பர்சனல் லோனுக்கு எவ்வளவு கிரெடிட் ஸ்கோர் தேவை?
பர்சனல் லோன், 'ஆல்-பர்ப்பஸ் லோன்' என்றும் அழைக்கப்படுகிறது, இது பல்வேறு காரணங்களுக்காக (வீடு மேம்பாடு, ஹெல்த்கேருக்கான செலவு அல்லது திருமண செலவுகள் போன்றவை) கடன் வாங்குபவர்களால் எடுக்கக்கூடிய பாதுகாப்பற்ற லோன் ஆகும். ஏனெனில், இந்த கடன் நிதி பயன்படுத்தப்படும் முறைக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை.
இத்தகைய லோன்களுக்குத் தகுதி பெற, மிக முக்கியமான காரணிகளில் ஒன்று உங்கள் கிரெடிட் ஸ்கோர். கிரெடிட் ஸ்கோர் என்பது ஒரு நபரின் "கிரெடிட் மதிப்பு" அல்லது கடன் அல்லது கடனை திருப்பிச் செலுத்தும் திறனைக் குறிப்பதற்கான ஒரு எண்ணாகும். இது ஒரு நபரின் நிதி சார்ந்த ஹிஸ்டரியைப் பயன்படுத்தி இந்தியாவில் உள்ள நான்கு கிரெடிட் பியூரோக்களால் கணக்கிடப்படுகிறது - அவை டிரான்ஸ்யூனியன் சிபில், எக்ஸ்பீரியன், சி.ஆர்.ஐ.எஃப் ஹைமார்க் மற்றும் ஈக்விஃபாக்ஸ் ஆகும்.
பர்சனல் லோன்களுக்கு உங்கள் கிரெடிட் ஸ்கோர் ஏன் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது?
மேலே குறிப்பிட்டுள்ளபடி, ஒரு நபரின் கிரெடிட் ஸ்கோர் (பிரபலமாக சிபில் ஸ்கோர் என்றும் அழைக்கப்படுகிறது) அவர்களின் "கிரெடிட் மதிப்பின்" அளவீடு ஆகும். இது வழக்கமாக 300-900 க்கு இடையில் உள்ள மூன்று இலக்க எண்ணாக குறிக்கப்படுகிறது (900 சாத்தியமான அதிகபட்ச ஸ்கோர்). இது உங்கள் பேமெண்ட் ஹிஸ்டரி, ஏற்கனவே உள்ள கடன் மற்றும் உங்கள் கிரெடிட் பயன்பாடு போன்றவற்றின் உண்மைத் தன்மைகளை கணக்கில் எடுத்துக்கொள்கிறது.
வங்கிகள் மற்றும் பிற கடன் வழங்கும் நிறுவனங்கள் நீங்கள் லோனை திருப்பிச் செலுத்துவதற்கான உங்கள் திறனைத் தீர்மானிக்க உங்கள் கிரெடிட் ஸ்கோர் அல்லது சிபில் ஸ்கோரைப் பார்க்கின்றன. ஒரு நல்ல அல்லது அதிக கிரெடிட் ஸ்கோர், நீங்கள் கடந்த காலத்தில் உங்கள் கிரெடிட்டைச் செலுத்துவதில் பொறுப்பாக இருந்தீர்கள் என்பதைக் காட்டுகிறது. மேலும், இது உங்கள் நிதி ஸ்திரத்தன்மையைக் காட்டுகிறது.
பர்சனல் லோன் என்பது ஒரு வகை பாதுகாப்பற்ற லோன் (அதாவது, பிணையம் இல்லாதது), மற்றும் கடன் வழங்குபவர்களுக்கு மிகவும் ஆபத்தானது என்பதால், அவர்கள் லோன்களுக்கான கோரிக்கைகளை அங்கீகரிக்க அல்லது நிராகரிக்க இந்த கிரெடிட் ஸ்கோரைப் பயன்படுத்துகிறார்கள். அதிக கிரெடிட் ஸ்கோர் நீங்கள் உடனடி ஒப்புதலைப் பெற உதவும்.
குறிப்பு: கடன் வழங்குநர்கள் உங்கள் வேலை, ஊதியம், வசிக்கும் நகரம் போன்ற பிற காரணிகளையும் கணக்கில் எடுத்துக்கொள்வார்கள்.
பர்சனல் லோன் பெறுவதற்கான நல்ல கிரெடிட் ஸ்கோர் எவ்வளவு?
வெவ்வேறு கிரெடிட் பியூரோக்கள் கிரெடிட் ஸ்கோர்களைக் கணக்கிட வெவ்வேறு ஸ்கோர் மாடல்களைப் பயன்படுத்துகின்றன. இருப்பினும், பொதுவாக, கிரெடிட் ஸ்கோர் 700-750 க்கு மேல் இருப்பது நல்லது என்று கருதப்படுகிறது.
பர்சனல் லோன் பாதுகாப்பற்ற லோன் என்பதால், அதற்கு அதிக கிரெடிட் ஸ்கோர் தேவைப்படுகிறது. பர்சனல் லோனுக்கு வங்கிகள் விரும்பும் குறைந்தபட்ச கிரெடிட் அல்லது சிபில் ஸ்கோர் 750 முதல் 900 வரை இருக்கும். உங்களிடம் அதிக ஸ்கோர் இருக்கும்போது, உங்கள் லோன்கள் விரைவாக அங்கீகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன, மேலும் நீங்கள் வட்டி விகிதத்தில் சிறந்த டீல்களைப் பெறலாம்.
600-700 ஸ்கோர்களுடன் உங்களால் லோன் பெற முடியும் என்றாலும், நீங்கள் அதிக வட்டி விகிதங்கள் மற்றும் பிற சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். இதற்குக் குறைவான ஸ்கோர்கள் பெரும்பாலும் பர்சனல் லோன்களுக்கு குறைந்த வாய்ப்பைக் கொண்டுள்ளதாகக் கருதப்படுகின்றன.
குறைந்த கிரெடிட் ஸ்கோருடன் பர்சனல் லோனை பெறுவது எப்படி?
உங்களிடம் குறைந்த அல்லது மோசமான கிரெடிட் ஸ்கோர் இருந்தாலும் (எடுத்துக்காட்டாக, 600 க்கும் குறைவான ஒன்று) பர்சனல் லோன் பெறுவது சாத்தியம் தான். பொதுவாக, லோனுக்கு விண்ணப்பிக்கும் முன் உங்கள் கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்த முயற்சிப்பது நல்லது. ஆனால், உங்களால் அவ்வாறு செய்ய முடியாவிட்டால், நீங்கள் பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யலாம்:
ஒரு இணை விண்ணப்பதாரர் அல்லது உத்தரவாதம் அளிப்பவரைக் கண்டறியவும்: ஒரு இணை விண்ணப்பதாரர் அல்லது உத்தரவாதம் அளிப்பவருடன் லோனுக்கு விண்ணப்பிக்கவும், எடுத்துக்காட்டாக, நல்ல கிரெடிட் ஸ்கோர் கொண்ட நெருங்கிய குடும்ப உறுப்பினர். இது உங்கள் தகுதியை மேம்படுத்தும்.
நல்ல வருமானம் மற்றும் வங்கி இருப்பிற்கான ஆதாரத்தைக் காட்டுங்கள்: உங்களிடம் நிலையான வருமானம் மற்றும் நல்ல வங்கி இருப்பு இருந்தால், லோனை திருப்பிச் செலுத்துவதற்கான உங்கள் திறனை கடன் வழங்குநர்களுக்கு அவை உத்தரவாதம் அளிக்கும்.
வெவ்வேறு கடன் வழங்குநர்களைத் தேடுங்கள்: குறைந்த கிரெடிட் ஸ்கோர் உள்ளவர்களுக்கு அதிக வட்டி விகிதங்களில் கடன் வழங்கக்கூடிய கடன் வழங்குநர்களுக்கான உங்கள் தேடலை விரிவுபடுத்துங்கள்.
உங்கள் லோன் தொகையைக் குறைக்கவும்: உங்கள் கிரெடிட் ஸ்கோர் நன்றாக இருந்தாலும், அதிகமாக இல்லாவிட்டால் (எடுத்துக்காட்டாக, 600 க்கு மேல்), குறைந்த லோன் தொகையைத் தேர்வுசெய்யுங்கள், இது கடன் வழங்குநருக்கு குறைந்த ஆபத்தை ஏற்படுத்தும்.
கடன் ஒப்புதல்கள் பல காரணிகளைப் பொறுத்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள், மேலும் உங்கள் கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருந்தால் இந்த முறைகள் கூட ஒப்புதலை உறுதிப்படுத்தாது.
ஏனெனில், பர்சனல் லோன் என்பது பாதுகாப்பற்ற லோன் என்பதால், நீங்கள் எந்த வகையான பிணையத்தையும் அடமானம் வைக்கத் தேவையில்லை, லோனை திருப்பிச் செலுத்தும் உங்கள் திறனைத் தீர்மானிக்க கடன் வழங்குநர்கள் உங்கள் கிரெடிட் ஸ்கோரைப் பார்க்கிறார்கள். உங்கள் சிபில் ஸ்கோர் மற்றும் பிற கிரெடிட் பியூரோக்களில் இருந்து அளிக்கப்படும் கிரெடிட் ஸ்கோர் ஆகியவை இந்த கடன் வழங்குநர்களுக்கு உங்களின் தவணை செலுத்தத் தவறிய அபாயத்தை மதிப்பிட உதவும்.
எனவே, அதிக ஸ்கோரை கொண்டிருப்பது நீங்கள் ஒரு பொறுப்பான கடன் வாங்குபவராக இருந்தீர்கள் மற்றும் சரியான நேரத்தில் பில்கள் மற்றும் இ.எம்.ஐ.களை செலுத்தியுள்ளீர்கள் என்பதைக் காட்டும். இது லோன்களுக்கான உங்கள் விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்படுவதை உறுதி செய்யும், அதே நேரத்தில் குறைந்த ஸ்கோர் லோனை திருப்பிச் செலுத்த தவறியதற்கான அதிக ஆபத்தைக் குறிக்கிறது, மேலும் இதனால் உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
நல்ல கிரெடிட் ஸ்கோர் என்றால் என்ன?
பொதுவாக, கிரெடிட் ஸ்கோர் ரேன்ஜ்கள் பின்வருமாறு:
- 300-579 – மோசமானது
- 580-669 – சுமாரானது
- 670-739 – நல்லது
- 740-799 – மிகவும் நல்லது
- 800-900 – சிறப்பானது
கிரெடிட் ஸ்கோர் 700-750 க்கு மேல் இருந்தால் பொதுவாக நல்லதாக கருதப்படுகிறது. கிரெடிட் பியூரோக்கள் கிரெடிட் ஸ்கோர்களைக் கணக்கிடும்போது வெவ்வேறு ஸ்கோர் மாடல்களைப் பயன்படுத்துவதால், எந்த கிரெடிட் பியூரோ உங்கள் கிரெடிட் ரிப்போர்ட்டை வழங்குகிறார்கள் என்பதைப் பொறுத்து உங்களுடைய விண்ணப்ப நிலை மாறுபடும்.
உங்களுக்கு கிரெடிட் ஸ்கோர் இல்லாமல் இருக்க முடியுமா?
நீங்கள் ஒருபோதும் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தவில்லை அல்லது ஒருபோதும் லோன் வாங்கவில்லை என்றால், உங்களிடம் கிரெடிட் ஹிஸ்டரி இருக்காது. கிரெடிட் ஸ்கோர் மாடல்கள் உங்கள் ஸ்கோரைத் தீர்மானிக்க இந்த தகவலைப் பயன்படுத்துவதால், அவர்களால் ஸ்கோரை உருவாக்க முடியாது.
உங்கள் சிபில் கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருந்தால் அதை எவ்வாறு மேம்படுத்துவது?
அதிக கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பது முக்கியம், எனவே உங்கள் சிபில் ஸ்கோரை மேம்படுத்துவதற்கான சில வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:
- உங்கள் கிரெடிட் ஸ்கோர் மற்றும் கிரெடிட் ரிப்போர்ட்டை தவறாமல் சரிபார்க்கவும், இதனால் நீங்கள் எங்கு நிற்கிறீர்கள் என்பதை நீங்கள் சரியாக அறிவீர்கள், இதனால் ஏதேனும் பிழைகளை விரைவாக சரிசெய்ய முடியும்.
- உங்கள் இ.எம்.ஐ மற்றும் கிரெடிட் கார்டு பில்களை தவறாமல் மற்றும் சரியான நேரத்தில் செலுத்துங்கள்; செலுத்தத் தவறிய பேமெண்ட்கள் மற்றும் தாமதங்களைத் தவிர்க்க முயற்சிக்கவும்.
- உங்கள் கிரெடிட் கார்டு லிமிட்டை அதிகமாகப் பயன்படுத்த வேண்டாம், மேலும் உங்கள் கிரெடிட் பயன்பாட்டை 30%க்கும் குறைவாக வைத்திருங்கள்.
- குறுகிய காலத்திற்குள் பல கடன்கள் அல்லது கிரெடிட் கார்டுகளுக்கு விண்ணப்பிப்பதைத் தவிர்க்கவும்.
- உங்கள் பழைய கிரெடிட் கார்டுகளை கேன்சல் செய்ய வேண்டாம் - உங்களிடம் பொறுப்பான கிரெடிட் ஹிஸ்டரி இருப்பதை அவைகள் கடன் வழங்குநர்களுக்கு தெரிவிக்கும்.