கிரெடிட் ரிப்போர்ட் என்றால் என்ன?
கிரெடிட் ரிப்போர்ட் (கிரெடிட் இன்ஃபர்மேஷன் ரிப்போர்ட், கிரெடிட் ஃபைல் அல்லது கிரெடிட் ஹிஸ்டரி என்றும் அழைக்கப்படுகிறது) என்பது கிரெடிட் கார்டுகள் மற்றும் லோன்கள் உள்ளிட்ட ஒரு நபரின் கிரெடிட் அக்கவுண்ட்களின் விரிவான பதிவாகும். இது உங்கள் பேமெண்ட் ஹிஸ்டரி, தற்போதைய மற்றும் கடந்த கால கிரெடிட் மிக்ஸ் மற்றும் உங்கள் கிரெடிட்டை நீங்கள் எவ்வாறு நிர்வகிக்கிறீர்கள் என்பது பற்றிய தகவல்களை கடன் வழங்குநர்களுக்கு வழங்குகிறது.
இந்த ரிப்போர்ட் பின்னர் தனிநபரின் கிரெடிட் ஸ்கோரைக் கணக்கிடப் பயன்படுகிறது. ஒன்றாக, கிரெடிட் ரிப்போர்ட் மற்றும் கிரெடிட் ஸ்கோர் ஆகியவை கடன் வழங்குநர்களால் லோன் மற்றும் கிரெடிட்டிற்கான உங்கள் கோரிக்கைகளை அங்கீகரிப்பார்களா என்பதை தீர்மானிக்க பயன்படுத்தப்படுகின்றன.
இந்தியாவில், இந்த கிரெடிட் ரிப்போர்ட்களை பராமரிக்கும் நான்கு கிரெடிட் இன்ஃபர்மேஷன் பியூரோக்கள் உள்ளன - டிரான்ஸ்யூனியன் சிபில், எக்ஸ்பீரியன், சி.ஆர்.ஐ.எஃப் ஹை மார்க் மற்றும் ஈக்விஃபாக்ஸ். இந்த பியூரோக்கள் உங்கள் வங்கிகள், கடன் வழங்குநர்கள் மற்றும் பிற கடன் வழங்குநர்களிடமிருந்து உங்கள் நிதி வரலாறு பற்றிய தகவல்களைப் பெறுகின்றன.
உங்கள் கிரெடிட் ரிப்போர்ட் ஏன் முக்கியமானது?
கிரெடிட் ரிப்போர்ட் என்பது அடிப்படையில் ஒரு நபர் தங்கள் கிரெடிட் அக்கவுண்ட்களை எவ்வாறு கையாளுகிறார் என்பதற்கான சுருக்கமாக இருப்பதால், இது ஒரு முக்கியமான ஆவணமாகும். கிரெடிட் ரிப்போர்ட்கள் கடன் வழங்குநர்களால் கடனுக்கான உங்கள் விண்ணப்பங்களை அங்கீகரிப்பார்களா என்பதை தீர்மானிக்க உதவுகின்றன - மேலும் உங்களுக்கு சாதகமான விதிமுறைகள் கிடைக்கிறதா இல்லையா என்பதையும் இதன்மூலம் அறிந்துகொள்ளலாம்.
உங்கள் கிரெடிட் ரிப்போர்ட்கள் இன்சூரன்ஸ் நோக்கங்களுக்காக மற்றவர்களாலும் பார்க்கப்படலாம். எனவே, உங்கள் கிரெடிட் ரிப்போர்ட்களை தவறாமல் சரிபார்க்க வேண்டியது அவசியம். இந்த வழியில், அந்த தகவல்கள் துல்லியமாகவும் முழுமையானதாகவும் இருப்பதை நீங்கள் உறுதிப்படுத்த முடியும்.
உங்கள் கிரெடிட் ரிப்போர்ட்டை எவ்வாறு பெறுவது?
நீங்கள் எந்த நேரத்திலும் உங்கள் கிரெடிட் ஸ்கோரை சரிபார்க்க முடியும் என்றாலும், உரிமம் பெற்ற நான்கு கிரெடிட் இன்ஃபர்மேஷன் நிறுவனங்களும் ஒவ்வொரு 12 மாதங்களுக்கும் ஒரு இலவச கிரெடிட் ரிப்போர்ட்டை உங்களுக்கு வழங்க வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. உங்கள் கிரெடிட் ரிப்போர்ட்களை அடிக்கடி சரிபார்க்க விரும்பினால், கூடுதல் கட்டண ரிப்போர்ட்களைத் தேர்வு செய்யலாம்.
உங்கள் கிரெடிட் ரிப்போர்ட்டை எவ்வாறு சரிபார்க்கலாம் என்பது இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:
படி 1: சிபில், எக்ஸ்பீரியன், சி.ஆர்.ஐ.எஃப் ஹைமார்க் அல்லது ஈக்விஃபாக்ஸ் போன்ற நான்கு கிரெடிட் பியூரோவின் வலைத்தளங்களில் ஒன்றிற்குச் செல்லவும்.
படி 2: "இலவச கிரெடிட் ரிப்போர்ட்" விருப்பத்தைக் கிளிக் செய்யுங்கள்.
படி 3: உள்நுழைய உங்கள் பெயர், மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி போன்ற விவரங்களை உள்ளிடவும்.
படி 4: உங்கள் பிறந்த தேதி, குடியிருப்பு முகவரி மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை (பான் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் ஐடி போன்றவை) ஆகியவற்றைப் பயன்படுத்தி உங்கள் அடையாளத்தை சரிபார்க்குமாறு கேட்கப்படுவீர்கள்.
படி 5: இந்தத் தகவல் சரிபார்க்கப்பட்டவுடன், உங்கள் கிரெடிட் ஹிஸ்டரி பற்றி மேலும் சில கேள்விகள் உங்களிடம் கேட்கப்படலாம்.
படி 6: நீங்கள் பெய்டு கிரெடிட் ரிப்போர்ட்டைப் பெறுகிறீர்கள் என்றால், தேவையான கட்டணத்தை நெஃப்ட் மூலம் செலுத்தவும் அல்லது தேவையான தொகைக்கான டிமாண்ட் டிராஃப்ட்டை இணைக்கவும்.
படி 7: படிவத்தை வலைத்தளம் மூலமாகவோ அல்லது கோரியர், அஞ்சல் அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ சமர்ப்பிக்கவும்.
படி 8: அங்கீகரிக்கப்பட்டவுடன், உங்கள் முழுமையான கிரெடிட் ரிப்போர்ட் உங்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரி அல்லது இருப்பிட முகவரிக்கு வழங்கப்படும்.
உங்கள் கிரெடிட் ரிப்போர்ட்டில் என்ன தகவல்கள் சேர்க்கப்பட்டிருக்கும்?
ஒரு நபரின் கிரெடிட் ரிப்போர்ட் பல்வேறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் கிரெடிட் பியூரோக்களுக்கு ரீபேமெண்ட் ரெக்கார்டுகள், கிரெடிட் கார்டு பயன்பாடு, லோன்கள் அல்லது கிரெடிட் கார்டுகளுக்கான முந்தைய விண்ணப்பம் போன்ற கடன் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து பகிர்ந்து கொள்ளப்பட்ட தரவைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. இது பின்னர் ஒரு விரிவான ஆவணமாக தொகுக்கப்படுகிறது.
பொதுவாக, ஒரு கிரெடிட் ரிப்போர்ட்டில் பின்வரும் தகவல்கள் அடங்கும்.
அடையாளம் மற்றும் தொடர்புத் தகவல்
இந்த பிரிவில் பின்வருவனவும் அடங்கும்:
தனிப்பட்ட தகவல்: உங்கள் பெயர், பிறந்த தேதி, பாலினம் மற்றும் கே.ஒய்.சி.
தொடர்புத் தகவல்: உங்கள் முகவரி (மற்றும் கடந்த கால முகவரிகள்) மற்றும் தொடர்பு எண்கள்.
வேலை பற்றிய தகவல்: வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் உங்கள் மாதாந்திர அல்லது வருடாந்திர இன்கம்.
கிரெடிட் ஸ்கோர்
இது உங்கள் கிரெடிட் ஹிஸ்டரியின் அடிப்படையில் கணக்கிடப்படும் 300-900 க்கு இடையிலான மூன்று இலக்க எண் ஆகும்.
கிரெடிட் சம்மரி
கடன் தொகை (அதாவது கிரெடிட் கார்டுகள் மற்றும் வாங்கிய லோன்களின் எண்ணிக்கை மற்றும் அளவுகள்), கிரெடிட் வகைகள் மற்றும் கிரெடிட் எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது போன்ற உங்கள் முக்கியமான கிரெடிட் இன்ஃபர்மேஷன்கள் அடங்கும்.
சமீபத்திய செயல்பாடு
நீங்கள் சமீபத்தில் ஒரு புதிய கணக்கிற்கு விண்ணப்பித்தீர்களா அல்லது புதிய கிரெடிட்டைப் பெற்றீர்களா என்பது போன்ற தகவல்கள் இதில் அடங்கும். கூடுதலாக, இது குளோஸ் செய்த அக்கவுண்ட்கள் மற்றும் பலவற்றின் தகவல்களை கொண்டிருக்கும்.
அக்கவுண்ட் விவரங்கள்
உங்கள் அக்கவுண்ட் நம்பர்கள் மற்றும் வகைகள், கரன்ட் பேலன்ஸ் மற்றும் உங்கள் பேமெண்ட்களின் அக்கவுண்ட் வாரியான மாதாந்திர பதிவு பற்றிய விவரங்கள். இந்த பேமெண்ட்கள் சரியான நேரத்தில் செய்யப்பட்டதா, தாமதமானதா அல்லது தவறவிடப்பட்டதா என்பதும் இதில் இடம்பெறும்.
என்க்கோய்ரிகள்
இந்த பிரிவில் செய்யப்படும் கிரெடிட் என்க்கோய்ரிகளின் எண்ணிக்கை பற்றிய விவரங்கள் உள்ளன. ஒவ்வொரு முறையும் நீங்கள் லோன் அல்லது கிரெடிட் கார்டு போன்ற கடனுக்கு விண்ணப்பிக்கும்போது, உங்கள் கிரெடிட் ரிப்போர்ட்டில் ஒரு "ஹார்டு என்க்கோய்ரி" வைக்கப்படுகிறது. அதிக எண்ணிக்கையிலான என்க்கோய்ரிகள் உங்கள் கிரெடிட்டை திறம்பட நிர்வகிக்க முடியவில்லை என்பதைக் குறிக்கின்றன.
உங்கள் கிரெடிட் ரிப்போர்ட்டில் கடன் வழங்குநர்கள் எதைப் பார்க்கிறார்கள்?
மேலே குறிப்பிட்டுள்ளபடி, கடன் வழங்குநர்கள் லோன்கள் மற்றும் கிரெடிட்டிற்கான உங்கள் கோரிக்கைகளை அங்கீகரிப்பார்களா என்பதை தீர்மானிக்க உங்கள் கிரெடிட் ரிப்போர்ட்டைப் பார்க்கிறார்கள். கடன் வாங்குபவர்களை மதிப்பிடுவதற்கு ஒவ்வொரு கடன் வழங்குநரும் பயன்படுத்தும் உலகளாவிய விதிகள் எதுவும் இல்லை என்றாலும், அவர்கள் கருத்தில் கொள்ளும் சில காரணிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:
கிரெடிட் ஸ்கோர்: எந்தவொரு கடன் வழங்குநருக்கும் இருக்கும் முதல் எண்ணம் உங்கள் கிரெடிட் ஸ்கோர் ஆகும், ஏனெனில் இது நீங்கள் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான நிகழ்தகவைக் காட்டுகிறது. அதனால்தான் நல்ல கிரெடிட் ஸ்கோர் (அதாவது 700-க்கு மேல்) இருப்பது மிகவும் முக்கியம்.
ரீபேமெண்ட் ஹிஸ்டரி: கடன் வழங்குநர்கள் கருத்தில் கொள்ளும் முக்கிய காரணிகளில் ஒன்று சரியான நேரத்தில் பணம் செலுத்துவதற்கான உங்கள் டிராக் ரெக்கார்டு ஆகும். நிலுவையில் உள்ள பேமெண்ட்கள் (கடந்த கால மற்றும் நிகழ்காலம்) மற்றும் லோன்களுக்காக ஒரு முறை தீர்வுகள் ஆகியவற்றையும் அவர்கள் கவனிக்கிறார்கள்.
நீங்கள் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்கள்: உங்களிடம் உள்ள லோன்கள் மற்றும் கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கை மற்றும் வகைகள் இதில் அடங்கும். பொதுவாக, அதிக லோன்களை வைத்திருப்பது புதிய லோனுக்கான உங்கள் ரீபேமெண்ட் திறனைக் குறைக்கும்.
கடன் சார்ந்திருத்தல்: கடன் வழங்குபவர்கள் "கிரெடிட் ஹங்கிரி பிஹேவியர்" அல்லது கடனை அதிக அளவில் சார்ந்திருப்பதையும் கவனிக்கிறார்கள். குறுகிய காலத்தில் பல லோன்கள் அல்லது கிரெடிட் கார்டுகளுக்கு விண்ணப்பிப்பது மற்றும் அதிக கிரெடிட் பயன்பாடு ஆகியவை இதில் அடங்கும்.
தனிப்பட்ட விவரங்கள்: கடன் வழங்குநர்கள் உங்கள் நிதி நிலைமை மற்றும் அதன் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த உங்கள் வேலை மற்றும் குடியிருப்பு வரலாற்றையும் கருத்தில் கொள்ளலாம்.
பொதுவாக, நீங்கள் பொறுப்பான கிரெடிட் யூசேஜின் நீண்ட வரலாற்றைக் காட்டினால், நீங்கள் கடன் வழங்குநர்களால் குறைந்த அபாய ஸ்கோர் கொண்டவராக கருதப்படுவீர்கள், மேலும் கிரெடிட்டிற்கு அப்ரூவல் பெறுவதற்கும் சிறந்த ஒப்பந்தங்களைப் பெறுவதற்கும் அதிக வாய்ப்புள்ளது.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
கிரெடிட் ஸ்கோருக்கும் கிரெடிட் ரிப்போர்ட்டிற்கும் என்ன வித்தியாசம்?
கிரெடிட் ஸ்கோர் என்பது 300-900 க்கு இடையிலான மூன்று இலக்க எண் ஆகும், இது ஒரு நபரின் கிரெடிட் மதிப்பை சித்தரிக்கிறது. இருப்பினும், ஒரு கிரெடிட் ரிப்போர்ட் (கிரெடிட் இன்ஃபர்மேஷன் ரிப்போர்ட் அல்லது சி.ஐ.ஆர் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது அவர்களின் கிரெடிட் ஹிஸ்டரியின் விரிவான பிரேக்டவுன் ஆகும்.
உங்கள் கிரெடிட் ரிப்போர்ட் எப்போதெல்லாம் புதுப்பிக்கப்படுகிறது?
வழக்கமாக, கடன் வழங்குநர்கள், வங்கிகள் மற்றும் பிற கடன் வழங்குநர்கள் உங்கள் தகவல்களை மாதாந்திர அடிப்படையில் கிரெடிட் பியூரோக்களுக்கு அனுப்புவார்கள் (இருப்பினும், அவர்கள் அனுப்பும் மாதத்தின் நாள் மாறுபடலாம்). எனவே, உங்கள் கடன் வழங்குநர்கள் உங்கள் பேமெண்ட் ஹிஸ்டரியை எப்போது அனுப்புகிறார்கள் என்பதைப் பொறுத்து, உங்கள் கிரெடிட் ரிப்போர்ட் பொதுவாக மாதாந்திர அடிப்படையில் புதுப்பிக்கப்படும்.
உங்கள் கிரெடிட் ரிப்போர்ட்டை எப்போதெல்லாம் சரிபார்க்கலாம்?
ஒவ்வொரு கிரெடிட் பியூரோவிலிருந்தும் ஒவ்வொரு 12 மாதங்களுக்கும் தனிநபர்கள் ஒரு இலவச கிரெடிட் ரிப்போர்ட்டை அணுக முடியும் என்பதை ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.
மினிமம் ரெகமண்டட் ஃப்ரீக்வென்சி உங்கள் கிரெடிட் ரிப்போர்ட்டை வருடத்திற்கு ஒரு முறையாவது சரிபார்க்க வேண்டும், இருப்பினும் ஒவ்வொரு காலாண்டிலும் அதை சரிபார்ப்பது நல்லது. இருப்பினும், உங்களிடம் அடிக்கடி கிரெடிட் ஆக்டிவிட்டி இருந்தால், நீங்கள் அதை அடிக்கடி சரிபார்க்கலாம்.
உங்கள் கிரெடிட் ரிப்போர்ட்டை நீங்களே அணுகுவது "சாஃப்ட் என்க்கோய்ரி" என்று அழைக்கப்படுகிறது மற்றும் உங்கள் கிரெடிட் ரிப்போர்ட் அல்லது ஸ்கோரை பாதிக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உங்கள் கிரெடிட் ஸ்கோரை தவறாமல் சரிபார்ப்பது எவ்வளவு முக்கியம்?
நீங்கள் தொடர்ந்து கிரெடிட் அக்கவுண்ட்களைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால் (கிரெடிட் கார்டுகள் அல்லது லோன்கள் போன்றவை), உங்கள் கிரெடிட் ரிப்போர்ட்டையும் உங்கள் கிரெடிட் ஸ்கோரையும் தவறாமல் சரிபார்க்க வேண்டியது அவசியம். உங்கள் கிரெடிட் ஸ்கோர் என்ன என்பதை அறிவது பெரிய பர்ச்சேஸ் முடிவுகளை எடுக்க உதவும், மேலும் உங்கள் கிரெடிட் ஸ்கோர் அதிகமாக இருப்பதை உறுதிப்படுத்தவும் உதவும்.
கூடுதலாக, உங்கள் கிரெடிட் ரிப்போர்ட்டில் ஏதேனும் பிழைகள் அல்லது தகவல்கள் புதுப்பிக்கப்பட வேண்டும் என்றால், அவற்றை விரைவில் அடையாளம் கண்டு அவற்றை சரிசெய்யலாம்.
உங்கள் கிரெடிட் ரிப்போர்ட்டில் என்ன வகையான தவறுகள் இருக்கலாம்?
உங்கள் கிரெடிட் ரிப்போர்ட்டில் வரக்கூடிய சில பொதுவான பிழைகள்:
- பழைய தகவல்: முகவரிகள், தொடர்பு எண்கள் போன்ற காலாவதியான தனிப்பட்ட தகவல்கள்.
- அக்கவுண்ட் பற்றிய தவறான தகவல்: தவறான அக்கவுண்ட் நம்பர், தவறான பேமெண்ட் ஹிஸ்டரி அல்லது பிற விவரங்கள்.
- அக்கவுண்ட் பிழைகள்: உங்கள் பெயரில் உள்ள அக்கவுண்ட்டுகள் தவறி உள்ளது அல்லது வேறொருவரின் தவறான அக்கவுண்ட் சேர்க்கப்பட்டுள்ளது. இது தவறான ரிப்போர்ட்கள் அல்லது தவறான அடையாளத்திற்கு வழிவகுக்கும்.
- கிளேரிக்கல் எரர்ஸ்: உங்கள் பிறந்த தேதி, முகவரி, தொடர்பு எண் போன்றவற்றில் உள்ள தவறுகளும் அடையாள நெருக்கடிக்கு வழிவகுக்கும்.
கொடுக்கப்பட்ட டிஸ்பியூட் ரெசல்யூஷன் படிவத்தைப் பயன்படுத்தி, இந்த தவறுகளை விரைவில் சரிசெய்வது மிகவும் முக்கியம், ஏனெனில் அவை உங்கள் கிரெடிட் ஸ்கோரை பாதிக்கலாம், மேலும் மோசமான சந்தர்ப்பங்களில், தவறான அடையாளம் மற்றும் அடையாள திருட்டுக்கு வழிவகுக்கும், தீர்க்கப்படாமல் இருந்தால் இது ஒரு தீவிரமான சிக்கலாக இருக்கலாம்.
உங்கள் கிரெடிட் ரிப்போர்ட்டில் உள்ள தவறுகளை எவ்வாறு சரிசெய்வது?
உங்கள் கிரெடிட் ரிப்போர்ட்டில் சிக்கல் அல்லது தவறை நீங்கள் கண்டால், சிக்கலைத் தீர்க்க, பின்வரும் இந்தப் படிகளைப் பின்பற்றவும்:
படி 1: உங்கள் கிரெடிட் ரிப்போர்ட்டை தவறாமல் கண்காணித்து பிழைகளை அடையாளம் காணவும்.
படி 2: கண்டறியப்பட்டதும், தவறை சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகாரளிக்கவும். எடுத்துக்காட்டாக, ஒரு நிதி நிறுவனத்தில் பிழை இருந்தால், கிரெடிட் பியூரோ மாற்றங்களைச் செய்வதற்கு முன்பு அவர்கள் அதை சரிசெய்ய வேண்டும்.
படி 3: புகாரளிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் தொடர்புடைய நபர் மாற்றங்களைச் செய்யவில்லை எனில், நீங்கள் ஒரு குறைதீர்ப்பாளரை (அல்லது அரசாங்க அதிகாரி) அணுகி பிழைகளைத் திருத்திக்கொள்ளலாம்.
படி 4: மாற்றங்கள் செயல்படுத்தப்பட்டவுடன் (அல்லது பிழைகளை சரிசெய்ய முடியாவிட்டால்), கிரெடிட் பியூரோ அதைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்கும்.
பிழையைப் புகாரளிப்பதற்கான டிஸ்பியூட் படிவங்களை நீங்கள் பின்வருவனவற்றின் சைட்களில் காணலாம்: சிபில், எக்ஸ்பீரியன், சி.ஆர்.ஐ.எஃப் ஹைமார்க் அல்லது ஈக்விஃபாக்ஸ்.