அவசர நிதி நிலைமைக்கான பணத்தை வழங்கும் டிராவல் இன்சூரன்ஸ்
பிக்பாக்கெட்டுகளிடமிருந்து நான் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய இடங்கள் ஏதேனும் உள்ளதா?
பெரும்பாலும் அதிக மக்கள் வந்துசெல்லும் சுற்றுலாத் தலங்கள், பொது போக்குவரத்து மற்றும் உணவகங்கள் மற்றும் கடற்கரைகள் போன்ற பிற நெரிசலான சுற்றுலாத் தலங்கள். பார்சிலோனா, ரோம், பாரிஸ், ஏதென்ஸ் ஆகியவை பிக்பாக்கெட்டுக்கு பிரபலமான சில சுற்றுலாத் தலங்கள்!
எனது வாலட் திருடப்பட்டால் என்ன செய்வது?
பயணத்தின் போது ஏற்படக்கூடிய மோசமான விஷயங்களில் ஒன்று உங்கள் வாலட் திருட்டு! அத்தகைய சூழ்நிலையை நீங்கள் எதிர்கொள்ளும்போது முதலில் நினைவில் கொள்ள வேண்டியது, நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும், பீதியடைய வேண்டாம். உங்கள் கார்டுகள் மற்றும் பணம் திருடுபோனது ஒருபுறம் இருந்தாலும், நீங்கள் பீதியடைந்தால், அது நிச்சயமாக சிக்கலை அதிகரிக்கும்.
திருடப்பட்ட பேக்குகள் மற்றும் வாலட் இழப்புகளிலிருந்து பாதுகாக்க ஏதேனும் டிராவல் இன்சூரன்ஸ் உள்ளதா?
வெளிநாடுகளுக்குச் செல்லும்போது பிக்பாக்கெட் மிகவும் பொதுவானது, ஆர்கனைஸ் செய்யப்பட்ட கிரைம் நெட்வொர்க்குகள் பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகளை குறிவைக்கின்றன. எனவே, நீங்கள் செல்லும் நகரம் மற்றும் அங்கு நிலவும் திருட்டு நிலைமைகளுக்கு ஏற்ப பொருத்தமான கவரேஜை வழங்கும் டிராவல் இன்சூரன்ஸை நீங்களே பெறுவது நல்லது.
எடுத்துக்காட்டாக, டிஜிட்டின் டிராவல் இன்சூரன்ஸில் ஒரு ஃபைனான்சியல் எமர்ஜென்சி கேஷ் கவர் உள்ளது, இது உங்கள் வாலட் அல்லது பேக் திருடப்பட்டால் நீங்கள் தேர்ந்தெடுத்த பிளானின்படி உங்களுக்கு ஒரு நன்மைத் தொகையை வழங்குகிறது.
சரி, என் வாலட் திருடப்பட்டால் நான் என்ன செய்ய வேண்டும்?
அதை புகாரளிக்கவும்! - திருடப்பட்ட பொருட்களுக்கு, திருட்டு நடந்த 24 மணி நேரத்திற்குள் காவல்துறையில் புகாரளிக்க வேண்டும் மற்றும் எழுத்துப்பூர்வ காவல்துறை அறிக்கையைப் பெற வேண்டும்.
உங்கள் கேஜெட்டுகள் மற்றும் கார்டுகளைக் டிராக் செய்து பிளாக் செய்யவும் - உங்கள் சேவை வழங்குநர் மற்றும் வங்கியை அழைக்க முயற்சிக்கவும், உங்கள் சேவைகள் மற்றும் டெபிட்/கிரெடிட் கார்டுகளை உடனே பிளாக் செய்யவும். உங்கள் போனின் லொகேஷனைச் சரிபார்க்க டிராக்கிங் ஆப்களையும் பயன்படுத்தலாம்
உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளுங்கள் - உங்கள் இன்சூரன்ஸ் பிளான், உடமைகள்/தனிப்பட்ட உடமைகளின் இழப்பை உள்ளடக்கினால், நீங்கள் இழந்த பொருட்களுக்கு ரீஇம்பர்ஸ் பெறுவீர்கள். கிளைமின்போது உங்கள் அனைத்து அறிக்கைகளையும், ரசீதுகளையும் வைத்திருக்க வேண்டும். தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்கத் தவறினால் உங்கள் கிளைம் தொகைக் குறைக்கப்படலாம் அல்லது நிராகரிக்கப்படலாம்.
டிஜிட்டுடன் கிளைமை எவ்வாறு தாக்கல் செய்வது?
- அத்தகைய இழப்புகள் நேர்ந்தால் உடனடியாக (48 மணி நேரத்திற்கு மிகாமல்) எங்கள் டிராவல் கிளைம் ஹெல்ப்லைனுக்கு தெரிவிக்க வேண்டும். +91-7303470000 என்ற எங்கள் கட்டணமில்லா எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுங்கள் (நீங்கள் உலகில் எங்கிருந்தாலும்). 10 நிமிடங்களில் உங்களை மீண்டும் அழைப்போம்.
- இழப்பு ஏற்பட்ட 24 மணி நேரத்திற்குள் வெளிநாட்டின் காவல்துறையில் புகாரளிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் மற்றும் அறிக்கையை டிஜிட் குழுவுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
- உங்கள் மொபைல் எண்ணுக்கு ஒரு லிங்க்கை அனுப்புவோம், அதில் நீங்கள் சில ஆவணங்களையும் உங்கள் வங்கிக் கணக்கு விவரங்களையும் பதிவேற்றலாம்.
- இழந்த டிராவல் ஃபண்டின் தொகையை மாற்றுவதற்காக பாலிசி அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளத் தொகை வரை நாங்கள் உங்களுக்குச் செலுத்துவோம்.
உங்கள் வாலட் திருடப்படாமல் இருக்க டிராவல் இன்சூரன்ஸ் உதவ முடியாது என்றாலும், உங்கள் திருடப்பட்ட பொருட்களை மாற்றுவதற்கு ஆகும் செலவை ஈடுகட்ட உதவும். டிஜிட் உடன் உங்கள் டிராவலை இன்சூர் செய்யுங்கள். மேலும் அறிக/இப்போதே வாங்கவும்.