சி.ஆர்.ஐ.எஃப் (CRIF) ஹைமார்க் ஸ்கோர்: வரம்பு, முக்கியத்துவம் மற்றும் மேம்படுத்துவது எப்படி?
இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட நான்கு கிரெடிட் பியூரோக்களில் ஒன்று சி.ஆர்.ஐ.எஃப் ஹைமார்க் ஆகும். இது 2007 ஆம் ஆண்டில் ஹைமார்க் என்ற பெயரில் நிறுவப்பட்டது, மேலும் 2014 ஆம் ஆண்டில் சி.ஆர்.ஐ.எஃப் நிறுவனம் பெரும்பான்மையான ஹைமார்க் பங்குகளை வாங்கி, பெயரை சி.ஆர்.ஐ.எஃப் ஹைமார்க் என்று மாற்றியது.
ஒரு தனிநபரின் அல்லது ஒரு நிறுவனத்தின் கிரெடிட் மதிப்பை அளவிட இந்நிறுவனம் தனிப்பட்ட மற்றும் பிசினஸ் கிரெடிட் ஸ்கோர்கள் இரண்டையும் வழங்குகிறது.
சி.ஆர்.ஐ.எஃப் (CRIF) கிரெடிட் ஸ்கோர் என்றால் என்ன?
மற்ற கிரெடிட் பியூரோக்களைப் போலவே, சி.ஆர்.ஐ.எஃப் ஹைமார்க் நிறுவனமும் தனிநபர்களுக்கு 300-900 க்கு இடையில் மூன்று இலக்க எண்ணாக கிரெடிட் ஸ்கோர்களின் வரம்பை அளிக்கிறது (900 சாத்தியமான அதிகபட்ச ஸ்கோர்).
இந்த ஸ்கோர் ஒரு நபரின் பில்களை திருப்பிச் செலுத்தும் ஹிஸ்டரி, கிரெடிட் யூசேஜ், லோன்கள் மற்றும் பலவற்றை அடிப்படையாகக் கொண்டது. இது அவர்களின் "கிரெடிட் மதிப்பு" அல்லது அவர்கள் சரியான நேரத்தில் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான வாய்ப்பைக் குறிக்கிறது என்று கூறப்படுகிறது.
ஒரு நபருக்கு நல்ல கிரெடிட் ஸ்கோர் இருக்கும்போது, அவர் பொறுப்பான கிரெடிட் நடத்தையை பின்பற்றுகிறார் என்று வங்கிகள் மற்றும் பிற கடன் வழங்கும் நிறுவனங்கள் ரிப்போர்ட் அளிக்கின்றன, இதன்மூலம், அவர்கள் லோன் அல்லது கிரெடிட் கார்டுக்கான அந்நபரின் விண்ணப்பத்தை அங்கீகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
நல்ல மற்றும் மோசமான சி.ஆர்.ஐ.எஃப் கிரெடிட் ஸ்கோர்கள் என்றால் என்ன?
சி.ஆர்.ஐ.எஃப் ஸ்கோர் | வரம்பு | பொருள் |
NA/NH | ஸ்கோர் இல்லை | உங்களிடம் கிரெடிட் ஹிஸ்டரி இல்லை. |
300-549 | குறைவானது | மோசமான கிரெடிட் ஹிஸ்டரி மற்றும் செலுத்தத் தவறிய ரீபேமெண்ட் பதிவு காரணமாக, கடன் வழங்குநர்கள் லோன்கள் அல்லது கிரெடிட்டை அங்கீகரிக்காமல் போகலாம் |
550-649 | சுமாரானது | கடந்த காலங்களில் சில தாமதமான மற்றும் செலுத்தத் தவறிய பேமெண்ட்கள் காரணமாக உங்களுக்கு குறைந்த ஸ்கோர் இருக்கலாம், அதன் காரணமாக கடன் வழங்குநர்களால் நீங்கள் ஒரு ஆபத்தாகக் கருதப்படலாம், இதனால் அவர்களில் சிலர் உங்கள் கடன்களை அங்கீகரிக்காமல் போகலாம். |
650-749 | நல்லது | நீங்கள் கடந்த காலத்தில் நல்ல ரீபேமெண்ட் நடத்தையைக் காட்டியுள்ளீர்கள், 700க்கு மேற்பட்ட ஸ்கோர் நல்லதாகக் கருதப்படுகின்றன, ஏனெனில் நீங்கள் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான குறைந்த ஆபத்து உள்ள நபராகக் கருதப்படுகிறீர்கள். |
750-900 | சிறப்பானது | நீங்கள் ஒருபோதும் பணம் செலுத்தத் தவறியதில்லை மற்றும் கடந்த காலத்தில் சிறந்த கிரெடிட் ரீபேமெண்ட் நடத்தையைப் பின்பற்றி யுள்ளேர்கள், நீங்கள் நம்பகமானவராகக் கருதப்படுகிறீர்கள், இதனால் கடன் வழங்குநர்கள் உங்களுக்கு லோன்கள் மற்றும் கிரெடிட் கார்டுகளை வழங்க தயாராக இருப்பார்கள் |
ஒரு நல்ல சி.ஆர்.ஐ.எஃப் ஹைமார்க் கிரெடிட் ஸ்கோரின் நன்மைகள் என்ன?
ஒரு நல்ல சி.ஆர்.ஐ.எஃப் ஸ்கோர் (700 முதல் 900 வரை) வைத்திருப்பது மிகவும் நன்மை பயக்கும். வங்கிகள் மற்றும் பிற கடன் வழங்கும் நிறுவனங்கள் ஒரு நபரின் "கிரெடிட் மதிப்பை" தீர்மானிக்க இந்த ஸ்கோர்களைப் பயன்படுத்துவதால், அந்நபரின் எந்தவொரு லோன் விண்ணப்பங்களையும் அங்கீகரிக்கலாமா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்க இந்த ஸ்கோர் நிதி நிறுவனங்களுக்கு உதவக்கூடும். வேறு சில நன்மைகள் பின்வருமாறு:
உங்கள் கிரெடிட் லிமிட் அதிகரிக்கப்படுவதற்கானத் தகுதியை நீங்கள் பெறலாம்
உங்கள் லோன்கள் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு குறைந்த வட்டி விகிதங்களைப் பெறலாம்
ஹோம் லோன்கள் அல்லது கார் லோன்களுக்கு நீங்கள் எளிதாக ஒப்புதல் பெறலாம்
உங்கள் லோன்களின் விதிமுறைகளைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்த உங்களுக்கு அதிக அதிகாரம் கிடைக்கும்
சி.ஆர்.ஐ.எஃப் கிரெடிட் ஸ்கோர் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
காரணிகள் | இந்த காரணிகளை எது பாதிக்கிறது |
---|---|
பேமெண்ட் ஹிஸ்டரி | இது கிரெடிட் கார்டு பில்கள், லோன்கள் மற்றும் இ.எம்.ஐ-கள் சரியான நேரத்தில் செலுத்துவதைக் குறிக்கிறது. தாமதமான அல்லது தவறிய பேமெண்ட்கள் உங்கள் கிரெடிட் ஸ்கோரைக் குறைக்கும். |
கிரெடிட் ஹிஸ்டரியின் அளவு | உங்கள் கிரெடிட் ஹிஸ்டரியின் வயது என்பது நீங்கள் எவ்வளவு காலமாக கிரெடிட் அக்கவுண்ட்டை வைத்திருக்கிறீர்கள் என்பதைக் குறிக்கிறது. பழைய அக்கவுண்ட்கள் மற்றும் கிரெடிட் கார்டு பில்களை சரியான நேரத்தில் செலுத்துகிறீர்கள் என்று கடன் வழங்குநர்களுக்கு உறுதியளிக்க முடியும். |
கிரெடிட் பயன்பாடு | இது நீங்கள் பயன்படுத்தும் உங்கள் கிரெடிட் லிமிட்டின் அளவைக் குறிக்கிறது. பொதுவாக, நீங்கள் உங்கள் கிரெடிட் வரம்பில் 30%க்கு மேல் செலவழிக்கக்கூடாது, உங்கள் கிரெடிட் இதை விட அதிகமாக இருந்தால், அது உங்கள் ஸ்கோரைக் குறைக்கும். |
கிரெடிட் மிக்ஸ் | கிரெடிட்டில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன: பாதுகாப்பற்ற லோன்கள் (கிரெடிட் கார்டுகள் மற்றும் பர்சனல் லோன்கள் போன்றவை) மற்றும் பாதுகாக்கப்பான லோன்கள் (ஆட்டோ லோன்கள் அல்லது ஹோம் லோன்கள் போன்றவை). இவ்விரண்டு வகை லோன்களையும் சேர்த்து எடுத்துக்கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறது. |
புதிய கிரெடிட் என்க்கோய்ரிகள் | கிரெடிட் கார்டுகள், லோன்கள் போன்ற கிரெடிட்காக நீங்கள் எத்தனை முறை விண்ணப்பித்துள்ளீர்கள். அதிக எண்ணிக்கையிலான என்க்கோய்ரிகள் உங்கள் ஸ்கோரைக் குறைக்கும். |
உங்கள் சி.ஆர்.ஐ.எஃப் கிரெடிட் ஸ்கோரை ஆன்லைனில் சரிபார்ப்பது எப்படி?
இந்திய ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, அனைத்து கிரெடிட் தகவல் நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் பயனர்கள் ஆன்லைனில் ஒருமுறை தங்கள் கிரெடிட் ஸ்கோரை சரிபார்க்கவும், கிரெடிட் ரிப்போர்ட்டை பெறவும் அனுமதிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது. பின்வரும் படிகள் மூலம் உங்கள் சி.ஆர்.ஐ.எஃப் கிரெடிட் ஸ்கோரை ஆன்லைனில் எளிதாக சரிபார்க்கலாம்:
படி 1: சி.ஆர்.ஐ.எஃப் போர்ட்டலை இங்கே திறக்கவும்
படி 2: "இப்போது உங்கள் ஸ்கோரை பெறு" பட்டனைக் கிளிக் செய்யவும்
படி 3: தொடர உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுமாறு கேட்கப்படுவீர்கள்
படி 4: உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்ட பிறகு, உங்கள் விவரங்களை நிரப்ப வேண்டிய பக்கத்திற்கு நீங்கள் வழிநடத்தப்படுவீர்கள். விவரங்கள்: உங்கள் முழு பெயர், பிறந்த தேதி, மொபைல் எண், முகவரி மற்றும் ஆதார் அல்லது பான் எண் போன்றவற்றை கேட்கும்.
படி 5: இந்தத் தகவலை நீங்கள் மதிப்பாய்வு செய்து சமர்ப்பித்தவுடன், உங்களிடம் ஒரு பாதுகாப்பு கிரெடிட் கேள்வி கேட்கப்படும், இது உங்கள் பதிவுகளை அடிப்படையாகக் கொண்டது.
படி 6: பாதுகாப்பு கிரெடிட் கேள்விக்கு நீங்கள் சரியாக பதிலளித்தால், உங்கள் சி.ஆர்.ஐ.எஃப் கிரெடிட் ரிப்போர்ட் பதிவிறக்கம் செய்ய உங்களுக்கு அனுமதிக் கிடைக்கும்.
இந்த செயல்முறையை நீங்கள் முடித்தவுடன், உங்கள் கிரெடிட் ஸ்கோரை சரிபார்க்கலாம், இது கிரெடிட் ரிப்போர்ட்டிலிருந்து கணக்கிடப்படுகிறது. இதை நீங்கள் விரும்பும் போது அடிக்கடி செய்யலாம்.
இருப்பினும், மேலே குறிப்பிட்டுள்ளபடி, உங்கள் கிரெடிட் ரிப்போர்ட்டை ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இலவசமாக சரிபார்க்க முடியும். நீங்கள் அதை அடிக்கடி சரிபார்க்க விரும்பினால், சி.ஆர்.ஐ.எஃப் ஹைமார்க்கிற்கு ₹399 (ஜி.எஸ்.டி உட்பட) செலுத்த வேண்டும்.
உங்கள் சி.ஆர்.ஐ.எஃப் கிரெடிட் ஸ்கோரை எவ்வாறு மேம்படுத்தலாம்?
ஒரு நல்ல கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பது வங்கிகள் மற்றும் பிற கடன் வழங்குநர்கள் உங்களுக்குச் சாதகமாக முடிவு செய்ய உதவும் என்பதால், உங்கள் சி.ஆர்.ஐ.எஃப் கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்துவதற்கான சில வழிகள் இங்கே:
உங்கள் கிரெடிட், பில்கள் மற்றும் லோன்களுக்கு சரியான மற்றும் உரிய நேரத்தில் ரீபேமெண்ட் செய்யுங்கள்
உங்கள் கிரெடிட் பயன்பாட்டு விகிதம் 30%க்கும் குறைவாக இருப்பதை உறுதிசெய்க. எடுத்துக்காட்டாக, உங்கள் கிரெடிட் லிமிட் ₹ 10,000 என்றால், ₹ 3,000க்கு மேல் பயன்படுத்த வேண்டாம்.
கிரெடிட் கார்டுகள், லோன்களுக்கு விண்ணப்பிப்பது போன்ற உங்கள் ஹார்டு கிரெடிட் என்க்கோய்ரிகளை குறையுங்கள்.
இது முற்றிலும் தேவைப்பட்டால் தவிர, உங்கள் பழைய கிரெடிட் கார்டுகள் மற்றும் அக்கவுண்ட்களை ரத்து செய்ய வேண்டாம். ஏனென்றால், பழைய கார்டுகள் உங்கள் பில்களை சரியான நேரத்தில் செலுத்துகிறீர்கள் என்று கடன் வழங்குநர்களுக்கு உத்தரவாதம் அளிக்க முடியும்.
உங்கள் கிரெடிட் ரிப்போர்ட்டை தவறாமல் மதிப்பாய்வு செய்யுங்கள், இதன் மூலம் ஏதேனும் பிழைகள் அல்லது தவறுகளை நீங்கள் சரிசெய்ய முடியும்
உங்கள் சி.ஆர்.ஐ.எஃப் ஹைமார்க் கிரெடிட் ஸ்கோரை தவறாமல் சரிபார்க்கவும், இதனால் நீங்கள் ஸ்கோரில் உள்ள எந்த முன்னேற்றத்தையும் கண்காணிக்க முடியும்.
வணிகங்களுக்கான சி.ஆர்.ஐ.எஃப் கிரெடிட் ஸ்கோர் என்றால் என்ன?
சி.ஆர்.ஐ.எஃப் ஹைமார்க் நிறுவனங்களுக்கு வணிக கிரெடிட் ஸ்கோர் வழங்குவது போன்ற கூடுதல் சேவைகளையும் வழங்குகிறது. வணிக கிரெடிட் ஸ்கோர் என்பது ஒரு நிறுவனத்தின் கிரெடிட் மதிப்பின் அளவீடு ஆகும். இது தனிநபர் கிரெடிட் ஸ்கோர்களுக்கு ஒத்த வழியில் கணக்கிடப்படுகிறது, இந்த ஸ்கோரில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் காரணிகள் பின்வருமாறு:
பிசினஸ் ஹிஸ்டரி
பேமெண்ட் ஹிஸ்டரி
லோன் ஹிஸ்டரி
கடந்தகால தேடல்கள் போன்றவை.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
சி.ஆர்.ஐ.எஃப் ஹைமார்க் மற்றும் சிபில் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை?
சி.ஆர்.ஐ.எஃப் ஹைமார்க் மற்றும் சிபில் இரண்டும் கிரெடிட் பியூரோக்கள். இந்தியாவில் உரிமம் பெற்ற நான்கு கிரெடிட் இன்ஃபர்மேஷன் நிறுவனங்களில் இவை இரண்டும் ஆகும். இரண்டும் தனிப்பட்ட நுகர்வோருக்கும் நிறுவனங்களுக்கும் கிரெடிட் ஸ்கோர் மற்றும் கிரெடிட் ரிப்போர்ட்களை வழங்குகின்றன.
இருப்பினும், அவர்களுக்கு இடையிலான ஒரு சிறிய வேறுபாடு என்னவென்றால், அவர்கள் இருவரும் ஒவ்வொரு ஆண்டும் ஒரு இலவச கிரெடிட் ரிப்போர்ட்டை வழங்கும்போது, அடுத்தடுத்த சிபில் ரிப்போர்ட்கள் பெற ₹550 செலவாகும், அதே நேரத்தில் கூடுதல் சி.ஆர்.ஐ.எஃப் ஹை மார்க் கிரெடிட் ரிப்போர்ட் பெற ₹399 செலவாகும்.
சி.ஆர்.ஐ.எஃப் ஹைமார்க் தனிநபர்களுக்கு என்ன சேவைகளை வழங்குகிறது?
தனிப்பட்ட கிரெடிட் ஸ்கோர்களை வழங்குவதைத் தவிர, சி.ஆர்.ஐ.எஃப் ஹை மார்க் தனிப்பட்ட நுகர்வோருக்கு பல சேவைகளை வழங்குகிறது, அவை:
- சி.ஆர்.ஐ.எஃப் ஹைமார்க் கிரெடிட் இன்ஃபர்மேஷன் ரிப்போர்ட்கள் - இந்த ரிப்போர்ட்கள் ஒரு நபரின் கிரெடிட் ஹிஸ்டரி, திருப்பிச் செலுத்தும் நடத்தை போன்றவற்றைக் கொண்டுள்ளன.
- மைக்ரோஃபைனான்ஸ் கிரெடிட் ரிப்போர்ட்கள் – இந்த ரிப்போர்ட்கள் வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள்(என்.பி.எஃப்.சி) மற்றும் மைக்ரோஃபைனான்ஸ் நிறுவனங்கள் போன்றவற்றிலிருந்து தனிநபர்களால் எடுக்கப்பட்ட குழு லோன்களின் பதிவுகளைக் கொண்டுள்ளன.
ஹைமார்க் வணிகங்களுக்கு என்ன சேவைகளை வழங்குகிறது?
சி.ஆர்.ஐ.எஃப் ஹைமார்க் வணிகங்களுக்கு பல சேவைகளை வழங்குகிறது, அவை:
- பிசினஸ் கிரெடிட் ஸ்கோர்கள்
- இனங்காணல் மற்றும் மோசடி எதிர்ப்பு சேவைகள்
- முன்கணிப்பு பகுப்பாய்வு மற்றும் ஸ்கோர் கார்டுகள்
- கடன் பெறுதல்
உங்கள் கிரெடிட் ஸ்கோரை எவ்வளவு அடிக்கடி சரிபார்க்க வேண்டும்?
ஒரு நபரின் கிரெடிட் ஸ்கோர் அவர்களின் கிரெடிட் ரிப்போர்ட்டை பயன்படுத்தி கணக்கிடப்படுகிறது. சி.ஆர்.ஐ.எஃப் ஹைமார்க் போன்ற கிரெடிட் பியூரோக்கள் ஒவ்வொரு ஆண்டும் ஒரு இலவச கிரெடிட் ரிப்போர்ட்டை மட்டுமே கட்டாயமாக வழங்குகின்றன என்றாலும், கிரெடிட் ஸ்கோரை ஆண்டுக்கு பல முறை சரிபார்க்க முடியும்.
குறைந்தபட்சம் உங்கள் கிரெடிட் ஸ்கோரை வருடத்திற்கு ஒரு முறையாவது சரிபார்க்க வேண்டும், இருப்பினும் ஒவ்வொரு காலாண்டிலும் சரிபார்க்கப் பரிந்துரைக்கப்படுகிறது. இருப்பினும், உங்களுக்கு அடிக்கடி கிரெடிட் ஆக்டிவிட்டி இருந்தால், நீங்கள் அதை அடிக்கடி சரிபார்க்கலாம்.
உங்கள் கிரெடிட் ஸ்கோரை நீங்களே சரிபார்ப்பது கிரெடிட் ஸ்கோரை பாதிக்காது என்பதை நினைவில் கொள்க, நீங்கள் அதை அடிக்கடி செய்தாலும் கூட பாதிக்காது.
உங்களிடம் இதற்கு முன்பு கிரெடிட் கார்டு அல்லது லோன் இல்லை என்றால் உங்களுக்கு கிரெடிட் ஸ்கோர் இருக்குமா?
உங்களிடம் ஒருபோதும் கிரெடிட் கார்டு இல்லையென்றால், அல்லது லோனுக்கு விண்ணப்பித்திருந்தால், கிரெடிட் பியூரோவில் உங்களைப் பற்றிய எந்த தகவலும் இருக்காது. எனவே, உங்கள் கிரெடிட் ஸ்கோரை நீங்கள் சரிபார்க்கும்போது, அது என்.எச் அல்லது ஹிஸ்டரி இல்லை என்று காண்பிக்கும்.