இந்தியாவில் உள்ள டெர்ம் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பட்டியல்
வாழ்க்கையின் கணிக்க முடியாத தன்மை காரணமாக, எதிர்காலம் என்ன என்பதை கணிப்பது பெரும்பாலும் கடினம். குடும்பத்திற்குத் தலைமை தாங்கும் தனிநபர்கள் தங்கள் வாழ்க்கைத் துணை, குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் நிதி ரீதியாக பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும், தனிநபர்களுக்கு ஏதேனும் துரதிர்ஷ்டவசமான சம்பவம் நடந்தாலும் கூட விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்.
எடுத்துக்காட்டாக, ஒரு திடீர் நோய் உங்கள் ஆயுட்காலத்தை உருகுலைத்து, உங்கள் குடும்பத்தை வாழ்வாதாரத்திற்கு வழியின்றி தவிக்கச் செய்யலாம்.
லைஃப் இன்சூரன்ஸ் பாலிசிகள் அல்லது இன்னும் குறிப்பாக, டெர்ம் இன்சூரன்ஸ் பிளான்கள் உங்கள் அன்புக்குரியவர்களை இதுபோன்ற நிகழ்வுகளிலிருந்து பாதுகாக்கின்றன. இந்த பாலிசிகள் ஒருவேளை நீங்கள் மறைந்த பின்னரும் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு கணிசமான இழப்பீட்டை வழங்குகின்றன.
இந்த டெத் பெனிஃபிட்டின் மூலம், உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் நிதி பற்றாக்குறைகளை சந்திக்காமல் தங்கள் வாழ்க்கையை நகர்த்த இயலும்.
டெர்ம் இன்சூரன்ஸ் என்றால் என்ன?
டெர்ம் இன்சூரன்ஸ் பிளான்கள் என்பது குறிப்பிட்ட வகை லைஃப் இன்சூரன்ஸ் பாலிசிகள் ஆகும், இதில் டெத் பெனிஃபிட் மட்டுமே ஒரே நன்மையாகும்.
பாலிசி காலம் முடிந்த பிறகு பாலிசிதாரர்கள் முதலீட்டில் கணிசமான வருவாயைப் பெறக்கூடிய பல லைஃப் இன்சூரன்ஸ் பிளான்களைப் போலல்லாமல், டெர்ம் இன்சூரன்ஸ் அத்தகைய கூடுதல் நன்மையை வழங்காது.
அத்தகைய திட்டத்தின் காலத்தில் காப்பீடு செய்யப்பட்ட நபர் இயற்கையான சூழ்நிலைகளால் மறைந்துவிட்டால் மட்டுமே அத்தகைய பாலிசியை கிளைம் செய்ய முடியும்.
இருப்பினும், உரிய காலம் முடிந்த பிறகு மரணம் ஏற்பட்டால், நாமினிகள் காப்பீட்டாளரிடமிருந்து எந்த நிதி இழப்பீட்டையும் கோர முடியாது.
டெர்ம் இன்சூரன்ஸ் பிளானின் முதன்மை நன்மை அவற்றுடன் இணைக்கப்பட்ட குறைந்த பிரீமியம் ஆகும். கூடுதலாக, அத்தகைய பாலிசி தொடர்பான டெத் பெனிஃபிட் தொகை மற்ற வகை லைஃப் இன்சூரன்ஸ் பாலிசிகளுடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்கதாகும். கூடுதல் நன்மைகள் பின்வருமாறு:
ஒரு ஸ்டாண்டர்ட் டெர்ம் இன்சூரன்ஸ் திட்டத்தால் வழங்கப்படும் நிதி பாதுகாப்பை மேம்படுத்த பல ரைடர் இன்சூரன்ஸ்கள் கிடைக்கிறது
டெர்ம் இன்சூரன்ஸ் வழங்குநர்கள் ஸ்மோக் செய்யாத பாலிசிதாரர்களுக்கு தள்ளுபடிகள் உட்பட புதுமையான அம்சங்கள் மற்றும் சலுகைகளை வழங்குகிறார்கள்.
திருமணத்தின் போது அல்லது நீங்கள் முதல் முறை பெற்றோராக ஆகும் போது உங்கள் வாழ்க்கையின் முக்கியமான தருணங்களில் லைஃப் கவரை அதிகரிக்கலாம்.
இந்தியாவில் உள்ள டெர்ம் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பட்டியல்
நிறுவனத்தின் பெயர் | நிறுவப்பட்ட ஆண்டு | தலைமையகம் |
லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா | 1956 | மும்பை |
மேக்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் | 2000 | புது டெல்லி |
எச்.டி.எஃப்.சி லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் | 2000 | மும்பை |
ஐசிஐசிஐ புருடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் | 2000 | மும்பை |
ஆதித்யா பிர்லா சன்லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் | 2000 | மும்பை |
கோடக் மஹிந்திரா லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் | 2001 | மும்பை |
பிரமெரிகா லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் | 2008 | குருகிராம் |
டாடா ஏ.ஐ.ஏ லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் | 2000 | மும்பை |
பஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் | 2001 | புனே |
எஸ்.பி.ஐ லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் | 2001 | மும்பை |
எக்சைட் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் | 2001 | பெங்களூரு |
ரிலையன்ஸ் நிப்பான் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி | 2001 | மும்பை |
சஹாரா இந்தியா லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் | 2000 | கான்பூர் |
அவிவா லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி இந்தியா லிமிடெட் | 2002 | குருகிராம் |
பி.என்.பி மெட்லைஃப் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் | 2001 | மும்பை |
பார்தி ஏ.எக்ஸ்.ஏ லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் | 2005 | மும்பை |
ஐ.டி.பி.ஐ ஃபெடரல் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் | 2008 | மும்பை |
பியூச்சர் ஜெனரலி இந்தியா லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் | 2006 | மும்பை |
ஸ்ரீராம் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் | 2005 | ஹைதராபாத் |
ஏகான் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் | 2008 | மும்பை |
கனரா எச்.எஸ்.பி.சி ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் | 2007 | குருகிராம் |
எடெல்வீஸ் டோக்கியோ லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் | 2009 | மும்பை |
ஸ்டார் யூனியன் டாய் -இச்சி லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் | 2007 | மும்பை |
இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் | 2009 | மும்பை |
அத்தகைய பாலிசிகளைப் பெறுவதற்கு முன், ஒரு குறிப்பிட்ட டெர்ம் இன்சூரன்ஸ் வழங்குநரைத் தேர்ந்தெடுப்பதன் நன்மை தீமைகளைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பல்வேறு அம்சங்களை நீங்கள் சரிபார்க்க வேண்டும், அதாவது கிளைம் செட்டில்மென்ட் ரேஷியோ, வாடிக்கையாளர் சேவை மற்றும் ஒட்டுமொத்த நற்பெயர்.
கூடுதலாக, ஒரு நிறுவனத்தின் பாலிசி அம்சங்கள், அத்தகைய லைஃப் கவரேஜிலிருந்து நீங்கள் தேடும் வசதிகளுடன் ஒத்துப்போக வேண்டும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
ஸ்டாண்டர்ட் லைஃப் இன்சூரன்ஸிலிருந்து டெர்ம் இன்சூரன்ஸ் எவ்வாறு வேறுபடுகிறது?
டெர்ம் இன்சூரன்ஸ் என்பது ஒரு வகை ஆயுள் காப்பீடு என்றாலும், அதை ஒரு முதலீட்டு வடிவமாக நீங்கள் கருதக்கூடாது. இத்தகைய திட்டங்களுக்கு ஒரு நிலையான கால அவகாசம் உள்ளது மற்றும் நிதி வருவாயாக டெத் பெனிஃபிட்டை மட்டுமே வழங்குகிறது.
எனவே, காப்பீடு செய்யப்பட்ட தனிநபர் பாலிசி காலத்தை தாண்டி வாழ்ந்துக்கொண்டிருந்தால், அவர் அதிலிருந்து எந்த இழப்பீட்டையும் கோர முடியாது.
இருப்பினும், பாலிசிதாரர்கள் இந்த காலப்பகுதியில் இறந்துவிட்டால், ஒரு டெர்ம் இன்சூரன்ஸ் பிளானுடன் இணைக்கப்பட்ட டெத் பெனிஃபிட் இழப்பீட்டை நாமினிகள் கோரலாம்.
ஒரு ஸ்டாண்டர்ட் லைஃப் இன்சூரன்ஸில், பாலிசிதாரர்கள் உயிருடன் இருந்தால், உரியகாலம் முடிந்த பிறகு வருமானத்தை கோரலாம்.
டெர்ம் இன்சூரன்ஸ் பாலிசிகள் ஏன் நன்மை பயக்கும்?
அனைத்து லைஃப் இன்சூரன்ஸ் பிளான்களுடனும் இணைக்கப்பட்ட டெத் பெனிஃபிட்கள் மிகவும் பயனுள்ளவை, குறிப்பாக உங்களை சார்ந்து குடும்ப உறுப்பினர்கள், அதாவது வாழ்க்கை துணை மற்றும் குழந்தைகள் இருக்கும்போது.
இந்த டெத் பெனிஃபிட் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் உங்கள் மறைவுக்குப் பிறகு பயன்படுத்துவதற்கான நிதிப் பொருளாகச் செயல்படலாம். டெர்ம் இன்சூரன்ஸ் பாலிசிகள் இந்த டெத் பெனிஃபிட்டை தவிர எந்த நிதி ஆதாயத்தையும் வழங்காது.
அதனால்தான், இதுபோன்ற திட்டங்களைத் தேர்ந்தெடுக்கும் மக்கள் இந்த நன்மையாக கணிசமான தொகையை பிரீமியம் விகிதங்களில் தேர்வு செய்யலாம்.
ஒரு டெர்ம் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நீங்கள் என்ன பார்க்க வேண்டும்?
ஒரு லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் சரிபார்க்க வேண்டிய மிக முக்கியமான காரணி அதன் கிளைம் செட்டில்மெண்ட் ரேஷியோ ஆகும். இந்த தரவு, அந்நிறுவனம் பெறும் மொத்த கிளைம்களின் எண்ணிக்கைக்கு எதிராக எத்தனை கிளைம்களை தீர்க்கிறது என்பதை வெளிப்படுத்த வேண்டும்.
கிளைம் செட்டில்மெண்ட்களின் அதிக சதவீதங்கள் கிளைம்களைத் தாக்கல் செய்வதற்கான எளிய மற்றும் நெறிப்படுத்தப்பட்ட செயல்முறையைக் குறிக்கின்றன. கூடுதலாக, சந்தையில் ஒரு இன்சூரன்ஸ் நிறுவனமாக ஒரு நிறுவனத்தின் புகழையும் நீங்கள் சரிபார்க்க வேண்டும். கூகுள் மற்றும் பேஸ்புக் ரிவியூஸ் அத்தகைய பதிவுகளை உருவாக்க உதவும்.
இந்தியாவில் எத்தனை டெர்ம் இன்சூரன்ஸ் வழங்குநர்கள் உள்ளனர்?
இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (ஐ.ஆர்.டி.ஏ.ஐ) சமீபத்திய பட்டியலின்படி, இந்தியாவில் தற்போது 24 டெர்ம் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இது போன்ற வேறு நிறுவனங்களும் இருக்கலாம். இருப்பினும், ஐ.ஆர்.டி.ஏ.ஐ அங்கீகரிக்கப்பட்ட வழங்குநர்களுடன் இருப்பது பாதுகாப்பானது, ஏனெனில் அவர்கள் மத்திய அமைப்பு வகுத்துள்ள அனைத்து விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுகிறார்கள்.