டிஜிட் இன்சூரன்ஸ் பண்ணுங்க

டி.டி.எஸ் (TDS) பேமெண்ட் செய்வது எப்படி: ஆன்லைன் & ஆஃப்லைன் செயல்முறை

மூலத்தில் பிடித்தம் செய்யப்படும் டேக்ஸ் இன்கம் டேக்ஸின் ஒரு பகுதியாகும். வாடகை மற்றும் கமிஷன் போன்ற குறிப்பிட்ட சில பேமெண்ட்களில் இந்த டேக்ஸ் டிடெக்ட் செய்யப்படுகிறது.

ஒரு டேக்ஸ் செலுத்துபவராக டிடெக்ட் செய்யப்பட்டுள்ள இந்த அமௌன்டை நீங்கள் அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டும். சரியான நேரத்தில் டி.டி.எஸ் பேமெண்ட்களை செலுத்துவது தேவையற்ற அபராதங்களை தவிர்ப்பதற்கு உதவும். இந்த டேக்ஸை செலுத்துவதற்கு நீங்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் செயல்முறைகளை தேர்வு செய்யலாம்.

டி.டி.எஸ் பேமெண்ட் ஆன்லைன் செயல்முறை மற்றும் பிற முக்கியமான தகவல்கள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

ஆன்லைனில் டி.டி.எஸ் (TDS) பேமெண்ட் செலுத்துவது எப்படி?

டி.டி.எஸ் பேமெண்ட்களை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் செலுத்துவதற்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள படிகளை பின்பற்றவும் -

  • ஸ்டெப் 1: என்.எஸ்.டி.எல் -இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும். "கிளிக் டு பே டேக்ஸ் ஆன்லைன்" என்பதை தேர்வு செய்யவும்.
  • ஸ்டெப் 2: "டி.டி.எஸ்/டி.சி.எஸ் சலான் நம்பர் /ITNS281" என்பதன் கீழுள்ள "ப்ரொசீட்" என்பதை கிளிக் செய்யவும்.
  • ஸ்டெப் 3: இப்பொழுது நீங்கள் "சலான் நம்பர்/ITNS 281" என்ற பக்கத்திற்கு ரீடைரக்ட் செய்யப்படுவீர்கள். அசெஸ்மெண்ட் ஆண்டு, பேமெண்ட் வகை மற்றும் டி.ஏ.என் போன்ற கட்டாயமாக நிரப்பப்பட வேண்டிய டீடைல்களை நிரப்பவும். கேப்சாவை என்டர் செய்து சமர்ப்பிக்கவும். உங்களது டி.ஏ.என் செல்லுபடி ஆகும் பட்சத்தில், ஒரு டேக்ஸ் பேயராக உங்களது முழு பெயர் ஸ்கிரீனில் காண்பிக்கப்படும்.
  • ஸ்டெப் 4: அனைத்து தகவல்களையும் உறுதி செய்த பிறகு நெட் பேங்கிங் பக்கத்திற்கு ரீடைரக்ட் செய்யப்படுவீர்கள். இங்கே நீங்கள் பயன்படுத்தி வரும் நெட் பேங்கிங் லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்டை நிரப்பி லாகின் செய்வதன் மூலம் டி.டி.எஸ் ஆன்லைன் பேமெண்டை செலுத்தலாம்.

ஆன்லைன் டி.டி.எஸ் பேமெண்ட் வெற்றிகரமாக செலுத்தப்பட்ட பிறகு உங்களுக்கான ஒரு சலான் ஜெனரேட் ஆகும். இந்த சலானில் கார்ப்பரேட் ஐடென்டிட்டி நம்பர், பேங்க் மற்றும் பேமெண்ட் டீடைல்கள் ஆகியவை அடங்கி இருக்கும். எதிர்கால தேவைக்கு இதனை பத்திரமாக வைத்துக் கொள்ளவும்.

ஆஃப்லைனில் டி.டி.எஸ் (TDS) பேமெண்ட் செலுத்துவது எப்படி?

உங்களிடம் இன்டர்நெட் ஆக்சஸ் இல்லை என்றால், நீங்கள் டி.டி.எஸ் -ஐ ஆஃப்லைனில் டெபாசிட் செய்யலாம். அதற்கு உதவக்கூடிய சில எளிய ஸ்டெப்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது -

  • ஸ்டெப் 1: முதலில் இன்கம் டேக்ஸ் டிபார்ட்மெண்டின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் "சலான் 281" -ஐ டவுன்லோட் செய்யவும்.
  • ஸ்டெப் 2: இந்த ஃபார்மை ஒரு பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளுங்கள். டி.ஏ.என், உங்களது முழுப் பெயர், இருப்பிட முகவரி முதலியன போன்ற டீடைல்களை நிரப்பவும்.
  • ஸ்டெப் 3: நீங்கள் செலுத்த வேண்டிய டி.டி.எஸ் அமௌன்டை சலானுடன் அருகில் உள்ள பேங்கில் சமர்ப்பிக்கவும். டி.டி.எஸ் சலான் பேமெண்டிற்கு பிறகு, பேங்கில் இருந்து சீல் குத்தப்பட்ட ரசீது TDS அமௌன்டை செலுத்திய பின் உங்களுக்கு கொடுக்கப்படும்.

[ஆதாரம்]

டி.டி.எஸ் (TDS) பேமெண்ட் ஸ்டேட்டஸ் எப்படி செக் செய்வது?

"ஆன்லைனில் டி.டி.எஸ் பேமெண்ட் ஸ்டேட்டஸ் எப்படி செக் செய்வது", என்று நீங்கள் யோசித்துக் கொண்டிருந்தால் பின்வரும் எளிய படிகளை பின்பற்றுவதன் மூலம் அதனை நீங்கள் செய்யலாம் -

  • ஸ்டெப் 1: என்எஸ்டிஎல் -இன் அதிகாரப்பூர்வ வெப்சைட்டை பார்வையிடவும். உங்களது தேவையைப் பொருத்து சி.ஐ.என் அல்லது டி.ஏ.என் சார்ந்த வியூவை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
  • ஸ்டெப் 2: சி.ஐ.என் தேர்வு செய்திருந்தால் பின்வரும் டீடைல்களை என்டர் செய்யவும்:
    • கலெக்டிங் பிரான்ச்சின் பிஎஸ்ஆர் கோட்
    • சலானின் சீரியல் நம்பர்
    • சலானின் டெபாசிட் தேதி
    • அமௌன்ட்

வெரிஃபிகேஷன் கோட் என்டர் செய்து, "வியூ" என்பதை தேர்வு செய்யவும். இப்பொழுது பின்வரும் தகவல்களை நீங்கள் காண்பீர்கள் -

  • சலானின் சீரியல் நம்பர்
  • பிஎஸ்ஆர் கோட் மற்றும் சலானின் டெபாசிட் தேதி
  • மேஜர் ஹெட் கோட் மற்றும் விளக்கம்
  • பான் (PAN)/டி.ஏ.என்
  • டிஐஎன் பொறுத்து ரசீது தேதி
  • டேக்ஸ் அமௌன்ட்
  • டேக்ஸ் செலுத்துவோராக உங்களது பெயர்
  • ஸ்டெப் 3: நீங்கள் டி.ஏ.என் தேர்வு செய்திருந்தால், டி.ஏ.என் மற்றும் சலானின் டெபாசிட் தேதி. வெரிஃபிகேஷன் கோட் என்டர் செய்து, "வியூ சலான் டீடெயில்ஸ்" என்பதை கிளிக் செய்யவும். இப்பொழுது பின்வரும் விபரங்களை காண்பீர்கள் -
    • விளக்கத்துடன் மேஜர் மற்றும் மைனர் ஹெட் கோட்
    • பேமெண்ட் வகை
    • சி.ஐ.என்

நீங்கள் டி.டி.எஸ் சலான் ஃபைலை டவுன்லோட் செய்து கொள்ளலாம். இந்த ஃபைல் குவாட்டர்லி டி.டி.எஸ் பேமெண்ட் டீடைல்களை வெரிஃபை செய்வதற்கு பயன்படுத்தப்படும்.

 

டி.டி.எஸ் (TDS)பேமெண்ட் ஸ்டேட்டஸ் ஆன்லைனில் செக் செய்வதற்கான மாற்று வழி

e-ஃபைலிங் வெப்சைட்டில் பேமெண்ட் ஸ்டேட்டஸ் செக் செய்வதற்கு உதவுவதற்கான மூன்று ஸ்டெப்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது -

  • இன்கம் டேக்ஸ் டிபார்ட்மெண்டின் அதிகாரப்பூர்வ இ-ஃபைலிங் வெப்சைட்டை பார்வையிடவும்
  • புதிய பயனர்கள் இந்த போர்டலில் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். நீங்கள் ஏற்கனவே ரெஜிஸ்டர்டு மெம்பராக இருந்தால் உங்களது கிரெடன்ஷியல்களை பயன்படுத்தி லாக் ஆன் செய்யவும்.
  • "மை அகௌண்ட்" ஆப்ஷனுக்கு செல்லவும். அதில் "வியூ ஃபார்ம் 26ஏ.எஸ்" என்பதை தேர்வு செய்யவும்.
  • வருடத்தை தேர்வு செய்து ஃபைலை டவுன்லோட் செய்ய பிடிஎஃப் ஃபார்மேட்டை கிளிக் செய்யவும். பாஸ்வேர்டு மூலமாக பாதுகாக்கப்பட்டுள்ள இந்த ஃபைலை திறப்பதற்கு உங்களது பிறந்த தேதியை என்டர் செய்யவும்.

டி.டி.எஸ் பேமெண்ட் ஸ்டேட்டஸ் செக் செய்வதற்கு நீங்கள் நெட் பேங்கிங் ஆப்ஷனையும் பயன்படுத்தலாம். எனினும், அதனை பார்ப்பதற்கு நெட் பேங்கிங் போர்டலுடன் உங்களது பான் எண்ணை இணைத்திருக்க வேண்டும்.

டி.டி.எஸ் (TDS) பேமெண்ட் செலுத்துவதற்கான கடைசி தேதி என்ன?

இந்த மாதத்திற்கான டி.டி.எஸ் அமௌன்டை அடுத்த மாதம் 7 ஆம் தேதிக்குள் அரசுக்கு நீங்கள் செலுத்த வேண்டும். உதாரணமாக, உங்களுக்கு ஜூன் மாதத்தில் டி.டி.எஸ் பிடித்தம் செய்யப்பட்டிருந்தால், நீங்கள் டி.டி.எஸ் அமௌன்டை ஜூலை 7ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். உங்கள் டி.டி.எஸ் அமௌன்டை செலுத்துவதற்கான சில டெட்லைன்கள் பின்வருமாறு -

அரசு பணியில் உள்ள டேக்ஸ் பேயருக்கு பொருந்தக்கூடிய டியூ டேட்கள்

ட்ரான்ஸாக்ஷன் வகை டி.டி.எஸ்(TDS) பேமெண்ட் டியூ டேட்கள்
சலான் இல்லாமல் டி.டி.எஸ் பேமெண்ட் டி.டி.எஸ் டிடெக்ட் செய்யப்பட்ட நாள்
சலானுடன் டி.டி.எஸ் பேமெண்ட் அடுத்த மாதம் 7 ஆம் தேதி
எம்ப்ளாயர் டேக்ஸ் ரிமிட்டன்ஸ் செய்தல் அடுத்த மாதம் 7 ஆம் தேதி

[ஆதாரம்]

அனைத்து டேக்ஸ் பேயருக்கும் பொருந்தக்கூடிய டியூ டேட்கள்

ட்ரான்ஸாக்ஷன் வகை டி.டி.எஸ்(TDS) பேமெண்ட் டியூ டேட்கள்
மார்ச் மாதத்தில் டிடெக்ட் செய்யப்பட்ட டி.டி.எஸ் கொடுக்கப்பட்டுள்ள நிதியாண்டின் ஏப்ரல் 30 ஆம் நாள்
பிற மாதங்களில் டிடெக்ட் செய்யப்பட்ட டி.டி.எஸ் அடுத்த மாதம் 7 ஆம் தேதி

டி.டி.எஸ் (TDS) பேமெண்ட் தாமதமாக செலுத்தினால் என்ன ஆகும்?

டி.டி.எஸ் பேமெண்டை தாமதமாக செலுத்தினால் நீங்கள் பின்வரும் அபராதங்களை செலுத்த வேண்டும் -

டீஃபால்ட் செக்ஷன் 201 (1ஏ) -இன் வகை டி.டி.எஸ் பேமெண்ட் தாமதமாக செலுத்துவதற்கான இன்ட்ரெஸ்ட் இன்ட்ரெஸ்ட் தொகைக்கான காலஅளவு
டி.டி.எஸ் டிடெக்ட் செய்யப்படவில்லை (ட்ரான்ஷாக்ஷன் நேரத்தில் முழுவதுமாக அல்லது பாதி அளவு) ஒரு மாதத்திற்கு 1% இன்ட்ரெஸ்ட் விகிதம் என்பது டிடெக்ஷன் தேதியிலிருந்து டேக்ஸ் டிடெக்ட் செய்யப்பட்ட தேதி வரை கணக்கிடப்படுகிறது.
டி.டி.எஸ் டிடெக்டை செய்த பிறகு டேக்ஸ் செலுத்தாமல் இருப்பது மாதா மாதம் அல்லது பாதி அளவு பேமெண்டிற்கு 1.5% அல்லது 0.75%. செலுத்த வேண்டிய இன்ட்ரெஸ்ட் என்பது டிடெக்ஷன் தேதியிலிருந்து நீங்கள் டி.டி.எஸ் செலுத்திய தேதி வரை கணக்கிடப்படுகிறது.

இதனை எளிமையாக்குவதற்கு, ஒரு உதாரணத்தை கருத்தில் கொள்வோம்:

செலுத்த வேண்டிய டி.டி.எஸ்(TDS) தொகை ₹5000
டி.டி.எஸ் டெபாசிட் செய்வதற்கான டியூ டேட் 13 ஜனவரி
நீங்கள் டி.டி.எஸ் அமௌன்ட் செலுத்திய தேதி 17 ஜனவரி
டி.டி.எஸ் அமௌன்டை தாமதமாக செலுத்தியதற்காக நீங்கள் கொடுக்க வேண்டிய இன்ட்ரெஸ்ட் ஒரு மாதத்திற்கு 1.5%×₹5000 = ₹375

ஒருவேளை டி.டி.எஸ் டெபாசிட் செய்த தேதியிலிருந்து ஒரு மாதத்திற்கு பிறகு டி.டி.எஸ் பேமெண்ட் செலுத்தினால்

டி.டி.எஸ் டிடெக்ட் செய்யப்பட்ட மாதம் 1 ஆகஸ்ட்
டி.டி.எஸ் டெபாசிட் செய்வதற்கான டியூ டேட் 7 செப்டம்பர்
நீங்கள் டேக்ஸ் செலுத்திய தேதி 8 செப்டம்பர்
செலுத்த வேண்டிய இன்ட்ரெஸ்ட் விகிதம் இரண்டு மாதத்திற்கு கணக்கிடப்படும் ஆகஸ்ட் 1 முதல் 8 செப்டம்பர் வரை
டி.டி.எஸ் அமௌன்டை தாமதமாக செலுத்தியதற்காக நீங்கள் கொடுக்க வேண்டிய இன்ட்ரெஸ்ட் 2 மாதங்கள் x ஒரு மாதத்திற்கு 1.5% = 3%

[ஆதாரம்]

டி.டி.எஸ்(TDS) பேமெண்ட் செய்யாமல் இருந்ததற்கான கூடுதல் கட்டணம்

  • செக்ஷன் 276B
இந்த இன்ட்ரெஸ்ட் பணத்தை தவிர டேக்ஸ் செலுத்தவோர் டிடெக்ட் செய்த அமௌன்டை அரசுக்கு செலுத்த தவறினால், அவர்/அவள் சிறை தண்டனையை கூட பெற நேரலாம். குறைந்தபட்ச சிறை தண்டனை 3 மாதங்கள். அதிகபட்சமாக இது அபராத தொகையுடன் 7 வருடங்கள் வரை நீட்டிக்கப்படலாம்.
  • செக்ஷன் 234E

நீங்கள் டி.டி.எஸ் பேமெண்ட் செய்யும் வரை தினமும் ₹200 செலுத்த வேண்டும். மேலும் நீங்கள் ஃபைல் செய்ய வேண்டிய டி.டி.எஸ் அமௌன்டை விட அபராதம் அதிகமாகி விடக்கூடாது.

நிலுவையில் உள்ள டி.டி.எஸ்(TDS) அமௌன்டை பேமெண்ட் செய்வது எப்படி?

கீழே குறிப்பிடப்பட்டுள்ள படிகளை படித்து தெரிந்து கொள்வதன் மூலமாக தாமதமாக டி.டி.எஸ் பேமெண்ட் செலுத்தியதற்கான இன்ட்ரெஸ்டை ஆன்லைனில் எவ்வாறு செலுத்துவது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்:

  • "ட்ரேசஸ்" போர்டலில் லாகின் செய்யவும். "ஜஸ்டிபிகேஷன் ரிப்போர்ட்" டவுன்லோட் செய்து, நிலுவையில் உள்ள டி.டி.எஸ் அமௌன்டைக் காணுங்கள்.
  • சலான் 251 பயன்படுத்தி நிலுவையில் உள்ள டி.டி.எஸ் அமௌன்ட் காண பேமண்டை செலுத்துங்கள்

டி.டி.எஸ் என்பது ஒரு கட்டாய பேமெண்ட் ஆகும். எனவே தேவையற்ற சிக்கல்களை தவிர்க்க டி.டி.எஸ் பேமெண்டை ஆன்லைனில் செலுத்தவும். இவ்வாறு செய்வது டி.டி.எஸ் சாலானை சமர்ப்பிக்க பேங்கில் நீண்ட வரிசையில் காத்திருப்பதை தவிர்க்கலாம்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

டி.டி.எஸ்(TDS) பேமெண்ட் ஆன்லைனில் செலுத்துவதற்கு யாரெல்லாம் தகுதி பெறுவார்கள்?

எந்த ஒரு கார்ப்பரேட் மற்றும் கவர்மெண்ட் கலெக்டர்கள் அல்லது டிடெக்டர்கள் டி.டி.எஸ் பேமெண்ட் ஆன்லைனில் செலுத்துவதற்கு தகுதி பெறுவார்கள்.