஸ்போர்ட்டைப் பெறுவதற்கு இந்தியாவில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குச் செலுத்த வேண்டிய அப்ளிக்கேஷன் கட்டணம் முழுத் தொகையும் இந்திய ரூபாயில் செலுத்தப்படும்.

பயணத்தின் போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள்

உங்கள் பயணத்தின்போது ஏற்படக்கூடிய சில சூழ்நிலைகளை எளிதாக்க நீங்கள் பயணத்திற்கு முன் செய்யக்கூடிய சில விஷயங்கள் உள்ளன:

  • முதலாவதாக, உங்கள் பாஸ்போர்ட் மற்றும் விசாவின் நகல்களை எடுத்து உங்கள் பாஸ்போர்ட்டை வைத்திருக்கும் இடத்திலிருந்து தனியாக ஒரு இடத்தில் வைக்கவும். ஆவணங்களின் நகலை உங்கள் ஃபோனில் வைத்திருக்கலாம். ஆனால், உங்கள் பாஸ்போர்ட்டுடன் உங்கள் ஃபோனும் திருடப்படலாம் அல்லது தொலைந்துவிடலாம், அதனால் தான் உங்கள் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பு உங்கள் பாஸ்போர்ட் மற்றும் விசாவின் நகலை நீங்களே உங்களுக்கு மின்னஞ்சல் செய்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம், நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் மின்னஞ்சலில் உள்நுழைந்து ஆவணங்களின் நகலை பிரிண்ட் செய்துகொள்ளலாம்.

  • நீங்கள் விடுமுறையில் செல்லும் அனைத்து நாடுகளிலும் உள்ள இந்திய துணைத் தூதரகங்கள் மற்றும் தூதரகங்களின் பட்டியல் மற்றும் அவற்றின் முகவரியுடன் தொலைபேசி எண் ஆகியவை உதவியாக இருக்கும் மற்றொரு விஷயம். நிச்சயமாக, செயல்முறைக்கு உங்களுக்கு உதவ எங்கள் டிராவல் ஹெல்ப்லைன் 24/7 உங்களுக்காவே செயல்படுகிறது.

  • இறுதியாக, மற்றும் மிக முக்கியமாக, எதிர்பாராத வகையில் ஏதேனும் நடந்தால், உங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய டிஜிட்டின் டிராவல் இன்சூரன்ஸை நீங்கள் பயணம் தொடங்குவதற்கு முன்பே வாங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில், டிஜிட் டிராவல் இன்சூரன்ஸ், நீங்கள் ஒருவேளை பாஸ்போர்ட்டை இழந்தால் உங்களைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், நீங்கள் பயணிக்கும்போது ஏற்படக்கூடிய பலவிதமான பிற அபாயங்களிலிருந்தும் உங்களைப் பாதுகாக்கிறது.