இந்தியாவில் சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை எவ்வாறு தேர்வு செய்வது?
இந்தியாவில் சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வதன் அவசியம் என்ன?
இந்தியாவில் எண்ணற்ற மாற்றங்களை எதிர்கொண்டு வரும் முக்கிய துறைகளில் ஹெல்த்கேர் துறையும் ஒன்றாகும். ஆம், அதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை! அதோடு, சுகாதாரம் தொடர்பான செலவுகள் இருமடங்கு அதிகரித்து வருகின்றன, அதே சமயம் மக்களும் தங்கள் உடல்நலம் மற்றும் சிக்கனம் ஆகியவற்றில் மிகுந்த கவனத்துடன் செயல்படுகின்றனர்.
இதன் காரணமாக தற்போது பலர் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியைத் தேர்வு செய்கின்றனர். தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு எண்களின் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம், ஏனெனில் இதன் காரணமாகத் தான் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி ஆனது தீவிர மற்றும் பெரும்வாரியான நோய்களுக்கு அப்பாற்பட்ட உடல்நலக் குறைவு மற்றும் நோய்களுக்கு பாதுகாப்பு அளிக்கின்றன.
எனவே, கருவுறாமை பிரச்சனைக்கான சிகிச்சை, டேகேர் அல்லது அடிப்படை (பேசிக்) சிகிச்சை, வருடாந்திர மருத்துவ பரிசோதனை என எதுவாக இருந்தாலும், இன்று இன்சூரன்ஸ் பாலிசிகள் மூலம் இவை அனைத்துமே எளிதில் கவர் செய்யப்படும்.
எனவே, குறைந்த பிரீமியத்தில் அனைத்து நன்மைகளையும் வழங்கும் சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியைத் தேர்ந்தெடுப்பது முக்கியம்; இது உங்கள் ஆரோக்கியம் மற்றும் சேமிப்பையும் பாதுகாக்கிறது.
முக்கியம்: கோவிட் 19 ஹெல்த் இன்சூரன்ஸில் என்னென்ன உள்ளது என்பதைப் பற்றி மேலும் அறிக
இந்தியாவில் உள்ள ஹெல்த் இன்சூரன்ஸின் புள்ளி விவரங்கள்
உலக வங்கியின் அறிக்கையின் படி, இந்தியாவின் மக்கள் தொகை 10%-க்கும் அதிகமாக செலவிடுகிறது. மேலும், 3.9% மக்கள் தங்கள் வருமானத்தில் 25%-க்கும் அதிகமாக தங்கள் சுகாதாரத்தை பேணிக்காப்பதற்கான செலவுகளுக்காக செலவிடுகிறார்கள்.
இந்த ஆண்டு இந்தியாவில் 1.16 மில்லியன் புதிய புற்றுநோய் நோயாளிகள் உள்ளனர் என்றும், 50%-க்கும் அதிகமான பெண்களில் புற்றுநோய் இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.
இந்தியாவில் இதய நோய்க்கு அடுத்தபடியாக நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் ஆனது இறப்பிற்கு முக்கிய காரணமாக அமைகிறது.
இந்தியாவிலுள்ள சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானை நீங்கள் ஏன் தேர்வு செய்ய வேண்டும்?
ஒரு சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியானது உங்கள் உடல்நலம் மட்டுமின்றி பணத்தையும் பாதுகாக்க உதவுகிறது. அதோடு முடிந்துவிடுவதில்லை, வாங்குவதற்கும் கிளைம் செய்வதற்கும் எளிமையாக இருக்கும். மேலும், உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஏற்ற தனிப்பயனாக்கப்பட்ட பலன்களை உங்களுக்கு வழங்குகிறது.
சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியானது, எதிர்பாராத மற்றும் துரதிர்ஷ்டவசமாக நேரக் கூடிய உடல்நலக் குறைவுகளிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள உதவும், அதே நேரத்தில் உங்களுக்கு நிதி ரீதியிலான பாதுகாப்பையும் வழங்குகிறது.
சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியானது, உங்கள் உடல்நலம் மற்றும் நல்வாழ்வுக்கு ஏதுவாக சிறந்த பலன்கள் மற்றும் சேவைகளை வழங்குவதன் மூலம், உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுவதையும் உறுதி செய்கிறது.
சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியானது, உங்கள் கிளைம்கள் எளிதாகச் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்கிறது, இதன் மூலம் நீங்கள் கிளைமைப் பெற ஃபாலோ அப் செய்யவோ கவலைப்படவோ தேவை இல்லை!
தொற்றுநோய்களையும் இது உள்ளடக்குகிறது - மக்கள் இன்னும் கொரோனா வைரஸ் குறித்து பயத்தில் இருந்து மீளவில்லை என்பதை நாங்கள் நன்கு அறிவோம், அதனால் தான் நாங்கள் அதனையும் இதில் உள்ளடக்குகிறோம்!!
டிஜிட் இந்தியாவில் உள்ள ஹெல்த் இன்சூரன்ஸ்களில் சிறந்து விளங்குவதற்கான காரணம் என்ன?
எங்களின் எளிய ஆன்லைன் செயல்முறைகளைத் தவிர்த்து, மார்க்கெட்டில் உள்ள மற்ற ஹெல்த் இன்சூரன்ஸ்களுடன் ஒப்பிடும்போது, டிஜிட் இன்சூரன்ஸ் பாலிசி தனித்துவமாக விளங்குவதோடு, எண்ணற்ற மற்றும் தேவையான உடல்நலம் சார்ந்த நன்மைகளை வழங்குகிறது.
டிஜிட்டின் ஹெல்த் இன்சூரன்ஸ் vs இன்சூரன்ஸ்துறையின் சராசரி
முக்கிய அம்சங்கள் | டிஜிட்டின் ஹெல்த் இன்சூரன்ஸ் | இன்சூரன்ஸ்துறையின் சராசரி |
வாங்குதல் & கிளைம் செயல்முறை | எளிதான டிஜிட்டல் செயல்முறை | முழுமையான டிஜிட்டல் செயல்முறை இல்லை |
கோ-பேமெண்ட் | வயது அல்லது சோன் அடிப்படையிலான கோ-பேமெண்ட் இல்லை | கோ-பேமெண்ட்உண்டு |
அறை வாடகை | அறை வாடகை இல்லை வரம்பு உண்டு | அறை வாடகை வரம்பு உண்டு |
குமுலேட்டிவ் போனஸ் | ஆண்டுக்கு 50% குமுலேட்டிவ் போனஸ் | ஒவ்வொரு இன்சூரர் பொறுத்து மாறுபடுகிறது |
கேஷ்லெஸ் மருத்துவமனைகள் | இந்தியா முழுவதும் 10500+ கேஷ்லெஸ் மருத்துவமனைகள் | ஒவ்வொரு இன்சூரர் பொறுத்து மாறுபடுகிறது |
எங்களது ஹெல்த் இன்சூரன்ஸில் என்னென்ன அடங்கும்?
கவரேஜ்கள்
டபுள் வாலட் பிளான்
இன்ஃபினிட்டி வாலட் பிளான்
வேர்ல்டுவைட் ட்ரீட்மெண்ட் பிளான்
முக்கிய அம்சங்கள்
அனைத்து விதமான ஹாஸ்ப்பிட்டலைசேஷன் - விபத்து, உடல்நலக் குறைவு, தீவிர சிகிச்சை அல்லது கோவிட் போன்ற அனைத்து காரணங்கள்
இது உடல்நலக்குறைவு, விபத்து, தீவிர சிகிச்சை அல்லது கோவிட் 19 போன்ற தொற்றுநோய்கள் உட்பட அனைத்திற்கும் தேவையான மருத்துவமனை செலவுகளை உள்ளடக்கியது. உங்களின் மொத்த மருத்துவமனை செலவுகள் நீங்கள் இன்சூர் செய்த தொகைக்கு உள்ளாக அடங்கும் வரை மல்டிபிள் ஹாஸ்பிட்டலைசேஷன் செலவுகளும் இதில் அடங்கும்.
ஆரம்ப காத்திருப்பு காலம்
விபத்து அல்லாத உடல்நலக்குறைவு சார்ந்த சிகிச்சை செலவுகளைப் பெற நீங்கள் பாலிசி எடுத்த முதல் நாளில் இருந்து ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நீங்கள் காத்திருக்க வேண்டும். இதுவே ஆரம்ப காத்திருப்பு காலம் ஆகும்.
உடல்நல திட்டம்
வீட்டில் இருந்தபடியே சுகாதார பராமரிப்பு, போன் மூலம் கன்சல்டேஷன், யோகா மற்றும் மனந்தெளிநிலை மற்றும் பல பிரத்யேகமான உடல்நலம் சார்ந்த நன்மைகள் எங்கள் ஆப்-ல் கிடைக்கும்
இன்சூர் செய்யப்பட்ட தொகைக்கான பேக் அப்
நீங்கள் இன்சூர் செய்யப்பட்ட தொகைக்கான பேக் அப் வழங்குவதன் மூலம் உங்களின் 100% இன்சூரன்ஸ் தொகையை கட்டாயமாக பெறுவீர்கள். இன்சூர் செய்யப்பட்ட தொகைக்கான பேக் அப் எப்படி செயல்படுகிறது? உங்களின் பாலிசிக்கான இன்சூர் செய்யப்பட்ட தொகை 5 லட்சம் ரூபாய் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் 50,000 ரூபாய்க்கு கிளைம் செய்கிறீர்கள். இந்த நேரத்தில் டிஜிட் வாலட் பெனிஃபிட்டை தொடக்கி வைக்கும். அதனால் இந்த வருடத்தில் நீங்கள் 4.5 லட்சம் + 5 லட்சத்தை இன்சூர் செய்யப்பட்ட பணமாக வைத்திருப்பீர்கள். இருப்பினும், ஒவ்வொரு முறை செய்யும் கிளைமானது, மேற்கூறிய வழக்கில், அடிப்படை இன்சூரன்ஸ் தொகையான 5 லட்சத்தை விட அதிகமாக இருக்கக்கூடாது.
குமுலேட்டிவ் போனஸ்
Digit Special
பாலிசி ஆண்டில் நீங்கள் எந்தவொரு கிளைமும் செய்யவில்லையா? அப்படி என்றால் உங்களுக்கு போனஸ் காத்திருக்கிறது- ஆரோக்கியமாக இருந்ததற்கும் & எந்தவொரு கிளைமும் செய்யாமல் இருந்ததற்கும் உங்களின் மொத்த இன்சூர் செய்யப்பட்ட தொகையுடன் ஒரு கூடுதல் தொகை சேர்க்கப்படும்!
ரூம் ரெண்ட் கேப்பிங்
வெவ்வேறு வகையைச் சார்ந்த அறைகளுக்கு வெவ்வேறு வாடகைகள் வசூலிக்கப்படும். ஹோட்டல் ரூம்களுக்கு வசூலிக்கப்படுவதை போல தான் இதுவும். நீங்கள் இன்சூர் செய்யப்பட்ட தொகைக்கு குறைவாக இருக்கும் வரை டிஜிட் எந்த விதமான ரூம் ரெண்ட் கேப்பிங்கும் விதிப்பதில்லை.
டே கேர் செயல்முறைகள்
24 மணிநேரத்திற்கு அதிகமாக மருத்துவமனையில் இருந்தால் மட்டுமே அதற்கான மருத்துவ செலவுகளை ஹெல்த் இன்சூரன்ஸ் ஏற்றுக்கொள்ளும். தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக 24 மணிநேரத்திற்கு குறைவாக தேவைப்படும் கண்புரை, டயாலிசிஸ் போன்ற மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் மருத்துவ சிகிச்சைகள் டே கேர் செயல்முறைகள் ஆகும்.
உலகளவு கவரேஜ்
Digit Special
உலகளவு கவரேஜுடன் உலகத்தரம் வாய்ந்த சிகிச்சைகளை பெறுங்கள்! இந்தியாவில் நீங்கள் ஒரு மருத்துவ பரிசோதனை செய்தபோது உங்களுக்கு உடல்நலகுறைவு இருப்பது கண்டறியப்பட்டால், ஒரு வேலை நீங்கள் அதற்கான சிகிச்சையை அயல்நாடுகளில் மேற்கொள்ள விரும்பும் பட்சத்தில், உங்களுக்கு உதவ நாங்கள் உள்ளோம். உங்களுக்கு தேவையான பாதுகாப்பு பாலிசியில் உண்டு!
ஹெல்த் செக்-அப்
உங்களின் ஹெல்த் செக்-அப்பிற்கு ஆகும் செலவுகளை உங்கள் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொகை வரை நாங்களே செலுத்துவோம். நீங்கள் எடுக்கும் பரிசோதனைகளுக்கு எந்த ஒரு கட்டுப்பாடும் கிடையாது! அது இசிஜி அல்லது தைராய்டு சோதனை எதுவாக இருந்தாலும் சரி. உங்கள் கிளைம் லிமிட் என்ன என்பதை பாலிசி அட்டவணையில் பார்க்க மறந்து விடாதீர்கள்.
அவசரகால வான்வழி ஆம்புலன்ஸ் செலவுகள்
உயிருக்கு ஆபத்தான சில அச்சுறுத்தும் நிலைகளில் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல போக்குவரத்து தேவைப்படலாம். இதனை நாங்கள் முழுவதுமாக புரிந்துகொள்கிறோம். ஏர்பிளேன் அல்லது ஹெலிகாப்டர் வைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்ற செலவுகளை ரீஇம்பர்ஸ் செய்து கொள்ளலாம்.
வயது/சோன் சார்ந்த கோ–பேமெண்ட்
Digit Special
கோ–பேமெண்ட் என்பது ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ் உள்ள செலவினப் பகிர்வுத் தேவையாகும், இது பாலிசிதாரர்/இன்சூர் செய்தவர் கிளைம் செய்யப்பட்ட தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை ஏற்க வேண்டும். இது இன்சூர் செய்யப்பட்ட தொகையைக் குறைக்காது. இந்த சதவீதமானது வயது போன்ற ஒரு சில காரணிகள், அல்லது ஒரு சில நேரங்களில் சோன் சார்ந்த கோ–பேமெண்ட் என்று அழைக்கப்படும் நீங்கள் சிகிச்சை பெறும் நகரத்தை பொறுத்து அமையும். எங்களது திட்டத்தில், வயது சார்ந்த அல்லது சோன் சார்ந்த கோ–பேமெண்ட் கிடையாது.
சாலைவழி ஆம்புலன்ஸ் செலவுகள்
ஒரு வேலை நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், சாலைவழி ஆம்புலன்ஸுக்கான செலவுகளை ரீஇம்பர்ஸ் செய்து கொள்ளலாம்.
ப்ரீ/போஸ்ட் ஹாஸ்பிட்டலைசேஷன்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு முன்னும், பின்னரும் நோயறிதல், பரிசோதனைகள் மற்றும் குணமடைதல் போன்ற செலவுகளுக்கான கவர் இது.
பிற அம்சங்கள்
ஏற்கனவே இருக்கும் நோய்க்கான (பிஇடி) காத்திருப்பு காலம்
உங்களுக்கு ஏற்கனவே இருக்கும் ஒரு நோய் அல்லது மருத்துவ நிலை குறித்து நீங்கள் எங்களிடம் பாலிசி எடுப்பதற்கு தெரிவித்து, நாங்கள் அதை ஒப்புக்கொண்டும் இருப்பதற்கு எங்களின் திட்டப்படி ஒரு குறிப்பிட்ட காத்திருப்பு காலம் உண்டு. இது உங்களின் பாலிசி அட்டவணையில் குறிப்பிடப்பட்டு இருக்கும்.
குறிப்பிட்ட உடல்நலக்குறைவிற்கான காத்திருப்பு காலம்
ஒரு குறிப்பிட்ட உடல்நலக்குறைவிற்கு கிளைம் செய்ய நீங்கள் காத்திருக்க வேண்டிய காலத்தை இது குறிக்கிறது. டிஜிட்டில் இது 2 ஆண்டுகள் ஆகும். இது உங்கள் பாலிசி ஆக்டிவேட் ஆன நாளில் இருந்து துவங்கும். விலக்குகளுக்கான முழு பட்டியலுக்கு, உங்கள் பாலிசி வொர்டிங்களின் ஸ்டான்டர்டு விலக்குகளைப் (Excl02) படிக்கவும்.
இன்பில்ட் பர்சனல் ஆக்சிடன்ட் கவர்
பாலிசி காலத்தில் உங்களுக்கு ஏதேனும் விபத்தின் விளைவாக காயம் ஏற்பட்டு, விபத்து ஏற்பட்ட தேதியில் இருந்து பன்னிரண்டு (12) மாதங்களுக்குள் ஏற்பட்ட உங்களின் இறப்பிற்கு அது மட்டுமே காரணமாக இருந்தால், பின்னர் பாலிசியில் குறிப்பிட்டுள்ளபடி இன்சூர் செய்யப்பட்ட தொகையில் 100% வழங்கப்படும்.
உறுப்பு தானம் செய்தவருக்கான செலவுகள்
Digit Special
உங்களுக்கு உறுப்பு தானம் கொடுத்த நபரும் இந்த பாலிசி மூலம் பாதுகாக்கப்படுவார். தானம் கொடுப்பவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்பும், பின்னரும் ஆகும் செலவுகள் ஏற்கப்படும். உடலுறுப்பு தானம் செய்வது மிகப்பெரிய பண்புகளில் ஒன்றாகும். ஆதலால், நாங்களும் இதில் பங்குபெற ஆசைப்படுகிறோம்!
டாமிசிலியரி ஹாஸ்பிட்டலைசேஷன்
மருத்துவமனைகளில் காலியான படுக்கைகள் இல்லாமல் போகலாம் அல்லது நோயாளியின் நிலை கருதி அவரை மருத்துவமனையில் அனுமதிக்க முடியாத சூழ்நிலை ஏற்படலாம். பதட்டப்படாதீர்கள்! நீங்கள் வீட்டில் சிகிச்சை பெற்று வந்தால் கூட, அதற்கான செலவுகளை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.
உடல் பருமனியல் அறுவை சிகிச்சை
பல உடல்நல பிரச்சினைகளுக்கு உடல் பருமன் ஒரு காரணமாக உள்ளது. இதனை நாங்கள் முழுவதுமாக புரிந்துகொள்கிறோம். ஆகவே, உடல் பருமனியல் அறுவை சிகிச்சை செய்வதற்கான மருத்துவ தேவை ஏற்பட்டால் அதற்கான செலவுகளையும் நாங்கள் ஏற்கிறோம். இருப்பினும், இந்த சிகிச்சை அழகு சார்ந்த தேவைகளுக்கு செய்யப்படும்போது, அதற்கான மருத்துவ செலவுகளை நாங்கள் ஏற்க மாட்டோம்.
சைக்கியாட்ரிக் இல்னஸ்
மனஉளைச்சல் காரணமாக மனநோய் மருவத்துவம் செய்ய ஒருவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், இந்த பலன்களின் கீழ் 1,00,000 ருபாய் வரை கிடைக்கும். இருப்பினும், ஓபிடி ஆலோசனைகள் இந்த பலன்களின் கீழ் வராது. குறிப்பிட்ட உடல்நலகுறைவுக்கான காத்திருப்பு காலம் சைக்கியாட்ரிக் இல்னஸுக்கான காத்திருப்பு காலம் குறிப்பிட்ட உடல்நலகுறைவுக்கான காத்திருப்பு காலத்திற்கு ஒத்தது.
கன்ஸ்யூமபிள் கவர்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்பும், மருத்துவமனையில் இருக்கும்போதும், அதற்கு பின்னரும் வாக்கிங் எய்டுகள், கிரீப் பேண்டேஜ்கள், பெல்ட்டுகள் போன்ற பல மருத்துவ எய்டுகள் மற்றும் செலவுகளுக்காக அவசியம் ஏற்படலாம். பாலிசியில் சேர்க்கப்படாத இந்த செலவுகளையும் நாங்களே ஏற்றுக்கொள்வோம்.
எதற்கெல்லாம் காப்பீடு அளிக்கப்படுவதில்லை?
மருத்துவமனை அனுமதிக்கப்படுதலினால் ஏற்படும் ப்ரீ-நேட்டல் & போஸ்ட் நேட்டலுக்கான மருத்துவ செலவுகள்,
ஒருவேளை ஏற்கனவே இருக்கும் நீரிழிவு நோய்கள் இருப்பின், காத்திருப்பு காலம் முடியும் வரை, அந்த நோய் அல்லது குறைபாட்டிற்கான கிளைமை தாக்கல் செய்யப்படமுடியாது.
உங்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான எந்த நிலையும், மருத்துவரின் பரிந்துரையுடன் பொருந்தவில்லை எனில் கிளைம் செய்ய முடியாது.
எவ்வாறு கிளைமை தாக்கல் செய்வது?·
இம்பர்ஸ்மென்ட்ஸ்கான கிளைம்கள்- மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் அனுமதிக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குள் எங்களுக்கு 1800-258-4242 இல் அல்லது healthclaims@godigit.com க்கு எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள், அதன்[பின்னர் உங்கள் மருத்துவமனை பில்கள் மற்றும் அது தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் நீங்கள் பதிவேற்றக்கூடிய இணைப்பை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்.
கேஷ்லெஸ் கிளைம்கள் - நீங்கள் நெட்வொர்க் மருத்துவமனையைத் தேர்வு செய்யவும். நெட்வொர்க் மருத்துவமனைகளின் முழுமையான பட்டியலை இங்கே காணலாம். மருத்துவமனை உதவி மையத்திடம் இ-ஹெல்த் கார்டைக் காண்பித்து, கேஷ்லெஸ் கிளைமிற்கான படிவத்தைக் கோருங்கள். எல்லாம் சரியாக இருந்தால், உங்கள் கிளைம் உடனடியாக செயல்படுத்தப்படும்.
ஒருவேளை நீங்கள் கொரோனா வைரஸ்காக கிளைம் செய்திருந்தால், புனேவில் உள்ள தேசிய வைராலஜி - ஐசிஎம்ஆர் இன் அங்கீகரிக்கப்பட்ட மையத்திலிருந்து நோயிருப்பதைஉறுதிபடுத்தும் வகையில் இருக்கும் சோதனை அறிக்கை இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
இந்தியாவில் சிறந்த ஒரு ஹெல்த் இன்சூரன்ஸை எவ்வாறு தேர்வு செய்வது?
தற்போது இந்தியாவில் சுகாதாரத்துறையானது மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்து வருகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, உடல் ஆரோக்கியம் தான் நம் வாழ்வின் மிக முக்கியமான அங்களில் ஒன்றாகும். சீரான உடல்நலம் தான் நம் அனைவரின் தேவை. ஹெல்த் இன்சூரன்ஸ் கூட அதே போன்று தான். ஆம், இது நம் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் மன அமைதி அளிக்கவும் உதவும் விஷயங்களில் முக்கியமான ஒன்றாகும்.
இருப்பினும், இன்று இவற்றை சமாளிக்க பல ஆப்ஷன்கள் உள்ளன, அப்படி இருக்கையில், இந்தியாவில் சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியைத் தேர்வு செய்து உங்கள் ஆரோக்கியத்தை எப்படி பாதுகாப்பது என்று நீங்கள் சிந்தித்துக் கொண்டிருங்கள், இதோ உங்களுக்கு உதவும் வகையில் சில குறிப்புகளை உங்களுக்காக வழங்குகிறோம்:
இந்தியாவில் உள்ள சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
இந்தியா முழுவதிலும் என் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி செல்லுபடியாகுமா?
ஆம், இந்தியா முழுவதிலும் உள்ள நகரங்களில் உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி செல்லுபடியாகும்..
டிஜிட்-ல் எத்தனை நெட்வொர்க் மருத்துவமனைகள் உள்ளன?
இந்தியா முழுவதிலும் எங்களுக்கு 10500+-க்கும் மேற்பட்ட கேஷ்லெஸ் மருத்துவமனைகள் உள்ளன.
ஃபிட்னஸ் டிராக்கர்கள் மூலாம், ஒவ்வொரு நாளும் பல வழிமுறைகளைப் பின்பற்றினால், இன்று பல ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தள்ளுபடிகள் அல்லது போனஸ்களை வழங்குகின்றன. டிஜிட்-ன் ஹெல்த் இன்சூரன்ஸும் அத்தகைய பலன்களை வழங்குகிறதா?
ஆம், நாங்கள் எங்கள் கஸ்டமர்களுக்கு நோ கிளைம் போனஸை வழங்குகிறோம், அதாவது நீங்கள் ஆண்டு முழுவதும் ஆரோக்கியமாக இருந்து, ஒருபோதும் கிளைம் செய்யவில்லையெனில், உங்களின் முதல் கிளைம்-ஃப்ரீ ஆண்டு முதல் 20% முதல் நோ கிளைம் போனஸை உங்களுக்கு வழங்குவோம். இதனால் ஃபிட்னஸ் டிராக்கர்கள் அல்லது அது போன்றவற்றின் மூலம் நீங்கள் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இருக்காது. 😊
ஏற்கனவே இருக்கும் நோய்கள் என்பது எதைக் குறிக்கிறது?
ஏற்கனவே இருக்கும் நோய்கள் என்பது உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியைப் பெறுவதற்கு முன்னரே உங்களுக்குள்ள உடல்நிலைப் பிரச்சனைகளைக் குறிக்கும். ஐஆர்டிஏஐ-ன் படி, அதன் அதிகாரப்பூர்வ வரையறையானது பின்வருமாறு; ஏற்கனவே இருக்கும் நோய் என்பது ஒருவர் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்குவதற்கு 48 மாதங்களுக்கு முன், அவருக்கு ஏற்கனவே உள்ள உடல்நலக் குறைவு, காயம், அல்லது இது போன்ற நிலமைகளைக் குறிக்கின்றது.
ஹெல்த் இன்சூரன்ஸ் கிளைம் என்றால், டிஜிட்-ன் கிளைம் செட்டில்மென்ட் விகிதம் என்ன?
ஹெல்த் இன்சூரன்ஸ் கிளைம்களுக்கு டிஜிட்-ன் தற்போதைய கிளைம் செட்டில்மென்ட் விகிதம் 93.37% ஆக உள்ளது 😊
சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானிற்கு பரிந்துரைக்கப்பட்ட இன்சூர்ட் தொகை என்ன?
சிறந்த இன்சூரன்ஸ் தொகையைத் தேர்ந்தெடுப்பது என்பது முதன்மையாக உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ் இன்சூர் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அமைகிறது. இதற்கான சிறந்த வழியானது, உங்கள் குடும்பத்தின் ஆண்டு வருமான வரம்பைக் குறிப்பிட்டு, பரிந்துரைக்கப்பட்ட இன்சூரன்ஸ் பிளானைத் தேர்ந்தெடுப்பதாகும். இது உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும், இன்சூரன்ஸ் தொகையானது உங்களால் செலுத்தக் கூடிய வகையில் மலிவு விலையில் இருப்பதை உறுதி செய்யும்.