கிரெடிட் ரேட்டிங் என்றால் என்ன?
கிரெடிட் ரேட்டிங் என்பது தனிநபர்கள், குழுக்கள், வணிகங்கள், இலாப நோக்கமற்ற நிறுவனங்கள், அரசாங்கங்கள் மற்றும் நாடுகள் போன்ற என்டிடிகளின் கிரெடிட் மதிப்பை மதிப்பிடுவதற்கான ஒரு வழியாகும். ஸ்பெஷல் கிரெடிட் ரேட்டிங் ஏஜென்சிகள் தங்கள் நிதி அபாயத்தை பகுப்பாய்வு செய்து, தங்களிடம் கடன் வாங்கியவர்கள் சரியான நேரத்தில் லோன்களை திருப்பிச் செலுத்த முடியுமா இல்லையா என்பதைப் பார்க்கின்றன.
கிரெடிட் ரேட்டிங் ஏஜென்சிகள் கடன் கொடுத்தல் மற்றும் கடன் வரலாறு, கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன், கடந்தகால கடன்கள், எதிர்காலப் பொருளாதார திறன் மற்றும் பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொண்டு ஒரு விரிவான ரிப்போர்ட்டைப் பயன்படுத்தி இந்த மதிப்பீட்டை தொகுக்கின்றன.
ஒரு நல்ல கிரெடிட் ரேட்டிங் நம்பகத்தன்மையை மேம்படுத்துகிறது, அத்துடன் கடந்த காலத்தில் சரியான நேரத்தில் லோன்களை திருப்பிச் செலுத்திய ஒரு நல்ல வரலாற்றைக் குறிக்கிறது. இது வங்கிகள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு லோன் விண்ணப்பங்கள் மற்றும் வழங்கப்படும் வட்டி விகிதத்தை அங்கீகரிப்பது குறித்துத் தீர்மானிக்க உதவுகிறது.
கிரெடிட் ரேட்டிங்கின் வகைகள்
பல்வேறு கிரெடிட் ஏஜென்சி நிறுவனங்கள் கிரெடிட் ரேட்டிங்குகளைத் தீர்மானிக்க ஒத்த அகரவரிசை குறியீடுகளைப் பயன்படுத்துகின்றன. இருப்பினும், இந்த ரேட்டிங்குகள் இரண்டு வகையானத் தரங்களாக வகைப்படுத்தப்படுகின்றன - 'முதலீட்டு தரம்' மற்றும் / அல்லது 'ஊகத் தரம்'.
முதலீட்டு தரம்: இந்த ரேட்டிங்குகள் செய்யப்பட்ட முதலீடு திடமானது என்ற உண்மையைக் குறிக்கின்றன, மேலும் கடன் வாங்குபவர் பெரும்பாலும் ரீபேமெண்ட் விதிமுறைகளை பூர்த்தி செய்வார். இதனால், அவை பெரும்பாலும் குறைந்த விலையில் விற்கப்படுகின்றன.
ஊகத் தரம்: இந்த ரேட்டிங்குகள் முதலீடுகள் அதிக ஆபத்தில் இருப்பதைக் காட்டுகின்றன, மேலும் அவை பெரும்பாலும் அதிக வட்டி விகிதங்களைக் கொண்டுள்ளன.
கிரெடிட் ரேட்டிங் மற்றும் கிரெடிட் ஸ்கோர் இடையே வேறுபாடு உள்ளதா?
சில நேரங்களில், கிரெடிட் ஸ்கோர் மற்றும் கிரெடிட் ரேட்டிங் என்ற சொற்கள் ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்தப்படுகின்றன, ஆனால் அவை ஒரே மாதிரியானவை அல்ல.
மேலே குறிப்பிட்டுள்ளபடி, கிரெடிட் ரேட்டிங் என்பது தனிநபர்களை விட ஒரு வணிகம் அல்லது நிறுவனத்தின் கிரெடிட் மதிப்பைத் தீர்மானிக்க பயன்படுகிறது. இதன் பொருள் அவர்கள் பணம் செலுத்தத் தவறியதற்கான சாத்தியக்கூறுகளைக் குறிக்கிறது. ரேட்டிங் பொதுவாக அகரவரிசை குறியீடுகளின் தொடராகக் காட்டப்படுகிறது, மேலும் இது பெருநிறுவன நிதி கருவிகளைப் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறது.
இருப்பினும், கிரெடிட் ஸ்கோர் என்பது ஒரு எண், பொதுவாக 300 முதல் 900 வரை, இது தனிநபர்களுக்கு அவர்களின் கிரெடிட் மதிப்பை மதிப்பிட வழங்கப்படுகிறது. இது நபரின் கிரெடிட் இன்ஃபர்மேஷன் ரிப்போர்ட்டின் அடிப்படையில் கிரெடிட் பியூரோக்களால் கணக்கிடப்படுகிறது, மேலும் அவை லோன்கள் மற்றும் கிரெடிட் கார்டுகள் அங்கீகரிக்கப்பட்டதா இல்லையா என்பதைத் தீர்மானிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.
கிரெடிட் ரேட்டிங்கின் முக்கியத்துவம் என்ன?
கிரெடிட் ரேட்டிங் என்பது கடன் வாங்குபவரின் கிரெடிட் மதிப்பின் மதிப்பீடாக இருப்பதால், அதிக கிரெடிட் ரேட்டிங் நிறுவனம் அல்லது வணிகம் கடன் வாங்கிய கிரெடிட்டைத் திருப்பிச் செலுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதைக் குறிக்கிறது. மறுபுறம், குறைந்த கிரெடிட் ரேட்டிங் என்பது அவர்கள் கடனாளியாக மாறுவதற்கான அதிக சாத்தியக்கூறுகளைக் கொண்டிருக்கலாம் என்பதைக் குறிக்கிறது. இது அவர்களுக்கு கடன் வாங்குவதை கடினமாக்கும், ஏனெனில், கடன் வழங்குநர்கள் அவர்களை அதிக ஆபத்துள்ள ஸ்கோரை கொண்டுள்ளதாக கருதுவார்கள்.
இருப்பினும், கிரெடிட் ரேட்டிங் முக்கியமானதாக இருப்பதற்கான வேறு காரணங்கள் உள்ளன:
கடன் வழங்குபவர்களுக்கு
கடன் வழங்குபவர்களும் முதலீட்டாளர்களும் கடன் வாங்கும் நிறுவனத்தின் அபாயத்தை கணக்கில் எடுத்துக்கொள்வதன் மூலம் சிறந்த மற்றும் வலுவான முதலீட்டு முடிவுகளை எடுக்க முடியும்.
கடன் வழங்குநர்கள் சாத்தியமான கடன் வாங்குபவர்களின் கிரெடிட் ரேட்டிங்கை அறிந்தால், சரியான அளவு வட்டியுடன், அவர்களின் பணம் சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தப்படும் என்று அவர்களுக்கு உறுதியளிக்க முடியும்.
கடன் வாங்குபவர்களுக்கு
நிறுவனங்கள் அதிக கிரெடிட் ரேட்டிங்கை கொண்டிருக்கும்போது, அவை குறைந்த அபாயமாகக் கருதப்படும், எனவே லோன் விண்ணப்பங்களுக்கு மிகவும் எளிதாக அப்ரூவல் கிடைக்கும்.
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் போன்ற கடன் வழங்குநர்கள் அதிக கிரெடிட் மதிப்பீட்டைக் கொண்ட நிறுவனங்களுக்குக் குறைந்த வட்டி விகிதங்களில் லோன்களை வழங்குவார்கள்.
எனவே, அதிக கிரெடிட் ரேட்டிங் வைத்திருப்பது ஒரு நிறுவனம் பணத்தைத் திரட்டவும் விரிவுபடுத்தவும் உதவும், அதே நேரத்தில் கடன் வாங்குவதற்கான செலவையும் குறைக்கும். மேலும், கடன் வழங்குபவர்களுக்கு, இந்த ரேட்டிங்குகள் மேலும் விரிவான நிதித் தகவல்களைப் பெறவும், சிறந்த கணக்கியல் தரங்களை ஊக்குவிக்கவும் உதவும்.
இந்தியாவில் உள்ள கிரெடிட் ரேட்டிங் ஏஜென்சிகள் யாவை?
கிரெடிட் ரேட்டிங்குகள் கிரெடிட் ஏஜென்சிகளால் மதிப்பிடப்படுகின்றன. இந்தியாவில், கிரெடிட் மதிப்பீடு நிறுவனங்கள் எஸ்.இ.பி.ஐ (செபி) (கிரெடிட் ரேட்டிங் ஏஜென்சிகள்) ஒழுங்குமுறைகள், 1999ஆல் ஒழுங்குமுறைப்படுத்தப்படுகின்றன, இது இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் சட்டம், 1992இன் ஒரு பகுதியாகும்.
இந்தியாவில் உள்ள சில சிறந்த கிரெடிட் ரேட்டிங் ஏஜென்சிகள் பின்வருமாறு:
கிரெடிட் ரேட்டிங் இன்ஃபர்மேஷன் சர்வீசஸ் ஆஃப் இந்தியா லிமிடெட் (CRISIL - சி.ஆர்.ஐ.எஸ்.ஐ.எல்)
இது 1987 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்தியாவின் முதல் கிரெடிட் ரேட்டிங் ஏஜென்சிகளில் ஒன்றாகும். இது நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் அமைப்புகளை அவற்றின் பலம், சந்தைப் பங்கு, சந்தை நற்பெயர் வாரியம் போன்றவற்றைப் பயன்படுத்தி மதிப்பிடுகிறது. இந்த நிறுவனம் அமெரிக்கா, இங்கிலாந்து, ஹாங்காங், போலந்து, அர்ஜென்டினா மற்றும் சீனாவில் செயல்படுகிறது மற்றும் ஏஏஏ - டி வரை 8 வகையான கிரெடிட் ரேட்டிங்குகளை வழங்குகிறது.
இந்திய முதலீட்டு தகவல் மற்றும் கடன் மதிப்பீட்டு நிறுவனம் (ICRA - ஐ.சி.ஆர்.ஏ) லிமிடெட்
1991 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இக்ரா, பேங்க் லோன்கள், கார்ப்பரேட் கடன், மியூச்சுவல் ஃபண்ட்கள் மற்றும் பல்வேறு சூழ்நிலைகளில் கார்ப்பரேட்டுகளுக்கு விரிவான ரேட்டிங்குகளை வழங்குகிறது.
கிரெடிட் அனாலிசிஸ் அண்ட் ரிசர்ச் லிமிடெட் (CARE - சி.ஏ.ஆர்.இ)
ஏப்ரல் 1993 முதல், சி.ஏ.ஆர்.இ பலவிதமான கிரெடிட் ரேட்டிங் சேவைகளை வழங்கி வருகிறது. கடன் , பேங்க் லோன், கார்ப்பரேட் கவர்னன்ஸ், ரிக்வரி, ஃபைனான்சியல் செக்டர் மற்றும் பல துறைகள் இதில் அடங்கும். அவற்றின் ரேட்டிங் அளவுகோலில் இரண்டு வகைகளும் அடங்கும் - நீண்ட கால கடன் பத்திரங்கள் மற்றும் குறுகிய கால கிரெடிட் ரேட்டிங்குகள்.
இந்தியா ரேட்டிங் அண்ட் ரிசர்ச் பிரைவேட் லிமிடெட்
முன்பு ஃபிட்ச் ரேட்டிங்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்று அழைக்கப்பட்டது. இந்த நிறுவனம் கார்ப்பரேட் வழங்குநர்கள், நிதி நிறுவனங்கள், திட்ட நிதி நிறுவனங்கள், நிர்வகிக்கப்பட்ட நிதிகள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் போன்றவற்றின் நம்பகத்தன்மையை மதிப்பிடுவதற்கு கிரெடிட் ரேட்டிங்குகளை வழங்குகிறது.
அக்யூட் ரேட்டிங்ஸ் & ரிசர்ச்
முன்பு ஸ்மால் மீடியம் என்டர்பிரைஸ் ரேட்டிங் ஏஜென்சி ஆஃப் இந்தியா லிமிடெட் அல்லது (எஸ்.எம்.ஈ.ஆர்.ஏ ரேட்டிங்ஸ் லிமிடெட்) என்று அறியப்படும் இந்த கிரெடிட் ரேட்டிங் ஏஜென்சி 2011 இல் நிறுவப்பட்டது. இது இரண்டுப் பிரிவுகளைக் கொண்டுள்ளது - எஸ்.எம்.இ ரேட்டிங்குகள் மற்றும் பத்திர மதிப்பீடுகள், மேலும் ஏஏஏ - டி வரையிலான கிரெடிட் ரேட்டிங்கின் 8 வடிவங்களையும் வழங்குகிறது.
பிரிக்வொர்க் ரேட்டிங்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்
இந்த கிரெடிட் ரேட்டிங் ஏஜென்சி பேங்க் லோன்கள், முனிசிபல் கார்ப்பரேஷன்கள், ரியல் எஸ்டேட் முதலீடுகள், என்.ஜி.ஓ-க்கள், மூலதனச் சந்தை கருவிகள், எஸ்.எம்.இ-கள் போன்றவற்றை மதிப்பிடுகிறது.
ஒரு நிறுவனத்தின் கடன் மதிப்பீட்டைச் சரிபார்க்க, மேலே உள்ள கிரெடிட் ரேட்டிங் ஏஜென்சிகளில் ஒன்றைத் தொடர்பு கொள்ள வேண்டும்.
வெவ்வேறு கிரெடிட் ரேட்டிங் ஸ்கேல்கள் என்பது என்ன?
பல்வேறு கிரெடிட் ரேட்டிங் ஏஜென்சிகள், ஒரு நிறுவனத்தின் கடன் தகுதி மற்றும் நீண்ட கால மற்றும் இடைக்காலக் கடன் கருவிகள் பெறுவதற்கு முதலீட்டாளர்களுக்கு ஏற்படுத்தும் அபாயத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த ஒரே மாதிரியான மதிப்பீட்டை (ஏஏஏ - டி இலிருந்து) வழங்குகின்றன.
ரேட்டிங் ஸ்கேல் | குறியீடு |
---|---|
மிகக் மிகக் குறைந்த கிரெடிட் ரிஸ்க் / மிகச் சிறந்த கிரெடிட் ரேட்டிங் | AAA |
மிகக் குறைந்த கிரெடிட் ரிஸ்க் / சிறந்த கிரெடிட் ரேட்டிங் | AA |
குறைந்த கிரெடிட் ரிஸ்க் / நல்ல கிரெடிட் ரேட்டிங் | A |
மிதமான கிரெடிட் ரிஸ்க் / சராசரி கிரெடிட் ரேட்டிங் | BBB |
அதிக கிரெடிட் ரிஸ்க் / குறைந்த கிரெடிட் ரேட்டிங் | B |
மிக அதிக கிரெடிட் ரிஸ்க் / மோசமான கிரெடிட் ரேட்டிங் | C |
பணம் செலுத்தத் தவறியது | D |
கிரெடிட் ரேட்டிங்கை பாதிக்கும் காரணிகள் யாவை?
ஒரு நிறுவனத்தின் கிரெடிட் ரேட்டிங்குகளை பாதிக்கும் பல காரணிகள் உள்ளன:
நிறுவனத்தின் நிதி வரலாறு:
கடன் மற்றும் கடன் வாங்கிய வரலாறு
கடந்த கால கடன்
பேமெண்ட் ஹிஸ்டரி
நிதி அறிக்கைகள்
தற்போதைய கடனின் அளவு மற்றும் வகை
நிறுவனத்தின் எதிர்கால பொருளாதார திறன்:
கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன்
திட்டமிடப்பட்ட இலாபங்கள்
தற்போதைய செயல்திறன்