இந்தியாவில் சர்வதேச ஓட்டுநர் உரிமம் பெறுவது எப்படி?
வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, சிலர் பேருந்துகள் போன்ற பொதுப் போக்குவரத்தைத் தேர்வு செய்கிறார்கள், மற்றவர்கள் பைக்குகள் மற்றும் கார்களில் வெளிநாட்டு சாலைகளை வலம் வரவிரும்புகிறார்கள்.
இந்திய ஓட்டுநர் உரிமத்துடன் உங்கள் வாகனத்தில் இந்தியாவின் ஒவ்வொரு மூலை முடுக்கிற்கும் செல்லமுடியும், ஆனால், வெளிநாட்டு தெருக்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் சவாரி செய்யும் போது சர்வதேச ஓட்டுநர் அனுமதி அல்லது உரிமம் கட்டாயமாகும்.
சர்வதேச ஓட்டுநர் அனுமதி/உரிமம் என்றால் என்ன?
இந்திய சாலை போக்குவரத்து ஆணையம் சர்வதேச ஓட்டுநர் உரிமம், நான்கு சக்கர வாகனம் அல்லது இரு சக்கர வாகனத்தை வெளிநாட்டில் ஓட்டுவதற்கான சட்டப்பூர்வ ஆவணத்தை வழங்குகிறது.
மேலும், இது ஓட்டுநர் உரிமத்தின் அதிகாரப்பூர்வ மொழிபெயர்ப்பாகும், அந்த ஆவணங்கள் அங்கு வெளிநாடுகளில் புரிந்துகொள்ளக்கூடிய மொழிகளில் மாற்றப்படுகின்றன.
இந்தியாவில் சர்வதேச ஓட்டுநர் உரிமத்திற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?
ஒரு நபர் சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் வலைத்தளத்தில் ஐ.டி.பிக்கு விண்ணப்பிக்கலாம் அல்லது அந்தந்த ஆர்.டி.ஓ.விடம் நேரடியாக அனுமதி பெறலாம்.
படி 1: பின்வரும் படிவங்களை நிரப்பவும்:
படிவம் 4A - ஒரு தனிநபர் ஒரு திறமையான ஓட்டுநர் என்பதற்கான சான்றிதழ்
படிவம் 1A - ஓட்டுநருக்கான மருத்துவ உடற்தகுதி படிவம்
படி 2: ஓட்டுநர் உரிமம், அடையாள சான்று மற்றும் குடியிருப்புச் சான்று பற்றிய விவரங்களை வழங்கவும்.
படி 3: படிவங்களுடன் தேவையான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்கவும்.
படி 4: டிரைவிங் டெஸ்ட் எடுக்கவும்.
படி 5: ஆவணங்களைச் சமர்ப்பிக்கும் போது ₹ 1,000 செலுத்த வேண்டும்.
இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றினால், உங்கள் விண்ணப்பம் வெற்றிகரமானதாக இருக்கும், மேலும் 4 முதல் 5 வணிக நாட்களில் உங்கள் ஐ.டி.எல் ஐப் பெறுவீர்கள்.
ஆன்லைன் விண்ணப்ப நடைமுறையானது சர்வதேச ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிப்பதை எளிதாக்கியுள்ளது. யாராவது ஆஃப்லைனுக்கு செல்ல விரும்பினால், அவர்கள் அந்தந்த ஆர்.டி.ஓ.க்களிடம் சென்று படிவங்களை பூர்த்தி செய்து, கட்டணம் செலுத்தி, தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்கலாம். ஆர்.டி.ஓ உங்கள் உரிமத்தை சர்வதேச உரிமமாக மாற்றும்.
சர்வதேச ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி அளவுகோல்கள்
ஐ.டி.எல்-க்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி அளவுகோல்கள் பின்வருமாறு -
18 வயதுக்கு மேற்பட்ட இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
தனிநபர் செல்லுபடியாகும் இந்திய ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும்.
செல்லுபடியாகும் பாஸ்போர்ட் மற்றும் விசா வைத்திருக்க வேண்டும்.
சர்வதேச ஓட்டுநர் அனுமதிக்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்
இந்தியாவில் சர்வதேச ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் பின்வருமாறு -
படிவங்கள் 4A மற்றும் 1A
செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிம நகல்
பாஸ்போர்ட் மற்றும் விசாவின் நகல்
சரிபார்ப்புக்கான விமான டிக்கெட்டின் நகல்
விண்ணப்பக் கட்டணம் ₹ 1,000
பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் தேவைக்கேற்ப
இந்திய குடியுரிமைக்கான சான்றளிக்கப்பட்ட சான்று
முகவரிச் சான்றின் நகல்
வயதுச் சான்றின் நகல்
இப்போது சர்வதேச ஓட்டுநர் அனுமதிக்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களைப் பற்றி உங்களுக்குத் தெரியும், அதை எவ்வாறு புதுப்பிப்பது என்பதைக் அறிந்துகொள்வோம்.
இந்தியாவில் சர்வதேச ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிப்பது எப்படி?
சர்வதேச ஓட்டுநர் அனுமதியின் செல்லுபடியாகும் காலம் அது வழங்கப்பட்ட நாளிலிருந்து ஒரு வருடம் ஆகும்.
முன்னதாக, சர்வதேச ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க இயலாது, ஆனால், தற்போது மோட்டார் வாகனச் சட்டத் திருத்தம் அதைச் சாத்தியமாக்கியுள்ளது. தனிநபர் அதை எம்.ஓ.ஆர்.டி.எச்-இன் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் புதுப்பிக்க வேண்டும். நடைமுறைகள் பின்வருமாறு -
படி 1: அந்தந்த இந்திய தூதரக தளங்களிலிருந்து மிஸ்சிலேனியஸ் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து அதை நிரப்பவும்.
படி 2: பின்வரும் ஆவணங்களைச் சமர்ப்பிக்கவும்:
விண்ணப்பதாரரின் செல்லுபடியாகும் பாஸ்போர்ட் மற்றும் விசா நிலையின் அசல் மற்றும் நகல்
செல்லுபடியாகும் மற்றும் அசல் ஐ.டி.பி உடன் இந்திய ஓட்டுநர் உரிமம்
பயன்பாட்டு ரசீது, குத்தகை ஒப்பந்தம், மாநில அடையாள அட்டை அல்லது அடமான பத்திரம் உள்ளிட்ட இருப்பிட சான்று
பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் தேவைக்கேற்ப
படி 3: ஆவணங்கள் மற்றும் படிவங்களுடன் ₹ 2,000 சர்வதேச ஓட்டுநர் உரிம புதுப்பித்தல் கட்டணத்தை சமர்ப்பிக்கவும். நீங்கள் பணம் செலுத்தியதற்கான ரசீது மற்றும் தூதரகத்திலிருந்து அடையாள சான்றிதழைப் பெறுவீர்கள்.
படி 4: எம்.ஓ.ஆர்.டி.எச் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து விண்ணப்பித்து அனைத்து தூதரக ஆவணங்களையும் பதிவேற்றவும்.
பின்னர், இந்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் உங்கள் ஐ.டி.பியை மீண்டும் வெளியிட்டு உங்கள் அஞ்சல் முகவரிக்கு அனுப்பும்.
மேலும், வெளிநாடுகளில் ஓட்டுநர் உரிமத்தை மீண்டும் வழங்குவதில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், அது எம்.ஓ.ஆர்.டி.எச் உடன் விசாரிக்கப்பட வேண்டும். இதனால், உங்கள் ஐ.டி.எல் செல்லுபடியாகும் காலத்தை மேலும் ஒரு வருடம் அதிகரிக்கலாம்.
சர்வதேச ஓட்டுநர் அனுமதியின் நன்மைகள் என்ன?
சர்வதேச அனுமதியுடன், அந்தந்த வெளிநாட்டு அதிகாரிகளுடன் எந்த சிக்கலும் இல்லாமல் வெளிநாட்டு சாலைகளில் நீங்கள் வாகனம் ஓட்டலாம். இது தவிர, சர்வதேச ஓட்டுநர் உரிமத்தின் பல்வேறு நன்மைகளும் உள்ளன. அவை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
வெளிநாட்டு சாலைகளில் ஒரு காரை வாடகைக்கு எடுத்து ஓட்டுதல்
இது ஒரு அடையாள ஆதாரமாகவும் செயல்பட முடியும்
வெளிநாட்டில் கூடுதல் ஓட்டுநர் சோதனைகள் தேவையில்லை
சர்வதேச ஓட்டுநர் உரிமத்துடன் நீங்கள் சுமார் 150 நாடுகளுக்குச் செல்லலாம்
உங்களிடம் சர்வதேச ஓட்டுநர் அனுமதி இருந்தால், வெளிநாட்டில் ஏற்படும் விபத்துக்கான இன்சூரன்ஸை பெறலாம்
வெளிநாட்டு அதிகாரிகளுடனான தொடர்பு சாத்தியமாகிறது
கிராமப்புற சாலைகள் மற்றும் காட்சிகளை அனுபவித்து மகிழலாம்
நீங்கள் சர்வதேச ஓட்டுநர் அனுமதிக்கு விண்ணப்பித்து உங்கள் வாகனத்தை வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய நேரம் இது. சர்வதேச ஓட்டுநர் உரிமத்தை வைத்திருப்பது உள்ளூர் அதிகாரிகளுடன் சிக்கலில் சிக்காமல் இருப்பதோடு, வெளிநாட்டு சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளிலும் கார்களை சுதந்திரமாக வாடகைக்கு எடுத்து சவாரி செய்ய அனுமதிக்கும்.
இன்டர்நேஷ்னல் டிராவல் இன்சூரன்ஸை பெறுங்கள்
உங்கள் பாதுகாப்புக்கு ஐ.டி.எல் மட்டும் போதாது. முழுமையான பாதுகாப்புக்கு டிராவல் இன்சூரன்ஸை வாங்கவும்:
வேலை அல்லது விடுமுறை என உங்கள் நோக்கம் எதுவாக இருந்தாலும், ஒரு டிராவல் இன்சூரன்ஸை வாங்கத் தவறாதீர்கள். இது உங்களுக்கு உதவும்:
ரத்து செய்யப்பட்ட பயணம்: உங்கள் பயணத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டியிருந்தால், பீதியடையாதீர்கள். உங்கள் கவலைகளை இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் விட்டுவிடுங்கள். உங்களிடம் டிராவல் இன்சூரன்ஸ் இருந்தால், ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகள் மற்றும் பிற அனைத்தையும் நீங்கள் பெறுவதோடு அவற்றை ரீஇம்பர்ஸ் செய்துகொள்ளலாம். நோய், காயம், பயங்கரவாத சம்பவம் மற்றும் பிற சூழ்நிலைகளில் பயணத்தை ரத்து செய்வதற்கான செலவுகளை இது ஈடுசெய்யும்.
மருத்துவ அவசரநிலை: வெளிநாட்டில் மருத்துவ அவசரநிலை காரணமாக நீங்கள் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். வாகனம் ஓட்டுவதால் இது நடந்தால், நிலைமை இன்னும் மோசமாகிவிடும்! ஆனால், உங்களிடம் டிராவல் இன்சூரன்ஸ் இருந்தால், உங்கள் அச்சங்கள் அனைத்தும் விலகிடும்.
அவசர வெளியேற்றம்: மருத்துவ அவசரநிலைகள் யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். நீங்கள் விடுமுறை அல்லது வேலைக்காக வெளியே செல்லும்போது கூடுதல் கவனிப்பை ஏன் இழக்கிறீர்கள்? டிராவல் இன்சூரன்ஸை வாங்குவது விமானங்கள் அல்லது மருத்துவ வசதி கொண்ட விமானங்கள் போன்ற அவசர வெளியேற்றங்களுக்கு உதவும்.
லக்கேஜ் இழப்பு, லக்கேஜ் தாமதம் மற்றும் விமானங்கள் தாமதம்: வெளிநாடுகளுக்குச் செல்லும்போது இதுபோன்ற விஷயங்களுக்கு ஒருவர் தயாராக இருக்க வேண்டும். மனித தவறு பொதுவானது, ஆனால், அது உங்களை கையில் அதிக பணம் இல்லாதவாறு தவிக்கச் செய்யலாம். ஒரு டிராவல் இன்சூரன்ஸ் திட்டத்தின் மூலம், பேக்குகளின் இழப்பு அல்லது தாமதத்திற்கு இழப்பீடு பெறுவதை நீங்கள் உறுதியாக நம்பலாம்.
தொலைபேசி உதவி: வெளிநாட்டில் பதட்டமாகவோ அல்லது வலியாகவோ இருக்கும்போது, உங்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் நபருடன் நீங்கள் எப்போதும் தொடர்பு கொள்ள விரும்புவீர்கள். டிராவல் கவர் மூலம், நீங்கள் உலகெங்கிலும் உள்ள எவருடனும் எளிதாக கனெக்ட் செய்ய முடியும், அதுவும் நாளின் எந்தப் பகுதியிலும் கனெக்ட் ஆகலாம்.
தனிநபர் பொறுப்பு பத்திரம்: டிராவல் இன்சூரன்ஸின் இந்த நன்மையின் கீழ், நீங்கள் ஒரு காரை ஓட்டும்போது ஏற்படக்கூடிய எந்தவொரு அவசரநிலைக்கும் நீங்கள் இன்சூரன்ஸ் பெறுவீர்கள். உங்கள் வாடகை காருக்கு சேதம் அல்லது உங்களுக்கு ஏற்பட்ட காயங்கள் இதில் அடங்கும். எனவே, உங்களிடம் ஒரு நல்ல இன்டர்நேஷனல் டிராவல் இன்சூரன்ஸ் பாலிசி இருந்தால், உங்கள் வெளிநாட்டு பயணத்தின் போது கூடுதல் கார் இன்சூரன்ஸை வாங்க வேண்டியதில்லை.
இந்தியாவில் சர்வதேச ஓட்டுநர் உரிம அனுமதி பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்வி பதில்கள்
விசா இல்லாமல் இந்தியாவில் சர்வதேச டிரைவிங் லைசென்ஸை பெற முடியுமா?
செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் மற்றும் விசா உள்ள விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே சர்வதேச ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுகிறது. இந்த சரியான ஆவணங்கள் எதுவும் இல்லாத நிலையில், ஒரு நபர் சர்வதேச உரிமத்திற்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்.
சர்வதேச ஓட்டுநர் உரிமம் எவ்வளவு காலம் செல்லுபடியாகும்?
சர்வதேச ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்ட தேதி அல்லது உள்நாட்டு உரிமத்தின் செல்லுபடியாகும் தேதியிலிருந்து ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும்.