டிஜிட் இன்சூரன்ஸ் பண்ணுங்க

இன்கம் டேக்ஸ் ஆக்ட்டின் செக்ஷன் 192ஏ விளக்கப்பட்டது.

இன்கம் டேக்ஸ் ஆக்ட்டின் செக்ஷன் 192ஏ ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கிலிருந்து திரும்பப் பெறும் தொகைக்கு சோர்ஸில் டிடக் செய்யப்படும் டேக்ஸில் கவனம் செலுத்துகிறது.

நான்காவது அட்டவணையின் பார்ட் ஏ விதியின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை ஊழியர்கள் பூர்த்தி செய்யத் தவறும்போது இ.பி.எஃப் (EPF) டிரஸ்டீஸ் பணம் செலுத்தும் போது சோர்ஸிலேயே டேக்ஸை டிடக் செய்ய இந்த செக்ஷன் அனுமதிக்கிறது.

திரும்பப் பெறும் தொகையில் இருந்து டிடக்ட் செய்ய டி.டி.எஸ்ஸிற்கான (TDS) குறிப்பிட்ட வழிகாட்டுதல்களையும் வரவிருக்கும் பிரிவில் கூடுதல் முக்கிய தகவல்களையும் தனிநபர்கள் காணலாம்.

[சோர்ஸ்]

செக்ஷன் 192ஏ இன் கீழ் டி.டி.எஸ் (TDS) எப்போது பொருந்தும்?

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஸ்கீமின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள், திரட்டப்பட்ட நிதியை ஊழியர்களுக்கு செலுத்த தகுதி பெற்ற நிறுவனங்கள் பின்வரும் சூழ்நிலைகளில் டி.டி.எஸ் (TDS) டிடக்ட் செய்யலாம்:

வித்டிராவல் செய்த ஊழியருக்கு செலுத்தப்பட்ட பணம் ₹ 50,000-க்கு மேல் இருந்தால் டி.டி.எஸ் (TDS) டிடக்ட் செய்யப்படும். கூடுதலாக, ஒரு நபர் ஒரு நிறுவனத்தில் 5 ஆண்டுகளுக்கும் குறைவாக வேலை செய்துள்ளார்.

  • ஒரு ஊழியர் தனது திரட்டப்பட்ட வருங்கால வைப்பு நிதியை பழையதிலிருந்து புதிய பி.எஃப் (PF) அக்கவுண்டிற்கு டிரான்ஸ்பர் செய்யும்போதும் அவர் ஒரு நிறுவனத்தை சேஞ்ச் செய்யும்போதும் இந்த நிலை ஏற்படுகிறது.
  • இன்கம் டேக்ஸ் ஆக்டின் பிரிவு 192ஏ ஒரு நிறுவனம், உடல் நலக்குறைவு காரணமாக ஒரு பணியாளரை பணிநீக்கம் செய்யும் போது பொருந்தும். மற்ற காரணங்களில் ஒரு பிசினஸ் முயற்சி அல்லது அந்த ஊழியர் பணிபுரியும் ஒரு திட்டத்தை டிஸ்கன்டிநியூ செய்வது போன்றவை அடங்கும்.
  • இன்கம் டேக்ஸ் ஆக்டின் இந்த பிரிவு 192ஏ ஒரு நபர் ₹ 50,000 க்கு மேல் வித்டிரா செய்யும்போது பொருந்தும். மேலும், ஒரு நிறுவனத்தில் 5 ஆண்டுகளுக்கும் குறைவான பணி அனுபவம் கொண்டவர்.
  • மொத்த வித்ட்ராவல் அமௌன்ட் ₹ 50,000-க்கு மேல் இருக்கும்போது டி.டி.எஸ் (TDS) டிடக்ஷனுக்கான லிமிட் பொருந்தும்.

[சோர்ஸ் 1]

[சோர்ஸ் 2]

[சோர்ஸ் 3]

[சோர்ஸ் 4]

செக்ஷன் 192ஏ-இன் கீழ் வருங்கால வைப்பு நிதி திரும்பப் பெறுவதற்கான டி.டி.எஸ் (TDS) விகிதம் என்ன?

வருங்கால வைப்பு நிதி அக்கவுண்ட்களில் இருந்து எடுக்கப்படும் அமௌன்ட்டுக்கு 10% டி.டி.எஸ் (TDS) டிடக்ட் செய்யப்படுகிறது. அதற்கு, அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் தங்கள் பான் கார்டுகளை சமர்ப்பிக்க வேண்டும்.

அவர்கள் ஃபார்ம் 15எச் அல்லது 15ஜி வழங்கினால், இன்கம் டேக்ஸ் ஆக்டின் செக்ஷன் 192ஏ இன் கீழ் டி.டி.எஸ் (TDS) டிடக்ட் செய்ய மாட்டார்கள். இருப்பினும், ஒரு நபர் தனது பான் கார்டை வழங்கத் தவறினால் அவர்கள் அதிகபட்ச விகிதத்தில் டி.டி.எஸ் (TDS) டிடக்ட் செய்வார்கள்.

[சோர்ஸ் 1]

[சோர்ஸ் 2]

செக்ஷன் 192ஏ இன் கீழ் டி.டி.எஸ் (TDS) டிடக்ஷன் எப்போது பொருந்தாது?

இன்கம் டேக்ஸ் ஆக்டின் செக்ஷன் 192ஏ இன் கீழ் டிடக்டர்ஸ் சோர்ஸில் டேக்ஸை டிடக்ட் செய்யாத பின்வரும் சூழ்நிலைகளைப் பாருங்கள்:

  • ஈ.பி.எஃப் (EPF ) அக்கவுண்டிலிருந்து திரும்பப் பெறும் அமௌன்ட் ₹50,000-க்கும் குறைவாக இருக்கும்.
  • ஒரு நபர் 5 ஆண்டுகள் நிலையான சேவையை வழங்கிய பிறகு ஈ.பி.எஃப் (EPF )-இல் இருந்து ஒரு அமௌன்ட்டை திரும்பப் பெறுகிறார்.
  • ஒரு நபர் தனது பான் கார்டுடன் ஃபார்ம் 15எச் அல்லது ஃபார்ம் 15ஜி ஆகியவற்றை வழங்குகிறார்.

எனவே, இன்கம் டேக்ஸ் ஆக்டின் செக்ஷன் 192ஏ பற்றிய இந்த குறிப்புகளை தனிநபர்கள் கவனமாகப் படிக்க வேண்டும். இந்த செக்ஷனைப் பற்றி அறிந்துகொள்வது வித்டிராவல் செயல்முறையைப் புரிந்துகொள்ளவும், டி.டி.எஸ் (TDS) டிடெக்ஷனைக் குறைக்கவும் அனுமதிக்கும். இது அவர்களின் டேக்ஸ் பர்டனைக் குறைத்து சேவிங்ஸை அதிகரிக்கும்.

[சோர்ஸ்]

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

இன்கம் டேக்ஸ் ஆக்டின் 192ஏ செக்ஷனின் கீழ் பான் கார்டு வழங்குவது கட்டாயமா?

ஒரு நபர் ஒரு நிறுவனத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியிருந்தால் பான் கார்டு வழங்குவது கட்டாயமில்லை. அவர் ஃபார்ம் 15ஜி அல்லது 15எச் சமர்ப்பிக்க தேவையில்லை.

இன்கம் டேக்ஸ் ஆக்டின் இந்த செக்ஷன் 192ஏ எப்போது நடைமுறைக்கு வந்தது?

இன்கம் டேக்ஸ் ஆக்டின் செக்ஷன் 192ஏ 2015 ஜூன் 1 முதல் நடைமுறைக்கு வந்தது.