மாணவர்கள் முதலீடுகள் இல்லாமல் ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது எப்படி?
மாணவராக இருப்பது பெரும்பாலும் ஒரு நபரின் வாழ்க்கையில் மிக முக்கியமான கட்டமாகும். இருப்பினும், படிப்பது ஒரு முழுநேர தொழில், எனவே கொஞ்சம் பணம் சம்பாதிக்க விரும்பும் மாணவர்கள் தங்கள் படிப்பைப் பாதிக்காத பார்ட் டைம் வேலைகளைத் தேடத் தொடங்குகிறார்கள்.
பெரிய முதலீடு செய்யாமல் ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது அல்லது குறைந்தபட்ச அனுபவம் தேவைப்படும் வேலைகளைக் கண்டுபிடிப்பது ஆகியவை மாணவர்களுக்கான கவலைகளாக இருந்து வருகிறது.
இதோ ஒரு நல்ல செய்தி. உண்மையில் மாணவர்களுக்குப் பல ஆன்லைன் பார்ட் டைம் வேலைகள் உள்ளன, அவர்கள் வீட்டிலிருந்தே பணம் சம்பாதிக்க முடியும்.
ஒரு மாணவராக ஆன்லைனில் பணம் சம்பாதிக்க சிறந்த வழிகள் யாவை?
1. இன்சூரன்ஸை பி.ஓ.எஸ்.பி.(POSP) ஆக விற்கவும்
ஒரு பி.ஓ.எஸ்.பி அல்லது பாயிண்ட் ஆஃப் சேல்ஸ்பர்சன் ஆக மாறுவது மற்றும் இன்சூரன்ஸை விற்பது மாணவர்களுக்கு இலாபகரமான பார்ட் டைம் வேலையாக இருக்கலாம். பி.ஓ.எஸ்.பி என்பவர் ஒரு இன்சூரன்ஸ் ஏஜென்ட் ஆவார், அவர் ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து அந்த நிறுவனத்தின் இன்சூரன்ஸ் புராடக்ட்களை ஆன்லைனில் விற்கிறார்.
- தகுதித்தேவைகள் என்ன? - 18 வயதுக்கு மேற்பட்டவராகவும், 10 ஆம் வகுப்பு முடித்தவராகவும் இருக்க வேண்டும். ஐ.ஆர்.டி.ஏ.ஐ வழங்கும் 15 மணி நேர கட்டாய பயிற்சியை முடித்திருக்க வேண்டும்.
- நீங்கள் எவ்வளவு சம்பாதிக்க முடியும்? - உங்கள் வருமானம் நீங்கள் விற்கும் பாலிசிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தது. இதனால், நீங்கள் எவ்வளவு பாலிசிகளை விற்கிறீர்களோ, அவ்வளவு வருமானம் கிடைக்கும்.
- இந்த வேலையைத் தொடர முடியுமா? - ஆம், விற்பனை செய்வதில் உங்களுக்கு விருப்பம் இருந்தால், நீங்கள் பின்னர் இதை முழுநேர வேலையாகவும் தொடரலாம்.
பி.ஓ.எஸ்.பி ஏஜென்ட்டாக மாறுவதற்கான படிகள், தேவைகள் மற்றும் ஒழுங்குமுறைகளைப் பற்றி இங்கே மேலும் அறிந்துகொள்ளுங்கள்.
2. ஃப்ரீலான்ஸிங் வேலையை செய்தல்
நீங்கள் ரைட்டிங், புரோகிராமிங், எடிட்டிங், போட்டோகிராபி, டிசைனிங் அல்லது வேறு ஏதேனும் திறன்களில் சிறந்தவராக இருந்தால், நீங்கள் ஒரு ஃப்ரீலான்ஸராக ஆன்லைனில் பணம் சம்பாதிக்கலாம். அப்ஒர்க், ஃபைவர்ர் அல்லது ட்ரூலான்சர் போன்ற போர்ட்டல்களில் நீங்கள் ஒரு ஃப்ரீலான்ஸராக உங்களைப் பதிவு செய்ய வேண்டும். பின்னர் உங்கள் திறமைகளை கிளையண்ட்களுக்கு சந்தைப்படுத்தத் தொடங்கலாம்.
- தகுதித்தேவைகள் என்ன? - உங்களிடம் சந்தைப்படுத்தக்கூடிய திறன் இருக்கும் வரை, நீங்கள் ஒரு ஃப்ரீலான்ஸிங் போர்ட்டலில் பதிவு செய்யலாம், இருப்பினும் இதற்கு ஒரு சிறிய கட்டணம் தேவைப்படலாம்.
- நீங்கள் எவ்வளவு சம்பாதிக்க முடியும்? - உங்கள் வருமானம் நீங்கள் வழங்கும் வேலையின் வகை மற்றும் ஒரு நாளில் உங்களுக்கு எவ்வளவு வேலை செய்ய நேரம் உள்ளது என்பதைப் பொறுத்தது.
இந்த வேலையைத் தொடர முடியுமா? - ஆம், நீங்கள் வழங்கும் வேலையின் அடிப்படையில், நீங்கள் ஒரு ஃப்ரீலான்ஸராக ஃபுல் டைமாகவும் தொடர்ந்து பணியாற்றலாம்.
3. ஆன்லைனில் டியூஷனைத் தொடங்குங்கள்
மாணவர்கள் தொடர்ந்து புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்கிறார்கள், எனவே, ஆன்லைனில் பணம் சம்பாதிப்பதற்கான ஒரு எளிய வழி கல்வித்துறையில் சிலவற்றைப் பகிர்வதாகும். நீங்கள் ஸ்கூலுக்கு செல்லும் குழந்தைகளுக்குக் கற்பிக்க விரும்பினாலும் அல்லது புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ள விரும்பும் பிற மாணவர்களுக்கு கோர்ஸ்களை வழங்க விரும்பினாலும், உங்களுக்குத் தேவையானது அந்த பாடத்தில் போதிய அறிவும் வேகமான இணைய இணைப்பும் தான்.
நீங்கள் உடெமி, ஸ்கில்ஷேர் அல்லது கோர்செரா போன்ற மெய்நிகர் பயிற்சி தளத்துடன் சைன் அப் செய்யலாம் அல்லது உங்கள் ஆன்லைன் பயிற்றுவிப்பு வகுப்புகளை ஒளிபரப்ப நண்பர்கள் மற்றும் உறவினர்களின் சமூக ஊடகங்களை அணுகலாம்.
- தகுதித்தேவைகள் என்ன? - நீங்கள் சில கற்பித்தல் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டியிருந்தாலும், இதில் மிகக் குறைந்த பண முதலீடு உள்ளது.
- நீங்கள் எவ்வளவு சம்பாதிக்க முடியும்? - உங்கள் நிபுணத்துவ நிலை மற்றும் பாடத்தின் அடிப்படையில், நீங்கள் ஒரு மணி நேரத்திற்கு ₹ 200–500 வரை சம்பாதிக்கலாம்.
இந்த வேலையைத் தொடர முடியுமா? - டியூஷன் ஒரு சாத்தியமான முழுநேர வேலையாக இல்லாவிட்டாலும், நீங்கள் இதைத் தொடர்ந்து பார்ட் டைமாக செய்யலாம் அல்லது அதற்கான விருப்பத்தை நீங்கள் காட்டினால், உங்கள் பகுதியில் டீச்சிங் சார்ந்த வேலைவாய்ப்புகளைப் பாருங்கள்.
4. டேட்டா என்ட்ரி வேலைகளைக் கண்டறியவும்
முதலீடு இல்லாமல் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க விரும்பும் மாணவர்களுக்கான மற்றொரு விருப்பம் டேட்டா என்ட்ரி வேலைகள். இது சௌகரியத்தை வழங்குவதால், இது பார்ட் டைம் வேலைக்கு ஒரு நல்ல தேர்வாக இருக்கலாம்.
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஃப்ரீலான்ஸர், டேட்டா பிளஸ், ஆக்ஸியன் டேட்டா என்ட்ரி சர்வீசஸ் அல்லது குரு போன்ற நம்பகமான வலைத்தளத்தில் பதிவு செய்ய வேண்டியது தான், மேலும் உலகெங்கிலும் உள்ள நிறுவனங்களிலிருந்து டேட்டா என்ட்ரி வேலைகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளத் தொடங்கலாம். இருப்பினும், உங்கள் அக்கவுண்ட் விவரங்களை அவர்களிடம் அளிப்பதற்கு முன் வேலை மற்றும் வேலை வழங்குநரின் நியாயத்தன்மையை சரிபார்க்க மறக்காதீர்கள்
- தகுதித்தேவைகள் என்ன? - நீங்கள் ஒரு கம்ப்யூட்டர்க்கான அணுகலையும், எக்செல் மற்றும் பிற மைக்ரோசாஃப்ட் டூல்களைப் பற்றிய நல்ல செயல்பாட்டு அறிவையும் கொண்டிருக்க வேண்டும்.
- நீங்கள் எவ்வளவு சம்பாதிக்க முடியும்? - டேட்டா என்ட்ரி வேலை மூலம், நீங்கள் ஒரு மணி நேரத்திற்கு ₹ 300 முதல் ₹ 1,500 வரை சம்பாதிக்கலாம்.
- இந்த வேலையைத் தொடர முடியுமா? - டேட்டா என்ட்ரி வேலைகள் பொதுவாக பார்ட் டைமாக செய்யப்படுகின்றன.
5. பீட்டா டெஸ்ட்டிங் ஆப்கள் மற்றும் வெப்சைட்கள்
இப்போது அனைத்து மாணவரிடத்திலும் ஸ்மார்ட்போன் அல்லது கம்ப்யூட்டர் அணுகல் இருப்பதால், மாணவர்களுக்கு பார்ட் டைமாக பணம் சம்பாதிக்க ஒரு நல்ல வழி ஆப்ஸ் மற்றும் வெப்சைட்களை டெஸ்டிங் செய்வதாகும். நிறுவனங்கள் மற்றும் ஆப் டெவலப்பர்கள் ஒரு புதிய ஆப் அல்லது வெப்சைட்டை உருவாக்கும்போது, அவர்கள் 'பீட்டா டெஸ்டிங்' என்று அழைக்கப்படும் ஒன்றைச் செய்ய பயனர்களை வேலைக்கு அமர்த்துகிறார்கள். நீங்கள் அவர்களின் சைட்கள் அல்லது ஆப்களை டெஸ்ட் செய்து, உங்கள் பயனர் அனுபவத்தைப் ரிப்போர்ட் செய்ய வேண்டும், மேலும் ஏதேனும் பக்ஸ் அல்லது சிக்கல்களை அடையாளம் கண்டால் அவை பப்ளிக் லைவிற்குச் செல்லும் முன் கண்டறிந்து தேவையானதை செய்ய வேண்டும்.
பீட்டாடெஸ்டிங், டெஸ்டர் ஒர்க், டெஸ்ட்.ஐஒ அல்லது டிரைமையூ.ஐ போன்ற சைட்களில் இந்த வேலைகளைச் செய்ய நீங்கள் சைன் அப் செய்யலாம்.
- தகுதித்தேவைகள் என்ன? - உங்களுக்கு எந்த சிறப்பு அறிவும் அனுபவமும் தேவையில்லை, ஆனால், நீங்கள் டெஸ்டிங் செய்யும் புராடக்ட்டின் அடிப்படையில், உங்களிடம் புதுப்பித்த ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ் அல்லது விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் தேவைப்படலாம்.
- நீங்கள் எவ்வளவு சம்பாதிக்க முடியும்? - பீட்டா டெஸ்டிங் புராசஸ் மற்றும் செயல்முறையுடன் உங்கள் அனுபவத்தைப் பொறுத்து, நீங்கள் சுமார் ₹ 1000 முதல் ₹ 3000 வரை சம்பாதிக்கலாம்.
- இந்த வேலையைத் தொடர முடியுமா? - ஆப் மற்றும் வெப்சைட் டெஸ்டிங் பொதுவாக பார்ட் டைமாக செய்யப்படுகிறது, ஆனால், உங்களுக்கு புரோகிராமிங் அல்லது சாஃப்ட்வேர் டெவெலப்மென்ட்டில் அனுபவம் இருந்தால், இந்த அனுபவத்தை உங்கள் எதிர்கால வேலைவாய்ப்பில் பயன்படுத்தலாம்.
எனவே, ஆன்லைனில் பணம் சம்பாதிக்க விரும்பும் மாணவர்கள் தங்கள் ஓய்வு நேரத்தை மிகவும் பயனுள்ள வழியில் செலவிட்டு அதன் மூலம் பணம் மற்றும் அனுபவத்தை பெறலாம். பின்வருவனவற்றைச் செய்து போலி ஏஜென்சிகள், ஸ்கேம்கள் மற்றும் மோசடிகளைத் தவிர்த்து கவனமாக இருங்கள்:
- எந்தவொரு சைட்டையும் முழுமையாக ஆராய்ந்து, சைனிங் அப் செய்வதற்கு முன்பு அவற்றின் மதிப்புரைகளைச் சரிபார்க்கவும்.
- உங்கள் தனிப்பட்ட தகவல்களைக் கேட்கும் எந்தவொரு சைட்டிலும் கவனமாக இருங்கள்.
- ஒரு வெப்சைட் உங்களுக்கு நீண்ட வேலை நேரத்தை வழங்குகிறது, ஆனால், உங்களுக்கு ஊதியம்/செய்த வேலைக்கு சரியான பணத்தை கொடுக்கவில்லை என்றால், அந்த வெப்சைட் வேலையைத் தவிர்க்க முயற்சிக்கவும்.
- கையெழுத்திடுவதற்கு முன்பு எந்தவொரு ஒப்பந்தத்தையும் முழுமையாகப் படியுங்கள்.
நீங்கள் மேற்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தவுடன், எந்த முதலீடுகளும் இல்லாமல் பணம் சம்பாதிக்க இந்த எளிதான வழிகளைப் பின்பற்றலாம்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
பார்ட் டைம் வேலைகள் மாணவர்களுக்கு எவ்வாறு உதவுகின்றன?
பார்ட் டைம் வேலைகள் மாணவர்களுக்கு கூடுதல் பாக்கெட் பணம் சம்பாதிக்க ஒரு சிறந்த வழியாகும். மேலும், இந்த பார்ட் டைம் வேலை வருமானத்தை (பே-செக்) வழங்குவதோடு மட்டுமல்லாமல், பயிற்சி மற்றும் பணி அனுபவம் இரண்டையும் வழங்குகிறது, குறிப்பாக நீங்கள் படித்து முடித்த பின்னர் பெரு நிறுவனத்தில் செய்யக்கூடிய வேலைக்கு அடித்தளமாகவும் இது அமைகிறது.
பார்ட் டைம் வேலைகள் மாணவர்களை பாதிக்குமா?
ஒரு மாணவருக்கு பார்ட் டைம் வேலை இருப்பது மிகவும் நன்மை பயக்கும், ஆனால் சிலருக்கு, பார்ட் டைம் வேலையுடன் முழுநேர படிப்பை சமாளிப்பது கடினம். எனவே, நீங்கள் ஸ்ட்ரெஸாக உணரத் தொடங்கினால் அல்லது அது உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறது என்றால், நீங்கள் பார்ட் டைம் வேலையை மறுபரிசீலனை செய்ய விரும்பலாம்.
மாணவர்களுக்கு ஆன்லைன் வேலைகளை எங்கே தேடுவது?
ஆன்லைனில் பணம் சம்பாதிக்க விரும்பும் மாணவர்களுக்கான சில சிறந்த சைட்களை நாம் ஏற்கனவே பார்த்தோம். இருப்பினும், இந்த சைட்கள் கிடைக்கவில்லை என்றால், நீங்கள் மான்ஸ்டர் அல்லது லிங்க்ட்இன் போன்ற ஜாப் வெப்சைட்களில் பதிவுபெறலாம். கூடுதலாக, வேலை பட்டியல்களை இடுகையிடும் சமூக ஊடக குழுக்களில் நீங்கள் சேரலாம், மேற்கண்ட அனைத்தும் உங்களுக்கு உதவவில்லை என்றால், உங்கள் ஃப்ரெண்ட்ஸ் அல்லது ஃபேமிலி நெட்வொர்க்குகள் மூலம் பார்ட் டைம் வேலை பற்றி கேட்கலாம்.