டிஜிட் இன்சூரன்ஸ் பண்ணுங்க

இன்கம் டேக்ஸ் ஆக்டின் செக்ஷன் 80G -இன் கீழ் கிடைக்கும் டிடெக்ஷன்கள் விளக்கப்பட்டுள்ளது

ஆதரவற்றோருக்கு நிதி வழங்கி உதவிக்கரம் நீட்டுவது என்பது மிகவும் மதிக்கத்தக்க ஒரு செயல். இந்த நன்கொடை வழங்கும் செயலை ஆதரிப்பதற்காக, அரசு தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கும் நன்கொடைகளுக்கு செக்ஷன் 80G -இன் கீழ் டேக்ஸ் விலக்குகளை அனுமதிக்கிறது.

இந்த திட்டம் ஒரு சில லிமிட்களுடன் குறிப்பிட்ட சில நன்கொடைகளுக்கு 100% டிடெக்ஷன்களை வழங்குகிறது.

இந்த திட்டம் மற்றும் அதனை தாக்கல் செய்வதற்கான படிகள் பற்றி மேலும் தெரிந்துகொள்ள தொடர்ந்து வாசிக்கவும்.

இன்கம் டேக்ஸ் ஆக்டின் செக்ஷன் 80G என்பது என்ன?

செக்ஷன் 80G என்பது தொண்டு நோக்கங்களுக்காக செலவிடப்பட்ட நிவாரண நிதிகள் அல்லது நிதிகளுக்கு பொருந்தக்கூடிய டேக்ஸ் விலக்குகளை வரையறுக்கிறது. டேக்ஸ் செலுத்துவோர் இன்கம் டேக்ஸ் ஆக்டின் செக்ஷன் 80G -இன் கீழ் பொருந்தக்கூடிய டிடெக்ஷன்களை கிளைம் செய்து கொள்ளலாம்.

எனினும், இந்த விலக்குகள் குறிப்பிட்ட சில விதிமுறைகளுடன் வருகிறது என்பதை தனிநபர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அனைத்து நன்கொடைகளும் இந்த பொருந்தக்கூடிய டிடெக்ஷன்களின் கீழ் அமையாது.

இந்த பிரிவின் மூலம் நிர்ணயிக்கப்பட்ட நிதிகளின் கீழ் உள்ள டிடெக்ஷன்களை நிறுவனங்கள், தனிநபர், என்டர்பிரைஸ் முதலியன கிளைம் செய்ய அனுமதிக்கிறது. டிராஃப்ட், செக் அல்லது பணமாக நன்கொடைகளை வழங்க வேண்டும்.

தொண்டு செயல்களில் ஈடுபடக் கூடிய தனிநபர்கள் அதற்கான கிளைம்களை செய்து கொள்ள இந்த செக்ஷன் அனுமதி வழங்குகிறது. எனினும், இந்த நன்கொடை பணமாக கொடுக்கப்பட்டால் 2000 ரூபாய்க்கும் அதிகமாக இருக்க வேண்டும். எனவே, 80G டிடெக்ஷன்களின் கீழ் தகுதி பெறுவதற்கு 2000 ரூபாய்க்கும் அதிகமான அமௌன்டை பணமாக அல்லாமல் பிற வழிகளில் கொடுக்க வேண்டும். இதற்கு முன்பு பணப் பரிமாற்றத்திற்கான இந்த லிமிட் 10,000 ரூபாயாக இருந்தது.

இந்த விதி 2017-18 நிதியாண்டு முதல் செக்ஷன் 80G டிடக்ஷன்களின் கீழ் அறிமுகமானது. எனவே, விலக்குகளுக்கு தகுதி பெறுவதற்கு, நிறுவனங்கள் தங்களது பங்களிப்பை செக் அல்லது டிமாண்ட் டிராஃப்ட் வடிவில் கொடுக்க வேண்டும்.

பொருட்கள், உணவு, உடை, புத்தகங்கள், மருந்துகள் போன்ற வடிவங்களில் வழங்கப்படும் நன்கொடைகள் இன்கம் டேக்ஸ் ஆக்டில் இருக்கக்கூடிய செக்ஷன் 80G -இன் கீழ் டிடெக்ஷன்களாக அரசு ஏற்றுக்கொள்ளாது.

செக்ஷன் 80G -இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள நன்கொடைகள் 100% அல்லது 50% டிடெக்ஷன்களுக்கு தகுதி பெறும் என்பதை தனி நபர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். விதிகளை பொறுத்து இந்த டிடெக்ஷன்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் அல்லது இல்லாமலும் போகலாம்.

இன்கம் டேக்ஸ் ஆக்டின் செக்ஷன் 80G -இன் கீழ் கிளைம் செய்வதற்கான தகுதி லிமிட் என்ன என்பதை இப்பொழுது சரி பார்க்கலாம்.

[ஆதாரம்]

Who Is Eligible to Claim Deduction Under Section 80G?

விலக்கு சதவீதத்தின் கீழ் வெவ்வேறு காரணங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும் என்பதை தனிநபர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இன்கம் டேக்ஸ் தாக்கல் செய்வதற்கு முன் தாங்கள் செய்த தொண்டு செயல் செக்ஷன் 80G விலக்கின் கீழ் வருகிறதா என்பதை டேக்ஸ் செலுத்துவோர் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

தொழில்நுட்ப ரீதியாக, எல்லா தனிநபர்கள், இந்து கூட்டுக் குடும்பங்கள் மற்றும் நிறுவனங்கள் (அதாவது அனைத்து வரிவிதிப்புக்குரியவர்) செக்ஷன் 80G -இன் கீழ் நன்கொடைகளை கிளைம் செய்வதற்கு தகுதி பெறுவார்கள். எனினும், இது இந்திய அரசு வகுத்துள்ள சில விதிமுறைகளுக்கு உட்பட்டது.

பதிவு செய்யப்பட்ட அல்லது நம்பகமான நிறுவனங்களுக்கு நன்கொடைகள் வழங்கிய பட்சத்தில், என்.ஆர்.ஐ-களும் செக்ஷன் 80G -இன் டேக்ஸ் பெனிஃபிட்களை அனுபவிக்கலாம்.

டேக்ஸ் டிடெக்ஷன்களின் வெவ்வேறு சதவீதங்களின் கீழ் தகுதி பெறக்கூடிய காரணிகளை இப்பொழுது பார்க்கலாம்.

செக்ஷன் 80G -இன் கீழ் டிடெக்ஷன்களுக்கு பொருந்தக்கூடிய நன்கொடைகளின் வகைகள்

பின்வரும் அட்டவணை பட்டியல் செக்ஷன் 80G -இன் கீழ் வரும் டிடெக்ஷன்களின் அதிகபட்ச லிமிடுக்கு தகுதி பெறும் நன்கொடைகளின் வகைகள் மற்றும் சதவீதங்களை காட்டுகிறது.

[ஆதாரம்]

100% டிடெக்ஷன்களுக்கு பொருந்தக்கூடிய நன்கொடைகள் (தகுதி லிமிட் இல்லாமல்)

  • நேஷனல் ஃபண்ட் ஃபார் கண்ட்ரோல் ஆஃப் டிரக் அப்யூஸ்
  • மத்திய அரசு அமைத்த நேஷனல் டிஃபன்ஸ் ஃபண்ட்
  • நேஷனல் அல்லது ஸ்டேட் பிளட் டிரான்ஸ்ஃபியூஷன் கவுன்சில்
  • முதலமைச்சரின் நிவாரண நிதி
  • பப்ளிக் கான்ட்ரிபியூஷன்ஸ் ஃபண்ட்(ஆப்ரிக்கா)
  • நேஷனல் ஃபெளண்டேஷன் ஃபார் கம்யூனல் ஹார்மனி
  • கிளீன் கங்கா ஃபண்டு
  • ஃபண்டு ஃபார் டெக்னாலஜி டிவலப்மெண்ட் அண்டு அப்ளிகேஷன்
  • நேஷனல் இல்னஸ் அசிஸ்டன்ஸ் ஃபண்டு
  • மல்டிபிள் டிஸ்எபிலிட்டி, செரிபெரல் பால்சி, ஆட்டிசம், மற்றும் மெண்டல் ரிட்டார்டேஷன் கொண்ட தனி நபர்களின் நலனுக்கான தேசிய அறக்கட்டளை 
  • மஹாராஷ்ட்ரா முதலமைச்சரின் நிலநடுக்கத்திற்கான நிவாரண நிதி 
  • ஸ்வச் பாரத் கோஷ்
  • மஹாராஷ்ட்ரா முதலமைச்சரின் நிவாரண நிதி (1 அக்டோபர் 1993 முதல் 6 அக்டோபர் 1993 வரை)
  • மாநிலத்தில் உள்ள நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக குஜராத் மாநில அரசினால் அமைக்கப்பட்ட நிதி
  • மாநிலத்தில் உள்ள நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக குஜராத் மாநில அரசினால் அமைக்கப்பட்ட நிதி
  • நேஷனல் கல்சுரல் ஃபண்டு
  • பிரதம மந்திரியின் அர்மேனியா நிலநடுக்கத்திற்கான நிவாரண நிதி 
  • ஜிலா சாக்ஷார்தா சமிதி
  • நேஷனல் சில்டிரன்ஸ் ஃபண்டு
  • பிரதம மந்திரியின் தேசிய நிவாரண நிதி
  • ஏழைகளுக்கான மருத்துவ நிவாரணத்திற்கான மாநில அரசு நிதி
  • தி ஆர்மி சென்ட்ரல் வெல்ஃபேர் ஃபண்டு
  • குஜராத் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, செக்ஷன் 80G(சி) -இன் கீழ் அமைக்கப்பட்ட நிறுவனம், அறக்கட்டளை

[ஆதாரம்]

50% டிடெக்ஷன்களுக்கு பொருந்தக்கூடிய நன்கொடைகள் [தகுதி லிமிட் இல்லாமல்]

  • ராஜீவ் காந்தி ஃபெளண்டேஷன்
  • டிரஃப்ட் ரிலீஃப் ஃபண்டு [பிரதம மந்திரி]
  • ஜவஹர்லால் நேரு மெமோரியல் ஃபண்டு
  • ஜவஹர்லால் நேரு மெமோரியல் ஃபண்டு

தகுதி பெறக்கூடிய லிமிட்கள் மீது எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை என்பதைத் தவிர, மொத்த வருமானத்தில் 10 சதவீதத்தை சீரமைப்பு செய்யக்கூடிய அனுமதி வழங்கப்படுகிறது.

[ஆதாரம்]

100% டிடெக்ஷன்களுக்கு தகுதி பெறக்கூடிய நன்கொடைகள் [மொத்த வருமானத்தில் 10% சீரமைப்பு]

  • குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்வதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு அரசு அல்லது பிற அதிகாரம் பெற்ற நிறுவனங்கள், சங்கங்கள் போன்றவைகளுக்கு வழங்கும் நன்கொடைகள்.
  • இந்திய ஒலிம்பிக் சங்கம் அல்லது இந்தியாவில் இருக்கக்கூடிய பிற மதிப்புமிக்க விளையாட்டு நிறுவனங்களுக்கு ஒரு நிறுவனம் வழங்கும் பங்களிப்பு. விளையாட்டுகளுக்கு ஸ்பான்சர் செய்வதும் நன்கொடைகளாக கருதப்படுகிறது.

டேக்ஸூக்கு உட்பட்ட வருமானத்தின் சீரமைக்கப்பட்ட மொத்த வருமானம் என்பது செக்ஷன் 80G -இன் கீழ் உள்ளவற்றை தவிர்த்து பிற டிடக்ஷன்களை கருத்தில் கொண்ட பின் கணக்கிடப்படுகிறது. இது போன்ற டிடெக்ஷன்கள் நீண்ட கால முதலீட்டு வருவாய் போன்ற சில வருமானங்களை குறைக்க கூடும்.

[ஆதாரம்]

50% டிடெக்ஷன்களுக்கு தகுதி பெறக்கூடிய நன்கொடைகள் [மொத்த வருமானத்தில் 10% சீரமைப்பு]

  • தொண்டு நோக்கங்களுக்காக அரசு அல்லது பிற உள்ளூர் அதிகாரம் பெற்ற நிறுவனங்களுக்கு வழங்கக்கூடிய நன்கொடைகள்.
  • கோவில், தேவாலயம், குருத்வாரா, மசூதி போன்றவற்றிற்கான பழுதுபார்ப்பு மற்றும் மறுசீரமைப்புக்கு வழங்கப்பட்ட நன்கொடைகள்.
  • சிறுபான்மை சமூகத்தின் நலன் கருதி மத்திய அரசால் துவங்கப்பட்ட குழுமத்திற்கு வழங்கும் நன்கொடைகள்.
  • நகரங்கள், டவுன் மற்றும் கிராமங்களில் குடியிருப்பு வசதி அல்லது திட்டமிடல், மேம்பாடு போன்ற காரணங்களுக்காக இந்தியாவில் துவங்கப்பட்ட எந்த ஒரு அதிகாரப்பூர்வ நிறுவனத்திற்கு வழங்கும் நன்கொடைகள்.

எனினும், இங்கு குறிப்பிடப்பட்டுள்ள நன்கொடைகள் செக், டிமாண்ட் டிராஃப்ட் போன்ற வடிவங்களில் வழங்கப்பட்டிருக்க வேண்டும். பணமாக செலுத்தப்பட்ட பேமெண்ட்களுக்கு இது போன்ற பெனிஃபிட்கள் கிடைக்காது.

குறிப்பிடப்பட்டுள்ள பிரிவின் கீழ் கிளைம் செய்வதற்கு தேவையான ஆவணங்கள் என்ன என்பதை இப்பொழுது பார்க்கலாம்.

[ஆதாரம்]

செக்ஷன் 80G -இன் கீழ் டேக்ஸ் விலக்குகளை கிளைம் செய்வதற்கு தேவையான ஆவணங்கள் என்ன?

தகுதியுடைய டேக்ஸ் செலுத்துவோர் இன்கம் டேக்ஸ் ரிட்டன் தாக்கல் செய்யும் பொழுது எந்தவித தயக்கமும் இல்லாமல் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

  • சீல் குத்தப்பட்ட ரசீதுகள்: செக்ஷன் 80G -இன் கீழ் டிடெக்ஷன்களை கிளைம் செய்வதற்கு தனி நபர்கள் அதிகாரப்பூர்வ அறக்கட்டளைகளிடம் இருந்து பெற்ற ரசீதுகளை சமர்ப்பிக்க வேண்டும். இந்த ரசீதில் நன்கொடை வழங்கியவரின் பெயர், நன்கொடை அமௌன்ட், முகவரி, அறக்கட்டளையின் பெயர் போன்ற விவரங்கள் இருக்க வேண்டும்.
  • ஃபார்ம் 58: 100% டிடெக்ஷன்களுக்கு பொருந்தக்கூடிய நன்கொடைகளுக்கு ஃபார்ம் 58 -ஐ சமர்ப்பிக்க வேண்டும். இதில் ஒரு குறிப்பிட்ட திட்டத்திற்கு அதிகாரப்பூர்வமாக ஒதுக்கப்பட்ட பணம், அதற்கான செலவுகள், வசூலிக்கப்பட்ட பணம் போன்ற விவரங்கள் இருக்கும்.
  • அறக்கட்டளையின் ரெஜிஸ்டரேஷன் எண்: செக்ஷன் 80G -இன் கீழ் வருமான டேக்ஸ் துறையினரால் வழங்கப்பட்ட அறக்கட்டளையின் ரெஜிஸ்டரேஷன் எண்ணை அவர்கள் குறிப்பிட வேண்டும்.
  • ரெஜிஸ்டரேஷன் செல்லுபடி காலம்: ரெஜிஸ்டரேஷன் செய்த தேதி செல்லுபடி ஆகுமா என்பதையும், இந்த தேதி நன்கொடை வழங்கிய நாளுடன் பொருந்துகிறதா என்பதையும் நன்கொடை வழங்குபவர்கள் சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • 80G சான்றிதழின் போட்டோகாபி: ரசீதுகளுடன் 80G சான்றிதழின் போட்டோகாபியை சமர்ப்பிக்க வேண்டும்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள விபரங்கள் செக்ஷன் 80G மற்றும் இதில் அடங்கியுள்ள வெவ்வேறு காரணிகளை விவரிக்கிறது. இதன் விதிகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து குறித்து மேலும் தெரிந்து கொள்ள தனி நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிட வேண்டும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

அரசியல் கட்சிகள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தனி நபர்கள் வழங்கக்கூடிய நன்கொடைகளுக்கு செக்ஷன் 80G -இன் கீழ் டிடெக்ஷன்களை கிளைம் செய்து கொள்ளலாமா?

இல்லை, வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு வழங்கும் நன்கொடைகளுக்கு இந்த டிடெக்ஷன்கள் பொருந்தாது.

பிரதம மந்திரியின் வறட்சி நிவாரண நிதி என்பது 80G டிடெக்ஷன் லிமிட்டில் எதன் கீழ் அமையும்?

பிரதம மந்திரியின் வறட்சி நிவாரண நிதி என்பது 50% டிடெக்ஷன் லிமிட்டின் கீழ் அமையும். இங்கு, தனி நபர்கள் குறிப்பிட்ட சில விதிகளை சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.