டிஜிட் இன்சூரன்ஸ் பண்ணுங்க

2021-22 ஆம் ஆண்டிற்கான டி.டி.எஸ் (TDS) ரேட்கள் என்ன?

சோர்ஸில் டிடக்ட் செய்யப்படும் டேக்ஸ் அல்லது டி.டி.எஸ் (TDS) என்பது சம்பளம், பணம் செலுத்துதல், ஈட்டிய வட்டி, கமிஷன் போன்ற பல்வேறு இன்கம் சோர்ஸ்களிலிருந்து டிடக்ட் செய்யப்படும் டேக்ஸ் ஆகும். எனவே, பேமெண்ட்டை முறைப்படுத்த புதுப்பிக்கப்பட்ட பேமெண்ட்களைக் கண்காணிப்பது முக்கியம்.

2021-22 நிதியாண்டிற்கான டி.டி.எஸ் (TDS) ரேட்கள் குறித்த விரிவான தகவல்களை அறிய தொடர்ந்து ஸ்க்ரோல் செய்யவும்.

2021-22 நிதியாண்டிற்கான டி.டி.எஸ் (TDS) ரேட்கள்

ஏப்ரல் 1, 2021 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சம்பளம் அல்லாத பேமெண்ட்களுக்கான டி.டி.எஸ் (TDS) மற்றும் டி.சி.எஸ் (TCS) ரேட்கள் உயர்த்தப்பட்டுள்ளதாக எகனாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

எடுத்துக்காட்டாக, 2021 ஏப்ரல் 1 முதல் 2022 மார்ச் 31 வரை ஒரு ஃபிக்ஸ்டு டெபாசிட்டில் செலுத்தப்பட்ட டெபாசிட் ரூ.40,000-க்கு மேல் இருந்தால், கடன் வழங்குபவர் இப்போது திருப்பிச் செலுத்தப்பட்ட இன்ட்ரெஸ்ட்டில் 10% டேக்ஸ் டிடக்ட் செய்வார். முன்னதாக இந்த விகிதம் 2020-21 நிதியாண்டில் 7.5% ஆக இருந்தது.

2020-21 நிதியாண்டின் நான்காவது காலாண்டுக்கான டி.டி.எஸ் (TDS) ரிட்டன்களை ஃபைல் செய்வதற்கான கடைசி தேதி 2021 ஜூலை 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

2021-22 டி.டி.எஸ் (TDS) விகிதத்தைக் காட்டும் அட்டவணை இங்கே.

பேமெண்ட்டின் நேச்சர் மற்றும் செக்ஷன்

த்ரெஷ்ஹோல்டு

தனிநபர்/எச்.யூ.எஃப் (HUF) டி.டி.எஸ் (TDS) ரேட்

இ.பி.எஃப் (EPF), 192ஏ இல் இருந்து முன்கூட்டியே வித்ட்ராவல் செய்வது

₹50000

10% (பான் கார்டு இல்லையென்றால் 20%)

சாலரீஸ் , 192

ஊழியரின் ஐ.டி (IT) டெக்லேரேஷன்

ஆவரேஜ் ரேட்

டிவிடென்ட்ஸ், 194

₹5000

10%

இன்ட்ரெஸ்ட் செக்கியூரிட்டி, 193

₹2,500

10%

இன்ட்ரெஸ்ட் ஃப்ரம் பேங்க்,194A

₹40000

10%

சீனியர் சிட்டிசன்,194ஏ

₹50000

10%

சிங்கில் கான்ட்ராக்டர் பேமெண்ட்,194சி

₹30000

1%

மொத்த கான்ட்ராக்டர் பேமெண்ட், 194சி

₹1 லட்சம்

15%

இன்சூரன்ஸ் கமிஷன் (15ஜி மற்றும் 15எச் அனுமதி), 194டி

₹15000

5%

லைஃப் இன்சூரன்ஸ் பாலிசி, 194டி.ஏ (DA)

₹1 லட்சம்

1%

என்.எஸ்.எஸ் (NSS), 194இ.இ (EE)

₹2500

10%

எம்.ஃப் (MF) மூலம் ரீபர்சேஸ் யூனிட்கள், 194எஃப்

-

20%

லாட்டரியில் இருந்து கமிஷன்,194ஜி

₹15000

5%

புரோக்கரேஜ்,194எச்

₹15000

5%

பிளாண்ட், மெஷினரி அல்லது உபகரணங்களின் வாடகை, 194I(a))

₹2.40 லட்சம்

2%

கட்டிடம், நிலம் மற்றும் ஃபர்னிச்சரின் வாடகை, 194ஐ(பி)

₹2.40 லட்சம்

10%

Transfer of immovable property besides agricultural land, 194IA

₹50 லட்சம்

1%

தனிநபர்/எச்.யூ.ஃப் (HUF) மூலம் வாடகை (1 ஜூன் 2017 முதல்), 194ஐபி (IB)

மாதம் ₹50000

5%

2017-18 நிதியாண்டு, 1941சி இல் இருந்து அக்ரீமென்டின் கீழ் பேமெண்ட்

-

10%

ஃபீஸ்-டெக் சர்வீசஸ், கால் சென்டர் போன்றவை, 194ஜே (ஏ)

₹30000

2%

ராயல்டி அல்லது புரொபஷனல் சர்வீசஸுக்கான ஃபீ, 194ஜே (பி)

₹30000

10%

விவசாய நிலம் தவிர்த்து ஏனைய அசையாச் சொத்துக்களை டிரான்ஃபர் செய்வதற்கான காம்பன்ஷேஷன், 194எல்.ஏ (LA)

₹2.50 லட்சம்

10%

மியூச்சுவல் ஃபண்டுகள் மூலம் டிவிடென்ட்களின் பேமெண்ட், 194கே

₹5000

10%

உள்கட்டமைப்பு கடன் நிதி இன்கம் (என்.ஆர்.ஐ (NRI) டி.டி.எஸ் (TDS) ரேட்), 194எல்.பி

-

5%

குறிப்பிட்ட பத்திரங்கள் மற்றும் அரசாங்க பத்திரங்கள் மீதான வட்டி, 194எல்.டி (LD)

-

5%

கடன் வழங்கும் நிறுவனத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அக்கவுண்ட்களில் இருந்து முந்தைய ஆண்டில் பணம் எடுத்தல், 194என்

₹ 1 கோடி

2%

கமிஷன் அல்லது புரோக்கரேஜ் நிறுவனத்திற்கு ஒரு தனிநபர் அல்லது எச்.யூ.ஃப் (HUF) பேமெண்ட், 194எம்

₹50 லட்சம்

5%

பொருட்களை வாங்குதல், 194க்யூ

₹50 லட்சம்

0.10%

ஈ-காமர்ஸ் மீதான டி.டி.எஸ் (TDS), 1940

₹5 லட்சம்

1%

டெக்னிக்கலாக, இன்கம் சோர்ஸிலிருந்து டேக்ஸ் வசூலிக்க டி.டி.எஸ் (TDS) என்ற கான்செப்ட் அறிமுகப்படுத்தப்பட்டது. இது டிடக்ஷன் செய்பவருக்கு பணம் செலுத்தவும், சோர்ஸில் டேக்ஸ் டிடெக்ஷன் அளிக்கவும், அதை மத்திய அரசின் கணக்கில் அனுப்பவும் கடமைப்பட்டுள்ளது.

எனவே, அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள டி.டி.எஸ் (TDS) ரேட்களைத் தவிர, ஒரு நிறுவனத்தைத் தவிர மற்ற இந்திய நிறுவனங்களுக்கு கவர்ன்மென்ட் குறிப்பிட்ட ரேட்களை நிர்ணயித்துள்ளது.

[ஆதாரம் 1]

[ஆதாரம் 2]

[ஆதாரம் 3]

டி.டி.எஸ் (TDS) ரேட்கள் இந்தியாவில் வசிப்பவர்களுக்கு பொருந்தும் (ஒரு நிறுவனம் தவிர)

இந்திய குடியிருப்பாளர்களுக்கான டி.டி.எஸ் (TDS) விகித விளக்கப்படத்தைக் காட்டும் அட்டவணை இங்கே.

பேமெண்ட்டின் நேச்சர்

செக்ஷன்

டி.டி.எஸ் (TDS) ரேட்

சேலரி பேமெண்ட்

192

ஆவரேஜ் ரேட்

செக்கியூரிட்டி மீதான இன்ட்ரெஸ்ட்

193

10%

இன்ட்ரெஸ்ட் வடிவில் இன்கம்

194A

10%

எந்தவொரு டிவிடென்ட்டின் பேமென்ட்

194

10%

லாட்டரி மற்றும் பிற விளையாட்டுகளிலிருந்து கிடைக்கும் இன்கம்

194பி

30%

கான்ட்ராக்டருக்கு பேமெண்ட் - எச்.யூ.எஃப் (HUF)/தனிநபர்

194சி

1%

ஒப்பந்தக்காரருக்கு பணம் செலுத்துதல் - மற்றவை

194சி

2%

குதிரை பந்தய வின்னிங்ஸ் மூலம் கிடைக்கும் இன்கம்

194பி.பி (BB)

30%

லைஃப் இன்சூரன் பாலிசிக்கான எந்தவொரு பேமெண்ட்டையும் செலுத்துதல்

194 டி.ஏ (DA)

5%

இன்சூரன்ஸ் கமிஷன்

194டி

5%

யூனிட் டிரஸ்ட் ஆஃப் இந்தியா (யூடிஐ) அல்லது மியூச்சுவல் ஃபண்ட் மூலம் ஒரு யூனிட்டை மீண்டும் வாங்க வேண்டிய பேமெண்ட்

194எஃப்

20%

நேஷனல் சேவிங்ஸ் ஸ்கீமின் கீழ் பேமெண்ட்

194இ.இ (EE)

5%

கமிஷன் பேமெண்ட்கள்

194ஜி

5%

பிளாண்ட்/மெஷினரி மீதான ரென்ட்

194-ஐ

2%

நிலம், ஃபர்னிச்சர், கட்டிடம் அல்லது ஃபிட்டிங் மீதான ரென்ட்

194-ஐ

10%

புரோக்கரேஜ்

194எச்

5%

ஜாயிண்ட் டெவலப்மென்ட் அக்ரீமென்ட்டின் கீழ் பேமெண்ட்

194-ஐ.சி (IC)

10%

விவசாய நிலம் தவிர்த்து ஏனைய அசையாச் சொத்துக்களை டிரான்ஸ்பர் செய்யும்போது செலுத்தப்படும் பேமெண்ட்.

194-ஐ.ஏ (IA)

1%

ஒரு எச்.யூ.ஃப் (HUF) அல்லது தனிநபரால் அளிக்கப்படும் ரென்ட் பேமெண்ட்

194-ஐ.பி (IB)

5%

புரொபஷனல் சர்வீஸஸ், டைரக்டருக்கு கமிஷன் மற்றும் பிசினஸ் தொடர்பான எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளாமைக்கு ஃபீ

194ஜே

10%

டெக்னிக்கல் சர்வீசஸ் மற்றும் விற்பனை அல்லது விநியோகத்திற்கான எந்த காப்புரிமையையும் பகிர்ந்து கொள்ளக்கூடாது.

194ஜே

2%

ஒரு பிசினஸ் டிரஸ்டால் அதன் யூனிட்ஹோல்டருக்கு டிஸ்ட்ரிபியூட் செய்யப்படும் இன்கம்

194எல்.பி.ஏ (1) (LBA(1))

10%

சில அசையா சொத்துக்களுக்கு பேமெண்ட் செய்தல்

194 எல்.ஏ (LA)

10%

மியூச்சுவல் ஃபண்ட்டின் யூனிட்கள் மீதான எந்தவொரு இன்கம்மின் பேமெண்ட்

194கே

10%

தனிநபர்களுக்கான பாதுகாப்பு நிதியில் இன்வெஸ்ட்மென்ட் செய்வதன் மூலம் கிடைக்கும் இன்கம்/எச்.யூ.எஃப் (HUF).

194எல்.பி.சி (LBC)

25%

₹ 50 லட்சம் லிமிட்டுடன் தனிநபர்/எச்.யூ.எஃப் (HUF) மூலம் பேமெண்ட்

194எம்

5%

அமெளன்ட் வித்ட்ராவல் லிமிட் ₹ 1 கோடிக்கு மேல் சென்றால்

194என்

2%

பொருட்களின் மொத்த அக்ரிகேட் வேல்யூ ₹ 50 லட்சத்திற்கு அதிகமாக உள்ள பொருட்களை பர்சேஸ் செய்வதற்கான பேமெண்ட்டுகள்

194க்யூ

0.1%

பேமெண்ட்களை செய்யும்போது கடன் வழங்கும் நிறுவனங்களினால் டேக்ஸ் டிடெக்ஷன்

194பி

மொத்த இன்கம்மின் மீதான டேக்ஸ்

இ-கமர்ஸ் பிளாட்ஃபார்ம்கள் மூலம் பொருட்கள் விற்பனை

194O

1%

அதர் இன்கம்

-

10%

இப்போது 2021-22 நிதியாண்டின் நிலவரப்படி வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான டி.டி.எஸ் (TDS) ரேட்டை சரிபார்ப்போம்.

[ஆதாரம்]

வெளிநாடு-வாழ் இந்தியர்களுக்கு (ஒரு நிறுவனம் தவிர) பொருந்தும் டி.டி.எஸ் (TDS) ரேட்கள்

பல்வேறு பிரிவுகளின் கீழ் என்.ஆர்.ஐ (NRI) களுக்கான டி.டி.எஸ் (TDS) ரேட்களைக் காட்டும் அட்டவணை இங்கே.

பேமெண்ட்டின் நேச்சர்

செக்ஷன்

டி.டி.எஸ் (TDS) ரேட்

சேலரி பேமெண்ட்

192

ஆவரேஜ் ரேட்

கமிஷன்

194ஜி

5%

ஈ.பி.எஃப் (EPF)-இல் இருந்து ப்ரிமெச்சூர் வித்ட்ராவல்

192ஏ

10%

லாட்டரி வின்னிங்ஸ் மூலம் கிடைக்கும் இன்கம்

194பி

30%

குதிரை பந்தயம் மூலம் கிடைக்கும் இன்கம்

194பி.பி (BB)

30%

யூனிட் டிரஸ்ட் ஆஃப் இந்தியா மூலம் ஒரு யூனிட்டை ரீபர்சேஸ் செய்வதில் இருந்து பேமெண்ட்

194எஃப்

20%

வெளிநாடு-வாழ் ஸ்போர்ட்ஸ்மேனுக்கு பேமெண்ட்

194இ

20%

அசையா சொத்துக்களுக்கு காம்பன்ஷேஷன் பேமெண்ட்

194 எல்.பி (LB)

5%

நேஷனல் சேவிங்ஸ் ஸ்கீமின் (NSS) கீழ் ஒரு நபருக்கு பேமெண்ட்

194இ.இ (EE)

10%

ஒரு பிசினஸிற்கு கிடைக்கும் இன்ட்ரெஸ்ட்

194எல்.பி.ஏ(2) (LBA(2))

5%

ஒரு பிசினஸ் டிரஸ்ட் மூலம் எஸ்.பி.வி (SPV) இல் இருந்து பெறப்பட்ட டிவிடென்ட்

194எல்.பி.ஏ(2) (LBA(2))

10%

ஒரு இன்வெஸ்ட்மெண்ட் ஃபண்டிலிருந்து ஒரு யூனிட் ஹோல்டருக்கு கிடைக்கும் இன்கம்

194 எல்.பி (LB)

30%

ரென்டல் இன்கம், அல்லது பிசினஸ் டிரஸ்ட்டுக்கு சொந்தமான ரியல் எஸ்டேட் சொத்துக்களிலிருந்து வரும் இன்கம்

194 எல்.பி.ஏ(3) (LBA(3))

30%

ஒரு இந்திய நிறுவனம் வெளிநாட்டு கரன்சியில் வாங்கிய லோனுக்கான இன்ட்ரெஸ்ட்

194எல்.சி (LC)

5%

ஐ.ஃப்.எஸ்.சி (IFSC) இல் லிஸ்ட் செய்யப்பட்ட நீண்ட கால பத்திரங்களுக்கு எதிராக செலுத்த வேண்டிய இன்ட்ரெஸ்ட்)

194எல்.சி (LC)

4%

செக்யூரிடைஷேஷன் ஃபண்டில் இன்வெஸ்ட் செய்வதன் மூலம் கிடைக்கும் இன்கம்

194எல்.பி.சி (LBC)

30%

வெளிநாட்டு இன்வெஸ்டருக்கு பாண்ட் மீதான இன்ட்ரெஸ்ட் பேமெண்ட்

194எல்.டி (LD)

5%

ஆஃப்ஷோர் ஃபண்டின் யூனிட்களிலிருந்து கிடைக்கும் இன்கம்

196பி

10%

வெளிநாட்டு கரன்சி பாண்ட்ஸ் அல்லது இந்திய நிறுவனத்தின் ஜி.டி.ஆர் (GDR) மூலம் கிடைக்கும் இன்கம்

196சி

10%

எல்.டி.சி.ஜி (LTCG) மூலம் எந்தவொரு வருமானமும்

195

15%

செக்ஷன்112ஏ இன் கீழ் எல்.டி.சி.ஜி (LTCG), செக்ஷன் 111 ஏ-இன் கீழ் எஸ்.டி.சி.ஜி (LTCG), செக்ஷன் 112 (1) (சி) (3) இன் கீழ் எல்.டி.சி.ஜி (LTCG), தொழில் கொள்கை தொடர்பான ஒப்பந்தத்திற்காக இந்திய அரசுக்கு செலுத்த வேண்டிய ராயல்டி, இன்டஸ்ட்ரியல் பாலிசி தொடர்பான இந்திய அரசாங்கத்திற்கு டெக்னிக்கல் ஃபீஸ்.

195

10%

என்.ஆர்.ஐ (NRI) இன்வெஸ்ட்மென்ட், செக்ஷன் 115இ-இல் குறிப்பிடப்பட்டுள்ள எல்.டி.சி.ஜி (LTCG), வெளிநாட்டு கரன்சி இந்திய அரசாங்கத்தால் கடன் பெற்ற அமெளன்ட்டுக்கு செலுத்த வேண்டிய இன்ட்ரெஸ்ட், செக்ஷன் 115ஏ-இல் குறிப்பிடப்பட்டுள்ள பதிப்புரிமைக்காக இந்திய அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய ராயல்டியிலிருந்து கிடைக்கும் இன்கம்.

195

20%

என்.ஆர்.ஐ (NRI) தொடர்பான வேறு ஏதேனும் இன்கம்

195

30%

இந்திய மற்றும் இந்தியர் அல்லாதவர்களைத் தவிர, நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட அளவு டி.டி.எஸ் (TDS) செலுத்த வேண்டும். எனவே, உள்நாடு மற்றும் உள்நாடு அல்லாத செக்ஷனுக்கு ஏற்ப நிறுவனங்களுக்கான டி.டி.எஸ் (TDS) ரேட் செக்ரிகேட் செய்திருக்கிறோம்.

உள்நாட்டு நிறுவனங்களுக்கு பொருந்தும் டி.டி.எஸ் (TDS) ரேட்கள்

உள்நாட்டு நிறுவனங்களுக்கான டி.டி.எஸ் (TDS) ரேட்களை பட்டியலிடும் அட்டவணை இங்கே.

பேமெண்ட்டின் நேச்சர்

செக்ஷன்

நிறுவனத்திற்கான டி.டி.எஸ் (TDS) ரேட் (உள்நாடு)

ஈ.பி.எஃப் (EPF)-இல் இருந்து ப்ரிமெச்சூர் வித்ட்ராவல்

192

10%

செக்கியூரிட்டி மீதான இன்ட்ரெஸ்ட்

193

10%

இன்ட்ரெஸ்ட் வடிவில் இன்கம்

194ஏ

10%

எந்தவொரு டிவிடென்ட்டின் பேமென்ட்

194

10%

கான்ட்ராக்டர் அல்லது சப்-கான்ட்ராக்டருக்கு பேமெண்ட்- தனிநபர்கள்/எச்.யூ.ஃப் (HUF)

194சி

1%

கான்ட்ராக்டர் அல்லது சப்-கான்ட்ராக்டருக்கு பேமெண்ட் செய்தல்- மற்றவர்கள்

194சி

2%

லாட்டரி மூலம் கிடைக்கும் வின்னிங்ஸ்

194பி

30%

குதிரை பந்தய வின்னிங்ஸ் மூலம் கிடைக்கும் இன்கம்

194பி.பி (BB)

30%

லைஃப் இன்சூரன்ஸ் பாலிசி பேமெண்ட்

194 டி.ஏ (DA)

5%

இன்சூரன்ஸ் கமிஷன்

194டி

5%

யூ.டி.ஐ (UTI) அல்லது மியூச்சுவல் ஃபண்ட் மூலம் ஒரு யூனிட்டை ரீபர்சேஸ் செய்வதன் மூலம் பேமெண்ட்

194எஃப்

20%

புரோக்கரேஜ்

194எச்

5%

நேஷனல் சேவிங்ஸ் ஸ்கீமின் (NSS) கீழ் ஒரு நபருக்கு பேமெண்ட்

194இ.இ (EE)

10%

லாட்டரி சீட்டு விற்பனையில் கமிஷன் போன்ற பேமெண்ட்கள்

194ஜி

5%

பிளாண்ட் மற்றும் மெஷினரி மீதான ரென்ட்

194-ஐ

2%

நிலம், கட்டிடம், ஃபர்னிச்சர் அல்லது ஃபிட்டிங் மீதான ரென்ட்

194-ஐ

10%

கமிஷனில் இருந்து இயக்குநருக்கான ஃபீ, புரொஃபஷனல் சர்வீசஸ் மற்றும் பிசினஸ் ஆக்டிவிட்டி இல்லாமை

194ஜே

10%

எச்.யூ.ஃப் (HUF) அல்லது தனிநபருக்கான ஜாயிண்ட் டெவலப்மென்ட் அக்ரீமென்ட்களின் கீழ் மனிட்டரி கன்சிடரேஷன்

194-ஐ.சி (IC)

10%

விவசாய நிலம் தவிர்த்து ஏனைய அசையா சொத்துக்களை டிரான்ஸ்பர் செய்வதற்கான பேமெண்ட்

194-ஐ.ஏ (IA)

1%

பொருட்களின் அக்ரிகேட் வேல்யூ ₹50 இலட்சத்தை தாண்டும் போது பொருட்களை பர்சேஸ் செய்வதற்காக ரெசிடென்ட்களுக்கு பேமெண்ட்கள்

194க்யூ

0.1%

செக்ஷன் 10 (23டி)-இன் படி மியூச்சுவல் ஃபண்ட் மீதான இன்கம்மின் பேமெண்ட்

194கே

10%

இன்வெஸ்ட்மென்ட் ஃபண்டிற்கு எதிராக ஒரு யூனிட் வைத்திருப்பவருக்கு செலுத்தப்படும் இன்கம்

194எல்.எல்.பி (LBB)

10%

சில அசையாச் சொத்துக்களை அடைவதற்கான பேமெண்ட்

194 எல்.ஏ (LA)

10%

கேஷ் வித்ட்ராவல்

194என்

2%

ஒரு பிசினஸ் டிரஸ்ட்டால் அதன் யூனிட் வைத்திருப்பவருக்கு விநியோகிக்கப்படும் இன்கம்

194எல்.பி.ஏ (1) (LBA(1))

10%

செக்யூரிடைஷேஷன் ஃபண்டில் இன்வெஸ்ட் செய்வதன் மூலம் கிடைக்கும் இன்கம்

194எல்.பி.சி (LBC)

10%

லிமிட் ₹ 50 லட்சமாக இருக்கும் தனிநபர்/எச்.யூ.எஃப் (HUF) மூலம் பேமெண்ட்ஸ்

194எம்

5%

இந்திய மற்றும் இந்தியர் அல்லாதவர்களைத் தவிர, நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட அளவு டி.டி.எஸ் (TDS) செலுத்த வேண்டும். எனவே, உள்நாடு மற்றும் உள்நாடு அல்லாத செக்ஷனுக்கு ஏற்ப நிறுவனங்களுக்கான டி.டி.எஸ் (TDS) ரேட் செக்ரிகேட் செய்திருக்கிறோம்.

[ஆதாரம்]

உள்நாடு அல்லாத நிறுவனங்களுக்கான டி.டி.எஸ் (TDS) ரேட்கள்

உள்நாடு அல்லாத பிரைவேட் லிமிடெட் கம்பெனிகளுக்கான டி.டி.எஸ் (TDS) ரேட் விளக்கும் அட்டவணை இங்கே.

பேமெண்ட்டின் நேச்சர்

செக்ஷன்

டி.டி.எஸ் (TDS) ரேட்

லாட்டரி மூலம் கிடைக்கும் வின்னிங்ஸ்

194பி

30%

குதிரை பந்தய வின்னிங்ஸ் மூலம் கிடைக்கும் இன்கம்

194பி.பி (BB)

30%

வெளிநாடு-வாழ் ஸ்போர்ட்ஸ்மேனுக்கு பேமெண்ட்

194இ

20%

கமிஷன் போன்ற பேமெண்ட்கள்

194ஜி

5%

அசையாச் சொத்து வாங்குவதற்கான பேமெண்ட்

194 எல்.பி (LB)

5%

ஒரு பிசினஸிற்கு கிடைக்கும் இன்ட்ரெஸ்ட்

194எல்.பி.ஏ(2) (LBA(2))

5%

ஒரு பிசினஸ் டிரஸ்ட் மூலம் எஸ்.பி.வி (SPV) இல் இருந்து பெறப்பட்ட டிவிடென்ட்

194எல்.பி.ஏ(2) (LBA(2))

10%

ரென்டல் இன்கம், அல்லது பிசினஸ் டிரஸ்ட்டுக்கு சொந்தமான ரியல் எஸ்டேட் சொத்துக்களிலிருந்து வரும் இன்கம்

194 எல்.பி.ஏ(3) (LBA(3))

30%

ஒரு இன்வெஸ்ட்மெண்ட் ஃபண்டிலிருந்து ஒரு யூனிட் ஹோல்டருக்கு கிடைக்கும் இன்கம்

194எல்.எல்.பி (LBB)

30%

செக்யூரிடைஷேஷன் ஃபண்டில் இன்வெஸ்ட் செய்வதன் மூலம் கிடைக்கும் இன்கம்

194எல்.பி.சி (LBC)

30%

வெளிநாட்டு கரன்சியில் இந்திய கம்பெனி வாங்கிய கடனுக்கான இன்ட்ரெஸ்ட்

194எல்.சி (LC)

5%

ஐ.எஃப்.எஸ்.சி (IFSC) பட்டியலிடப்பட்ட நீண்ட கால பத்திரங்களுக்கு எதிராக செலுத்த வேண்டிய இன்ட்ரெஸ்ட்

194எல்.சி (LC)

4%

வெளிநாட்டு இன்வெஸ்டர்களுக்கு பாண்டின் மீதான இன்ட்ரெஸ்ட் பேமெண்ட்

194எல்.டி (LD)

5%

வெளிநாட்டு கரன்சி பாண்ட்கள் மூலம் கிடைக்கும் இன்கம் (எல்.டி.சி.ஜி (LTCG) உட்பட)

196சி

10%

வெளிநாட்டு ஃபண்டின் யூனிட்களிலிருந்து இன்கம் (எல்.டி.சி.ஜி (LTCG) உட்பட).

196பி

10%

பேமெண்ட்டின் நேச்சர்

செக்ஷன்

டி.டி.எஸ் (TDS) ரேட்

செக்ஷன் 111ஏ இன் கீழ் எஸ்.டி.சி.ஜி (STCG) மூலம் இன்கம்

195

15%

இன்டஸ்ட்ரியல் பாலிசி தொடர்பான விஷயங்கள் தொடர்பான அக்ரீமென்டிற்கு இணங்க கவர்ன்மெண்ட் அல்லது இந்திய கம்பெனிக்கு செலுத்தப்பட வேண்டிய ராயல்டியிலிருந்து கிடைக்கும் இன்கம்

195

10%

செக்ஷன் 112ஏ-இன் பரிந்துரைகளின்படி லாங்-டெர்ம் கேபிட்டல் ஆதாயங்களிலிருந்து வரும் இன்கம்

195

10%

வேறு எந்த சோர்ஸிலிருந்தும் வரும் இன்கம்மிலிருந்து கம்பெனிக்கு வேறு எந்த அமெளன்ட்டும் பேமெண்ட் செய்தல்

195

40%

செக்ஷன் 112 (1) (சி) (iii) இன் கீழ் எல்.டி.சி.ஜி (LTCG) மூலம் கிடைக்கும் இன்கம், டெக்னிக்கல் சர்வீசஸ்களுக்காக கவர்ன்மென்ட்டோ அல்லது இந்திய கம்பெனியோ செலுத்த வேண்டிய ஃபீஸ் அடிப்படையில் ஈட்டிய இன்கம், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு கவர்ன்மென்டோ அல்லது இந்திய நிறுவனமோ செலுத்த வேண்டிய ராயல்டியிலிருந்து வரும் இன்கம் போன்ற வேறு ஏதேனும் அமெளன்ட்.

195

10%

இந்த அட்டவணைகளைப் பின்பற்றுவது குறிப்பிட்ட நபர்கள் மற்றும் கம்பெனிகளுக்கான டி.டி.எஸ் (TDS) ரேட்களில் உள்ள வேறுபாடுகளைப் புரிந்துகொள்ள உதவும்.

கால்குலேஷன் மிகவும் சிக்கலானது என்பதால், முழு செயல்முறையையும் ஒழுங்குபடுத்த ஆன்லைன் டி.டி.எஸ் (TDS) கால்குலேட்டர்களைப் பயன்படுத்த பரிந்துரைக்கிறோம்.

[ஆதாரம்]

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

பாண்ட்கள் மீதான இன்ட்ரெஸ்ட்டுக்கு பொருந்தும் டி.டி.எஸ் (TDS) ரேட்கள் யாவை?

பாண்ட்களுக்கான இன்ட்ரெஸ்ட்டுக்கு பொருந்தும் டி.டி.எஸ் (TDS) ரேட் 10% ஆகும்.

2021-ஆம் ஆண்டில் சம்பளம் அல்லாத பேமெண்ட்களுக்கு புதிய டி.டி.எஸ் (TDS) ரேட்கள் பொருந்துமா?

ஆம், 2021-22 நிதியாண்டில் சம்பளம் அல்லாத பேமெண்ட்களுக்கு புதிய டி.டி.எஸ் (TDS) ரேட்கள் பொருந்தும்.