கிரெடிட் ஸ்கோரின் பல்வேறு வரம்புகள் என்ன?
கிரெடிட் ஸ்கோர் என்பது ஒரு நபரின் "கடன் தகுதியை" கண்டறிய வங்கிகள் மற்றும் பிற கடன் வழங்கும் நிறுவனங்களால் பயன்படுத்தப்படும் ஸ்கோராகும். இந்த எண் கிரெடிட் இன்பர்மேஷன் பியூரோக்களால் கணக்கிடப்படுகிறது மற்றும் பொதுவாக இந்த ஸ்கோர் 300-900க்கு இடையில் இருக்கும். கடனைத் திருப்பிச் செலுத்தும் தனிநபரின் திறனை இது குறிக்கிறது.
இந்தியாவில், நான்கு உரிமம் பெற்ற கிரெடிட் பியூரோக்கள் கிரெடிட் ஸ்கோர்களைத் தயாரிக்கின்றன - ட்ரான்ஸ்யூனியன் சிபில், எக்ஸ்பீரியன், கிரிஃப் ஹைமார்க் மற்றும் ஈக்விஃபாக்ஸ்.
கிரெடிட் ஸ்கோர் வரம்புகள் என்ன?
வெவ்வேறு கிரெடிட் பியூரோக்கள் வெவ்வேறு ஸ்கோர் மாதிரிகளைப் பயன்படுத்தலாம். ஆனால், பொதுவாக, 700-750க்கு மேல் உள்ள கிரெடிட் ஸ்கோர் பொதுவாக நல்லதாகக் கருதப்படுகிறது, அதே சமயம் 650க்குக் குறைவாக உள்ள ஸ்கோர் சுமாரானதகவோ அல்லது மோசமானதாகவோ கருதப்படுகிறது.
பொதுவான கிரெடிட் ஸ்கோர் வரம்புகள் பின்வருமாறு:
கிரெடிட் ஸ்கோர் | வரம்பு | பொருள் |
NA/NH | "பொருந்தாது" அல்லது "வரலாறு இல்லை" | நீங்கள் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தவில்லை மற்றும்/அல்லது கடன் வாங்கவில்லை. எனவே, உங்களிடம் கடன் வரலாறு இல்லை. |
300-549 | மோசமானது | கிரெடிட் கார்டு பில்கள் அல்லது இ.எம்.ஐ-களில் நீங்கள் பலமுறை பணம் செலுத்த தவறியிருக்கலாம், அல்லது மோசமான கிரெடிட் பயன்பாடு அல்லது அதிக எண்ணிக்கையிலான கிரெடிட் விசாரணைகள் இருக்கலாம், நீங்கள் உங்கள் கடனைத் தாமதமாகத் திருப்பிச் செலுத்தினால் கடன் வழங்குபவர்களால் நீங்கள் அதிக ஆபத்து உருவாக்குபவராகக் கருதப்படுவீர்கள், எனவே கடன் வழங்குநர்கள் உங்கள் கடன்களை அல்லது கிரெடிட் விண்ணப்பங்கள் அங்கீகரிக்கமாட்டார்கள். |
550-649 | சுமாரானது | நீங்கள் கிரெடிட் கார்டு பில்கள்/இ.எம்.ஐ-களை ஒழுங்கற்ற அல்லது தாமதமாக செலுத்தியிருக்கலாம், அல்லது பல கிரெடிட் விசாரணைகள் போன்றவை உங்களை கடன் வழங்குநர்களுக்கு ஆபத்தாக காட்டலாம். பல கடன் வழங்குநர்கள் உங்கள் கடனை அங்கீகரிக்காமல் இருக்கலாம்; அங்கீகரிப்பவர்கள் அதிக வட்டி விகிதங்கள் இடலாம் மற்றும் அதிக முன்பணம் செலுத்த கேட்கலாம். |
650-749 | நல்லது | நீங்கள் கடந்த காலத்தில் நல்ல ரீபேமெண்ட் நடத்தையின் வரலாற்றைக் கொண்டிருக்கிறீர்கள் எனில், நீங்கள் கடனைத் திருப்பித் தர இயலாதவராகக் கருதப்படும் அபாயம் குறைவு. பெரும்பாலான கடன் வழங்குநர்கள் உங்கள் கடனை அங்கீகரிக்கலாம், ஆனாலும் நீங்கள் சிறந்த விகிதங்களைப் பெற முடியாமல் போகலாம். |
750-799 | மிகவும் நல்லது | உங்களிடம் வழக்கமான கடன் கொடுப்பனவுகள், நீண்ட கடன் வரலாறு, பொறுப்பான ரீபேமெண்ட் நடத்தை இருந்தால், நீங்கள் கடன் வழங்குநர்களால் குறைந்த ஆபத்தாகக் கருதப்படுவீர்கள், கடன் வழங்குநர்கள் கடனை அங்கீகரிப்பதோடு கடன்களில் நல்ல சலுகையும் கொடுப்பார்கள். |
800-900 | சிறப்பானது | நீங்கள் சிறந்த நிதி மேலாண்மை, வழக்கமான கடன் கொடுப்பனவுகள், குறைந்த கடன் பயன்பாடு மற்றும் முன்மாதிரியான கடன் வரலாற்றைக் கொண்டுள்ளீர்கள், நீங்கள் கடன் வழங்குநர்களால் மிகக் குறைந்த ஆபத்தாகக் கருதப்படுவீர்கள், வங்கிகள் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்கள் உங்களுக்கு கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டுகளில் சிறந்த விகிதங்கள் மற்றும் சாதகமான விதிமுறைகளை வழங்கும். |
நல்ல கிரெடிட் ஸ்கோராக எது கருதப்படுகிறது?
பொதுவாக, 700-750க்கு மேல் உள்ள கிரெடிட் ஸ்கோர் நல்லதாகக் கருதப்படுகிறது. அதிகபட்ச ஸ்கோர் 900 என்பதால், சிறந்த கிரெடிட் ஸ்கோர் வரம்பு 750-900 ஆகும்.
ஒவ்வொரு கடன் வழங்கும் நிறுவனமும் ரிஸ்க் கிரேடிங் (அபாய அளவீடு) அளவை செய்வதற்கு அதன் சொந்த முறையைக் கொண்டுள்ளது என்பதை நினைவில் கொள்வது நல்லது. எடுத்துக்காட்டாக, ஒரு வங்கி 700க்கு மேல் ஸ்கோர் இருந்தால் நல்லதாகக் கருதலாம், மற்றொரு வங்கி 750க்கு மேல் ஸ்கோரை விரும்பலாம். எனவே, பொதுவாக, 750-800க்கு மேல் உள்ள ஸ்கோர் பெரும்பாலான சூழ்நிலைகளில் நல்லதாகக் கருதப்படுகிறது.
மோசமான கிரெடிட் ஸ்கோர் என்றால் என்ன?
650க்குக் குறைவான கிரெடிட் ஸ்கோர் சுமாரானதாகவோ அல்லது மோசமானதாகவோ கருதப்படுகிறது. இந்த குறைந்த வரம்பிற்குள் வருபவர்களுக்கு "சப் பிரைம்" கிரெடிட் ஸ்கோர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது, மேலும் இவர்களை கடன் வழங்குநர்கள் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் சிரமப்படக்கூடிய நபர்களாக வகைப்படுத்துவார்கள்.
மோசமான ஸ்கோர்கள் கடனைப் பெறுவதில் ஒருவருக்கு சிரமத்தை ஏற்படுத்தலாம், உங்கள் கிரெடிட் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும், மேலும் நீங்கள் கடனுக்கு ஒப்புதல் பெற்றாலும் அதிக வட்டி விகிதங்களை எதிர்கொள்ள நேரிடும்.
நல்ல செய்தி என்னவென்றால், மோசமான கிரெடிட் ஸ்கோர் என்று ஒன்று நிர்ணயிக்கப்படவில்லை. உங்கள் ஸ்கோரைக் குறைவாக வைத்திருப்பது எது என்பதை நீங்கள் அறிந்தவுடன், காலப்போக்கில் உங்கள் கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்த பல விஷயங்களைச் செய்யலாம். உங்கள் கிரெடிட் அறிக்கையை தவறாமல் மதிப்பாய்வு செய்தல், சரியான நேரத்தில் உங்கள் பில்களை செலுத்துதல், உங்கள் கிரெடிட் பயன்பாட்டை சரியாக பயன்படுத்துதல் மற்றும் புதிய கடன் கோரிக்கைகளை கட்டுப்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும்.
நல்ல கிரெடிட் ஸ்கோரை வைத்திருப்பது ஏன் முக்கியம்?
வங்கிகள் மற்றும் பிற கடன் வழங்கும் நிறுவனங்கள் உங்கள் கடன் மற்றும் பிற கடன்களுக்கான கோரிக்கைகளை ஏற்கலாமா வேண்டாமா என்பதை தீர்மானிக்க உங்கள் கிரெடிட் ஸ்கோரைப் பயன்படுத்துகின்றன. எனவே, உங்களிடம் அதிக கிரெடிட் ஸ்கோர் இருந்தால், அது நீங்கள் கடந்த காலத்தில் பொறுப்பான கிரெடிட் நடத்தையை வெளிப்படுத்தியிருப்பதைக் காட்டுகிறது, மேலும் இது கிரெடிட் கோரிக்கைகளை அங்கீகரிப்பதில் சாத்தியமான கடன் வழங்குநர்களுக்கு அதிக நம்பிக்கையை அளிக்கலாம்.
குறைந்த வட்டி விகிதங்கள், சிறந்த ரீபேமெண்ட் விதிமுறைகள் மற்றும் விரைவான கடன் ஒப்புதல் செயல்முறை போன்ற பிற நன்மைகளையும் நீங்கள் பெறலாம்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
உங்களிடம் கிரெடிட் ஸ்கோர் இல்லையா?
நீங்கள் கிரெடிட் கார்டை பயன்படுத்தாமல் இருந்தாலோ அல்லது கடன் வாங்காமலோ இருந்தால், உங்களிடம் கடன் வரலாறு இருக்காது. ஏனென்றால், பெரும்பாலான கிரெடிட் ஸ்கோரிங் மாடல்கள் கிரெடிட் கார்டுகள் மற்றும் லோன்களின் மூலம் உங்கள் ஸ்கோரைத் தீர்மானிக்கின்றன. எனவே, இந்த தகவல் இல்லை என்றால், அவர்களால் கிரெடிட் ஸ்கோரை உருவாக்க முடியாது.
கிரெடிட் ஸ்கோர் ஏன் 0 இலிருந்து தொடங்குவதில்லை?
கிரெடிட் ஸ்கோரிங் முறை அமெரிக்காவில் முதன்முதலில் உருவாக்கப்பட்டபோது, அவர்கள் 100-300 வரம்பை மற்ற ஸ்கோரிங் மாடல்களுக்குப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில், 300ஐ குறைந்த ஸ்கோராக அமைத்தனர், அது பயனர்களும் குழப்பமடையாமல் எந்த ஸ்கோர் எதற்கானது என தெரிந்துகொள்ள உதவியது. கூடுதலாக, அவர்கள் சிறப்பு குறியீடுகளுக்கு 0–99 வரம்பை பயன்படுத்தினர், எனவே அவற்றைப் பயன்படுத்த முடியவில்லை.
இருப்பினும், சிலருக்கு 0, Nil அல்லது NA கிரெடிட் ஸ்கோராக இருக்கும். கடன் வாங்குபவரின் கிரெடிட் வரலாறு குறித்த எந்த தகவலும் இல்லை என்பதே இதன் பொருள்.
கிரெடிட் ஸ்கோர் 300 உடன் தொடங்குமா?
நீங்கள் உங்கள் கிரெடிட் பயணத்தை இப்போது தான் தொடங்கினால், அல்லது உங்கள் முதல் கிரெடிட் கார்டைப் பெற்றிருந்தாலும், அதிக கடன் மற்றும் மோசமான கடன் பழக்கவழக்கங்களுடன் நீங்கள் தொடங்கும் வரை, உங்கள் கிரெடிட் ஸ்கோர் 300க்கு குறைவாக இருக்க வாய்ப்பில்லை. இருப்பினும், உங்கள் கிரெடிட் வரலாற்றை நீங்கள் இன்னும் உருவாக்கவில்லை எனில், அது சற்று குறைவாகவே இருக்கும்.
உங்கள் கிரெடிட் ஸ்கோரை என்ன காரணிகள் அதிகம் பாதிக்கின்றன?
கிரெடிட் ஸ்கோர்கள் பல காரணிகளைப் பயன்படுத்தும் அல்காரிதம் மூலம் கணக்கிடப்படுகிறது. அவை ஒவ்வொன்றும் உங்கள் கிரெடிட் ஸ்கோரில் பின்வருமாறு வெவ்வேறு மதீப்பீட்டினைக் கொண்டுள்ளன:
- கட்டண வரலாறு (35%) - உங்கள் கிரெடிட் பில்களை சரியான நேரத்தில் செலுத்துவது உங்கள் ஸ்கோரை மேம்படுத்துகிறது, அதே நேரத்தில் தாமதம், செலுத்த மறத்தல் அல்லது தவறிய செலுத்துதல்கள் ஸ்கோரைக் குறைக்கும்.
- கடன் பயன்பாடு (30%) - உங்கள் கடன் வரம்பில் நீங்கள் எவ்வளவு பயன்படுத்துகிறீர்கள்; 30% விட அதிகமாக இருந்தால் அது உங்கள் ஸ்கோரைக் குறைக்கலாம்.
- கடன் வரலாற்றின் அளவு (15%) - பழைய கணக்குகள் மற்றும் கிரெடிட் கார்டுகள் தொடர்ந்து பொறுப்பான கிரெடிட் நடத்தையைக் காட்டுகின்றன.
- புதிய கிரெடிட் விசாரணைகள் (10%) - கிரெடிட்டுக்கான பல கோரிக்கைகள், குறிப்பாக குறுகிய காலத்தில், உங்கள் ஸ்கோரைக் குறைக்கலாம்.
- கிரெடிட் கலவை (10%) - பாதுகாப்பற்ற கடன்கள் மற்றும் பாதுகாப்பான கடன்கள் இரண்டின் கலவையைப் பெற்றுக்கொள்ளப் பரிந்துரைக்கப்படுகிறது.
உலகம் முழுவதும் கிரெடிட் ஸ்கோர்கள் ஒரே மாதிரியாக உள்ளதா?
உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் இதே போன்ற கிரெடிட் ஸ்கோர் முறைகளைப் பயன்படுத்தலாம். இருப்பினும், சில கிரெடிட் பியூரோக்கள் (ஈக்விஃபாக்ஸ் அல்லது எக்ஸ்பீரியன் போன்றவை) பல நாடுகளில் செயல்படும் போது, சர்வதேச சட்டங்கள் வெளிநாட்டு கடன் வழங்குநர்களுடன் கடன் வரலாறுகளைப் பகிர்வதைத் தடுக்கின்றன. அடையாளத் திருட்டு மற்றும் மோசடியைத் தடுக்க இது செய்யப்படுகிறது.
ஆனால், நீங்கள் வெளிநாடு சென்று உள்ளூர் வங்கியில் கிரெடிட் கார்டை வாங்கத் திட்டமிட்டால் அல்லது கடனுக்காக விண்ணப்பித்தால், வெளிநாட்டு வங்கிகளும் கடன் வழங்கும் நிறுவனங்களும் உங்கள் கிரெடிட் வரலாறு மற்றும் உங்கள் சொந்த நாட்டில் நிலுவையில் உள்ள கடன்கள் பற்றி விசாரிக்கலாம்.
உங்கள் கிரெடிட் ஸ்கோர் வெவ்வேறு கிரெடிட் பியூரோக்களில் ஏன் வேறுபடுகிறது?
நான்கு ஆர்.பி.ஐ உரிமம் பெற்ற கிரெடிட் பியூரோக்கள் (ட்ரான்ஸ்யூனியன் சிபில், எக்ஸ்பீரியன், கிரிஃப் ஹைமார்க் மற்றும் ஈக்விஃபாக்ஸ்) கிரெடிட் ஸ்கோரைக் கணக்கிடும் போது சற்று வித்தியாசமான ஸ்கோரிங் மாடல்களைப் பயன்படுத்துகின்றன. எனவே, எந்த கிரெடிட் பியூரோ உங்கள் கிரெடிட் அறிக்கையை வழங்குகிறது என்பதன் அடிப்படையில் உங்கள் ஸ்கோர்கள் மாறுபடலாம்.