ஹோம் லோனுக்கு எவ்வளவு கிரெடிட் ஸ்கோர் தேவை?
ஹோம் லோன் என்பது ஒரு வகை பாதுகாப்பான லோன் ஆகும், ஒரு நபர் ஒரு வீட்டை வாங்க அல்லது கட்டுவதற்கான நோக்கத்துடன் ஒரு வங்கி அல்லது நிதி நிறுவனத்திடமிருந்து கடன் வாங்குகிறார். இது ஒரு பாதுகாப்பான லோன் என்பதால், கடன் தொகை வட்டியுடன் திருப்பிச் செலுத்தப்படும் வரை லோனுக்கு எதிராக சில வகையான பிணையங்கள் (சொத்தை அடமானம் வைப்பது அல்லது பத்திரம் போன்றவை) தேவைப்படும்.
இத்தகைய லோன்களுக்கு ஒப்புதல் அளிக்கும் போது, வங்கிகள் வழக்கமாக ஒரு நபரின் கிரெடிட் ஸ்கோரை அவர்களின் கிரெடிட் மதிப்பு அல்லது வாங்கிய பணத்தை சரியான நேரத்தில் திருப்பிச் செளுத்த்க்கூடிய திறனைத் தீர்மானிக்க சரிபார்க்கின்றன.
ஹோம் லோன்களுக்கு கிரெடிட் ஸ்கோர் எவ்வளவு முக்கியமானது?
ஒரு நபரின் கிரெடிட் ஸ்கோர், பிரபலமாக சிபில் ஸ்கோர் என்றும் அழைக்கப்படுகிறது, இது 300 முதல் 900 வரையிலான மூன்று இலக்க எண் ஆகும், இது உரிமம் பெற்ற நான்கு கிரெடிட் பியூரோக்களால் (டிரான்ஸ்யூனியன் சிபில், எக்ஸ்பீரியன், சி.ஆர்.ஐ.எஃப் ஹை மார்க் மற்றும் ஈக்விபாக்ஸ்) ஒரு நபரின் கிரெடிட் ஹிஸ்டரியை பயன்படுத்திக் கணக்கிடப்படுகிறது.
இந்த ஸ்கோர் ஹோம் லோன் விண்ணப்பத்தை செயலாக்கலாமா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்க வங்கிகளால் பயன்படுத்தப்படுகின்றன. கிரெடிட் பியூரோக்கள் உங்கள் கிரெடிட் ஹிஸ்டரி டேட்டாவை சேகரிக்கின்றன - கிரெடிட் ஹிஸ்டரி, ஏற்கனவே உள்ள கடன், கிரெடிட் பயன்பாடு போன்றவை உள்ளடங்கும். நீங்கள் ஹோம் லோனுக்கு விண்ணப்பிக்கும்போது, வங்கிகள் இந்த டேட்டாவை பெற்றுக்கொள்ளும் (கிரெடிட் ஸ்கோர் மற்றும் கிரெடிட் ரிப்போர்ட்கள் மூலம்).
ஹோம் லோனுக்கான நல்ல கிரெடிட் ஸ்கோர் என்பது எவ்வளவு?
ஹோம் லோனுக்கான உலகளாவிய குறைந்தபட்ச ஸ்கோர் இல்லை என்றாலும், விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதா அல்லது நிராகரிப்பதா என்பதைத் தீர்மானிக்க ஒவ்வொரு வங்கிக்கும் கட்-ஆஃப் பாயிண்ட் உள்ளது. பொதுவாக, ஹோம் லோன் ஒப்புதலுக்கு கிரெடிட் ஸ்கோர் அல்லது சிபில் ஸ்கோர் 750 மற்றும் அதற்கு மேல் இருத்தல் நல்லது என்று கருதப்படுகிறது.
உங்கள் கிரெடிட் ஸ்கோர் அல்லது சிபில் ஸ்கோர் உங்கள் கடன் ஒப்புதலை எவ்வாறு பாதிக்கலாம்:
கிரெடிட் ஸ்கோர் | உங்கள் லோன் மீதான விளைவு |
---|---|
750 – 900 | நல்ல ஸ்கோர் என்பது உங்கள் ஹோம் லோன் கோரிக்கைகள் அங்கீகரிக்கப்படுவதற்கான அதிக வாய்ப்பைக் குறிக்கிறது, ஒப்புதல் செயல்முறை விரைவாக இருக்கும், மேலும் நீங்கள் சிறந்த வட்டி விகிதங்களை கலந்து பேசி பெறும் நிலையில் இருப்பீர்கள். |
600 – 749 | சுமாரான ஸ்கோர்களைக் கொண்டிருப்பவரும் ஹோம் லோனுக்கு ஒப்புதல் பெறலாம். இருப்பினும், கடன் வழங்குநர்கள் மாதாந்திர வருமானம், ஏற்கனவே உள்ள லோன்கள், வேலை ஸ்திரத்தன்மை போன்ற பிற காரணிகளைக் கருத்தில் கொள்வார்கள், ஒப்புதல் செயல்முறை நீண்ட காலம் எடுக்கும் அத்துடன் நீங்கள் சிறந்த வட்டி விகிதங்களைப் பெற மாட்டீர்கள் |
300 – 599 | சுமாரான ஸ்கோர்களைக் கொண்டிருப்பவரும் ஹோம் லோனுக்கு ஒப்புதல் பெறலாம். இருப்பினும், கடன் வழங்குநர்கள் மாதாந்திர வருமானம், ஏற்கனவே உள்ள லோன்கள், வேலை ஸ்திரத்தன்மை போன்ற பிற காரணிகளைக் கருத்தில் கொள்வார்கள், ஒப்புதல் செயல்முறை நீண்ட காலம் எடுக்கும் அத்துடன் நீங்கள் சிறந்த வட்டி விகிதங்களைப் பெற மாட்டீர்கள் |
குறைந்த கிரெடிட் ஸ்கோருடன் ஹோம் லோன் பெறுவது எப்படி?
உங்களிடம் குறைந்த கிரெடிட் ஸ்கோர் இருந்தாலும் ஹோம் லோனைப் பெறலாம். அல்லது உங்களிடம் கிரெடிட் ஹிஸ்டரி இல்லாவிட்டாலும் கூட (உங்களிடம் முந்தைய லோன்கள்/கிரெடிட் கார்டுகள் இல்லாததால் உங்கள் ஸ்கோர் NH/NA என்று குறிப்பிடப்படும் போது இது நிகழ்கிறது).
பொதுவாக, ஹோம் லோனுக்கு விண்ணப்பிக்கும் முன் உங்கள் கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்த முயற்சிக்க வேண்டும். ஆனால், இது சாத்தியமில்லை என்றால், நீங்கள் பின்வருவனவற்றில் ஒன்றை முயற்சி செய்யலாம்:
மற்றொரு கடன் வழங்குநரைத் தேடுங்கள்: அதிக வட்டி விகிதங்களில் உங்களுக்கு ஹோம் லோனை வழங்கக்கூடிய மற்றொரு கடன் வழங்குநரைக் கண்டறியவும்.
ஒரு இணை விண்ணப்பதாரர்/உத்தரவாதம் பெறுங்கள்: நல்ல கிரெடிட் ஸ்கோர் கொண்ட நெருங்கிய குடும்ப உறுப்பினரைப் போல, ஒரு இணை விண்ணப்பதாரர் அல்லது உத்தரவாதம் அளிப்பவருடன் லோனுக்கு விண்ணப்பிக்கவும். இது உங்கள் தகுதியை மேம்படுத்தும்.
அடமானத்தை வழங்குங்கள்: சில கடன் வழங்குநர்கள் தங்கம், பங்குகள், சொத்துக்கள், நிலையான வைப்புகள் போன்ற சில வகையான பிணையங்களுக்கு எதிராக உங்களுக்கு லோன் வழங்கலாம்.
நிலையான வருமானம் மற்றும் வங்கி இருப்பு: நிலையான வருமானம் மற்றும் நல்ல வங்கி இருப்பு ஆகியவற்றைக் கொண்டிருப்பது மாதாந்திர லோன் இன்ஸ்டால்மெண்ட் செலுத்துவதை ஆதரிக்க முடியும் என்று கடன் வழங்குநர்களுக்கு உறுதியளிக்கும்.
குறைக்கப்பட்ட லோன் தொகையைத் தேர்வுசெய்யுங்கள்: நீங்கள் குறைந்த ஹோம் லோன் தொகையையும், கடன் வழங்குபவருக்கு குறைந்த ஆபத்தை ஏற்படுத்தும் அதிக டவுன் பேமெண்டையும் கோரலாம்.
இருப்பினும், லோன் ஒப்புதல்கள் பொதுவாக பல காரணிகளைப் பொறுத்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள், மேலும் உங்கள் கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருந்தால் இந்த முறைகள் அங்கீகாரத்தை உறுதிப்படுத்தாது.
லோனுக்கான உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், மீண்டும் லோனுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பு உங்கள் கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்த முயற்சிக்கவும். உடனடியாக மற்றொரு கடன் வழங்குநரிடம் லோன் பெற விண்ணப்பிப்பது உங்கள் ஸ்கோரை மேலும் குறைக்கும்.
ஹோம் லோனுக்கான என் தகுதியை மேம்படுத்த முடியுமா?
ஒரு நல்ல ஸ்கோரை கொண்டிருப்பது மிகவும் நன்மை பயக்கும், மேலும் வங்கிகள் உங்களுக்கு லோன் வழங்கும் என்பதை உறுதிப்படுத்த உதவும். எனவே, உங்கள் கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்த சில வழிகள் இங்கே:
உங்கள் கிரெடிட் ஸ்கோர் போதுமானது என்பதை உறுதிப்படுத்த அதைக் கண்காணிக்கவும்.
உங்கள் கிரெடிட் ரிப்போர்ட்டை தவறாமல் சரிபார்க்கவும், இதனால் நீங்கள் ஏதேனும் தவறுகளைக் கண்டறிந்து பிழைகளை சரிசெய்யலாம்.
உங்களிடம் ஏதேனும் நிலுவையில் உள்ள அல்லது திருப்பிச் செலுத்தாத பேமெண்ட்டுகள் இருந்தால், உங்களால் முடிந்தவரை விரைவில் அவற்றைச் செலுத்தவும்.
உங்கள் கிரெடிட் பில்கள் மற்றும் இ.எம்.ஐ-களை சரியான நேரத்தில் செலுத்த மறக்காதீர்கள். நீங்கள் மறக்கக்கூடும் என்று நினைத்தால், ரிமைண்டர்களை அமைக்கவும் அல்லது ஆட்டோ-டெபிட்டைத் தேர்ந்தெடுக்கவும்.
கடன் உத்தரவாதம் அளிப்பவராக மாறுவதைத் தவிர்க்கவும். கடன் வாங்கியவர் பணம் செலுத்தத் தவறினால், அது உங்கள் கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும், மேலும் நீங்கள் அவர்கள் சார்பாக லோனை செலுத்த வேண்டியிருக்கும்.
உங்கள் கிரெடிட் லிமிட்டில் 30%க்கும் குறைவாகப் பயன்படுத்த வேண்டும், இதனால் நீங்கள் கிரெடிட்டை நம்பியிருப்பதாகக் கருதப்படமாட்டீர்கள்.
குறுகிய காலத்திற்குள் பல புதிய கிரெடிட் கார்டுகள், லோன்கள் போன்றவற்றுக்கு விண்ணப்பிக்க வேண்டாம். கிரெடிட் கார்டுகள், லோன்களுக்கு விண்ணப்பிப்பதும் இதில் அடங்கும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
உங்கள் கிரெடிட் ஸ்கோர் அல்லது சிபில்(CIBIL) ஸ்கோர் என்றால் என்ன?
கிரெடிட் ஸ்கோர் வரம்புகள் பின்வருமாறு:
- 300-579 – மோசமானது
- 580-669 – சுமாரானது
- 670-739 – நல்லது
- 740-799 – மிகவும் நல்லது
- 800-900 – சிறப்பானது
நீங்கள் 700-750க்கு மேல் ஸ்கோர் பெற்றிருந்தால், அது நல்லதாகக் கருதப்படுகிறது. ஆனால், கிரெடிட் ஸ்கோர் 650-க்கும் குறைவாக இருந்தால் அது சுமாரானதாக கருதப்படுகிறது. வெவ்வேறு கிரெடிட் பியூரோக்கள் சற்று மாறுபட்ட ஸ்கோர் மாடல்களைப் பயன்படுத்துவதால், எந்த கிரெடிட் பியூரோ உங்கள் கிரெடிட் ரிப்போர்ட்டை உருவாக்குகிறார்கள் என்பதைப் பொறுத்து உங்கள் ஸ்கோர் சற்று மாறுபடலாம்.
ஹோம் லோனுக்குத் தேவையான குறைந்தபட்ச சிபில்(CIBIL) ஸ்கோர் என்ன?
ஹோம் லோன்களுக்கான உண்மையான குறைந்தபட்ச சிபில் ஸ்கோர் என்று ஒன்று இல்லை, ஏனெனில், ஒவ்வொரு வங்கியும் கடன் வழங்குநரும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதா அல்லது நிராகரிப்பதா என்பதைத் தீர்மானிக்க தங்கள் சொந்த கட்-ஆஃப் பாயிண்டைக் கொண்டுள்ளனர். ஆனால், பொதுவாக, 750 மற்றும் அதற்கு மேற்பட்ட சிபில் ஸ்கோர் ஹோம் லோன் ஒப்புதலுக்கு நல்லதாகக் கருதப்படுகிறது.
உங்கள் சிபில்(CIBIL) ஸ்கோர் ஹோம் லோன் அப்ரூவல்களை பாதிக்கிறதா?
ஆம், உங்கள் சிபில் ஸ்கோர் உங்கள் ஹோம் லோன் ஒப்புதலை பாதிக்கும். அதிக கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பது கடன் வழங்குநர் நீங்கள் லோனை திருப்பிச் செலுத்த ஆபத்து அதிகம் உள்ள நபராகக் கருத்தப்படமாட்டீர்கள். அத்துடன் உங்கள் ஹோம் லோன்கள் ஒப்புதல் பெற அதிக வாய்ப்புள்ளது. இருப்பினும், குறைந்த ஸ்கோர் கடன் வழங்குபவருக்கு மிகவும் ஆபத்தானது, மேலும் உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம் அல்லது நீங்கள் அதிக வட்டி விகிதங்களை செலுத்த வேண்டியிருக்கும்.
ஹோம் லோனுக்கு விண்ணப்பிக்கும் முன் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
ஹோம் லோனுக்கு விண்ணப்பிக்கும் முன், நினைவில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இங்கே:
- உங்கள் சிபில் ஸ்கோர் மற்றும் உங்கள் சிபில் ரிப்போர்ட்டை சரிபார்க்கவும். உங்கள் ரிப்போர்ட்டில் ஏதேனும் பிழைகள் இருந்தால், உங்களால் முடிந்தவரை அவற்றை சரிசெய்யவும்.
- அதிக கிரெடிட் பயன்பாடு உங்கள் ஸ்கோரை பாதிக்கும் என்பதால், நிலுவையில் உள்ள எந்தவொரு பேமெண்ட்களுக்கும் பணம் செலுத்துவதை கவனத்தில் கொள்ளுங்கள்.
- சமீபத்தில் உங்கள் லோன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால், உடனடியாக புதிய லோனுக்கு விண்ணப்பிக்க வேண்டாம்.
- உங்களிடம் குறைந்த கிரெடிட் ஸ்கோர் இருந்தால், நீங்கள் லோனுக்கு விண்ணப்பிக்கும் முன் அதை மேம்படுத்த நடவடிக்கை எடுங்கள்.
- உங்களுக்கு மிகவும் சாதகமான டீல்களை வழங்கும் கடன் வழங்குநர்களை தேர்ந்தெடுக்கவும்.