ஹெல்த் இன்சூரன்சில் ஆயுஷ் பெனிஃபிட் என்றால் என்ன?
ஆயுஷ், என்பது ஹெல்த்கேர் அமைப்புடன் இணைந்திருக்கும் ஆயுர்வேதா, யோகா, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி என்றும் அழைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆயுஷின் சிகிச்சைகள் பெரும்பாலும் இயற்கை வைத்தியங்களாக இருந்தாலும் குறிப்பிட்ட நோய்களுக்காகவும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை நிர்வகிக்கவும் ஆயுஷ் சிகிச்சைகளில் மருந்து சார் தெரப்பிகளும் (சிகிச்சைகளும்) செய்யப்படுகின்றன
இருப்பினும், இத்தகைய மருந்துகள் பெரும்பாலும் இயற்கை மூலிகைகளை ஒன்று சேர்த்து தயாரிக்கப்பட்டவையே, அவை உடலால் நன்கு உட்கிறத்துக்கொள்ளப்பட்டுக் குறைவான பக்க விளை வுகளுடன் அதிக பயன்கள் தருகின்றன.
ஐஆர்டிஏஐ(IRDAI) விதிகளில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களுக்குப் பிறகு, எங்களை போன்ற ஏராளமான ஹெல்த் இன்சாரன்ஸ் நிறுவனங்கள் இப்போது ஆயுஷ் சிகிச்சைகளையும் காப்பீடு செய்யகின்றன, குறிப்பாக 60 மற்றும் அதற்கு மேல் இருக்கும் காப்பீடு செய்யப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு இது பெரும் உதவியாக இருக்கும்.
பொறுப்புத் துறப்பு: டிஜிட் தற்சமயம் எங்களது ஹெல்த் பிளான்களுடன் ஆயுஷ் பெனிபிட்டை வழங்குவதில்லை.
ஆயுஷ் சிகிச்சையின் முக்கியத்துவம்
சமீப வருடங்களாக, வழக்கமான மருத்துவ முறைகளை விடுத்து ஹோமியோபதி, ஆயுர்வேதா, நேச்சுரோபதி மற்றும் யோகா போன்ற மாற்று சிகிச்சை முறைகளை மக்கள் எடுத்துக்கொள்ள விரும்பும் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுவருகிறது. இந்த நடைமுறையை ஆதரிக்கும் வகையில், எங்களை போன்ற ஹெல்த் இன்சூரர்ஸ் ஆயுர்வேதிக் சிகிச்சைக்கான காப்பீட்டையும் அதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் அவர்களது ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியில் அதை ஒரு பகுதியாக வழங்க துவங்கியுள்ளோம்.
எனவே, நீங்கள் மாற்று சிகிச்சைகளின் சக்தியில், அதிக நம்பிக்கை உடையவராக இருப்பின், அதை மேற்கொள்வதற்கான காப்பீடு என்னும் சக்தியை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம். ஹெல்த் இன்சூரன்ஸில் ஆயுஷ் போன்ற மாற்று சிகிச்சையைப் பற்றி நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே இருக்கிறது.
இன்று ஹெல்த்கேர் சேவைகளில் ஆயுஷ்
ஆயுஷ் சார்ந்த சிகிச்சைகளில் இன்னும் அதிகமான ஈர்ப்பை கொண்டு வரும் நோக்கத்துடன், இந்திய அரசாங்கம் 2014 ஆம் ஆண்டு ஆயுஷின் அமைச்சகத்தை உருவாக்கியது மட்டுமின்றி மருத்துவமனைகளுக்கான தேசிய வாரியம் (NABH-என்ஏபிஹெச்) மருத்துவமனைகளில் ஆயுஷ் சிகிச்சைகளை வழங்கும் தரம்வாய்ந்த ஹெல்த் கேர் நடைமுறைகளை செயல்படுத்தும் மாற்றத்தையும் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
இன்று, இந்தியாவில் 50க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் நம்பகமான மற்றும் உண்மையான ஆயுஷ் சார்ந்த சிகிச்சைகளை வழங்க அங்கீகாரம் பெற்றுள்ளது.
மேலும் படிக்க:
- கோவிட்-19 இன்சூரன்ஸ் பாலிசி கவரேஜ்களை பற்றி மேலும் அறிந்துக்கொள்ளுங்கள்
- OPD கவரேஜ் உடனான மெடிக்கல் இன்சூரன்ஸ்
ஆயுஷ் சிகிக்சையின் நற்பயன்கள்
இது ஹெல்த்கேருக்கான முழுமையான அணுகுமுறையை கொண்டுள்ளது, மருத்துவ சேவைகளில் இருக்கும் இடைவெளியை நிவர்த்தி செய்கிறது அத்துடன் ஒருவரின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை சார்ந்த ஹெல்த்கேரை வழங்குகிறது.
முதியவர்களுக்கு வழங்கப்படும் மாற்று சிகிச்சைகளில் இது சிறந்ததாக திகழ்கிறது.
புகையிலை பழக்கம் மற்றும் போதை பழக்கம் வாழ்வாதார பிரச்சனைகளை குறிப்பிட்ட ஆயுஷ் சிகிச்சை மூலம் முற்றிலும் குணப்படுத்த முடியும், அதன் ஒரு சிறந்த உதாரணம் யோகா.
இந்தியாவில் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் நோய்கள் வளர்ந்து வருகின்றன. இருப்பினும், நீரிழிவு நோய், ஹைப்பர்டென்ஷன் போன்ற பெரும்பான்மையானவை ஆயுஷ் அமைப்பில் இருக்கும் மாற்று சிகிச்சைகளின் மூலம் சரி செய்ய முடியும்.
இறுதியாக, ஆயுஷ் சிகிச்சைகள் குறைந்த பக்க விளைவுகளையும், நவீன மருத்துவத்தை விட குறைந்த செலவில் நல்ல பலனை கொடுப்பதாகவும் பறைசாற்றப்படுகிறது.
ஹெல்த் இன்சூரன்ஸில் ஆயுஷ் பெனிஃபிட் பற்றி மேலும் தெரிந்துக்கொள்ளுங்கள்
ஹெல்த் இன்ஸ்யூரன்ஸில் ஆயுஷ் ட்ரீட்மென்ட் யார் எடுத்துக் கொள்ளலாம்?
எவரும் தங்கள் ஹெல்த் இன்சூரன்ஸின் கீழ் ஆயுஷ் கவரை தேர்வுசெய்யலாம் என்றாலும், நீங்கள் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவராக இருந்தால் அல்லது உங்கள் திட்டத்தின் ஒரு பகுதியாக உங்கள் பெற்றோருக்கு காப்பீடு செய்திருந்தால் அல்லது அவர்களுக்கென தனியாக சீனியர் சிட்டிசன் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தை வாங்கினால் கண்டிப்பாக அதைத் தேர்வுசெய்ய பரிந்துரைக்கப்படுகிறது. மேலும், வெவ்வேறு காப்பீட்டாளர்களிடையே வயது அளவுகோல் வேறுபடுகிறது.
ஹெல்த் இன்சூரன்ஸில் ஆயுஷ் பெனிஃபிட்டில் காப்பீடு செய்யப்படுவது யாவை?
உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸில் ஆயுஷ் காப்பீட்டுக்கு நீங்கள் விண்ணப்பத்திருக்கிறீர்கள், நோயாளிக்கு ஆயுர்வேதா, யுனானி, சித்தா அல்லது ஹோமியோபதிக்கு கொடுக்கப்படும் சிகிச்சைக்கு ஆகும் அனைத்து மருத்துவ செலவினங்களையும் டிஜிட் பார்த்துக்கொள்கிறது.
குறிப்பு: உங்கள் ஹெல்த் பாலிசியின் படி இந்த சிகிச்சைக்கான கிளைமை பெற இந்தியத் தரக் கவுன்சில் அல்லது ஆரோக்கியத்திற்கென தேசிய அங்கீகார வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருக்க வேண்டும்.
ஹெல்த் இன்சூரன்ஸில் ஆயுஷ் பெனிஃபிட்டில் காப்பீடு செய்யப்படாதது யாவை?
- எந்த மருத்துவமனையிலும் 24 மணிநேரத்துக்குள் அனுமதிக்கப்பட்டு வீட்டுக்கு திரும்புதல்.
- மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு & பின்பு, டே கேர் செயல்முறை மற்றும் மாற்று சிகிச்சையின் கீழ் வெளிநோயாளிக்கான மருத்துவ செலவினங்கள்
- மருத்துவ ரீதியாக அவசியமில்லாத எந்தவொரு பாதுகாப்பு மற்றும் புத்துணர்ச்சி சிகிச்சைகள் (எனவே கேரளா மாற்று சிகிச்சைக்கான ரிசார்ட்டுகள் இதில் சேர்க்கப்படவில்லை 😉)
ஹெல்த் இன்சூரன்ஸில் ஆயுஷ் சிகிச்சை முறையை எடுத்துக்கொள்ளும் முன் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய நிபந்தனைகள் யாவை?
ஆயுர்வேதிக் சிகிச்சைக்கான செலவுகள் ஹெல்த் இன்சூரன்ஸில் ஆயுஷ் சிகிச்சையின் கீழ் தகுதிபெறும் ஒரு மையத்தில் சிகிச்சை எடுத்துக் கொள்ளப்பட்டால் காப்பீடு செய்யப்படும். ஒரு தகுதிவாய்ந்த மையத்திற்கான வரையறை ஐஆர்டிஏஐ-ஆல் உருவாக்கப்பட்டது.
இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும் மையங்களே பின்வருமாறு பட்டியிலடப்பட்டுள்ளது:
1.மத்திய இந்திய மருத்துவ கவுன்சில் (சி.சி.ஐ.எம்-CCIM) மற்றும் மத்திய ஹோமியோபதி கவுன்சில் (சி.சி.எச்-CCH) ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்டு கற்பிக்கும் ஆயுஷ் கல்லூரிகள்
2. ஆயுஷ் மருத்துவமனைகள் மாநிலம் / யூனியன் பிரதேசத்திற்கு பொருத்தமான சட்டத்தின் கீழ் அரசு அதிகாரியிடம் பதிவு செய்யப்பட்டிருப்பதுடன், பின்வரும் குறைந்தபட்ச அளவுகோல்களுக்கு இணங்குபவையாக இருக்கின்றன:
- குறைந்தபட்சம் 15 நோயாளிகள் அனுமதிக்கப்படுவதற்கான படுக்கை வசதி
- குறைந்தபட்சம் 5 தகுதி பெற்ற மற்றும் பதிவு செய்யப்பட்ட ஆயுஷ் மருத்துவர்கள்
- 24 மணிநேரமும் தகுதிபெற்ற பாரா மெடிக்கல் ஸ்டாப் பணியில் இருப்பார்கள்
- பிரத்யேகமான ஆயுஷ் தெரபி அமர்வுகள்
- நோயாளிகளின் அன்றாட வருகையை நிர்வகித்தல் மேலும் இவை அனைத்தும் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி அணுகுவதற்கு ஏற்ப நிர்வகிக்கப்படுகின்றது
மேலும், நோயாளி ஒரு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனையில் 24 மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருத்தல் வேண்டும். சிகிச்சைக்கான பலன் நேர்மறையாக இருத்தலும் சில இன்சூரர்கள் கிழமை ஏற்றுக்கொள்வதற்கான தேவையாக இருக்கிறது.
பொறுப்புத் துறப்பு: ஆயுஷ் கவர் பற்றிய முழு விவரங்களுக்கு உங்கள் இன்சூரன்ஸ் வழங்குநர் மற்றும் உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை எப்போதும் சரிபார்க்கவும்.
ஆயுஷ் பெனிஃபிட் பற்றிய கேள்வி பதில்கள்
ஹோமியோபதி மருத்துவம் ஹெல்த் இன்சூரன்ஸின் கீழ் காப்பீடு செய்யப்படுகிறதா?
ஆம், மாற்று சிகிச்சை காப்பீட்டின் கீழ், ஹோமியோபதியும் காப்பீடு செய்யப்படுகிறது. இருப்பினும், காப்பீட்டு நிறுவனங்கள் ஹோமியோபதியின் சிறிய செலவுகளுக்கு இழப்பீடு வழங்குவதில்லை, ஏனெனில் அவை பரிந்துரைக்கப்பட்ட மாத்திரைகளுக்கான கிளைமை வழங்குகின்றன. ஒருவேளை நோயாளி 24 மணிநேரத்துக்கு மேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் அந்த தொகை செலுத்தப்படும்.
நேச்சுரோபதி மருத்துவம் ஹெல்த் இன்சூரன்ஸின் கீழ் காப்பீடு செய்யப்படுகிறதா?
ஆம், ஒரு மருத்துவமனையில் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டால், நேச்சுரோபதி மருத்துவமும் ஹெல்த் இன்சூரன்ஸின் கீழ் வருகிறது.