ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியத்தை குறைப்பது எப்படி

விபத்து, நோய் மற்றும் கோவிட்-19 முதலியவை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது ஏற்படக்கூடிய செலவுகள் யாவும் டிஜிட் ஹெல்த் இன்சூரன்ஸில் அடங்கும்.

உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியத்தை குறைப்பது பற்றிய அனைத்து விவரங்களும் இதோ

கடந்த சில வருடங்களாக மருத்துவத்திற்கு ஆகும் செலவுகள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இதுவே, இந்தியர்கள் சந்திக்கும் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தரமான சிகிச்சைப் பெறுவதற்கு ஆகும் செலவுகள் படிப்படியாக அதிகரிக்கிறது. இதனால், குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பிரிவைச் சேர்ந்தவர்கள் செலவுகளைச் சமாளிப்பது கடினம்.

 ஆனால், இது போன்ற சூழ்நிலையில் இருக்கும் ஒருவர் என்ன செய்ய வேண்டும்?

கண்டிப்பாக ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி-ஐ வாங்கலாம்!

 இந்தியாவில், சுமார் 34 இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளை வழங்குகின்றன. நோய் அல்லது விபத்தினால் ஏற்பட்ட உடல் நல பாதிப்புக்காக சிகிச்சை எடுத்துக்கொள்வதற்காக ஆகும் செலவுகளுக்கான பண உதவியை பெறுவதற்கு இந்தத் திட்டங்கள் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் சில நேரங்களில், இந்த கவர்களின் விலையானது இதை வாங்காமல் இருப்பதற்கு இது ஒரு காரணமாக இருக்கலாம்.

 எனவே, இந்த சூழ்நிலையில் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? என்பதை தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்!

உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியத்தை குறைக்க 9 வழிகள்

1. இள வயதிலேயே ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி-ஐ வாங்குங்கள்

நீங்கள் இளமையாக இருக்கும்போதே ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்குவதன் மூலம் பிரீமியத்தை குறைக்கலாம். இது, இன்சூரன்ஸ் பாலிசி பிரீமியத்தை குறைக்கும் என்பதை நிரூபணம் செய்யப்பட்ட வழிகளில் ஒன்று ஆகும் .

பெரும்பாலான இன்சூரன்ஸ் நிறுவனங்கள் உங்கள் வயது மற்றும் உடல் நலம் போன்ற காரணிகளின் அடிப்படையில் நீங்கள் இன்சூரன்ஸ் பெறத் தகுதியானவரா என்பதை கணக்கிடுவார்கள். அதனால்தான், நீங்கள் வயதான பின்னர் ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை பெறுவது மிகவும் கடினமாகிறது.

நீரிழிவு / டையப்படீஸ், இதயம் , இரத்த அழுத்தம் போன்ற வயது தொடர்பான பிரச்சினைகள் உங்கள் மருத்துவ அறிக்கையில் சேர்க்கப்படுகின்றன. இதனால் உங்கள் இன்சூரன்ஸ் பாலிசிக்கான பிரீமியத் தொகையை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அதிகரிக்கின்றனர்.

அதனால்தான், நீங்கள் உங்கள் ஆரோக்கியம் நல்ல நிலையில் இருக்கும்போதே அதாவது இளம் வயதில் இருக்கும் போதே குறைவான பிரீமியத்தில் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்குவது சிறந்தது. அந்த வகையில், நீங்கள் வயதான பின்னர் செலுத்த வேண்டிய தொகையுடன் ஒப்பிடும்போது உங்கள் பிரீமியம் மிகவும் குறைவாகவே இருக்கும்.

 

இதைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்

2. இன்சூர் செய்யப்பட்ட தொகை (சம் இன்சூர்ட்) குறைவாக இருக்கும் பாலிசி-ஐ தேர்ந்தெடுங்கள்

நீங்கள் இன்சூர் செய்யப்பட்ட தொகை (சம் இன்சூர்ட்) குறைவாக இருக்கும் பாலிசி-ஐ தேர்ந்தெடுப்பதன் மூலம்  பிரீமியத் தொகையைக் குறைக்கலாம்.

 பாலிசியின் தொடக்க காலத்தில், நீங்கள் குறைந்த அளவிலான இன்சூர்ட் தொகையைப் (சம் இன்சூர்ட்) பெறலாம், பின்னர் காலப்போக்கில் தொகையை அதிகரிக்கலாம். இதன் மூலம் உங்கள் பாலிசித் தொகையை மலிவானதாக மாற்றலாம்.

3. கோ–பே மற்றும் டிடக்டபிள்ஸ்-ஐ தேர்வு செய்யுங்கள்

உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியோடு டிடக்டபிள்ஸ்-ஐ தேர்வு செய்யவும் , கோ–பே-வை தேர்வுசெய்யவும் அனுமதிக்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகள் உள்ளன.

 ஆனால், அதைத் தேர்வு செய்வதற்கு முன்பு, அவை ஒவ்வொன்றும் எதைக் குறிக்கிறது என்பதை நீங்கள் முதலில் அறிந்து கொள்ள வேண்டும்:

கோ–பேமெண்ட் டிடக்டபிள் கோ- இன்சூரன்ஸ்
கோ–பேமெண்ட் என்பது உங்களின் சிகிச்சைக்கு ஆகும் செலவில் நீங்கள் குறிப்பிட்டத் தொகை கட்ட வேண்டியிருக்கும் அதே சமயம் கிளைம் செட்டில்மெண்ட்டின் போது உங்கள் இன்சூரன்ஸ் பாலிசி மீதமுள்ள தொகையை கவர் செய்யும். டிடக்டபிள் என்பது இன்சூரன்ஸ் பாலிசியின் பயனை அனுபவிப்பதற்கு முன்பு சிகிச்சைக்கு ஆகும் செலவுகளுக்கான நீங்கள் கட்ட வேண்டிய நிலையான தொகையே ஆகும். சில நேரங்களில் இன்சூரன்ஸ் வழங்குநர்களால் கோ–பேவிற்கு பதிலாக கோ- இன்சூரன்ஸ் பயன்படுத்தப்படுகிறது.
கோ–பே என்பது நிர்ணயிக்கப்பட்ட தொகை ஆகும். ஆனால், சேவைகளுக்கு ஏற்றார் போல இந்தத் தொகையானது மாறுபடும். இறுதியில், உங்கள் பில்-ன் பெரும் பகுதியை இந்த இன்சூரன்ஸ் பாலிசி கவர் செய்யும். கோ- இன்சூரன்ஸில், ​​சிகிச்சைக்கு ஆகும் செலவில் ஒரு நிர்ணயிக்கப்பட்ட சதவீதத்தை நீங்கள் கட்ட வேண்டியிருக்கும். அதே சமயம் இன்சூரன்ஸ் நிறுவனமானது மீதமுள்ள தொகையை ஈடுசெய்யும். மேலும், கோ- இன்சூரன்ஸில் தொகையானது நிர்ணயிக்கப்படவில்லை.

இது போன்ற செலவை பகிர்ந்து கொள்ளும் பிளான்களை தேர்வு செய்வதன் மூலம் உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியின் பிரீமியத்தை குறைக்கலாம் என்பதை நீங்கள் இப்பொழுது அறிந்து கொண்டிருப்பீர்கள்.

மேலும், இதிலிருந்து அதிக பலனை அனுபவிக்க, இந்த இது போன்ற செலவை பகிர்ந்து கொள்ளும் வசதியை அளிக்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளை நீங்கள் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

 ஏனென்றால், நீங்கள் கோ–பே, டிடக்டபிள் ஆகியவற்றிருக்கு சரியான தொகையை தேர்ந்தெடுக்கவில்லை என்றால் உங்கள் பிரீமியத் தொகையில் நீங்கள் சேமித்ததைக் காட்டிலும் உங்கள் சிகிச்சைச் ஆகும் செலவில் அதிகமாக செலுத்தும் நிலை ஏற்படலாம்.

கோ–பே, கோ- இன்சூரன்ஸ் மற்றும் டிடக்டபிள் இடையே உள்ள வேறுபாடு பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்

4. நீங்கள் வைத்திருக்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்கள் இடையே சமநிலைப்படுத்துங்கள்

சில சமயம் நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனமானது உங்களுக்காக குரூப் இன்சூரன்ஸ் பாலிசியை வழங்குவார்கள். கூடுதல் பாதுகாப்பிற்காக நீங்கள் தனிநபர் (இன்டிஜு வல்) ஹெல்த் பாலிசி-ஐ எடுத்துக் கொள்வீர்கள்.

இத்துடன் பாலிசிதாரர்கள் ஃபேமிலி- ஃப்ளோட்டர் பிளான்களை தேர்வு செய்கிறார்கள். இதனால் அவர்களோடு சேர்த்து குடும்பத்தினருக்கும் கூடுதல் பாதுகாப்பை அளிக்கும்.

ஒருவர் பல வகையான இன்சூரன்ஸ் பாலிசிகளை வைத்திருப்பதால், அதற்கான பிரீமியத்தை நிர்வகிப்பது கடினமாகிவிடும். இந்தச் சூழ்நிலையில், உங்களின் மற்ற இன்சூரன்ஸ் கவர்களிலிருந்து நீங்கள் ஏற்கனவே பெறக்கூடிய பலன்களை மனதில் வைத்து அதன் பின் உங்களுக்கான தனிநபர் (இன்டிஜுவல்) இன்சூரன்ஸை தேர்வு செய்வது சிறந்தது.

இதன் மூலம், உங்கள் இன்சூரன்ஸ் பிளான்களுக்கான பிரீமியம் கட்டணங்களை நீங்கள் திறம்பட நிர்வகிக்கலாம்.

5. டாப்-அப் பிளான்களை தேர்ந்தெடுங்கள்

அதிக பிரீமியத்தை செலுத்தாமல் அதிக கவரேஜைப் பெறுவதற்காக டாப்-அப் பிளான்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பொதுவாக டாப்-அப் பிளான்கள், உங்கள் கவர்-ஐ இரண்டு பகுதிகளாகப் பிரிக்க உதவியாய் இருக்கும். உங்களின் கிளைம் ஆனது நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக இருந்தால், அதை பெறுவதற்கு இது உங்களை அனுமதிக்கும்.

இதை எளிதாக்க புரிந்துகொள்ள ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்:

ரூ.5 லட்சம் பெஞ்சுமார்காக இருக்கும் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பிளான் உங்களிடம் இருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். இந்த பிளானில், நீங்கள் எடுத்துக் கொண்ட சிகிச்சைக்கான ரூ.7 லட்சத்தை கிளைம் செய்துள்ளீர்கள். உங்கள் சிகிச்சைக்கு கூடுதலாக ஆன 2 லட்சம் ரூபாயை இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கிவிடும்.

இதன் மூலம் நீங்கள் உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானின் பிரீமியத்தை குறைக்கலாம். மேலும், உங்கள் சிகிச்சைக்கு ஆகும் செலவு அதிகமானால் டாப்-அப் பிளானை வாங்கிக் கொள்ளுங்கள்.

6. சரியான ஸோனுக்கான ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி-ஐ வாங்குங்கள்

இந்தியாவில், அந்த நகரத்தின் மருத்துவச் செலவுகளின் அடிப்படையில் பல்வேறு ஸோன்களாக பிரிக்கப்பட்டுள்ளன. எனவே, ஒரு நகரத்தில் மருத்துவச் செலவுகள் அதிகமாக இருந்தால், பிரீமியம் அதிகமாக இருக்கும் ஸோனில் (A, B, அல்லது C) இருக்கும், மேலும் உங்கள். அவை கீழே உள்ள அட்டவணையில் விளக்கப்பட்டுள்ளன:

ஸோன் A ஸோன் B ஸோன் C
டெல்லி/என்சிஆர்(NCR), மும்பை (நவி மும்பை, தானே மற்றும் கல்யாண் உட்பட) ஹைதராபாத், செகந்திராபாத், பெங்களூர், கொல்கத்தா, அகமதாபாத், வதோதரா, சென்னை, புனே மற்றும் சூரத் A & B இல் பட்டியலிடப்பட்டுள்ள நகரங்கள் தவிர அனைத்து நகரங்களும் மண்டலம் C க்கு சொந்தமானவை
தோராயமாக ₹6,448 பிரீமியம் தோராயமாக ₹5,882 பிரீமியம் சுமார் ஒரு பிரீமியம் ₹5,315
எனவே, நீங்கள் வசிக்கும் ஸோன்-க்கான சரியான பாலிசியை வாங்குவது அவசியம் ஆகும். உதாரணத்திற்கு, நீங்கள் ஸோன் B அல்லது Cயில் இருக்கும் ஒரு நகரத்தில் வசிக்கிறீர்கள் என்றால், ஸோன் Aக்கான பாலிசியை வாங்காதீர்கள். ஏன்னென்றால் நீங்கள் பிரீமியத்திற்காக அதிக பணம் செலுத்த வேண்டிய்இருக்கும். எனவே, உங்கள் பாலிசிக்கான சரியான ஸோனை தேர்ந்தெடுப்பதன் மூலம் நீங்கள் பிரீமியத் தொகையிலிருந்து திறம்படச் சேமிக்கலாம்.

7. நீண்ட கால ஹெல்த்கேர் இன்சூரன்ஸ் பாலிசிக்களைத் தேர்ந்தெடுங்கள்

நீண்ட கால இன்சூரன்ஸ் பாலிசிகளுக்கான பிரீமியத் தொகையானது வருடாந்திர டெர்ம்-ஐ கொண்ட வழக்கமான பிளான்களை விட குறைவாக இருக்கும். எனவே, 2-3 ஆண்டுகளுக்கான நீண்ட கால ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிக்களை வாங்கினால் உங்கள் பிரீமியத் தொகையானது கணிசமாக குறையும்.

சமீப காலமாக, பல இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இது போன்ற நீண்ட கால ஹெல்த்கேர் இன்சூரன்ஸ் பிளான்களை உடனடியாக வழங்கிட முன் வந்துள்ளன. உங்கள் தேவைகளுக்கு மிகவும் பொருத்தமான ஒன்றைத் தேர்வுசெய்ய பல்வேறு இன்சூரன்ஸ் வழங்குநர்கள் வழங்கும் பாலிசிகளை ஒப்பிட்டுப் பாருங்கள். இதனால் இந்தத் பிளான்களின் மூலம் அதிகமான பலன்களை அனுபவிக்கலாம்.

8. ஃபேமிலி- ஃப்ளோட்டர் பிளான்களைத் தேர்ந்தெடுங்கள்

 ஃபேமிலி- ஃப்ளோட்டர் இன்சூரன்ஸ் பிளான்கள் உங்கள் பிரீமியத் தொகையை குறைக்க எப்படி உதவி செய்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதற்கு முன், தனிநபர் (இன்டிஜுவல்) பிளான்கள் மற்றும் ஃபேமிலி- ஃப்ளோட்டர் இன்சூரன்ஸ் பிளான்களுக்கு இடையே உள்ள வித்தியாசத்தை நீங்கள் முதலில் அறிந்துகொள்ள வேண்டும்.

பின்வருவதை படித்து இரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை அறிந்து கொள்ளுங்கள்:

அளவுருக்கள் தனிநபர் (இன்டிஜுவல்) பிளான்கள் குடும்பத்திற்கான ஃப்ளோட்டர் பிளான்கள்
பொருந்துந் தன்மை / அப்பளிகபிலிட்டி இந்தப் பிளானைப் பொருத்த வரையில், ஒரு இன்சூரன்ஸ் பிளானிற்கு கீழ் வரும் ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் இன்சூரன்ஸ் தொகையானது நிர்ணயிக்கப்பட்டிருக்கும். இந்தத் பிளானில், ஒரு தனிநபரின் சிகிச்சைக்கு ஆகும் செலவை ஈடுசெய்ய முழு இன்சூரன்ஸ் தொகையும் பயன்படுத்தப்படலாம்.
பிரீமியம் பேமெண்ட் இந்த வகையான ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிக்கான பிரீமியமானது அதன் கீழ் உள்ள ஒவ்வொரு நபரின் வயது மற்றும் இன்சூரன்ஸ் தொகையின் அடிப்படையில் பொறுத்து கணக்கிடப்படும். இந்த வகை ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்களுக்கான பிரீமியமானது பெரும்பாலும் குடும்பத்தின் மூத்த உறுப்பினரின் வயதை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும்.
விலைகளுக்கு இடையிலான வேறுபாடு பொதுவாக, ஒவ்வொரு பாலிசிக்கும் செலுத்த வேண்டிய பிரீமியமானது அதிகமாக இருக்கும். பேமிலி- ஃப்ளோட்டர் இன்சூரன்ஸ் பிளான்களில், பாலிசியின் விலையானது தனிநபர் (இன்டிஜுவல்) ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்களை விட 20% வரை குறைவாக இருக்கும்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையைப் பார்த்த பின், ஃபேமிலி- ஃப்ளோட்டர் இன்சூரன்ஸ் பிளான்கள் தனிநபர் (இன்டிஜுவல்) பிளான்களை விட மலிவானவை என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள்.

 அதனால்தான், உங்கள் குடும்பத்திற்கான இன்சூரன்ஸ் பிளான்களை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், ஃபேமிலி- ஃப்ளோட்டர் இன்சூரன்ஸ் பாலிசி-ஐ தேர்ந்தெடுங்கள். இதன் மூலம் நீங்கள் பிரீமியத்தை குறைக்கலாம்.

9. ஆன்லைனில் கிடைக்கும் பாலிசி பிளான்களின் விலையை ஒப்பிட்டு பாருங்கள்

பாலிசிகளை ஆன்லைனில் ஒப்பிட்டுப் பார்த்து வாங்கும் போது, ​​ கவர்ச்சிகரமான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளைக் கொண்ட இன்சூரன்ஸ் பாலிசிகளை கண்டுபிடிக்க முடியும். இந்த சலுகைகளை பயன்படுத்தி, உங்கள் பாலிசியின் பிரீமியத்தை குறைக்கலாம்.

ஆன்லைனில் பாலிசியின் பிரீமியத்தை ஒப்பிட்டு பார்ப்பதோடு மட்டுமல்லாமல் பாலிசியின் மூலம் கிடைக்கும் பலன்களை ஒப்பிடலாம். இதனால் அவற்றிலிருந்து நீங்கள் அதிகமான பலன்களை அனுபவிக்கலாம்.

 கூடுதல் தகவல்களுக்கு ஹெல்த் இன்சூரன்ஸ்-ஐ ஒப்பிட்டு பாருங்கள்.

10. உங்கள் பெற்றோர்களுக்கான பாலிசியை, அவர்கள் 60 வயது அடைவதற்கு முன்பே வாங்குங்கள்

பெரும்பாலான ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்கள் , இன்சூர் செய்யப்படும் தனிநபரின் வயதானது 60-ஐ தாண்டும் போது அதன் பிரீமியத் தொகை அதிகரிக்கிறது.

 அதனால்தான், உங்கள் பெற்றோருக்கான ஹெல்த் இன்சூரன்ஸ் பெற திட்டம் இருந்தால், அவர்கள் 60 வயதை அடைவதற்கு முன்பே அதைச் செய்து விடுங்கள். இதன் மூலம் பிரீமியம் தொகையை குறைக்கலாம்.

இந்த 10 உதவிக்குறிப்புகளின் மூலம், உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிக்கு செலுத்தப்படும் பிரீமியத்தை ஓரளவிற்கு குறைக்கலாம்.

ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியத்தை குறைப்பது குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

குறைவான பிரீமியத் தொகையில் கிடைக்கும் இன்சூரன்ஸ் பாலிசியானது போதுமானதாக இருக்காது என்பதை குறிக்கிறதா?

இது உண்மை இல்லை. ஏனெனில் ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்தின் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியின் கட்டணமானது வேறொரு இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பாலிசியை விட வேறுபடும். இதன் விளைவாக, ஒரு நிறுவனத்தின் இன்சூரன்ஸ் மற்றொன்றை விட மிகவும் குறைவாக இருக்கும்.

ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ் மெட்டர்னிட்டி கேர் கவரேஜ் வழங்கப்படுகிறதா?

பொதுவாக, மெட்டர்னிட்டி கேர் கவர் என்பது ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளுக்கான ஆட் -ஆன் கவராக கிடைக்கிறது.

 மெட்டர்னிட்டி பெனிஃபிட்கள் உடன் கிடைக்கும் ஹெல்த் இன்சூரன்ஸ்

 பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

நெட்வொர்க் ஹாஸ்பிடல் என்றால் என்ன?

நெட்வொர்க் ஹாஸ்பிடல் என்பது உங்கள் இன்சூரன்ஸ் பிளானின் படி கேஷ்லெஸ் சிகிச்சையை வழங்கும் ஹாஸ்பிடல்களை குறிக்கிறது.

 கேஷ்லெஸ் ஹெல்த் இன்சூரன்ஸ் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.