டிஜிட் இன்சூரன்ஸ் பண்ணுங்க

ஐ.டி.ஆர்-4(ITR-4) ஃபார்ம் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்

இந்திய அரசு அதன் குடி மக்களுக்கு ஏழு இன்கம் டேக்ஸ் ரிட்டன்கள் பிரிவுகளை குறிப்பிடுகிறது. அவற்றில் ஒன்று ஐ.டி.ஆர் 4. ஐ.டி.ஆர்-4 என்பது 2021-22 ஆண்டின் மொத்த வருமானம் பிற நிபந்தனைகளுக்கு உட்பட்டு ₹50 லட்சங்கள் வரை இருக்கக்கூடிய பார்ட்னர்ஷிப்புகள்/எச்.யு.எஃப்/தனி நபர்கள்/ தொழில் உரிமையாளர்கள் (உற்பத்தியாளர்கள், ஹோல்சேல் செல்லர்கள், ஆன்லைன் செல்லர்கள், முதலியோர்) ஆகியவரால் ஃபைல் செய்யப்படுகிறது. இந்த ரிட்டனை யார் பைல் செய்ய வேண்டும் என்பதற்கான எலிஜிபிலிட்டி விதிகளை இங்கே நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

அது மட்டுமல்லாமல் இந்த பதிவு மூலமாக ஐ.டி.ஆர்-ஐ ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் ஃபைல் செய்வது எப்படி என்பதற்கான விவரமான, படிப்படியான செயல்முறையையும் புரிந்து கொள்வீர்கள். ஐ.டி.ஆர்-4 ஃபார்ம் குறித்த முக்கியமான விவரங்கள் பற்றி தெரிந்து கொள்ள இப்போது துவங்கலாம்.

ஐ.டி.ஆர்-4(ITR-4) ஃபார்ம் என்றால் என்ன?

ஐ.டி.ஆர்-4 சுகம் என்பது இன்கம் டேக்ஸ் ரிட்டன்ஸ் ஃபார்ம்களில் ஒன்று. இது ப்ரீசம்டிவ் இன்கம் ஸ்கீம் தேர்ந்தெடுத்த டேக்ஸ் பேயருக்கானது. இந்த ஸ்கீம் செக்ஷன் 44AD, செக்ஷன் 44AE, மற்றும் செக்ஷன் 44ADA விவரிக்கப்பட்டுள்ளது. 44AD பொறுத்தவரை பிசினஸின் டர்ன் ஓவர் இரண்டு கோடி ரூபாயை விட அதிகமாகும் பொழுது மற்றும் வருமானம் 50 லட்சங்கள் வரை இருக்கும் பொழுது மற்றும் செக்ஷன் 44AE-இன் கீழ் நிதியாண்டின் எந்த ஒரு நேரத்திலும் பத்துக்கும் அதிகமான வாகனங்களை வைத்துள்ள டேக்ஸ் பேயர் ஐ.டி.ஆர் 3 ஃபைல் செய்ய வேண்டும்.

[ஆதாரம் 1]

[ஆதாரம் 2]

[ஆதாரம் 3]

ஐ.டி.ஆர்-4(ITR-4) அமைப்பு

ஐ.டி.ஆர்-4(ITR-4) ஃபார்மின் அமைப்பு என்ன?

ஐ.டி.ஆர்-4 ஃபார்ம் பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவும் தனிநபர் டேக்ஸ் டிக்ளரேஷன் குறித்த பல்வேறு கோணங்களில் தகவல்களை வழங்குகிறது. ஐ.டி.ஆர்-4 அமைப்பு குறித்து இப்போது பார்க்கலாம்!

  • பகுதி A என்பது பெயர் டிஓபி (DOB) மற்றும் முகடேக்ஸ் போன்ற பொதுவான விவரங்களை கொண்டிருக்கும்
  • பகுதி B என்பது ஐந்து வருமான மூலங்களான சேலரி, ஹவுஸ் பிராப்பர்ட்டி, பிற மூலங்களில் இருந்து வரும் வருமானம் போன்றவற்றை கொண்டிருக்கும்
  • பகுதி C என்பது டிடெக்ஷன்கள் மற்றும் டேக்ஸூக்கு உட்பட்ட மொத்த வருமானம்
  • பகுதி D என்பது டேக்ஸ் ஸ்டேட்டஸ் மற்றும் டேக்ஸ் கம்ப்யூடேஷன்களுக்காக உள்ளது
  • ஸ்கெட்யூல் பிபி (BP)என்பது பிசினஸ் அல்லது ப்ரொஃபஷனல் மூலமாக பெறும் வருமானம் குறித்த விவரங்களை கொண்டிருக்கும்
  • ஸ்கெட்யூல் ஐடி (IT) என்பது அட்வான்ஸ் டேக்ஸ் மற்றும் செல்ஃப் அசஸ்மெண்ட் டேக்ஸ் பேமெண்ட்கள் போன்ற விவரங்களை கொண்டிருக்கும்
  • ஸ்கெட்யூல் டிசிஎஸ் (TCS) - இல் மூலத்திலிருந்து வசூலிக்கப்பட்ட டேக்ஸ் குறித்த விவரங்கள் அடங்கும்
  • ஸ்கெட்யூல் டி.டி.எஸ் (TDS) -1 இல் சேலரியில் இருந்து மூலத்தால் வசூலிக்கப்பட்ட டேக்ஸ் குறித்த விவரங்கள் அடங்கும்
  • ஸ்கெட்யூல் டி.டி.எஸ் (TDS) -2 இல் சேலரியைத் தவிர பிற வருமான மூலமாக மூலத்தால் வசூலிக்கப்பட்ட டேக்ஸ் குறித்த விவரங்கள் அடங்கும்

ஐ.டி.ஆர்-4(ITR-4) ஃபார்ம் ஃபைல் செய்வதற்கு யாரெல்லாம் தகுதி பெறுவார்கள்?

ஐ.டி.ஆர்-4-க்கு தகுதி பெறக்கூடியவர்களின் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் இந்த பிரிவின் கீழ் வருவீர்கள் என்றால், நீங்கள் ஐ.டி.ஆர்-4 ஆப்ஷனின் கீழ் உங்கள் ரிட்டன்களை டிக்ளேர் செய்ய வேண்டும்.

ஐ.டி.ஆர்-4 என்பது தனிநபர்கள் அல்லது ஆர்.என்.ஓ.ஆர் ஆக இருக்கும் (இந்தியாவில் எப்பொழுதாவது வசிக்கும் இந்தியர்) இந்து கூட்டுக் குடும்பங்கள் அல்லது இந்தியாவில் அமைந்திருக்கக் கூடிய ஆனால் லிமிடெட் லையபிலிட்டி பார்ட்னர்ஷிப்பாக இல்லாத நிறுவனம் மற்றும் 2021-22 ஆண்டிற்கான வருமானம் 50 லட்சத்திற்கும் மிகையாகாமல் இருக்கக்கூடிய நபர்கள் ஆகியவரால் ஃபைல் செய்யப்படுகிறது. மேலும் அவர்களின் வருமானம் பின்வரும் பிரிவுகளின் கீழ் அடங்கும்:

  • ₹2 கோடி வரை மொத்த டர்ன்ஓவர் செய்யும் ஒரு பிசினஸிலிருந்து பெறப்பட்ட வருமானம், இது பிரிவு 44ஏடி -இன் கீழ் ஊக அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. மறுப்புரம், செக்ஷன் 44AE-இன் கீழ், பத்து சரக்கு வாகனங்கள் வரை மூலமாக பெறப்படும் வருமானத்துடன் தொடர்புடையது.
  • ₹50 லட்சங்கள் வரை மொத்த வருமானம் ஈட்டும் உத்தியோகம் மூலமாக பெறப்பட்ட வருமானம், இது பிரிவு 44ADA-இன் கீழ் ஊக அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
  • சாலரி அல்லது பென்ஷன் மூலமாக பெறப்படும் வருமானம்
  • ஒரு ஹவுஸ் ப்ராப்பர்ட்டி மூலமாக பெறப்படும் வருமானம்
  • ஃபேமிலி பென்ஷனில் இருந்து வரும் இன்ட்ரெஸ்ட் வருமானம், இது பிற ஆதாரங்களில் டேக்ஸூக்கு உட்பட்டது.

[ஆதாரம் 1]

[ஆதாரம் 2]

[ஆதாரம் 3]

[ஆதாரம் 4]

கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

  • செக்ஷன்கள் 44AD, 44AE, 44ADA ஆகியவையின் கீழ் கணக்கிடப்படும் ப்ரீ சம்ப்டிவ் இன்கம் என்பது இன்கம் டேக்ஸ் ஆக்டின் அனைத்து வகையான இழப்பு, அளவன்ஸ், டிப்ரிசியேஷன் அல்லது டிடெக்ஷன் ஆகியவற்றை கருத்தில் கொண்ட பின் கணக்கிடப்படுவதாக ஊகிக்கப்படுகிறது.
  • வாழ்க்கை துணை அல்லது மைனராக இருக்கக்கூடிய பிள்ளையின் வருமானம் டேக்ஸ் பேயரின் வருமானத்துடன் இணைக்கப்பட வேண்டி இருந்தால், சேர்க்கப்பட்ட வருமானம் ₹50 லட்சங்களுக்கு உள்ளாக இருக்கும் பட்சத்தில் இந்த ஃபார்மை பயன்படுத்திக் கொள்ளவும்.

இவை ஐ.டி.ஆர்-4 -க்கான தகுதி விதிகள்.

ஐ.டி.ஆர்-4(ITR-4) ஃபைல் செய்ய தகுதி பெறாத நபர்கள் யாவர்?

ஐ.டி.ஆர்-4 ஃபார்ம் யாரெல்லாம் ஃபைல் செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொள்வது எவ்வளவு முக்கியமோ, இந்த ஃபார்மை ஃபைல் செய்ய வேண்டிய அவசியம் இல்லாத நபர்களின் பிரிவும் இருக்கிறது. 2021-22 ஆண்டிற்கான இந்த நபர்களின் பட்டியல் பின்வருமாறு:

பின்வரும் நபர்கள் ஐ.டி.ஆர்-4 ரிட்டன்களை ஃபைல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை:

  • இந்தியாவிற்கு வெளியே அமைந்திருக்கக் கூடிய ஏதேனும் அகௌண்டில் கையெழுத்திடும் அதிகாரம் பெற்றவர்
  • 2020-21 ஆண்டில் பட்டியலிடப்படாத ஈக்விட்டி ஷேர்களை கொண்டிருப்பவர்
  • இந்தியாவிற்கு வெளியே ஏதாவது ஒரு மூலத்தில் இருந்து வருமானம் பெறுபவர்
  • ஒரு நிறுவனத்தின் டைரக்டர்
  • இந்தியாவிற்கு வெளியே நிதி சார்ந்த சொத்து வைத்திருப்பவர்

[ஆதாரம்]

மேலும், செக்ஷன் B-இன் படி, ஒரு நபர் இந்த வருமானத்தை முந்தைய ஆண்டில் பின்வரும் பிரிவுகளில் ஏதேனும் ஒன்றிலிருந்து வருமானம் பெற்றிருந்தால் பயன்படுத்த முடியாது.

● இன்கம் டேக்ஸ் ஆக்டின் 44AD, 44ADA, 44AE-இன் கீழ் கணக்கிடப்படத் தேவையில்லாத பிசினஸ்கள் அல்லது உத்தியோகங்களிலிருந்து வருமானம், இலாபங்கள் அல்லது வரவுகள், அதாவது புரோக்கரேஜ் கமிஷன், ஏஜென்சி அல்லது ஊக பிசினஸிலிருந்து வருமானம்

  • கேபிட்டல் ஜெயின்கள்
  • ஒன்றுக்கும் மேற்பட்ட ஹவுஸ் ப்ராப்பர்ட்டியில் இருந்து வரும் வருமானம்
  • லாட்டரியில் வென்றதன் மூலம் கிடைத்த வருமானம்
  • ரேஸ் குதிரைகளை சொந்தமாக கொண்டிருத்தல் அல்லது பராமரித்தல் மூலமாக பெறப்படும் வருமானம்
  • செக்க்ஷன்கள் 115BBDA அல்லது செக்ஷன் 115BBE போன்ற சிறப்பு நிகழ்வுகளின் கீழ் டேக்ஸூக்கு உட்பட்ட வருமானம்
  • செக்ஷன் 5A-இன் கீழ், பங்கீடு செய்யப்பட வேண்டிய வருமானம்
  • ₹5,000-க்கும் அதிகமாக விவசாயத்தில் இருந்து பெறப்படும் வருமானம்

[ஆதாரம்]

மேலும் பின்வரும் பிரிவுகளின் கீழ் ஏதேனும் இழப்பு/டிடெக்ஷன்/ நிவாரணம்/ டேக்ஸ் கிரெடிட் போன்ற ஏதேனும் கிளைம்கள் செய்திருக்கும் நபர்கள் இந்த ஃபார்மை பயன்படுத்த முடியாது என்று செக்ஷன் C குறிப்பிடுகிறது.

  • ஏதேனும் இன்கம் ஹெட் காரணமாக கொண்டுவரப்பட்ட அல்லது முன்னோக்கி எடுத்து செல்லப்பட்ட இழப்பு
  • பிற மூலங்களில் வரும் வருமானத்தில் ஏற்பட்ட இழப்பு
  • செக்ஷன்கள் 90, 90A, அல்லது 91 -இன் கீழ் நிவாரணம் கிளைம் செய்யப்பட்டு இருத்தல்
  • செக்ஷன் 57-இன் கீழ் ஏதேனும் டிடெக்ஷன் கிளைம் செய்திருத்தல்
  • வேறொரு நபரால் மூலத்தில் இருந்து கழிக்கப்பட்ட டிடெக்ஷன் கிளைம் டேக்ஸ்

இந்த பிரிவுகளின் கீழ் வரும் நபர்கள் ஐ.டி.ஆர்-4 பிரிவின் கீழ் டேக்ஸ் ரிட்டன்களை ஃபைல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

ஐ.டி.ஆர்-4(ITR-4) ஃபார்ம் எப்படி ஃபைல் செய்வது?

ஐ.டி.ஆர்-4 ஃபார்ம் ஃபைல் செய்வதற்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று ஆன்லைன் முறை மற்றொன்று ஆஃப்லைன் முறை. ஐ.டி.ஆர்-4 எப்படி ஃபைல் செய்வது என்பதை பார்க்கலாம்.

ஐ.டி.ஆர்-4(ITR-4) ஃபைல் செய்வதற்கான ஆஃப்லைன் முறை

பின்வரும் நேர்வுகளில் மட்டுமே நீங்கள் ஐ.டி.ஆர்-4 ஃபார்மை ஆப்ஃலைனில் ஃபைல் செய்யலாம்:

  • நீங்கள் 80 வயது அல்லது அதற்கும் மேற்பட்ட வயது கொண்ட சூப்பர் சீனியர் சிட்டிசனாக இருந்தால்
  • உங்களது வருமானம் ₹5 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இல்லாமல் மற்றும் ஐ.டி.ஆர் -இல் ரீஃபண்ட் கிளைம் செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் போகும்போது

ஐ.டி.ஆர்-4 ஃபார்மை எப்படி பைல் செய்ய வேண்டும் என்பதற்கான செயல்முறை இதோ.

  • ஐ.டி.ஆர்-4 பிசிக்கல் பேப்பராக வழங்கவும்
  • பார்கோடட் ரிட்டனை வழங்கவும்

பிசிக்கல் பேப்பரை பெற்ற பிறகு இன்கம் டேக்ஸ் டிபார்ட்மெண்ட் உங்களுக்கு அக்னாலெஜ்மெண்டை அனுப்பும். அதில் ஐ.டி.ஆர்-4 -ஐ ஆஃப்லைனில் எப்படி ஃபைல் செய்ய வேண்டும் என்பதற்கான பதில்கள் இருக்கும்.

அடுத்து, ஆன்லைன் செயல்முறை குறித்து தெரிந்து கொள்ளுங்கள்

ஐ.டி.ஆர்-4(ITR-4) ஃபைல் செய்வதற்கான ஆன்லைன் முறை

இ-ஃபைலிங் போர்டலில் ஐ.டி.ஆர்-4 ஃபார்மை எலக்ட்ரானிக் முறையில் ஃபைல் செய்யுங்கள் https://www.incometax.gov.in/iec/foportal/ பின்வரும் வழிகளில் நீங்கள் இன்கம் டேக்ஸ் ஃபைலிங்கை வெரிஃபை செய்யலாம்:

  • வெரிஃபிகேஷன் பார்ட்டை டிஜிட்டல் முறையில் கையெழுத்திடல்
  • ஆதென்டிக்கேட் செய்ய இவிசி அல்லது எலக்ட்ரானிக் வெரிஃபிகேஷன் கோட் பயன்படுத்தல்
  • ஆதார் ஒடிபி பயன்படுத்தல்
  • ஐ.டி.ஆர்-வி என்ற இன்கம் டேக்ஸ் ரிட்டன் வெரிஃபிகேஷன் ஃபார்ம் ஃபைல் செய்து, அதன் நகலை கீழே உள்ள முகவரிக்கு தபாலில் அனுப்ப வேண்டும்:

சென்ட்ரலைஸ்ட் ப்ராசசிங் சென்டர், இன்கம் டேக்ஸ் டிபார்ட்மெண்ட், பெங்களூரு— 560500, கர்நாடகா.

ஃபார்மை ஃபைல் செய்த 30 நாட்களுக்கு உள்ளாக இந்த வெரிஃபிகேஷன் பார்ம் ஐ.டி.ஆர்-வி அலுவலகத்தை அடைய வேண்டும். மேலும் நீங்கள் ரெஜிஸ்டர் செய்ய பயன்படுத்திய இமெயிலுக்கு ஐ.டி.ஆர்-வி -க்கான ரசீதை சி.பி.சி உறுதிப்படுத்தும்.

இப்படி தான் ஐ.டி.ஆர்-4 ஃபைல் செய்ய வேண்டும்!

[ஆதாரம்]

இன்கம் டேக்ஸ் ரிட்டன் காபி பெறவில்லை என்றால் என்ன செய்வது

2021-22 ஆண்டிற்கான ஐ.டி.ஆர்-4 ஃபைல் செய்வதற்கு இரண்டு முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு:

  • கீழே குறிப்பிடப்பட்டுள்ள வரைகூறுகளை பூர்த்தி செய்யும் தனிப்பட்ட டேக்ஸ் பேயர் ஐ.டி.ஆர்-1 ஃபைல் செய்ய வேண்டும்:
  • பேங்கில் 1 கோடி ரூபாய்க்கும் அதிகமாக கேஷ் டெபாசிட் செய்பவர்கள்
  • வெளிநாடு பயணங்களுக்காக 2 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக செலவு செய்பவர்கள்
  • மின்சாரத்திற்காக ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக செலவு செய்பவர்கள்.

[ஆதாரம்]

செலவு அல்லது டெபாசிட் அமௌன்டை டேக்ஸ் பேயர் குறிப்பிட வேண்டும்.

  • பகுதி A-இல் "கவர்மெண்ட்" என்ற செக் பாக்ஸ் "சென்ட்ரல் கவர்ன்மெண்ட்" மற்றும் |ஸ்டேட் கவர்மெண்ட்" ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
  • "நேச்சர் ஆஃப் எம்ப்ளாய்மெண்ட்" செக் பாக்ஸில் "நாட் அப்ளிக்கபில்" அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • இந்த செக்ஷனின் கீழ் ஃபைல் செய்யப்பட்ட ரிட்டன்கள் இரண்டு பிரிவுகளாக பிரித்து வைக்கப்பட்டுள்ளன. அவை "நார்மல் ஃபைலிங்" மற்றும் "ஃபைல்டு இன் ரெஸ்பான்சஸ் டு நோட்டீஸ்" என்ற பிரிவுகளின் கீழ் வரும். 
  • டேக்ஸ் டிடெக்ஷன்களுக்காக உள்ள ஸ்கெட்யூல் VI-A-இல் ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. 80EEA மற்றும் 80EEB -இன் கீழ் உள்ள டிடெக்ஷன்களை சேர்ப்பதற்காக இதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. செக்ஷன் 80G-இன் கீழ் நன்கொடைகள் குறித்த விவரங்களை நிரப்புவதற்காக டிராப்-டவுன் உள்ளது.
  • முதலீடு, பேமெண்ட்கள் அல்லது செலவுகளுக்கான டேக்ஸ் டிடெக்ஷன் குறித்த விவரங்கள் ஏப்ரல் 1, 2020 மற்றும் 30 ஜூன், 2020-க்குள் செய்யப்பட வேண்டும்.
  • ஸ்கெட்யூல் பி.பி -இல் கிராஸ் டர்ன் ஓவர் அல்லது மொத்த வருமானம் என்பது குறிப்பிட்ட தேதிக்கு முன்னர் எலக்ட்ரானிக் மோட் மூலமாக பெறப்படும் வருவாய்கள்.

2021-22 ஆண்டின்போது ஐ.டி.ஆர்-4 -இல் செய்யப்பட்ட மாற்றங்கள் இவையே.

முடிவாக ஐ.டி.ஆர்-4 எப்படி ஃபைல் செய்வது மற்றும் ஐ.டி.ஆர்-4 என்றால் என்ன என்பதை நாங்கள் உங்களுக்கு விளக்கமாக கூறியுள்ளோம். உங்களது இன்கம் டேக்ஸ் ரிட்டன்களை இன்றே ஃபைல் செய்யுங்கள்!

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ப்ரொஃபஷனல் சர்வீஸ் வழங்கக் கூடிய ஒரு நபர் ப்ரீ சம்ப்டீவ் ஸ்க்மை தேர்வு செய்ய முடியுமா?

50 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக சம்பாதிக்காத எந்த ஒரு ப்ரொஃபஷனலும் ஐ.டி.ஆர்-4 -இன் கீழ் டேக்ஸ் ரிட்டன்களை ஃபைல் செய்யலாம். 44ADA -இன் கீழ் தனித்து செயல்படும் ப்ரொஃபஷனல் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ரெசிடெண்ட் ஆனால் ஆர்டினரலி ரெசிடெண்ட் அல்ல என்பதன் அர்த்தம் என்ன?

குறிப்பிட்ட நிதியாண்டின்போது 182 நாட்கள் அல்லது அதற்கும் மேல் இந்தியாவில் வசிக்கும் ஒரு தனி நபர் அல்லது குறிப்பிட்ட நிதியாண்டின்போது 60 நாட்களுக்கு மேலும், அதற்கு முந்தைய உடனடி நான்கு நிதி ஆண்டுகளில் 365 நாட்களுக்கு மேலும் இந்தியாவில் வசிக்கக்கூடிய நபர் ரெசிடெண்ட் எனப்படுகிறார்

பத்து உடனடி முந்தைய நிதி ஆண்டுகளில் இரண்டு வருடங்கள் இந்தியாவில் வசிக்கக்கூடிய தனிநபர் மற்றும் ஏழு உடனடி நிதி ஆண்டுகளில் 730 நாட்கள் அல்லது அதற்கும் மேல் இந்தியாவில் வசிக்கக்கூடிய தனிநபர் ஆர்டினரிலி ரெசிடெண்ட் எனப்படுகிறார்.
எனினும் ஒருவர் முதல் ப்ரொவிஷனின் கீழ் இணங்கப்படுவாராயின், ஆனால் அவர் இரண்டாவது ப்ரொவிஷனின் கீழ் இணங்காமல் போகும் பொழுது பின்னர் அவர் ரெசிடெண்ட் என கருதப்படுவாறே ஆயின் ஆர்டினரிலி ரெசிடெண்ட் அல்ல.

[ஆதாரம்]